உலகில் எத்தனையோ நற்செய்திகளை கேட்கிறோம், சில செய்திகள் ஒருவருக்கு சந்தோசத்தை கொடுக்கிறது சில செய்திகள் ஒரு வீட்டுக்கு சந்தோசத்தை தரும் சில செய்திகள் சில நாட்டுக்கு சந்தோசத்தை தரலாம்!
ஆனால் எல்லா மனிதனுக்கும், அதாவது பிறந்தவர், பிறக்காதவர், குருடர், செவிடர், மனநிலை சரியில்லாதவர் இந்தியர் கிரேக்கர் அமெரிக்கர் என்று பாகுபாடில்லாமல் எல்லோருக்குமே மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும் நற்செய்தி என்று சொல்லப்படுவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் பிறப்புதான்.
லூக்கா: 2
10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்
இதை தவிர வேறு எந்த நற்செய்தியாலும் எல்லோரும் சந்தோசப்படவே முடியாது. பிறருக்கு நன்மை செய்தவன் மட்டும்தான் மீட்கப்பட முடியும் என்றால், அது அவர் ஒருவரூக்கு மட்டும்தான் நற்செய்தி. அனால் இங்கு எல்லோருக்குமே நற்செய்தி! ஏனெனில் இயேசுவின் பிறப்பு எல்லோருக்கும் மீட்பை கொடுக்க கூடிய ஒரு நற்செய்தி. சாத்தானால் பாவத்துக்கு அடிமையாகி உலகில் துன்பங்களை அனுபவிப்பதோடு மரித்தபின்னும் சாத்தானின் இடமாகிய பாதாளத்துக்கு கொண்டு போகப்பட்டு வாதிக்கப்படும் மக்களை மீட்பதர்க்காக தேவன் இயேசுவை அனுப்பியதே அந்த மிக உயர்ந்த நற்செய்தி.
அந்த செய்தி சொல்லப்பட்டது என்னவோ எல்லோருக்கும்தான் அனால் அந்த நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அதனால் பலன் உண்டு, நம்பி ஏற்காதவர்களுக்கு அந்த செய்தியில் பயனில்லை என்பதைத்தான் கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
யோவான் 3:18 அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
அதாவது நமது ஊரில் நோயாளிகளுக்கு வயித்தியம் பார்க்க ஒரு நல்ல டாக்டர் வந்திருக்கிறார் என்று ஒரு விளம்பரம் செய்யப்படுகிறது. இது ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் அதாவது நோயாளி நல்லவர் கெட்டவர் எல்லோருக்குமே அது நற்செய்திதான். ஆனால் நோய் உள்ள ஒருவர் டாக்டரிடம் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால், அவருக்கு டாக்டர் வந்தது நற்செய்தி இல்லை என்று எடுத்துகொள்ள முடியாது! அவருக்கும் அது நற்செய்திதான், ஆனால் அவர் அந்த நல்ல செய்தியை அசட்டை பண்ணி புறம் தள்ளுவதால் அவர் தனது பழைய நிலையிலேயே இருக்கிராறேயன்றி, சொல்லப்பட்ட செய்தியின் தன்மையில் எந்த மாற்றமும் கிடையாது!
அதுபோல் இயேசு பிறந்தது நற்செய்திதான், ஆனால் அதை அசட்டைபண்ணி வேண்டாம் என்று ஒதுக்குகிறவர் அந்த செய்தியின் பலனை அடையாமல் பழைய நிலையிலேயே இருக்கிரார்கலேயன்றி அந்த செய்தியின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நீண்டநாள் கழித்து ஒருநாள் அந்த செய்தில் உள்ள உண்மையை உணர்ந்து இயேசுவினண்டை வந்தால் அப்பொழுதும் அது அவருக்கு நற்செய்தியாகவே இருக்கும்.
அதாவது இயேசு பிறந்தார் என்பது எப்பொழுதுமே எல்லோருக்கும் நற்செய்திதான். அந்த செய்தியின் தன்மை உலகம் இருக்கும் வரை மாறாது! அனால் அதன் பயனை அனுபவிப்பதும் அனுபவிக்காததும் சுய சித்தம் செய்யும்படி படைக்கப்பட்ட மனிதனின் கையில் இருக்கிறது.
உதாரணமாக நாகமானை எடுத்துகொள்வோம்.
"யோர்தானில் குளித்தல்" என்னும் ஒருசிறு செயலை செய்தால் அவரது குஸ்டரோகம போகும் என்பது நாகமானுக்கு கிடைத்த நற்செய்தி.
II இராஜாக்கள் 5:10 அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
இந்த செய்தியை அவர் அசட்டைபண்ணி இது என்ன அற்பமாக இருக்கிறது எங்கள் ஊர் குளத்திலேயே நான் குளிப்பேனே, என்று திரும்பிபோயவிட்டால் அந்த நற்செய்தியால் அவனுக்கு பயனேதும் இல்லை. ஆனால் சொல்லப்பட்டது என்னவோ நற்செய்திதான்.
அதுபோல் இங்கு "இயேசுவை விசுவாசி உன் பாவம் போகும், நீ தேவனுடைய பிள்ளை ஆவாய்" என்று ஒருவனுக்கு நற்செய்தி சொல்லப்படும்போது "அப்படியெல்லாம் யார் பாவத்தையும் யாரும் போக்க முடியாது எங்கள் சாமிக்கு ஒரு குடை கொடுத்தல் பாவம் போகும்" என்று விதாண்டவாதம் பண்ணுபவர்களுக்கு அந்த செய்தியால் பலனில்லையே தவிர, அந்த செய்தி என்னவோ அவருக்கு கிடைத்த நற்செய்திதான்!
எனவே இயேசு பிறந்தார் என்னும் நற்செய்தி என்னவோ எல்லாருக்குமே கொடுக்கப்பட்டதுதான் அதை விசுவசித்தவனுக்கு அது பயனளிக்கும் மற்றவர்கள், தங்கள் பழைய நிலையிலேயே அதாவது தேவனின் பிள்ளைகள் இல்லை என்ற பாவ நிலையிலே தொடர்வார்கள் மரித்ததும் சாத்தானின் இடத்துக்கு கொண்டு போகபடுவார்கள் அவ்வளவுதான்.!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)