முன்பு நாங்கள் கிராமத்தில் இருந்தபோது ஒரு குடும்பம் கோவிலுக்கு கடா எல்லாம் வெட்டி பூஜை செய்யும் பக்கா ஹிந்துவாக இருந்தது .
எங்கள் ஊர் கோவிலில் வருடம் இரண்டுதரம் அம்மன் கொடை சாமி கொடை என்று கொடை கொடுக்கப்படும். தலைக்கு இவ்வளவு என்று வருடம் இரண்டு முறை வரி போடப்படும்.
ஆண்பிள்ளைகளுக்கெல்லாம் அரைவரி உண்டு! ரொம்ப கராராக வரி வசூலிக்கப்படும் வரி கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் வீட்டில் இருக்கும் சட்டி பானைகள் எல்லாம் ரோட்டுக்கு வரும்.
இவ்வளவு கஷ்டபடுத்தி வரி வசூல் செய்து எங்கிருந்தோ வரும் கரகாட்டகாரிகளுக்கு ஆபாச வார்த்தைகள் பேசவும், கண்ட ஆட்டம் எல்லாம் ஆடுவதற்கும், பட்டாசு என்ற பேரில் பல ஆயிரங்களை கொளுத்தவும் அது செலவு செய்யப்படுவது மிகுந்த வேதனையான செய்தி.
அவர்கள் வீட்டில் ஆண்கள் அதிகம், எனவே ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு வரி ஜாஸ்தி. அவர்கள் வீட்டில் எல்லோரும் சின்ன சின்ன பிள்ளைகள்! அவ்வீட்டின் தலைவர் ஒருவரின் சம்பாத்தியம் மட்டுமே அவரகளுக்கோ கூலி வேலை.
ஒரு வருடம் கோவில் நிர்வாகத்தார் போட்ட வரி கொடுக்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்ப்பட்டது. அவர்கள் எவ்வளவோ மன்றடியும் பலர் சேர்ந்து அவர்கள் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள பாத்திரங்களை பொறுக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று நினைத்தாலும் நெஞ்சில் மறக்க முடியாத ரணமாகிப்போன் ஒரு நிகழ்ச்சி.
அவ்வூரிலே கிறிஸ்த்தவ கோவிலும் ஓன்று உண்டு! . கிறிஸ்தவர்களுக்கு வரி இல்லை என்பதால் பரம்பரை பக்கா ஹிந்துவான அக்குடும்ப தலைவர் இந்துக்கள் மேலுள்ள வெறுப்பில் கிறிஸ்த்தவத்துக்கு மாறிவிட்டார்கள்! அய்யனார் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் விரதம் இருந்து போய் வருவார்கள் எல்லாமே அத்தோடு முடிந்தது! இன்று அவரும் அவர் பிள்ளைகளும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
இறைவனுக்குரிய காரியங்களுளும் கெடுபிடி நடத்தும் கோவில் கமிட்டியின் தவறான வழி முறைகளால் ஒரு குடும்பமே மதம் மாறவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது! என்பது ஒரு வருத்தமான நிகழ்ச்சி!
இன்றும் இதுபோல் பல ஊர்களில் நிலைமை உள்ளது என்பது ஒரு வருத்தமான நிகழ்ச்சி!
-- Edited by இறைநேசன் on Monday 22nd of February 2010 07:01:08 PM
//கிறிஸ்தவர்களுக்கு வரி இல்லை என்பதால் பரம்பரை பக்கா ஹிந்துவான அக்குடும்ப தலைவர் இந்துக்கள் மேலுள்ள வெறுப்பில் கிறிஸ்த்தவத்துக்கு மாறிவிட்டார்கள்!//
உங்க ஊர்ல எவ்வளவோ பரவாயில்ல சகோதரரே.. இங்கு ஒரு தின மலர் செய்தியை தருகிறேன் படியுங்கள். நவம்பர்,19,2008
சிவகாசி அருகே கோவில் வரி கொடுக்காத 3 கிறிஸ்தவ குடும்பங்கள் ஒதுக்கி வைப்பு
சிவகாசி : சிவகாசி அருகே கோவிலுக்கு வரி கொடுக்க மறுத்த மூன்று கிறிஸ்தவ குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.சிவகாசி தாலுகா, பெரியபொட்டல்பட்டியில் 400 இந்து ஆதிதிராவிடர், ஏழு கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. மூன்று மாதத்திற்கு முன் காளியம்மன் கோவில் திருவிழாவிற்காக வரி வசூலித்தனர்.
சாமுவேல்(25) எலிசபெத்(25) தாவீது(31) ஜெபக்கிருபா(23) பீட்டர், லில்லி புஷ்பம் வரி தர மறுத்ததால் கிராமத்தினர் ஒதுக்கி வைத்தனர். பீட்டர் வைத்திருந்த கடையில் யாரும் பொருட்கள் வாங்கவில்லை.
ஊர் நாட்டாண்மை சுப்பிரமணி கூறுகையில், "கிராம ஒற்றுமையைக் கருதி அனைவரிடம் வரி வசூலித்துள்ளோம். இதுவரை எங்கள் உறவினராக இருந்தவர்கள் மதம் மாறியதால் வரி கொடுக்கவில்லை. வரி தாராதவர்களுடன் நாங்கள் பேசுவதில்லை என முடிவு செய்து புறக்கணிக்கிறோம்' என்றார்.
ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டவர்கள் கூறும்போது, "நாங்கள் மீண்டும் கிராமத்தினருடன் இணைந்து வாழ விரும்புகிறோம். போலீஸ், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யவில்லை. கிராம வளர்ச்சிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி தருகிறோம்' என்றனர்.
நீங்கள் சொல்லும் இந்த செய்திபோல் நான் சமீபத்தில் சென்றுவந்த ஒரு கிராமத்திலும் நடந்து உள்ளது.
அந்த ஊரில் தேவனால் அதிசயமாக தொடப்பட்டு ஒரு குடும்பம் இயேசுவை ஏற்றுக்கொண்டது. கிறிஸ்த்தவ சபை அவ்வூரில் கிடையாது, சபைக்கு போகவேண்டும் என்றால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளியுள்ள களக்காடு என்னும் ஊருக்குதான் போகவேண்டும்.
இந்நிலையில் ஒரு முறை கோவில்கொடை சமயம் இவர்கள் வரி கொடுக்க மறுக்கவே, அநேகர் கூட்டமாக வந்து வீட்டின் கதவு நிலையை பிடுங்கி கொண்டுபோய் கோவிலில் வைத்து விட்டு வரி கொடுத்துவிட்டு எடுத்து போகும்படி சொல்லி விட்டனர். இவர்களும் பிடிவாதமாக மறுத்து பிறகு பாஸ்டர்களை அழைத்து பேசியும் பயனின்றி அவர்களை மட்டும் குடும்பத்தோடு ஊரைவிட்டே தள்ளி வைத்துவிட்டனர்.
ஊர் கடையில் சாமான் வாங்ககூடாது, ஊர் பைப்பில் தண்ணீர் பிடிக்க கூடாது போன்ற கட்டுப்பாடு ஆனால் யாருடனும் பேசிக்கொள்ளலாம்.
ஆனாலும் அவர்களும் தேவனின் கிருபையால் நல்ல வசதியோடு அதே ஊரில் சாட்சியாக தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் இடம் பெற்றிருக்கும் புகழ் பெற்ற பாடல் இது.
"ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக மாவீரம் போகுதென்று விதை கொண்டோட வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே.."
வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது..!
ஊரில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது..
அந்த மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.
வீட்டில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறாள்.
வீட்டு வேலைக்காரி இரண்டு நாட்களுக்கு முன் இறந்துபோயிருக்கிறாள்.
மழை கொட்டியதால் வயலில் ஈரம் இருக்கின்ற இந்த நேரத்திலேயே விதையை நட்டு வைத்துவிடலாம் என்றெண்ணி விதைகளை எடுத்துக் கொண்டு வயற்காட்டை நோக்கி ஓடுகிறான் அவன்.
அந்த விதைகள் வாங்க கடன் கொடுத்தவன் எதிரில் வந்து இவனது இடுப்பு வேட்டியை பிடித்திழுத்து முதலில் தனது கடனுக்கு பதில் சொல்லிவிட்டுப் போ என்கிறான்.
அவனிடம் ஒருவாறு வாய்தா வாங்கிவிட்டு மீண்டும் ஓடுகிறான் வயலுக்கு.
பக்கத்து ஊரில் இருந்து அவனது பங்காளியின் சாவு செய்தியை ஒருவன் எதிரில் வந்து சொல்கிறான்.
செய்தியை வாங்கி ஜீரணித்துவிட்டு மீண்டும் வயற்காட்டை நோக்கி ஓடுகிறான்..
அதே நேரம் அவனது வீட்டிற்கு அவனது சம்பந்தி விட்டார் மனைவியைப் பார்க்க வருகிறார்கள்.
இங்கே பங்காளியின் மரணத்தைப் பற்றி சிந்தித்தபடியே சென்றவன் வயலில் இருந்த பாம்பை மிதித்துவிட அது அவனைக் கொத்திவிடுகிறது.
அணிந்திருந்த வேஷ்டியை கிழித்து பாம்பு விஷத்தை உடலில் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு எப்படியும் விதையை நட்டுவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் தனது வயற்காட்டில் கால் வைக்கிறான்.
அங்கே அவனுக்கு முன்பாகவே அரசு அதிகாரிகள் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். விவசாய வரியை இதுவரையிலும் கட்டவில்லை.. எப்ப கட்டப் போறீங்க..? பதில் சொல்லுங்க என்று அவனை மறித்து நிற்கிறார்கள்.
அதே நேரம் ஊருக்கு பொதுவான கோவிலின் கொடையை அன்றைய தேதிக்கு அவர்களது குடும்பம்தான் தரவேண்டும் என்பதால் படி அரிசி கேட்டு வாசலில் வந்து நிற்கிறார் கோவில் குருக்கள்.
Thanks to: http://truetamilans.blogspot.com/2010/03/blog-post_24.html
-- Edited by timothy_tni on Saturday 27th of March 2010 05:40:26 PM