இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து.....


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து.....
Permalink  
 


வேத புத்தகத்தின் மீது நம்மெல்லோருக்கும்  வைராக்கியம  இருக்க வேண்டியது அவசியம்தான்  அதே நேரத்தில்  நாம் வைத்திருப்பது மட்டும்தான் சரியானது  மற்ற எலாமே எவ்விதத்திலும்   தேவையற்றது  என்பது போன்ற கருத்து  என்றுமே  சரியானது அல்ல என்றே நான் கருதுகிறேன். 
 
யோபு 5:9 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்
 
தேவனின்  செயல்கள்  ஆராய்ந்து  பார்க்க  முடியாதவைகள் அவரின்  அனுமதியின்றி இந்த உலகில் எதுவுமே நடப்பது இல்லை!   ஒரு சிறு  குழந்தை ஒரு வார்த்தை பேசினாலும் அதிலும் ஏதோ தேவன் சொல்லும்  ஒரு உண்மை இருக்கிறது என்ற நோக்கிலேயே ஆராய்ந்து பார்ப்பதே  நலம்!   நாம்   அறிந்துகொண்டது மட்டும்தான் சரி அதற்குமேல் ஒன்றுமில்லை என்ற 
நோக்கில்  நா என்றுமே செயல்படவே கூடாது. 
 
இறைவன் ஒருவரே அவரைத்தவிர வேறு ஒருவர் இல்லை என்ற கருத்திலேயே நாம்  ஆராய வேண்டும் மற்றபடி பலதரப்பட்ட இறைவனா என்ற வார்த்தைக்கே  இங்கு  இடமில்லை. இறைவன் என்பவர் ஒருவர்தான்  அவர் செய்கையின்றி இங்கு   ஒன்றும்  நடந்திருக்காது என்ற கருத்திலேயே எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் நலம்.   
   
இந்துக்கள்   பரபிரம்மம் என்று சொல்லும் ஏகஇறைவனும்   நாம் பரமபிதா என்று சொல்லும் தேவனும் ஒன்றாக கூட  இருக்கலாமே! 
 
"அறியப்படாத தேவனுக்கு" என்று புறமதத்தார் எழுதியிருந்த வார்த்தையை  பார்த்து, அவர்களுக்கு நீங்கள் அறியாத  அந்த தேவன் இவர்தான் என்று பவுல்  அறிவிக்கவில்லையா?       
 
பிறப்பால்  கிறிஸ்த்தவராக இருப்பவர்கள் வேதாகமத்தை மட்டுமே படித்துள்ளதால்  அது  ஓன்று மட்டுமே உண்மை  என்று எண்ண   தோன்றுகிறது,   அது தவறான கருத்து  என்று நான் சொல்லவரவில்லை, ஆனால்  அதுபோல் ஒவ்வொரு மதத்தாரும் தங்கள் தங்கள் வேதத்தின் மீது பற்று கொண்டிருப்பது இயற்கையே. அவர்களுக்கு பதிலளிக்கும் நோக்கத்தில் பல நூல்களை படித்து அறிந்து,  அவற்றுக்கு நம் வேதத்தோடு சம்பந்தம் இருப்பதை அறிந்தபின் அதைப்பற்றி எடுத்து சொல்வதில் தவறில்லை என்றே நான் கருதுகுறேன். எப்படியேனும் சிலபேரை ஆதாயப்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோள்!   
 
I கொரிந்தியர் 9:22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன் 
 
அதுபோல் வேதத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்துக்கும் அவரவர்  அறிதலுக்கு ஏற்ப  ஒரு பொருள் கொண்டிருப்பார்கள்    எனபது பொதுவானது. அதற்காக  நான் சொல்வதுதான் உண்மை  மற்றெல்லாம் தவறான புரிதல் என்று  சொல்லிவிட முடியாது. 
 
பிரசங்கி 9:5  மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது
 
என்றும் வசனம் இருக்கிறது
 
எசேக்கியேல் 32:21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்
 
என்றும் வசனம் இருக்கிறது. இதில் முதலில் உள்ளது உண்மை மற்றது உண்மையல்ல என்று எடுக்க முடியாது. இரண்டிலும் உண்மை நிச்சயம் இருக்கும். அதாவது மரித்தபின் ஒன்றும் அறியாத நிலையும் இருக்கும் பாதாளத்தில் இருந்து பேசும் நிலையும் இருக்கும் என்றே பொருள் கொள்ள முடியும்.    
 
பரிசுத்த வேதாகமத்திலேயே அனேக வேறு புத்தகங்களை பற்றி குறிப்புகள் இருக்கிறது. அதில் சில இதோ  
 
யாசேரின் புத்தகம்    
சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகம
தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தம  
ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்ம் .    
 
இது போன்ற பல புத்தகங்களின் பெயர் வேதத்தில் உள்ளது. இவைகளில்  என்ன எழுதப்பட்டுள்ளது,  அதில் தேவனின் வார்த்தைகள் எதுவும் இருக்கிறதா? என்பது நமக்கு தெரியாது!   இன்னும் நம் கண்காண, ஆர் சி வேதாகமத்தில் உள்ள யூதிதாகமம் /மக்கபே ஆகமம் போன்ற  பல புத்தகங்கள் நீக்கப்பட்டு அவைகள் நமது கையில் இருக்கும் இந்த  வேதாகமத்தில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததேl.  நீக்கப்பட்ட புத்தகத்தில் உள்ளதெல்லாம்  தேவனின் செயல்கள் இல்லை என்று எப்படி தீர்மானிக்கமுடியும்?  யார் அந்த  புத்தங்களை நீக்க அதிகாரம் கொடுத்தது?
 
இதெல்லாம் மனித செயலால் நடந்ததா? அல்லது தேவ செயலால் நடந்ததா?  யாருக்கு தெரியும்?  எனவே எல்லாவற்றையும் ஆராய்வது தவறல்ல!
 
பொதுவாக வேதபுத்தகத்தை தொகுத்தவர்கள் நமது இந்திய தேசத்தை  சார்ந்தவர்கள் அல்ல.  அவர்கள்  இங்குள்ள வேதங்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை மனிதர்களாக கமிட்டி அமைத்து இது தேவை இது தேவையல்ல என்று தீர்மானித்து சிலவற்றை நீக்விட்டர்கள்  எனவே தங்கள் கருத்துக்கு ஒத்துவராத எல்லாவற்றையும் நீக்கியிருக்கலாமே!  மொழி பெயர்ப்பில் பிழை இருக்கிறது என்பதை அநேகர் ஏற்கின்றார்கள் அவ்வாறிருக்க சில உண்மை கருத்துக்களும் நீக்கப்பட்டிருக்கலாமே!  
  
If you study Roman history, you will find that the earliest followers of Jesus believed in reincarnation, but in about 525 AD Emperor Justinian ordered the papal council to include the law that to believe in reincarnation was a sin, punishable by death , and that Resurrection was the only answer. Few people realize how strongly the Roman Emperors influenced the early Christian Church

Source(s):


 
இதுபோல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? எப்படி உண்மையை அறிய முடியும்?   உண்மையை அறிந்தவர் தேவன் ஒருவரே! . அவரிடம் அமர்ந்து விசாரித்த்வர்களே உண்மையை அறியமுடியும்!  
 
வேதாகமத்தில்  உள்ளது மட்டும்தான் உண்மை என்றால் மற்ற எல்லா மனிதர்களையும் தேவன் படைக்கவில்லையா? அல்லது படைத்து கவனிக்காமல் 
எக்கேடும் கெட்டு போ என்று விட்டுவிட்டாரா?  வாக்குதத்தம் பண்ணப்படாத இஸ்மவேலோடு தேவன் இருந்தார் என்று வேதம் சொல்கிறதே!  அவர் அவன் மூலம் என்னென்ன  கிரியைகளை செய்தார்  என்று யாருக்கு தெரியும்? புரஜாதியானாகிய பிலேயாமை தேவன் வழி நடத்தினார் என்றும், பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார் என்றும், சம்பந்தமே இல்லாத ஜாதிக்காரனான   கோரேசை நான் அபிஷேகம் பண்ணினேன் 

ஏசாயா 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக 

என்றும் கர்த்தர் சொல்கிறாரே!. அவர் எந்த ஜாதிக்கும் எப்படி வேண்டுமானாலும் கிரியை செய்யமுடியும் என்பதற்கு வேதத்தின் அனேக ஆதாரங்கள் இருக்கிறது.  அவர் செய்த எல்லாமே   வேதத்தில் எழுதப்பட்டுள்ளது அதற்க்கு மேல் ஒன்றும் அவர் செய்யவில்லை    என்று  கருதுவது  அநாதி தேவனின் அனைத்து வல்லமையையும் ஒரு  புத்தகத்துக்குள்  அடக்குவது போன்றதாகும். அது நிச்சயம் சரியான கருத்து அல்ல என்றே  நான் கருதுகிறேன்.      
  
எனது கருத்துப்படி மனிதனின் இரட்சிப்புக்கு சரியான நேர்  வழியை காட்டுவதுதான்  பரிசுத்த வேதாகமம். 
 
இதன் அடிப்படையில், வேறு எந்த புத்தகமும் எனக்கு வேண்டாம் என்று ஒருவர் கருதினால் மிகவும் நல்லது!  வேண்டவே வேண்டாம் அது ஒன்றை அறிந்தாலே போதும்,  சகலத்தையும் அறியமுடியும் என்ற கருத்தை நான் நிச்சயம் ஏற்கிறேன். ஆனால் அந்து அவரவர்    விருப்பம், என்போன்ற பல மத மக்களிடம் வாதிட விருபுபவர்களுக்கு  அது மட்டும் போதியது அல்ல.  
 
எம்மாவூர் போன மனிதர்களிடம் இயேசு அவரோடு நடந்துபோய்தான் தன்னை
தெரியப்படுத்தினார். அதுபோல் எத்தியோப்பிய  மந்திரி போகும் ரதத்தில் தானும்  ஏறித்தான்  அவரை பிடித்து ஞானஸ்தானம் கொடுக்க முடிந்தது.   அதுபோல் நமது பரிசுத்தத்தில் தவறாதபடி  அவர்களுடன்  சிறிது தூரம் நடந்து உண்மையை எடுத்துரைப்பது தவறல்ல என்றே நான் கருதுகிறேன் 
 
வெறும் கிறிஸ்த்தவர்களிடம் மட்டுமே விவாதம் பண்ணுவதில் பெரிதாக பயன் எதுவும் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அவரவர் தாங்கள் பிடித்த காரியத்தில் இருந்து கொஞ்சமும்   தங்கள் கருத்தை தளர்த்த  தயாராக இருப்பதில்லை என்பது நான் அறிந்ததே.
 
இந்நிலையில்  நல்லவர்களாக இருந்தும் உண்மை  தேவனை சரியாக   அறியாமல்  வேறு பாதையில் பயணிப்பவர்கள் பலர், அவைகள் வேதனைகளின் அடிப்படையில்   சில கேள்விகளை முன் வைக்கும்போது  அவர்கள் 
வைததிருக்கும் வேதத்தை ஆராய்ந்து அதன் அடிப்படையில்   பைபிள் காட்டும்  தேவன்தான் உண்மையானவர்  என்று அறிவிப்பதில் தவறு எதுவும் இல்லை என்றே நான்  கருதுகிறேன். ஒப்பீடு இல்லாமல் ஒன்றையும்  உயர்ந்தது என்று நிரூபிக்க முடியாதே!   
   
21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்    
 
என்ற பவுலின் வார்த்தையை கருத்தில் கொண்டு அனைத்தையும்    அராய்ந்து பார்த்து,தேவையானதை பிடித்துகோள்ளலாம் தேவையற்றதை விட்டுவிடலாம்!    
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard