சீசர்கள் அவரை நோக்கி எவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம் இவன் செய்த பாவமா? இவனை பெற்றவர்கள் செய்த பாவமா? என்று கேட்டார்கள்.
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
வசனம் எப்படி குறிப்பிடடப்பட்டுள்ளதால் பிறவிலேயே ஊனமாய் பிறக்கும் எல்லாருமே தேவனுடைய கிரியைகள் வெளிபடுவதர்காக பிறந்தவர்கள்தானா?
அல்லது ஒரு சிலர் என்றல் மற்றவர்கள் இப்படி பிறப்பதற்கு காரணம் என்ன ?
இது யாருடைய தவறு ?
ஒருவேளை இவர்களின் முற்பிதாக்கள் செய்த சாப கேட்டினால் இப்படி பிறந்தார்களா ?
தெரிந்த தல சகோதரர்கள் தங்கள் கருத்தை பதிக்கலாமே ...!
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
(இப்பதிவு வேறு குழுமத்தில் பதியப்பட்ட எனது சொந்த கருத்து)
இந்த கேள்வியை இந்துக்களிடம் கேட்டால், மிக சுலபமாக "அது முன் ஜன்ம பாவம்" என்று பதில் சொல்லிவிடுவார்கள். ஒருவர் முன் பிறவியில் செய்த பாவமே அவரை அடுத்தபிறவியில் குருடராகவோ செவிடராகவோ முடவ்ராகவோ பிறக்கவைக்கிறது என்று சொல்லப்படும் கூற்று அநேகரால் நம்பபடுவதே!
அனால் விவிலியத்தில் முன் ஜன்மம் பற்றிய கருத்து எங்குமே இல்லை. (முன் ஜன்மம் பற்றி கருத்துக்கள் சில ஜாதிகள் வைத்திருக்கும் பழைய விவிலியங்களில் இருந்ததாகவும் பின்னாட்களில் அவைகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு கருத்தும் உலவி வருகிறது)
பிறவி ஊனத்துக்கு முன்ஜன்ம பாவம் காரணம் இல்லை என்ற கருத்துடனே நோக்குவோம் எனில் பிறவி உணத்துக்கு காரணம் என்ன?
பழைய ஏற்பாட்டு காலங்களில் பிறவி ஊனம் பற்றிய பெரிய கருத்துக்கள் எதுவும் இல்லை எனலாம். ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசு பல பிறவி குருடர்களை குணமாக்கிய சம்பவங்கள் இருப்பதோடு ஒரே ஒரு இடத்தில் இயேசுவிடம் கீழ்க்கண்ட கேள்வியும் கேட்கப்படுகிறது
யோவான் 9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
அதற்கும் இயேசு மிக தெளிவான பதில் எதுவும் சொல்லாமல் கீழ்க்கண்ட பதிலளித்தார்:
3. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
இந்த ஒரே பதிலின் அடிப்படையில்தான் நாம் பிறவி ஊனத்தை ஏன் அல்லது அது யாருடைய பாவம் என்று ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
முதலில் இயேசு சொன்ன பதில் படி ஒருவர் "பிறவி ஊனராக பிறப்பதற்கு யாருடைய பாவமும் காரணம் அல்ல" என்பதை நாம் உணர வேண்டும். ஒருவர் செய்த பாவத்தில் அவர் மகன் ஊனமுற்றவராக பிறந்தார் என்ற கருத்து இயேசுவின் கூற்றுப்படி முற்றிலும் தவறானது! எனவே ஊனமுற்றவராக பிறப்பதற்கு யாருடைய பாவமும் காரணம் அல்ல என்பது விவிலியத்தின் கூற்று!
இரண்டாவதாக தேவனின் கிரியை வெளிப்படுபடி இப்படி பிறவிக்குருடனாக ஒருவன் பிறந்தான் என்று அடுத்த காரணத்தை இயேசு சொல்கிறார்.
இதை நாம் சற்று ஆராய வேண்டும். எல்லா குருடர்களிடத்திலும் எல்லா ஊனமுற்றவர்களிடத்திலும் தேவனின் கிரியை வெளிப்படுகிறதா? இல்லையே! அப்படி எல்லோரிடமும் தேவனின் கிரியைகள் வெளிப்பட்டால் இன்று உலகில் எந்த ஊனமுற்றவர்களும் இருக்கமாட்டார்களே!
பிறகு இயேசு ஏன் அப்படி சொன்னார்? இதற்க்கான பதிலை என்னால் எங்கிருந்தும் அறியமுடியவில்லை ஆகினும் எனக்குல்ள்ள ஞானத்தின்படி பதிலளிக்கிறேன்
நன்றாக படித்து அதிகம் சம்பாதித்து அமெரிக்காவில் அருமையான இடத்தில் செட்டிலாகி இருக்கும் ஏன் நண்பனிடம் ஆண்டவரை பற்றி சொன்னால் அவன் மிக சுலபமாக "எனக்கு எந்த குறையும் இல்லை எனக்கு எந்த ஆண்டவரும் தேவையில்லை, நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். தேவைப்பட்டால் பார்ப்போம்" என்பதுபோல் பதில் சொல்கிறான்.
இந்த உலகத்தை பொறுத்தவரை ஒருவர் எந்தவித குறையுமின்றி ஒரு அழகான சினிமா ஸ்டார்போல் பிறந்து எல்லா சுகத்துடனும் தேவையான பணத்துடனும் வாழ்வாரானால் அவர் ஒருநாளும் இறைவனை தேட விரும்பவும் மாட்டார். இறைவனிடம் அவ்வளவு சீக்கிரம் வரவும் மாடார் அப்படியே வந்தாலும் அவரில் தேவனின் கிரியைகள் பலமாக வெளிப்பட எந்த ஒரு சந்தர்ப்பமும் இல்லை!
ஆனால் ஒரு பிள்ளை பிறவியில் குருடனாக பிறக்குமானால் முதலில் அந்த பிள்ளையின் தாய் தந்தைக்கு அது ஒரு மிகப்பெரிய வேதனை. வேதனை என்றால் தீராத மாற்ற\ முடியாத ஒரு முள்ளாகி போகும் வேதனையாக அது எப்பொழுது இதயத்தில் உறுத்திக்கொண்டு இருக்கும். இந்நிலையில் மனிதர்களால் எதுவும் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக தெரிந்துவிடுவதால் அவனை படைத்த இறைவனை தேடி வந்து அவரிடம் சரணடைந்து விடாப்பிடியாக மன்றாடுவதன் மூலம் தேவனின் கிரியை வெளிப்பட்டு அந்த குருடன் குணமாகவும் அதன் மூலம் அந்த தாய்தந்தையும் இன்னும் அநேகரும் தேவனின் கிரியை அறிய வாய்ப்பு உண்டாகிறது.. தேவன் தன்னை தேடி வந்து சரணடைபவர்களுக்கு நிச்சயம் பதிலளிப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை!
இரண்டாவதாக ஒருவேளை அவனின் தாய் தந்தைதான் "விதி" என்றெண்ணி இறைவனை தேடாமல் விட்டுவிட்டாலும், இந்த ஊனமாய் பிறந்தவன் தனது வயதில், தன நிலையை அறிந்து எல்லோரும் உலகில் பார்வையுடன் இருக்க என்னை மட்டும் இப்படி ஏன் படைத்தீர் ஆண்டவரே என்று தொடர்ந்து மன்றாடி அழுது ஜெபிக்கும்போது தேவனின் கிரியை வெளிப்பட்டு அவருக்கு பார்வை வர அதன் மூலம் அநேகர் ஆண்டவரின் கிரியை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது!
ஆம்!
உலகில் பிறக்கும் எல்லா ஊனமுற்றவர்களும் தேவனின் கிரியையை ருசி பார்க்கவும், அதானால் அநேகர் தேவனை நோக்கி ஓடி வரவேண்டும் என்ற நோக்குடனே இறைவனால் படைக்கப்படுகின்றனர்! ஆனால் இவர்களுடைய தாய் தகப்பனோ அல்லது அந்த ஊனமுற்றவர்களோ இறைவனை விடாப்பிடியாக தேடாமல் தன்னை படைத்தவரை நோக்கி விசுவாசத்தோடு அழுது மன்றாடாமல் விதி என்றெண்ணி விட்டுவிடுவதால் அனேக குருடுகள் இன்றும் குணமாக்கப்படாமல் இருக்கின்றன!
விடாப்பிடியாக் தேடுபவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் தேவன் நிச்சயம் விடுதலை அளிப்பார்!
அனால் ஒருவரும் அதீத அக்கறையுடன் ஆண்டவரை தேட்டாததாலேயே தேவனுடைய கிரியை வெளிப்படாமல் அனேக ஊனங்கள் இன்றும் குணமாகாமல் இருக்கிறதேயன்றி அதற்க்கு யார் பாவமும் காரணம் அல்ல என்பதே விவிலியம் சொல்லும் விசேஷம் என்று கருதுகிறேன்!
(இது நான் ஆராய்ந்து அறிந்த எனது அறிவுக்கெட்டிய கருத்து, தவறு இருக்கலாம்! இதைவிட மேலான கருத்து இருந்தால் சகோதரர்கள் பதியலாம்)
-- Edited by SUNDAR on Wednesday 10th of February 2010 08:02:28 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
புலம்பல் 3:38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும்நன்மையும் புறப்படுகிறதில்லையோ? என்று வேத வசனம் கூறுவதால் தேவன் எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் மனிதர்களை ஊனமாக பிறக்க வைக்கிறார் என்று நீங்கள் கருதுகிறீர்களா? நிச்சயம் அவ்வாறு அல்ல!
நல்லவர்களை பாதுகாப்பது எப்படி ஒரு நல்ல தகப்பனின் கடமையோ அதுபோல் தீமை செய்யம்போது அவர்கள் செய்கைக்கு தகுந்தால்போல் தண்டிப்பதும் ஒரு நல்ல தகப்பனின் கடமை. அதன் அடிப்படையிலேயே தேவன் கீழ்க்கண்ட வார்த்தைகளை உரைக்கிறார்
ஒபதியா 1:15 நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். நீதிமொழிகள் 24:12அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன்கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? அப்போஸ்தலர் 18:6அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்
எசேக்கியேல் 16:43இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எங்கோ எப்போதோ அவர்கள் செய்த காரியத்துக்கு இங்கு இப்பொழுது சரிகட்டப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். அவர்கள் என்ன செய்தார்கள் என்பது நமக்கு மறைவாய் இருக்கிறது அதற்காக தேவன் தனது இஸ்டப்படி ஒரு சர்வாதிகாரியாக செயல்படுபவர் அல்ல!
ஆண்டவரின் வாயிலிருந்து தீமையும் புறப்படுவது உண்மைதான் அனால் அது அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து வாழ்பவர்களை என்றும் பாதிக்காது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)