இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதாவை பார்க்க முடியுமா ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பிதாவை பார்க்க முடியுமா ?
Permalink  
 


பிதாவின் சத்தத்தை ஒருவனும் கேட்டதும் இல்லை

பிதாவை ஒருவனும் ஒருகாலமும் கண்டதில்லை
 

இப்படி இருக்க இன்று அனேக உழியர்கள் பிதாவை பார்த்தேன் என்றும்

பிதாவின் சத்தை கேட்டேன் என்றும் சொல்கின்றனர்

பிதா என்னை கூட்டி   கொண்டு அவர் இடத்தை காட்டினர்

பல்வேறு காரியங்களை சொல்லி இப்படி  செய்  என்றார்

நான் வீட்டில் இருக்கும் பொது வானத்தில் இருந்து பிதாவின் சத்தம் கேட்டது
 

என் கருத்து படி பிதாவை பார்க்கலாம் பிதாவின் சத்தத்தை கேட்கலாம்
 

தலத்தில் உள்ள நண்பர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 
என் கருத்து படி பிதாவை பார்க்கலாம் பிதாவின் சத்தத்தை கேட்கலாம்
 
 


"தேவனை ஒருவரும் ஒருகாலும் கண்டதில்லை" என்று இயேசுவே தனது  வாயால்  சொன்ன பிறகு எதன அடிப்படையில் பிதாவை காண முடியும் என்று சொல்கிறீர்கள்.
 
"தேவன் ஆவியாய் இருக்கிறார்"  அவருக்கு நாம் காணும்படி உருவம் எதுவம் கிடையாது. எனவே அவரை நம்மால் பார்க்கமுடியாது.  அவரை வெளிப்படுத்தியவர்  இயேசுவே. 
 
"என்னை காண்கிறவன் பிதாவை காண்கிறான்"  என்று  இயேசு   சொல்லியிருப்பதால்  ஒருவேளை அதன் அடிப்படையில் பிதாவை காண முடியும் என்று சொல்கிறீர்களா?  . 
 
5. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை  என்றும்
"ஒருவரும் காணக்கூடாத ஒளியில்  வாசம் பண்ணுபவர்" என்றும்  வேதம் தேவனை குறிப்பிடுகிறது 
 
அவ்வாறிருக்க அந்த சோதிகளின் பிதாவை எவ்வாறு காணமுடியும்?  
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
--------------------------------------------------------------------------------


என் கருத்து படி பிதாவை பார்க்கலாம் பிதாவின் சத்தத்தை கேட்கலாம்



--------------------------------------------------------------------------------

சகோதரர் எட்வின் அவர்களே

பிதாவை பார்பதற்கு சாத்திய கூறுகள் இருகிறதா?

இதை எதன் அடிப்படையில் சொல்கிறிர்கள்?


"தேவனை ஒருவரும் ஒருகாலும் கண்டதில்லை" என்று வேதம் சொல்லி இருக்கிறதே !


பிதாவினுடைய சத்தத்தை பழைய ஏற்பட்டு பரிசுத்தவான்கள் கேட்டு இருக்கிறார்கள்

ஆனால் தாங்கள் எதன் அடிப்படையில் பிதாவை பார்க்க முடியும் என்று

சொல்கிறிர்கள்?





__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

அன்பு சகோதரர்களுக்கு,


தேவனால் எல்லாம் கூடும் என்பது போல
தேவகுமரனாலும் எல்லாம் கூடும் என்பது நாம் அறிந்ததே,


லுக்கா - 10 : 23

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புகொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான் குமாரனும் குமாரன் அவரை எவருக்கு வெளிபடுத்த சித்தமாய் இருக்கிறாரோ அவனுக்கு தவிர வேறொருவனும் பிதா இனாரென்று அறியான்
.

இந்த வசதின் அடிப்படையில் குமாரனாகிய தேவன் தன் பிதாவை எவனுக்கு காட்ட வேண்டாமோ எவனுக்கு வெளிப்படுத்த வேண்டுமோ நிச்சயமாய் அவனுக்கு காட்டுவார்,

வெளிபடுத்துவார்.


ஒரு சிறிய உதாரணம் - ஒரு மனிதர் மிக பெரிய அதிகாரி என்று வைத்து

கொள்ளுங்கள்

முதலமைச்சர் என்று வைத்து கொள்ளலாம் அவரை பார்ப்பது அவருடன் பேசுவது மிக

கடினமானது

ஆனால் அவர் மகன் நினைத்தால் யாருக்கு தன் அப்பாவை காட்ட வேண்டுமோ

அவருக்கு காட்டுவார் அல்லவா அவர் நினைத்தாள் முடியும் அல்லவா


ஆம் இயேசு தேவனுடைய நேசகுமாரன் என்பதை வேதத்தில் பிதா எத்தன முறை கூறி

இறுக்கிறார்


மேலே கூறப்பட்டுள்ள வசனத்தின் அடிப்டையில் பார்த்தல் இயேசு தம் பிதாவை

யாருக்கு காட்ட வேண்டுமோ யாருக்கு அவரை வெளிபடுத்த வேண்டுமோ
அவர்களுக்கு அவர் காட்டுவார் வெள்ளிபடுதுவார்

என்பது வசனத்தின் மூலம் வைத்துள்ள என் கருத்து....................



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 லுக்கா - 10 : 23

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புகொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான் குமாரனும் குமாரன் அவரை எவருக்கு வெளிபடுத்த சித்தமாய் இருக்கிறாரோ அவனுக்கு தவிர வேறொருவனும் பிதா இனாரென்று அறியான்
.

என்பது வசனத்தின் மூலம் வைத்துள்ள என் கருத்து....................




இது சரியான கருத்துபோல் எனக்கு தெரியவில்லை சகோதரர் எட்வின் அவர்களே.

பிதாவை யாராலும்  யாருக்கும் காட்ட முடியாது ஏனெனில் அவர் ஆவியாய் இருக்கிறார்.  
 
I தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

அவரை நாம் காணமுடியாது   நாம் காணக்கூடாது!
 
ஆனால் அவரை இயேசுவால் ஒருவருக்கு  வெளிப்படுத்தவோ (அவரை அறிய வைக்க) முடியும். மேலும்   அவரால் ஒருவருக்குள் வந்து  வாசம்பண்ணவும்  முடியும்      
 
யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 


EDWIN SUDHAKAR wrote:
--------------------------------------------------------------------------------


/// லுக்கா - 10 : 23

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புகொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான் குமாரனும் குமாரன் அவரை எவருக்கு வெளிபடுத்த சித்தமாய் இருக்கிறாரோ அவனுக்கு தவிர வேறொருவனும் பிதா இனாரென்று அறியான்.

என்பது வசனத்தின் மூலம் வைத்துள்ள என் கருத்து....................//// ........




இந்த வசனத்தின் அடிப்டையில் தான் சொன்னேன், இயேசு தம் பிதாவை வெளிபடுத்துவார் என்று வசனம் சொல்லி இருப்பதால் தான் நானும் அப்படி சொன்னேன்


மேலே குறிபிட்டுள வசனத்தை தளத்தின் நண்பர்கள் விளக்கமாக தெரிவித்தால் நலமாய் இருக்கும்,..........................




--------------------------------------------------------------------------------




__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

/// லுக்கா - 10 : 23

 குமாரனும் குமாரன் அவரை எவருக்கு வெளிபடுத்த சித்தமாய் இருக்கிறாரோ அவனுக்கு தவிர வேறொருவனும் பிதா இனாரென்று அறியான்.

என்பது வசனத்தின் மூலம் வைத்துள்ள என் கருத்து....................//// ........




சகோதரரே வெளிப்படுத்துதலுக்கும்  காண்பதற்கும்  வேறுபாடு இருக்கிறது:  "பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை" என்று வசனம் சொல்வது அவரை கண்களால் யாரும்   பார்த்ததில்லை, பார்க்க முடியாது, பார்க்க வைக்கவும் முடியாது என்றே பொருள்படும்.  

ஆனால்  ஆவிக்குள்ளாகி ஆவிக்குரிய கண்களால் அவரை  பாத்தவர் பலர் வேதத்தில்  உண்டு அதற்க்கு பெயர்தான்  வெளிப்படுத்துதல். அவ்வாறு இயேசு பிதாவை ஒருவருக்கு வெளிப்படுத்த முடியும் என்று வசனம் சொல்கிறது   
 
உதாரணம் யோவான் அவிக்குள்ளாகி  தேவனது மகிமையை சிங்காசனத்தில் காண்கிறான் :
வெளி:   
2. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
3. வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

தீர்க்கதரிசிகள் எல்லோருமே அனேக நேரங்களில் ஆவியில் நிறைந்து அலைபவர்கள்தான் அவர்களில் அநேகர் தேவனை கண்டேன் என்று சொல்வதை பார்க்க முடியும்.     

எசேக்கியேல்:
3. அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
 
26. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.

இங்கு கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது என்று குறிப்பிடுவது ஆவிக்குள்ளவதையே.
 
இப்படி ஆவிக்குள்ளானவர்களுக்கு மட்டும்தான் ஆவிக்குரிய கண்களால் தேவனை அறியமுடியும் ஆனாலும் அவருக்கு உருவம்  என்பது கிடையாது   ஒரு  சாயல்  (அதாவது ஒரு இமேஜ்)    
 
அதுபோல் இயேசு "தேவனால் எல்லாம் கூடும்" என்றால் அதன் அடிப்படையில்   
தேவகுமாரனால் எல்லாம் கூடும் என்றும் பொருள் கொள்ள முடியாது அப்படி  வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.  "இருவராய் இருக்கும் ஒருவராகிய"  இவர்களுக்கு வேதம் குறிப்பிடும்  பெயர்கள்:     
 
    தேவன்                                           குமாரன்

சர்வவல்ல தேவன்                     வல்லமையுள்ள  தேவன் 
சோதிகளின் பிதா                        நித்ய பிதா  
சேனைகளின் கர்த்தர்                  சமாதான கர்த்தர் / ஆலோசனை கர்த்தர்
தேவ ஆவி                                  கிறிஸ்த்துவின் ஆவி   

இவ்வாறு இருவரையும் வெவ்வேறு பெயர்களில் வேதம் குறிப்பிடுகிறது 



-- Edited by SUNDAR on Thursday 11th of February 2010 02:56:04 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

//.....இது சரியான கருத்துபோல் எனக்கு தெரியவில்லை சகோதரர் எட்வின் அவர்களே.



பிதாவை யாராலும் யாருக்கும் காட்ட முடியாது ஏனெனில் அவர் ஆவியாய் இருக்கிறார்.



I தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


அவரை நாம் காணமுடியாது நாம் காணக்கூடாது!////...........





யாத்திராகமம்:



11. ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்



18. அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.



20. நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.



21. பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.



22. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்.



23. பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.



உபாகமம் :


12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்




சுந்தர் அவர்களே தேவன் மோசேக்கு பின் பக்கத்தை காட்டுவேன் என்று கூறி இருக்கிறாரே



மேலே நான் குறிபிட்டு உள்ள வசனக்களுக்கு நீங்கள் விளக்கம் தருமாறு
கேட்டு கொள்கிறேன்..............




__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 
உபாகமம் :


12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்

 




சகோதரரே!

நான் வேதாகம கல்லூரியிலோ அல்லது சபையிலோ சென்று தேவனை பற்றிய
பாடங்கள் கற்கவில்லை.  நான் எழுதுவது எல்லாமே எனது சொந்த அனுபவம், மற்றும் ஆவியானவரின் துணையுடன்  வேதத்தை ஆராய்ந்து அறிந்துகொண்ட கருத்துக்களே! சகோதரர் எட்வின் அவர்களின் இந்த பதிவிக்கு எனது வெளிப்பாட்டின் அடிப்படையில் என்னிடம் ஒரு பதில் உண்டு,  ஆனால் அது பலருக்கு தவறாக தோணலாம். கர்த்தருக்கு சித்தமானால் அதைப்பற்றி வேறொரு பதிவில் நான் விளக்குகிறேன்.  

இதற்கிடையில் இப்பதிவிற்கு சரியான பதில்
அறிந்தவர்கள் இதற்க்கான பதிலை பதிவிடும்படி அன்புடன் கேட்கிறேன்.
 
மேலும் இக்கருத்தை  மேலோட்டமாக ஆராய்ந்தால்
 
இங்கும் கர்த்தர்
 
20. நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.

இவ்வார்த்தைகள்
 
மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
என்ற வார்த்தையே நமக்கு உணர்த்துகின்றன.
 
எனவே இச்சம்பவத்தில் நடந்தது என்னவென்றால் , "மோசே  கர்த்தரின் மகிமையின் சாயலை கண்டான்" என்பதுதான் சரியான பொருள்  
  
18. அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.

22. என் மகிமை கடந்துபோகும்போது.....................என் பின்பக்கத்தைக் காண்பாய்
 
இதுதான் சரியான பொருள் என்று நான் கருதுகிறேன்.
 
எண்ணாகமம் 12:8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்;
 
என்ற வார்த்தையின் அடிப்படையில் கர்த்தரின் சாயலைத்தான் ஒருவர் பார்க்கமுடியும்.   இஸ்ரவேல் ஜனங்கள் அநேகமாயிரம் பேர்  இருந்தும்  அவன் மட்டும் சாயலை பார்த்தான் என்றால் அவன் நிச்சயம் தேவனின் அபிஷேக நிலையுடன் ஆவிக்குரிய  கண்கள் திறக்கப்பட்ட நிலையிலேயே  இருந்திருப்பான் என்றே நான் கருதுகிறேன்.
 
 
 

 



-- Edited by SUNDAR on Friday 12th of February 2010 11:06:15 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 



/////.......சகோதரரே!


நான் வேதாகம கல்லூரியிலோ அல்லது சபையிலோ சென்று தேவனை பற்றிய
பாடங்கள் கற்கவில்லை
. நான் எழுதுவது எல்லாமே எனது சொந்த அனுபவம், மற்றும் ஆவியானவரின் துணையுடன் வேதத்தை ஆராய்ந்து அறிந்துகொண்ட கருத்துக்களே! சகோதரர் எட்வின் அவர்களின் இந்த பதிவிக்கு எனது வெளிப்பாட்டின் அடிப்படையில் என்னிடம் ஒரு பதில் உண்டு, ஆனால் அது பலருக்கு தவறாக தோணலாம். கர்த்தருக்கு சித்தமானால் அதைப்பற்றி வேறொரு பதிவில் நான் விளக்குகிறேன்////..........


சுந்தர் அவர்களே

நான் வேதத்தை முழுவதும் படித்து புரியாத நிலையில் அநேகர் போதகர்கள் தங்கள்

மனதில் தோன்றிய

பல்வேறு கருத்துகளை தந்து குழப்பி ஆவிக்குரியவர்கள் கருத்துகள் கேட்க நேர்தாலும்


அதுவா அல்லது இதுவா என்று குழப்பத்தில் இருந்தேன்

GOOGLE வெப்சைட்டில் நரகம் என்று டைப் செய்து பார்த்தேன் அப்பொழுதுதான்

உம்முடைய தளத்தை பார்த்தேன் குழம்பி கிடந்த நான் யோசித்து வைத்து இருந்த பல

காரியங்கள் அழகாய் ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்தை பார்த்து

ஆண்டவருக்கு நன்றியை தெரிவீதேன்

என்ன ஆழமான வெளிபாடு எத்தனை ஆவிக்குரிய அர்த்தங்கள்

சுந்தர் அவர்களே ஒன்று சொல்கிறேன் அதை பெருமையா எடுத்து கொள்ளாமல்

கர்த்தர் உங்களுக்கு தந்த கிருபைக்காக வரத்துக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்


இப்படி பட்ட வெளிப்பாடுகள் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களுக்கு கிடைத்த

அனுபவம் போல் எனக்கு தோன்றுகிறது.......................



கர்த்தர் இன்னும் அவருடைய சித்தத்திலே உம்மை நடத்துவாராக




__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
உம்முடைய தளத்தை பார்த்தேன் குழம்பி கிடந்த நான் யோசித்து வைத்து இருந்த பல

காரியங்கள் அழகாய் ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்தை பார்த்து

ஆண்டவருக்கு நன்றியை தெரிவீதேன்

என்ன ஆழமான வெளிபாடு எத்தனை ஆவிக்குரிய அர்த்தங்கள்

 

சகோதரர் எட்வின் அவர்களே!
 
எனக்கு தேவனால் கிடைத்த மிக பெரிய கிருபையை  அறிந்துகொண்ட இரண்டாம்  நபர் நீங்கள்தான் என்று கருதுகிறேன்.  அதற்காக என் ஆண்டவரை நான் ஸ்தோத்தரிக்கிறேன். 
 
"உண்மை சம்பவங்கள்" என்று நான்கு பாகமாக  நான் எழுதிய என் வாழ்வல்   நடந்த சம்பவங்களை நான் அப்படியே பதிவிட்டபோது. அது  அநேகர்  என்னை "பயித்தியம்" என்று சொல்வதற்கும்  கிறிஸ்த்தவ சகோதரர்கள்  இதற்க்கெல்லாம் வசன ஆதாரம் இல்லை என்றும்  சில சகோதரர்கள்  "அநேகருக்கு உங்கள்   எழுத்து இடறலாக இருக்கும்" என்றும் எதிர்வாதமிட்டதன் அடிப்படையில்  யாருக்கும் நம்மால் இடறல் வந்துவிட கூடாது என்று கருதி   பதிவுகளை நீக்கிவிட்டேன்.
 
நீண்டநாள் தளத்தில் இருந்த அந்த பதிவுகளை  நீங்கள்  முழுவதும்   படித்திருப்பீர்கள்  என்று  கருதுகிறேன்.  
 
EDVIN WROTE
////இப்படி பட்ட வெளிப்பாடுகள் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களுக்கு கிடைத்த அனுபவம் போல் எனக்கு
தோன்றுகிறது.......................///
 
நிச்சயமாக!  என்னை அபிஷேகித்து வழி நடத்தியவர் யகோவா எனப்படும்   தேவனாகிய கர்த்தரே. அவருக்கே மகினையும் கனமும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென்!   அந்த எரிச்சல் உள்ள தேவனே என்னை வழி நடத்தினார். 
 
ஒரே ஒரு சிறு சம்பவத்தை சொல்கிறேன் "நான் மும்பையில் இருந்து கர்த்தரின் ஆவியால் நிரப்பபட்டு தூத்துக்குடி வந்தபோது கர்த்தர் என்னிடம் "பைபிளை  தவிற    பணம் பொருள் எதுவும்  எடுக்காதே நான் உன்னை கொண்டுசெல்வேன்" என்றார். ஆனால் நான் கேட்காமல் பயந்துபோய்  கொஞ்சம் பணத்தை  எடுத்து அதை வேத புத்தகத்துக்குள் பக்கத்துக்கு ஒன்றாக வைத்துக்கொண்டேன்.  தூத்துக்குடியில் எனது வீட்டுக்கு வந்த போது எனது இரட்சிக்கப்படாத கடைசி தம்பி (அவனுக்கு இந்த பைபிள் பணம் எதுவுமே தெரியாது)  மிக வேகமாக என்னிடத்தில் வந்து கடும் கோபத்துடன் "நான் என்ன சொன்னேன்  நீ என்ன செய்தாய்?"  என்று சொல்லி, என்னிடத்திலிருந்த பைபிளை தாறுமாறாக கிளித்துபோட அதனுள் இருந்த பணமெல்லாம் கீழே சிதறியது.  நான் செயலிழந்து போனேன். என்னுள் இருந்த ஆவி ஒரே நிட்மிடத்தில் அவனுள்  போனது. நான் தவறை உணர்ந்தபோது மீண்டும் என்னுள் வந்தது.   அப்படி ஒரு கோபத்தை நான் மனிதனிடம் பார்த்ததில்லை. வேதத்தில்  கர்த்தர் சிலரை   அடித்தே கொன்றிருக்கிறார் எனபது நிச்சயம் உண்மைதான் என்பதை உணர்துகொண்டேன். நான் அன்று தப்பியது ஆச்சர்யம் .  
இன்று அதை நினைத்தாலும் என் கண்கள் கலங்கும்.  என்னோடு கர்த்தர் பேசிய வசனங்கள் எல்லலாமே பழைய  ஏற்ப்பாடிலிருந்துதான் பேசினார்
       
அந்நாட்களில்  நான் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவே இல்லை. யார் சொல்லியும் நான் இயேசுவை விசுவாசிக்கவும் இல்லை அதே நேரத்தில் இயேசுவை நான் வெறுக்கவும் இல்லை.  ஆகினும் நான் கர்த்தரின் ஆவியால் அபிஷேகம் பெற்றேன் தேவனே என்னை ஜலத்தினாலும் (மழை)   ஆவியினாலும் அபிஷேகம் பண்ணினார். பிறகு வேதததை படித்து பார்த்து நான் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைக்கும் கீழ்படித்தேன். அந்த உன்னதாமான தேவனே மகா உயர்ந்தவர் என்றும் "யகோவா"  என்பது  அவரது  நாமம்  என்பது எனக்கு தெரியும்!
 
அவர் என்னை அபிஷேகித்தபோது   "நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை" என்று சொல்லிவிட்டார். அவர்  இன்றும்  என்னோடு கூட இருப்பதை என்னால் அனேக நேரங்கள் அறியமுடியும்..  என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று ஆறு நாட்களுள் எனக்கு போதித்துவிட்டதால் இப்பொழுது அவர் சொன்ன காரியங்களின்படி நடந்து அதை நிறைவேற்றுவதே என் மேல் விழுத்த கடமையாய் நினைக்கிறேன்!  அவரது திட்டம் நிறைவேறும்வரை அவர் என்னோடுதான் இருப்பார் என்பதும் நான் அறிந்திருக்கிறேன் அதற்காக அவரிடம் மன்றாடுகிறேன்.
 
இதில் பெருமை வருவதற்கு பெரிதாக  ஒன்றும் இல்லை. நான் பொதுவாக "ஒரு பயந்தாங்கல்லி" ஆண்டவரின் அபிஷேகம் பெற்றபிறகுதான் கொஞ்சம்  தேறியுள்ளேன்.  இப்பொழுதும்   எல்லோரையுமே என்னைவிட பெரியவர்கள் என்றும் நான்தான் எல்லோரையும்விட சிறியவன்  என்றுதான் எப்பொழுதும் கருதுவேன்.    இப்பொழுதும் ஆண்டவர் வார்த்தைகளை பேசும்போது மட்டும்தான் பிடிவாதமாக இருப்பேன் மற்றபடி யாரையும் எதிர்க்க விரும்புவது கிடையாது.   
 
ஏதோ  அவர் என்னை தெரிந்துகொண்டார் அவ்வவளவுதான்!  அனால் கர்த்தர்  எசெக்கியேலை  அபிஷேகித்தார்  எரேமியாவை அபிஷேகித்தார் அவர்கள் வாழ்ந்த நிரந்தரமற்ற வாழ்க்கையை பற்றி உங்களுக்கு தெரியும்.  அதுபோல் ஒரு வாழ்க்கைதான் என்னுடையதும்.  இதில் பெருமை வர ஒன்றுமே இல்லை. அனேக நேரங்களில் கஷ்டங்களைதான்   அனுபவிக்கிறேன்.     
 
எசெக்கியேலை அபிஷேகித்து இஸ்ரவேல் ஜனங்களின் அக்கிரமத்தை  அவரை சுமக்கபண்ணினார்:
 
4. நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.
 
அதுபோல் என்னை அபிஷேகித்து மிக முக்கியமான  காரியங்களை  செய்ய கட்டளையிட்டுவிட்டார். "சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ" என்று பவுல் சொன்னதுபோல,  கர்த்தர் சொன்னபடி   நான் செய்யாவிட்டால்,  எனக்கு என்ன நேரும் என்பதை யோசித்துபார்க்கவே பயமாக இருக்கிறது. எனவே கடந்த பதினெழு   வருடமாக அவருக்கு என்னை தாழ்த்தி முடிந்த மட்டும்  கீழ்படிகிறேன்!    
 
அப்போஸ்தலர் 13:41 அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி
 
என்ற வார்த்தைப்படி சில காரியங்களை நான் சொன்னாலும்  அதை யாரும் ஏற்க்கப்போவதும் இல்லை.  ஆகினும் சொல்லவேண்டியது எனது கடமை என்று ஆங்காங்கே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.     
 
அந்த  அபிஷேகம்  என்னுள் இருந்தபோது கர்த்தர் சொன்ன வார்த்தயை படித்தால் கர்த்தரே பேசுவதுபோல இருக்கும்  பவுல் நிருபத்தை படித்தால் பவுலே என்னோடு பேசுவதுபோல இருக்கும். அதை விளக்க வார்த்தைகளே இல்லை! பாதாளத்துக்குள் அப்படியே இறங்கிவிட்டேன் முடிவில்லா அந்த குழியை நினைத்தாலே இன்றும் பதறுகிறேன். .
 
ஏசாயா  சொல்வதுபோல் மனிதனின் கண் காது  இருதயம் எல்லாமே  அடைபட்டு இருக்கிறது, அது திறந்தால்  நாம் இப்படி ஒரு உலகத்தில் இந்த மக்கள் மத்தியிலா வாழ்கிறோம்?  என்றுதான்  தோன்றும்!   எனது   கண் காது மூக்கு இருதயம் எல்லாமே திறக்கபட்டிருந்தது.   
 
அதுபோன்ற  அனுபவம் எனக்கு மட்டும்தான் நடந்துள்ளது என்றால் அதைப்பற்றி தவறாக கருதலாம். அனால்  இப்பொழுது எனது மனைவியும் நான் சொல்லும் எல்லா அனுபத்துள்ளும் அதாவது கண் திறக்கப்படுதல் பாதாளத்தின் பயங்கரம், கர்த்தரின் அபிஷேகம் போன்ற  எல்லாவற்றுக்குள்ளும்  கடந்து வந்துகோண்டிருபது  நான் சொல்வது எதுவுமே தவறல்ல என்பதை   அறிந்துகொள்ள  உதவுகிறது!     
 
உங்களுக்கும் தேவன் அதை அறிந்துகொள்ளுமளவுக்கு  இருதயத்தை திறந்திருப்பதால் நான் ஆண்டவரை துதிக்கிறேன். அறிவது மட்டுமல்ல அவர் சொல்வதை செய்யவேண்டும் மனிதனின் கீழ்படிதல்,  மிகுந்த தாழ்மை மற்றும் பரிசுத்தம் என்பது மிக மிக அவசியம் "பிதாவின் சித்தம் செய்பவன்தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்"  வெறும் விசுவாசிப்பவன் மட்டும் அல்ல, "செய்யவேண்டும்" நமது "கிரியைகளை காட்டவேண்டும்". .வாயினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அனால் அதை கைகொள்வதுதான்  கடினமானதும்   சாத்தானால் முடியாத ஓன்று.   அசுத்த ஆவிகள்  கூட  "நீர் 
தேவனுடைய பரிசுத்தர்" என்று சொல்லி  இயேசுவை விசுவாசித்தன  அறிக்கையிட்டனவே, வெறும் விசுவாசத்தை மட்டும் வைத்திருப்போமானால் அவைகளைவிட  நமக்கு என்ன மேன்மை? அதை செயலில் காட்டவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
 
ஆண்டவரின் வார்த்தைக்காக எதையும் இழக்க துணியவேண்டும். அவர் சித்தம் செய்வதும் அவர் வார்த்தையை கைகொண்டு வாழ்வதும்தான் நமது ஒரே நோக்கமாக இருக்கவேண்டும். இதற்க்கு மிஞ்சியது எல்லாமே சாத்தான் கொண்டுவரும்  வழி கெடுக்கும் தந்திரம்தான்!. அவன் தனது  தந்திரத்தாலேயே அனைவரையும் ஏமாற்றுகிறான்!  ஆண்டவரை அறிந்துகொண்டால் அவன் தந்திரங்களை அறிய முடியும். நம் கண் முன்னால் அவன் தந்திரத்தை  அப்படியே காட்டிவிடுவார்.   
 
உலகமும் அதன் கிரியைகளும் ஒன்றுமில்லை!   ஒரு கூட்ட மனிதனின் கையில் அல்ல அது ஒரே ஒரு எசெக்கியேலின்   கையில்தான் மொத்த சுமையும் இருக்கிறது. மற்றெல்லோரும் நானும் சுமக்கிறேன் நீயும் சும என்று ஏதோ அர்த்தமற்ற  சுமையை  சுமந்துகொண்டு அலைகின்றனர் ஆனால் எல்லாமே ஒரே ஒருவர் கையில்தான் இருக்கிறது!   

ஆனாலும் நம் கையில் ஒன்றும் இல்லை  அனைத்தும் தேவன் கையிலேயே இருப்பதுபோல் எனக்கு தெரிகிறது.
 
சகரியா 4:6   கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
 
என்பதுபோல் நாம் பிரயசப்படலாம் ஆனால் வாய்க்கப்பண்ணுகிற   கர்த்தராலே எல்லாம் ஆகும்!
  
 

-- Edited by SUNDAR on Saturday 13th of February 2010 11:04:46 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் அவர்களே  


சாது சுந்தர் சிங் (கிறிஸ்துவின் சுவிசேஷகர் ) என்பவர் இமயமலைக்கு போகும்போது

திடிரென்று கரடி போல ஒன்று எதிரே வந்து நின்றதாம் அதை பார்த்து பயந்து
சாது கிழே விழுந்து விட்டார் எழுந்து பார்த்த போது அதிக முடி கொண்ட ஒரு ரிஷி
அங்கு இருந்தாராம் அந்த ரிஷி சாதுவை பார்த்து உன் கையில் என்ன என்று கேட்ட பொழுது அவர் கையில் இருக்கும் வேத புஷ்தகத்தை காட்டினார் சாது அப்பொழுது அந்த ரிஷி அந்த வேதத்தில் இருந்து பல ரகசியங்களை ஆவிக்குரிய பல அர்த்தங்களை சொல்லி இருவரும் ஜெபித்து பின்பு இருவரும் போய் விட்டார்கள்

நடந்த எல்லாவற்றையும் கிழே மக்களிடத்தில் சாது சொன்னார்
அனால் அவர்களே நி ஒரு பைத்தியம் என்று அவரை பரியாசம் செய்ய அவர் திரும்பவும் அந்த ரிசிவினிடத்தில் போய் நான் சொன்னதை இந்த மக்கள் நம்ப மறுக்கிறார்கள் என்றார் அப்பொழுது அந்த ரிஷி சாதுவை பார்த்து உனக்கு அருளப்பட்டது அவர்களுக்கு அருளப்படவில்லை நி இங்கே வருகின்றாய வேதத்தின் ரகசியங்கள் அறிகிறாயா அவ்வளவு தான். என்றார் .. ...................


ஆம் சுந்தர் அவர்களே உங்களுக்கு அருளப்பட்டது மற்றவர்களுக்கு அருளப்படவில்லை


ஒரு வசனத்தை மாத்திரம் உங்களுக்கு சொல்கின்றேன்


நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபைகளுக்கு எல்லாம் காரியத்தையும்

சொல்லிவிட்டு

கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்றார்


நிங்களும் உங்கள் கடமையைத்தான் செய்கின்றீர்கள் .................

பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களும்

புதிய ஏற்பாடு பரிசுத்தவான்களும்

எத்தனை கஷ்டம் எத்தனை துன்பம்

எவ்வளவு வேதனை அதனால் தான் அவர்களுடைய நாமங்களும் இன்று வரை பேச

படுகிறது

உங்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு நான் தகுதியானவன் அல்ல

பெரியவனும் அல்ல

நிச்சயம் கர்த்தர் உங்கள் தாகத்தை நிறை வேற்றுவார் ...........................




__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

இதனால் தெரியவருவதென்ன...EDWIN SUDHAKAR & Stephen
இருவரும் ஒருவரா...அல்லது அவர்களுக்குள் தளநிர்வாகியும்  இருக்கிறாரா..?

ஒண்ணுமே புரியவில்லை..!


__________________

"Praying for your Success"


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர் எட்வின் அவர்களே என்ன இது?
 
ஒரே பதிவை  இரண்டு பெயர்களில் பதிவிட்டிருக்கிறீர்கள்!?  நீங்கள் இருவரும் ஒருவரா?    எனக்கு முன்னமே  இந்த சந்தேகம் எழுந்தது இப்பொழுது உண்மையாகிவிட்டது.
 
இரண்டிலும்  தனி தனி கருத்துக்கள் பற்றி  சொல்லப்பட்டால் பரவாயில்லை!  
ஆனால் சில பதிவுகளில் நீங்களே கேள்விகள் கேட்டு நீங்களே பதில்சொல்வது சரியான முறை அல்ல.

இது பெரிய குற்றம் என்று சொல்வதற்கில்லை! ஆகினும் நாம் மறைவாக செய்யும் ஒவ்வொரு காரியமும் ஒருநாள் எல்லோர் முன்னிலையிலும் வெளியரங்கமாகும்,  அப்பொழுது விளக்கமளிக்க  நம்மிடம் நியாயமான காரணம் வேண்டும் இல்லை எனில் அது குற்றமாக கருதப்படும்.  
 
இனி ஒரே பெயரில் பதிவிடுங்கள்!    
 
புரிதலுக்கு நன்றி
அன்புடன்
இறைநேசன்



__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

"தள நிர்வாகி" என்ற முறையில் இது உங்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை அல்லது உங்களுக்கு அந்த சூட்சமம் தெரியாமலிருக்கலாம்;

நீங்களே உங்கள் பிள்ளைகள் மற்றும் சகோதரகள் பெயரில் எழுதுவதாகவே எண்ணினேன்;எழுத்தாளர்கள் புனைப் பெயரில் எழுதுவது தவறல்ல; சொல்லவரும் கருத்தே முக்கியம்;ஆனால் இதுபோல மாட்டிக்கொண்டால் சரியான தமாஷாக இருக்கும்;

(உ.ம்)
புஷ்பா தங்கதுரை என்பவர் வேணுகோபால் ஆக எழுதுவார்;நெருக்கமான காலக் கட்டங்களில் பாரதியாரும் கூட இப்படி எழுதியதுண்டு.


__________________

"Praying for your Success"
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard