இறைவன்தான் நம்மை படைத்தார் அவர் எப்படியேனும் நம்மை கடைசிவரை காப்பாற்றிவிடுவார் என்பது அநேகர் முன்வைக்கும் நம்பும் ஒரு அர்த்தமற்ற கருத்தாக உள்ளது.
இவ்வாறு இறைவன் எப்படியேனும் காப்பாற்றிவிடுவார் என்றால் அவர் "தீமையை தவிர்த்து நன்மையை செய்" என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மகான்களின் மூலம் இறைமனிதர்கள் மூலம் நமக்கு அறிவுறுத்த வேண்டிய தேவையில்லையே!
தீமைசெய்பவன் நிச்சயம் அதற்கான தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்ற இறைநீதி இருப்பதால், தீயசக்திகளின் தூண்டுதலுக்கு உட்பட்டு தீமை செய்துவிடாதே என்று கால காலங்களில் அவர் நமக்கு எச்சரிப்பு கொடுக்கிறார்.
ஒரு சிறிய கதை உண்டு!
ஒரு சிறுவன் ஒரு நாள் ஒரு கடையில் வடை ஒற்றை திருடிவிட்டான் அவனை பலர் பிடித்து அடிக்கவே அந்த வழியாக வந்த பெரியவர் ஒருவர் அவன் பசிக்காகத்தான் திருடினான் விட்டுவிடுங்கள் என்று அவனுக்காக பரிந்துபேசி விடுவித்தார். இன்னொருநாள் அதே சிறுவன் கொஞ்சம் பணம் திருடி மாட்டிக்கொண்டான் அப்பொழுது அவன் இந்த குறிப்பிட்ட பெரியவர் எனக்கு தெரியும் என்று சொல்லவே அவர் வந்து அவன் திருடிய பணத்தை திருப்பி கொடுத்து அவனுக்கு ஆதரவாக பேசி, புத்தி சொல்லி இனி திருடாதே என்றொரு எச்சரிக்கையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஆனால் அவன் திருந்தாமல் மீண்டும் ஒருநாள் வீடு ஒன்றில் கொள்ளையடித்து போலீசிடம் மாட்டிக்கொண்டன். அவனை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். சாட்சி கூண்டில் நிறுத்தினர். அங்கு வந்த நீதிபதியை பார்த்த அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகிவிட்டது. ஏனென்னில் அந்த நீதிபதி இதற்க்குமுன் அவனை இரண்டுமுறை குற்றங்களை மன்னித்து விடுவித்த அந்த பெரியவராக இருந்தார். அவரிடன் தன்னை அறிமுகப்படுத்தின அவன் "நான்தான் ஐயா உங்களுக்கு என்னை தெரியுமே என்னை என்னை நீங்கள் இரண்டுமுறை விடுவித்துவிட்டீர்களே இன்றும் என்னை விட்டு விடுங்கள்" என்று மகிழ்ச்சியோடு கேட்டுகொண்டான்.
ஆனால் அந்த நீதிபதியோ "நான் உனக்கு இரண்டு முறை தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கொடுத்தேன் நீ திருந்தவில்லை! இப்பொழுதோ நான் ஒரு குற்றவாளியை தண்டிக்கும் ஒரு அரசாங்க நீதிபதி பொறுப்பில் அமர்ந்துள்ளேன் உனக்கு திருந்த கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் நீ அசட்டை செய்துவிட்டாய். உனக்கு சரியான நீதியை வழங்குகிறேன் என்று சொல்லி அவனுக்கு மிக கடுமையான தண்டனைக்கு ஒப்பு கொடுத்துவிட்டார்.
இதுபோன்றதுதான் இறைவனின் நீதியும்!
பலமுறை மனமிரங்கி என்ன குற்றம் செய்தாலும் மன்னிப்பார். ஆனால் அவர் எப்பொழுதும் எப்படியென்றாலும் நம்மை காத்துகொள்வார், விடுவித்து விடுவார் என்று எண்ணிக்கொண்டு தீமையை அறிந்து அதை விட்டு விலகாமல் எப்படியாகிலும் ஒரு வாழ்க்கை வாழ்வது இறைவன் நியாதிபதியாக நியாயதீர்ப்பு செய்யும் நாளில் கடுமையான தண்டனைக்கு நேராக வழிநடத்தும்!.