ஸ்டீபன் எழுதியது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சகோதரரே
இயேசுவின் வருகை ஏசுவுக்கு தெரியுமா என்று தங்கள் சந்தேகத்தை
கேட்டு உள்ளீர்கள்.
என்னுடைய கருத்து என்னவெனில் ஏசுவுக்கு தெரியுமோ தெரியாதோ
என்று எனக்கு தெரியாது. ஆனால்
ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் எசுவினுடைய இரண்டாம்
வருகை இருக்கிறது என்பதை நினைவில் வைத்து தங்களுடைய
காரியங்களை நடபித்தால் நலமாய் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
எனவே அதை பற்றி ஆராய்வதை காட்டிலும் அவருடைய வருகைக்கு
நம்மையும் மற்றவர்களையும் ஆயத்தம் பண்ணுவதில் நேரத்தை
செலவிட்டால் நலமாய் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன் ....................................................................................................................................................................//////
ஸ்டீபென் அவர்களே,
இந்த தளத்தின் தங்கள் கருத்துகளை பதித்து அதிலே பலவற்றை நாம் அறிந்து இருப்போம்
பல வற்றை நாம் கூறி இருப்போம்
நீங்கள் சொல்லும் கருத்து எப்படி இருக்கிறது என்றால்
சுந்தர், மற்றும் தல நண்பர்கள் கேட்கும் கருத்துக்கு
நானும் பதில் சொல்ல முடியும் சுந்தர் அவர்களே சகோதரிகள் சபையில் பேசினால்
என்ன பேசாவிடில் என்ன
நாம் கர்த்தருக்கு உண்மையாய் இருந்தால் போதும்
இறைநேசன் அவர்களே தண்டனைக்கு தேவன் தாமதிகிரரோ அல்லது இல்லையோ நாம்
உண்மையாய் இருந்தால் நமக்கு ஒன்றும் வராது
ஸ்டீபன் அவர்களே பரிசுத்தத்தை குறித்து போதனை எங்கே,,,,,, நீர் மற்றவர்களுக்கு
போதிக்கிறீர்கள அது போதும் நாம் ஏன் மற்றவர்களை சொல்ல வேண்டும்
புறிகிறதா ஸ்டீபன் இப்படி அழகாக ஞானமாய் கூறிகிறேன் என்று நினைப்பதை விட்டு
விடுங்கள்
தங்களுக்கு பதில் தெரிந்தால் பதியுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் அவ்வளவுதான்
நீங்கள் சொல்வதை பார்த்தால் தளமே வேண்டாம் போல்
இருக்கிறது................................ நாங்களும் இயேசு கிறிஸ்துவின் வைராக்கிய
காரர்கள்தான் .................
இயேசுவின் வருகை ஏசுவுக்கு தெரியுமா------
ஏன் தெரியாது என்று என் கருத்தை விரைவில் பதிக்கிறேன்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
என்னுடைய கருத்து என்னவெனில் ஏசுவுக்கு தெரியுமோ தெரியாதோ
என்று எனக்கு தெரியாது. ஆனால்
ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் எசுவினுடைய இரண்டாம்
வருகை இருக்கிறது என்பதை நினைவில் வைத்து தங்களுடைய
காரியங்களை நடபித்தால் நலமாய் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் ....!
சகோதரர் ஸ்டீபன் அவர்களே நாம்எல்லோரும் இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆகவேண்டும் என்ற தங்கள் கருத்து முக்கியமானதே, அதே நேரத்தில் வேதத்தை தியானித்து இதுபோல் ஆண்டவரின் வார்த்தைகளை ஆராய்ந்து எழுதுதலும் ஆயத்தமாதலின் ஒரு பகுதியே என்று நான் கருதுகிறேன்.
நாம் தனியாக ஒரு சத்தியத்தை ஆராய்வதைவிட பல சகோதரர்களின் கருத்துக்கள் அடிப்படையில் ஆராயும்போது அதில் இன்னும் அனேக உண்மைகளை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
எனவே எட்வின் சகோதரர் எழுத விரும்பும் கருத்தை எழுதட்டும். அது பற்றியும் ஆராயலாம்!
மத்தேயு 10:26வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
என்று சொன்ன இயேசுவானவர், தனக்கு தெரிவிக்கப்பட்ட எல்லாவற்றையும் தனது ஊளியகாரர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். இவ்விதத்தில் பார்த்தால் இதுவரை இயேசு வரும் நாள் என்று அறிவிக்கபட்ட எல்லா நாட்களுமே தவறாகி போனது, எனவே எனது கருத்துப்படி இயேசுவுக்கு அவர் வருகையின் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.
இதற்க்கு அடிப்படை காரணம் ஒன்றுண்டு. இயேசுவின் வருகை மற்றும் உலகின் முடிவு என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கபோகும் நிகழ்ச்சியல்ல! அது ஒரு காரியத்தின் நிறைவேறுதல். அது நிறைவேறினால்தான் இயேசு பூமிக்கு வரமுடியும்
மத்தேயு 24:14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
பூலோகமெங்கும் இயேசுவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் அது நிறைவேரும்போதுதான் அவரால் வரமுடியும். காலம் நிறைவேறியபோது இயேசு மனிதனாக பூமிக்கு வந்தார் அதுபோல் அவரின் இரண்டாம் வருகைக்கும் ஒரு செயலின் நிறைவேறுதல் நடைபெற வேண்டும். அதற்காகத்தான் அவரின் ஊழியக்காரர்களை அவர் எல்லா திசைகளிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.
கர்த்தருக்குள் மிகவும் ஆவிக்குள்ளன ஒரு சகோதரியின் தரிசனப்படி "இயேசு பூமிக்கு வர தனது தூதர்களோடு எப்பவும் ஆயத்தமாக இருப்பதாகவும் ஆனால் பிதாவின் கட்டளைக்கு எதிர்பார்த்து காத்திருப்பதாகவும்" கூறியிருக்கிறார்கள்.
மத்தேயு 24:36அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
பிதாவின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் இயேசுவின் பிரதான செயல். இயேசுவின் வருகையும் உலகின் முடிவும் பிதா ஒருவருக்கே தெரிந்த விஷயம் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இந்த செய்தி முதல் முதலில் அறிவிக்கப்படபோவது இயேசுவுக்குதான்!
இயேசுவானவர் பிதாவுக்கு முற்றிலும் கீழபடிந்திருப்பதால் அவர் இந்த செய்தியைப்பற்றி பிதாவிடமிருந்து அறிய ஆசைப்படவில்லை என்றே கருதுகிறேன்.
-- Edited by SUNDAR on Monday 22nd of February 2010 10:45:09 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)