(பொதுவாக) தன் வாழ்னாளில் மகிழ்ச்சியாய் இருக்கும் மனிதன், எந்த குறையும் இல்லாமல் பிறந்த மனிதன் கடவுளை பார்த்து என்னை ஏன் இப்படி படைத்தீர் என்று கேள்வி கேட்பதும் இல்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதும் இல்லை. குறையில்லாமல் மகிழ்ச்சியாய் இருத்தல் தன் பிறப்புரிமை என் எண்ணும் மனிதன் இதற்காகவே கடவுள் உண்டானார் என்றும், இதற்காகவே கடவுளை தான் வணங்கி அவருக்கு உதவி செய்வதாகவும், கடவுள் தான் வேண்டுவனவற்றை அருளினால் தன்னிடமிருந்து அவர் அதிக உதவி பெற்றுக் கொள்ளலாம் என்றும் எண்ணுகிறான். மேலும் ஒரு சில மக்கள் தங்கள் கடவுளை தாங்களே படைக்கின்றனர்.
மனிதன் தன் கண்டுபிடிப்புக்களை ஒரே விதமாக உண்டாக்குவது எப்படி என்று சிந்தித்து செயல்படுகிறான். (ஒரே மாடல் கார், டி.வி முதலியவை) ஒரே விதமாக உண்டாக்குவது மனிதனுக்கு பெருமை. ஆனால் தேவன் அனைத்தையும் வித்தியாசமாக படைக்கிறார். ஒரு மனிதன் இருபது போல் இன்னொரு மனிதன் இருப்பதில்லை. ஒரு மனிதனுக்கு ந்டப்பது போல் மற்றொருவருக்கு நடப்பதில்லை. தேவனுடைய கற்பனைக்கு அளவில்லாததால் மற்றும் அவரால் முடியும் ஆதலால் பல விதங்களில் தனித்தன்மையுடன் படைத்தல் தேவனுக்கு பெருமை.
பிதாவாகிய தேவன் இந்த உலகை தன்னுடைய விதியால் ஆளுபவர். தன்னுடைய விருப்பத்தின்படியே உயிர்களை அவர் படைக்கிறார். தேவன் வானத்தை பூமியை ஆளும்படி வைத்தார். ஒவ்வொரு ஆத்துமாவும் தன் தன்மைகளை தான் பிறக்கும் நேரத்தில் உள்ள நட்சத்திரங்களின்படி பெறுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சில நட்சத்திரங்கள் தோன்றுகின்றன மற்றும் மறைகின்றன. அவைகளை வைத்து ஆத்துமா தன் தன்மைகளை பெறுகிறது. தன் துன்ப நேரத்திலும் பத்து கட்டளைகளை பின்பற்ற வேண்டி கடவுளையோ அல்லது தாய் தந்தையையோ சபிக்காமல் யோபுவும் தன் பிறந்த நேரத்தில் தோன்றிய நட்சத்திரங்களை சபிக்கிறான். இந்த விதியின்படியே கையையும் அவர் முத்திரை போடுகிறார். தோன்றுகின்றவன் எவனும் முன்பே பேரிடப்பட்டு இருக்கிறான்.
எல்லா ஆத்துமாவும் தன் விதியை அறிந்து கொண்டும் அதற்கு ஒப்புக் கொண்டும் தேவனை பற்றி போதிக்கபட்டும் இந்த பூமியில் பிறப்பதாக சொல்லப்படுகிறது. சில ஆத்துமாக்கள் பாவத்துக்கு தப்பவும், கடவுளோடு நெருங்கி உறவாடவும் குறைகளோடு பிறக்க ஒப்புக் கொண்டு பிறக்கிறது. பூமியின் ஆசிர்வாதங்களின் மேல் ஆசை வைத்து தேவனை மறுதலிக்க பிறந்த ஆத்துமாக்களும் உண்டு.
இந்த தேவனுடைய விதியை மனிதன் அறிந்து கொள்ள வழி உண்டென்றாலும், தன்னை நம்பும் மக்களுக்கு தேவன் அதை தடை செய்திருக்கிறார். அதன் மூலம் தன் விதியை நம்பாமல் தன்னை நம்பும்படி அவர் செய்கிறார். தேவனுடைய விதி என்ற வார்த்தையையும் அவர் வேத புத்தகத்தில் தடை செய்திருக்கிறார்.
உலகில் உள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய விதிக்கு கட்டுப்பட்டவர்களே. தேவனுடைய விதியை மீற முடியாது. மக்கள் தங்களால் பிரச்சனையை சமாளிக்க முடியாத போது விதியே என விட்டுவிடுகின்றனர். ஆனால் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது தேவனின் பொதுவான விதியிலிருந்து மற்றொரு விதிக்கு மாற்றப்படுகின்றனர். (கொலோ 2.14) இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத எல்லா மக்களும் ஏதோ ஒரு விதத்தில் சாத்தானால் தாக்கபட்டிருப்பதால் அவரை ஏற்றுக் கொள்ளும் போது அதிசயங்களையும், அற்புதங்களையும் பெறுகின்றனர். இந்த மற்றொறு விதியை கிரித்துவ விதி என்றழைக்கலாம். கிரித்துவ விதிக்கு மேலான விதி ஒன்றுமில்லை. இந்த கிரித்துவ விதிக்கு வந்த பிறகும் பிரச்சனை வந்தால் ஏற்றுக் கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை.
பிதாவாகிய தேவன் இயேசுவை பூமிக்கு அனுப்பி துன்பத்தின் மத்தியிலும் மனிதன் கடவுளோடு இருக்க முடியும் என் நிரூபித்தார். அவர் தேவ அம்சம் ஆதலால் அவரால் முடியும் ஆனால் மனிதனால் முடியாது என வாதம் செய்பவர்களுக்காக யோபுவின் மூலமாகவும் அதை நிரூபித்தார். துன்பப்படுபவர்களுக்கு 1. முன் மாதிரி வைத்த தேவன் 2. யேசுவின் மூலம் பரலோக வாசல் மறுமைக்கென திறந்த தேவன் 3. பரிசுத்த ஆவியானவராக கூடவே இருந்து துன்பத்தை பகிர்ந்து கொண்டு, ஆறுதல் சொல்லி, மகிழ்ச்சி தந்து, இறுதி வரையில் வழி நடத்தும் அன்பான தேவன் பிதாவின் அம்சமாக, மனிதனின் இன்ப, துன்பங்களை பொருட்படுத்தாமல், நன்மை மற்றும் தீமை வழியாக, அன்பு மற்றும் தண்டனை வழியாக, விதியின் மூலமாக மனிதனை (உலகை) உயர் (அடுத்த) நிலைக்கு கொண்டு செல்ல இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இயேசு நல்லவர் என்றும், அவரே கடவுள் என்றும் நிரூபிக்கும் பொருட்டும், மனிதர்களை உண்மையை சந்திக்க திராணியில்லாத, முதுகெலும்பில்லாத கோழைகள் என்றெண்ணி அவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அவருடைய பிதாவின் அம்சம் மற(றை)(று)க்கப்பட்டும் உள்ளது. ஆனால் மனிதர்கள் மத்தியில் தன்னுடைய நிலை பற்றி ஒரு பொருட்டாக எண்ணாத பிதாவாகிய உண்மையான தேவன் சொல்வது யாதெனில் தீமையும், நன்மையும் என்னிடத்திலிருந்தே வருகிறது. (எரேமியா புலம்பல் 3.37,38 யாத் 4.11)
தேவன் ஒரு சில குறை உள்ளவர்களுக்கும் நல்ல விதி வகுத்திருக்கிறார். அதை பற்றி ஒரு சில வார்த்தைகள்.
எந்த குறையும் இல்லாமல் உள்ள மனிதருக்கே வேலை இல்லாமல் இருக்கும் காலத்தில் குறையோடு பிறந்ததால் நல்ல வேலையில் (ஊனமுற்றோர் சலுகையின் மூலம்) இருக்கும் மனிதர்கள் உண்டு. எந்த குறையும் இல்லாமல் உள்ள மனிதருக்கே திருமணம் ஆகாத காலத்தில் குறையோடு பிறந்தும் திருமணம் ஆன மனிதர்கள் உண்டு. (குள்ளமாய் பிறந்தும் உயரமான மனைவியையும், குறை இல்லா பிள்ளையையும் கொண்ட ஆண்களை நான் பார்த்ததுண்டு) நவீன மருத்துவத்தின் மூலம் குறையே வெளியில் தெரியாமல் வாழ்பவர் உண்டு. மேலும் குறையினால் பாவத்துக்கு தப்பினவர்களும், கடவுளோடு நெருங்கி உறவாடினவர்களும் உண்டு. குறையுள்ள சிலருக்கு தேவன் உயர்ந்த திட்டத்தை வைத்திருக்கிறார். உதாரணமாக அண்ணகர்களுக்கு பற்றி தேவன் திட்டம் யாதெனில் (ஏசா 56.4,5) 4 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 5 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
துன்பப்படுபவர்களின் (குறையுள்ளவரின், ஊனமுற்றோரின்) பல்வேறு துன்பங்கள் :
1. ஒருவருக்கு உண்டான துன்பம் 2. அதை ஏற்றுக் கொள்ளாததனால் வந்த துன்பம் 3. பிறருக்கு துன்பம் இல்லாததனால் வந்த துன்பம் (ஒப்பீட்டு முறை துன்பம்) 4. இறந்த காலம் நினைத்து வந்த துன்பம் 5. எதிர் காலம் நினைத்து வந்த துன்பம் 6. துன்பம் னீங்க தேவனிடத்தில் வேண்டுவதனால் வந்த துன்பம் 7. தேவன் வேண்டுவதை தராததால் வந்த துன்பம் 8. அதனால் தேவனை குறை சொல்வதால் வந்த துன்பம் 9. அதனால் தேவன் நம் மேல் கோபம் கொள்வதனால் வந்த துன்பம் 10. துன்பத்தின் காரணம் தெரியாததால் வந்த துன்பம்