மோசேயிடம் சொல்லப்பட்ட சூழ்நிலை முற்றிலும் வேறானது; ஆனால் இன்றைய போதனையின்படி ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுடைய ஆலயம் என்பதாலும் வானத்தின் கீழே ஆலயம் என்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸ்தானம் இல்லாததாலும் திருட்டு பயம் காரணமாகவும் செருப்பு போட்டுக்கொண்டு ஆராதனை ஸ்தலத்துக்குள் செல்லலாம்;அல்லது அவை 30 பேருக்கு அதிகமில்லாத ஒரு சிறு குழுவாக இருக்கட்டும்; செருப்பு போட்டுக்கொண்டு சென்றாலும் ஆராதனை நேரத்தில் கழட்டிவிட்டு ஆராதிப்பதே பாரம்பரியமாகும்;இதைக் குறித்த நேரடியான போதனையில்லாவிட்டாலும் அது ஒழுங்கு சம்பந்தமானது;
மற்றொரு பார்வையில் பாதரக்ஷையே ஆரோக்கியமானதுமாகும்; சில குளிர் பிரதேசங்களிலும் இது தவிர்க்கமுடியாதது; சுத்தம் சம்பந்தமான காரணங்களில் உள்ளாடையைக் குறித்தும்கூட வேதத்தில் கட்டளை உண்டு;
நாமே தேவனுடைய ஆலயம் என்ற போதனையின்படி கிறிஸ்தவர்கள் ஒருபோதும் செருப்பு போடவே கூடாது; அது ஆவிக்குரிய அர்த்தம் எனில் செருப்புடன் ஆராதனையில் பங்கேற்பது ஆவி மனிதனை பாதிக்கப்போவதில்லை..!
சகோதரரே! புதிய ஏற்பாட்டு கட்டளைப்படி தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளவேண்டும் என்பதும் மற்றும் பரிசுத்தம் என்னும் அலங்காரத்துடனே கர்த்தரை தொழுது கொள்ளவேண்டும் என்பதும் நம்மை நாமே ஜீவ பலியாக தேவனுடைய கரத்தில் ஒப்பு கொடுக்கவேண்டும் என்பதும் தான் புத்தியுள்ள ஆராதனை என்று போதிக்கிறது .
ஆவியில் தொழுதுகொள்கிரவர்களுக்கு செருப்பை கழற்றுதல் போன்ற வெளிப்புறமான சடங்குகள் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
மேலும் இயேசு கிறிஸ்த்துவோ அல்லது அப்போஸ்தலர்களோ அதுகுறித்து நமக்கு கட்டளை எதுவும் கொடுக்கவில்லை.
தேவன் மோசேக்கு பிரதிட்ச்சமாக முட்செடியில் தரிசனம் கொடுத்ததால் அந்த இடம் பரிசுத்த பூமியாகியது அதன் அடிப்படையில் அவர் பார்த்தரட்சையை கழற்ற சொல்லியிருக்கலாம் என்று கருதுகிறேன் ஆனால் இப்பொழுது எங்கும் பிதாவை தொழுதுகொள்ளும் காலம் வந்திருக்கிறது
ஆசாரிப்பு கூடாரம் மற்றும் கர்த்தருடைய ஆலயம் போன்ற எவ்விடத்திலும் கர்த்தர் அக்கட்டளையை கொடுக்கவில்லை எனவே பாதரட்சையுடன் ஆராதிப்பதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன்.
தேவன் எதிர்பார்ப்பது நமது உட்புறம் சுத்தமாகவேண்டும் என்பதுதான்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய பிரசன்னம் பரிசுத்தமான இடத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு சிலரில் மாத்திரமே வர முடியும். ஆகவே இந்த இடஙகளில் பாதரட்சையோடு செல்ல அனுமதி இல்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய பிரசன்னம் மனிதர்களுக்கு உள்ளே இருப்பதால் பாதரட்சையை கழற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து. ஆனால் பாதரட்சையை கழற்ற முடிந்தால் கழற்றி மேலும் அந்த இடத்தின் புனிதத்தை அதிகபடுத்து நல்லது என்பதும் என் கருத்து.
ஆனால்
பாதரட்சை என்பது ஒருவனுடைய சொத்துக்களை (சுதந்திரத்தை) குறிப்பதாகும்
ஆதாரம் உபாகமம் 25.9 , 25.10 ரூத் 4.7, 4.8
அதாவது அவனுடைய (properties) ஆசைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை குறிப்பதாகும். இதுவே சுயம் என்றும, உலகம் என்றும், மாமிசம் (Personality, Ego) என்றும் சொல்ல்ப்படும் . ஒருவன் கர்த்தருடைய சன்னிதியில் சேரும் போது சுயம் இல்லாதவனாய் ஒரு குழந்தையை போல, கடவுள் வான்சையுள்ளவனாய் நிற்க வேண்டும். இதுவே இதன் அர்த்தமாகும். அப்போது மட்டுமே கடவுளுடைய முழு வல்லமையை அனுபவிக்க முடியும். நம்முடைய சுயம் (பெருமை) கர்த்தருக்கு பாதரட்சைக்கு சமமாகும். எல்லா நேரஙகளிலும் சுயத்தை இழந்து நிற்க முடியாவிட்டாலும் சில் ச்மயங்களிலாவது பாதரட்சை (சுயம்) இல்லாதவராய் கடவுள் மட்டுமே வான்சையுள்ளவராய் கர்த்தருடைய சன்னிதியில் நிற்க முயல்வோம்.
" செருப்புக்கு சமமான உன்னுடைய சுயத்தை தூக்கி எறின்து விட்டு ஒரு குழந்தையை போல என்னிடத்தில் வன்தால் நான் உன்னை என் வ்ழியில் நடத்தி மகிமையால் முடிசூட்டுவேன். "
லூக்கா 22.35 படி
இயேசு தன் சீடர்களை பாதரட்சை இல்லாமல் அனுப்பினார், இதன் ஆவிக்குரிய .அர்த்தம் என்னவெனில் சுயமில்லாமல் கடவுள் வார்த்தையை சொல்ல அன்ப்பினார் என்பதாகும்.
-- Edited by SANDOSH on Thursday 11th of February 2010 11:01:25 PM
EDWIN SUDHAKAR wrote:,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆனால் செருப்பு போடலாம் அது தவறு இல்லை என்பதை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது...................
சகோதரர் எட்வின் அவர்களே இது புதிய ஏற்ப்பட்டு காலம், இதில் உங்களுக்கு ஆவியானவர் எதை உணர்த்துகிறாரோ அதை செய்யுங்கள் இங்குள்ள மிக பிரதான கட்டளை என்னவென்றால்
ரோமர் 14 : 23. விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
14. ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று ..... ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
மேல்கண்ட வசனங்கள்படி ஒன்றை செய்வதாக இருந்தால் விசுவாசத்தோடு செய்யுங்கள், அல்லது உங்களுக்கு தவறு என்று தோன்றுமாயின் அதை நீங்கள் செய்யாதிருங்கள் அதற்காக அடுத்தவர்கள் இதை செய்வது குற்றம என்று தீர்க்கமுடியாது.
2. ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். 3. புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4. மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
எனவே இதுபோன்ற விஷயங்களில் அதாவது வசனங்கள் தெளிவாக தவறு என்று சொல்லாத பட்சத்தில் உங்களுக்கு அது தவறாகபடுமாயின் நீங்கள் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதுபடி செய்யலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)