இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருபை கிரியை இரண்டுமே அவசியம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிருபை கிரியை இரண்டுமே அவசியம்!
Permalink  
 


கிருபைக்குள் இருக்கும் நாம் தேவனின் கட்டளைகள் கற்பனைகளை கைகொள்ள வேண்டிய தேவையில்லை என்பது அநேகரின் கருத்தாக  இருக்கிறது.  ஆனால் அது சரியான கருத்து அல்ல அது வசனத்துக்கு புறம்பானது   என்றே நான் கருதுகிறேன். தேவன் தனது கட்டளையை கொள்வதையே எல்லோரிடமும் எதிர்பார்க்கிறார் என்பதை வேத புத்தகம் திறம்ப திரும்ப கடைசிவரை  சொல்கிறது.
 
வேதம் சொல்லும் எல்லா கட்டளைகளையும்  கைகொண்டு நடக்க நிச்சயம் பிரயாசம் எடுக்கவேண்டும் என்பது எல்லோர் மேலும் விழுந்த கடமையாக இருக்கிறது. அவரது வசனங்கள் வானத்தில் நிலைநிற்கிறது என்றும் இந்த பூமியே அதன் அடிப்படையில்தான் இயங்குகிறது என்பது எனது  நம்பிக்கை. 
 
என்னுடைய பதிவுகளில் பார்த்தால்  நான் தேவனின் வார்த்தைகளை கைகொள்வதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன் என்பதை அறிய முடியும்.
 
ஆனால்
 
ஒருவர் என்னதான் முயன்றாலும் பைபிளில் உள்ள எல்லா கட்டளை கற்பனைகளை கைகொண்டு நடந்துவிட முடியுமா?  அப்படி எல்லாவற்றையும் நான் கைகொண்டு நடக்கிறேன் என்று ஒருவரால்  சொன்னால் அவன் நிச்சயம் ஒரு பொய்யனாகதான் இருப்பான் ஏனெனின்: 
 
சங்கீதம் 143:2 ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
ரோமர் 3:10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

என்று வசனம் சொல்கிறது. எனவே நாம் என்னதான் முயன்றாலும் நமது நீதிகள் எல்லாம் தேவனுக்கு முன்னாள் அழுக்கான கந்தைகள் போல இருக்கிறது என்றுதான் கருதவேண்டும். நான் அவர் வார்த்தையில் சரியாக நடக்கிறேன் எனவே அவர் எனக்கு நித்ய ஜீவனை தந்தே ஆகவேண்டும் என்று கருதுவோமாகின்
வேதத்தில் உள்ள ஏதாவது ஒரு வசனத்தின் மூலம் தேவன் நம்மை குற்றபடுத்தி நீ தகுதியற்றவன் என்று நமக்கு தீர்க்ககூடும். 
 
நம் சுயநீதியால் நாம் ஒருநாளும் நீதிமானாக முடியாது. எனவேதான் கிருபை மற்றும் ஆவியில் நடத்தப்படுதல் கர்த்தரின் மகிமையின் கரத்துக்குள் அடங்கி இருப்பது   என்பது மிக மிக அவசியம் என்று நான் சொல்கிறேன்.  
 
நான் விழுந்தாலும் எழுந்தாலும் தேவனின் கரத்திலே விழுவேன் எழுவேன், நான் முயற்ச்சிப்பேன் ஆனால் என்னை நீதிமானாக்குவது அவரலேயாகும் என்பதுதான் எனது கருத்து. நான் என்னதான் நீதிமானாக நடக்க நினைத்தாலும் அவர் என்னை தள்ளவேண்டும் என்று நினைத்தால் என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. இதைப்பற்றி யோபு மிக அழகாக சொல்லுவார்  
 
யோபு 9
30. நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
31. நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.

அதாவது நான் என்னதான் என்னை வசனத்தின்படி நடந்து சுத்திகரிக்க நினைத்தாலும் நீர்  என்னை பள்ளத்தில் அழுத்த நினைத்தால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. நாம் நிச்சயம் முயற்ச்சிக்க வேண்டும் அனால் நாம் நிலைநிர்ப்பது தேவனின் கரத்தில் இருக்கிறது அது நமது கரத்தில் இல்லை  என்பதுதான் எனது கருத்து.
 
வசனத்தை கைகொள்ளவே வேண்டாம் என்று போதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் இங்கு   எனது போதனை அதுவல்ல என்பதை அறியும்படி வேண்டுகிறேன். 
  
 


-- Edited by SUNDAR on Tuesday 23rd of February 2010 01:04:01 PM

-- Edited by SUNDAR on Tuesday 23rd of February 2010 07:59:25 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தேவனின் வார்த்தைகள் கைகொள்ளப்பட வேண்டும்!
Permalink  
 


ஆண்டவராகிய இயேசு தமது போதனைகளில்  அனேக இடங்களில் தமது கற்பனை மற்றும் தேவனின் கற்பனையை கைகொள்ளும்படி வலியுறித்தி போதித்து,  எனது கற்பனையை கைகொள்ளாதவன்  என்னிடத்தில்   அன்புள்ளவன்  அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்:   

மத்தேயு 19:17 நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்
மத்தேயு 5:19 கையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்
 
அப்போஸ்தலர்களும் தேவனின் கற்பனையை கைகொளுவதுவே தேவனிடத்தில் அன்புகூருவதாகும் என்று இயேசுவின் வார்த்தைகளை வழிமொழிந்துள்ளனர்:
 
I யோவான் 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்;  
I யோவான் 3:24 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்
I யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
வெளி 1:3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்,

தேவனால் இருதயத்துக்கு ஏற்றவன் என்று சொல்லப்பட்ட தாவீது அனேக இடங்களில் அவர் கற்பனையை கைகொள்வதை வலியிறுத்தியுள்ளார். அவரும் தேவனின் கட்டளையை மிகுந்த  சிரத்தை எடுத்து கைகொண்டுள்ளார் அதனால் மிகுந்த நன்மையுண்டு என்று கூறுகிறார்.
 
சங்கீதம் 37:34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்
சங்கீதம் 119:4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
சங்கீதம் 119:57 கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
சங்கீதம் 119:115 பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
சங்கீதம் 119:60 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.

ஞானியாகிய சாலமன் அனேக இடங்களில் கர்த்தரின் கட்டளையை கைகொள்வதின்  மேன்மையை தனது புத்தகங்களில் பல இடங்களில் எழுதியிருக்கிறார்.
 
நீதிமொழிகள் 4:4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
நீதிமொழிகள் 28:7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்
பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்
 
தீர்க்கதரிசிகள் புத்தகத்தில் ஆண்டவர் பலமுறை தீர்க்கதரிசிகள் மூலம் ஜனங்களை எச்சரித்து எனது வார்த்தைக்கு கீழ்படியுங்கள் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்!  
 
ஏசாயா 1:10 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
ஏசாயா 32:9 சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
எரேமியா 7:23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள்
ஏசாயா 51:4 என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்
எரேமியா 6:17 நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
ஏசாயா 42:24  அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.

தேவ மனிதனாகிய மோசே ஆண்டவரிடமிருந்து கற்பனைகள் கட்டளைகளை பெற்று வந்து இஸ்ரவேலருக்கு கொடுத்தபோது அதை கைகொண்டு நடக்க வேண்டும் என்று  மிக கண்டிப்பான எச்சரிப்பை கொடுத்தார்  
 
லேவியராகமம் 20:8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
லேவியராகமம் 18:4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்
உபாகமம் 17:19 இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு
உபாகமம் 19:8 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,
உபாகமம் 28:9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.
 
இன்னும் அனேக இடங்களில்  கர்த்தர் தன் கட்டளை கற்பனையை கைகொல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அவற்றை கைகொள்ளாததால் வரும் தீமைகள் பற்றியும் திருஷ்டாந்திரமாக பல காரியங்களை  தெரியப்படுத்தியுள்ளார்   
 
இறுதியாக: 
 
காரியத்தின் கடைதொகை அதாவது, சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றிலும் இறுதியாக இருப்பது அவரது கற்பனையை கைகொள்வதுதான்! அதுதான் எல்லா மனிதனின் மேலும்  விழுந்த கடமை என்று வேதம் தெளிவாக சொல்கிறது  
 
பிரசங்கி 12:13 காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

இவ்வளவு தெளிவாக அனேக வசனங்களின் மூலம் தேவன் தனது கற்பனைகளை  கைகொள்ளுபடி திட்டவட்டமாக   வலியுறுத்தியும், அதில் உள்ள முக்கயத்துவத்தை  வெளிப்படுத்தியும்  பல சகோதரர்கள்  ஏதோ ஒருசில வசனங்களை தவறாக புரிந்துகொண்டு மேல் சொல்லப்பட்ட அத்தனை வசனங்களும் அருத்தமற்றவைபோல பிரசங்கித்து தேவனின் வார்த்தையை கைகொள்ளுவதிலிருந்து  ஜனங்களை  இடரசெய்வது மிகுந்த வேதனையளிக்கிறது!  
 
நியாயத்துக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் கீழ்ப்படிதலுக்கும் என்றுமே எதிர்த்து நிற்கும் நியாய கேட்டின் மகனாகிய சத்துருவாகிய  சாத்தானின் வஞ்சகத்தால் மக்கள்  பிடிக்கப்பட்டு தவிப்பதை அறிந்த ஆண்டவரும்:    
 
ஏசாயா 5:13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்

என்றும்

ஓசியா 8:12
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.

என்றும் சொல்லி அக்கலாய்கிறார்!  அவர்களுக்காக ஜெபிபோம்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிருபை கிரியை இரண்டுமே அவசியம்!
Permalink  
 


கற்பனையை கைக்கொள்ளவேண்டும் என்று அனேக வசனங்கள் வலியுறுத்துவதை நாம் மேலேயுள்ள பதிவில் பார்த்தோம். அனால் ஒருவர் "நான் கற்பனையை கைகொள்வதால் தேவனிடமிருந்து நித்ய ஜீவனை  பெற்றுவிடுவேன்" என்று கருதுவது சுயநீதியின் அடிப்படையில் தேவநீதியை தேடுவதாகவும்.
 
ரோமர் 10:3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
 
நம்முடைய நீதியை மட்டும் வைத்துகொண்டு   நாம்  போவோமாகில் நாம் ஒருபோதும் தேவன் முன் நிற்ககூட  முடியாது  தேவன் மகாபரிசுத்தர்!.   அவரால் நமக்கு மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக    தந்தருளப்பட்டிருக்கும் ஆவியானவரே நம்மை நடத்தி தேவனுகேற்ற சரியான பாதையில்  கொண்டு  செல்லமுடியும்!  எனவே ஆவியானவரை வாஞ்சித்து பெற்று இறுதிநாள்வரை  துக்கப்படுத்தாது  பற்றிக்கொண்டிருக்க வேண்டும்  
 
எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
 
ஆண்டவராகிய  இயேசுவின் இலவசமான கிருபையால் இரட்சிக்கப்பட்டு தேவனுடன் ஒப்புரவாகும் தகுதியை பெற்றிருக்கும் நாம் எந்த அருகதையும் இல்லாத  நமக்கு கிடைத்த மேன்மையான தகுதியை காப்பாற்றிகொள்வது நம்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது.
 
நான் சர்ச்சுக்கு போகும்போது கூவம் சாக்கடை நீரில் ரொம்ப சந்தோசமாக குளித்துகொண்டிருக்கும் அனேக சிறுவர்களை பார்ப்பேன். இவ்வளவு துர்நாற்றத்தில் இவர்கள் எப்படி சந்தோசமாக குளிக்கிறார்கள் என்பதை  யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கும். 
 
அதேபோல பாவம் என்னும் துன்மார்க்க ஊளையில்  சந்தோசமாக புரண்டுகொண்டிருந்த நம்மை தமது பரிசுத்த இரத்தத்தால்  தூக்கி எடுத்து தன்னுடைய கிருபையால் தேவனுடைய பிள்ளையாக மாற்றியவர் இயேசு.  நாம் திரும்பவும்  போய் அதே  பாவ ஊளையில் உழண்டுகொண்டு இருப்போமாயின்  அது தேவனின் பரிசுத்தத்துக்கு ஒத்துவராது. எனவே தேவனின் பிள்ளைகளாகிய நாம் "நான் பரிசுத்தர் எனவே நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்ற தேவனின் வார்த்தைக்கு ஏற்ப  அவரது பரிசுத்தத்துக்கு ஏற்றாற்போல் நடக்க முயற்ச்சிக்க வேண்டும்!. 

அம்முயர்ச்சியில் எத்தனை முறை விழுந்தாலும் தேவன்  நம்மை  தூக்கி நிலைநிருத்த  வல்லவர்.
 
முயற்ச்சியே இல்லாமல் மீண்டும் பழைய சாக்கடையில் போய் முழுகுபவர்களை மீண்டும் மீட்க இன்னொரு பலி இல்லை! அவர்கள் நிலை மிககேடான  அமையும்!  
 
 எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்
27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
28. மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
29. தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்
.

வீட்டுக்கு வரும் வழியில் கால் தவறி  வெளியே வரமுடியாத  ஒரு படு  குழிக்குள் விழுந்துவிட்டோம்!  அந்த குழிக்குள்ளே கிடந்தது  எவ்வளவு வேகமாக நடந்தாலும் வீடுபோய் சேரமுடியாது! (இது கிரியை) அனால்  இன்னொருவர் வந்து நம்மை கரம்பிடித்து தூக்கிவிடுகிறார் (இது கிருபை). வெளியே வந்த நாம் அவருக்கு நன்றி சொல்லி வேகமாக வீட்டைநோக்கி நடக்காமல்,  அவரே நம்மை சுமந்து வீடுவரை கொண்டுபோகவேண்டும் என்று எண்ணுவது கிருபைக்கு பின் கிரியை இல்லாமல் வாழ்வது போன்றது!   
 
அதுபோல் இங்கு ஜென்ம பாவம் என்னும் தண்ணீரில்லா   குழியில் விழுந்த நாம் அந்த பாவ குழியிலிருந்து வெளியில்  வர முடியாமல் பல பல  கிரியை செய்து  அதனால் பலனில்லை தவித்துகொண்டிருந்தோம். . 
 
சகரியா 9:11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.

என்ற வசனப்படி தேவன், இயேசுவை அனுப்பி அவரது பரிசுத்தத் ரத்தத்தால் அந்த குழியிலிருந்து நம்மை தூக்கிவிடுகிறார் அதுதான் கிருபை. அந்த கிருபையால்  மீட்கப்பட்ட  பிறகாவது அவர் காட்டிய வழியில் அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து  நடந்து நமது இலைக்கை அடைய முயற்ச்சிக்கவேண்டும் என்பதே எனது கருத்து.     
 
எனவே இங்கு கிருபையா அல்லது  கிரியையா   என்ற கேள்வி எழுந்தால் முதலிடம் பிடிப்பது   கிருபைதான்!   கிருபையின்றி கிரியையால் பலனில்லை . அதுபோல் கிருபையை பெற்ற நாம்  கிரியை இல்லாது இருந்தால்,  கிரியை இல்லாத விசுவாசமும் தன்னில்தனே செத்தததாக இருப்பதால் அதில் பயனில்லை!
 
கிருபை கிரியை இரண்டுமே  அவசியம்!



-- Edited by SUNDAR on Tuesday 23rd of February 2010 08:06:46 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

என்னுடைய பதிவுகளில் நான் கிரியைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பதை எல்லோருமே அறிய முடியும். அதே நேரத்தில் நான் தேவனின் கிருபையை குறைவாக எண்ணவில்லை என்பதை மேலயுள்ள எனது பதிவை படித்தால் புரியும்
 
தேவ கிருபை என்பது மிக உயர்ந்தது! அது எல்லோர் மேலும் பட்சபாதம் இன்றி சமமாக கிரியை செய்கிறது! ஒருவர் எந்த பிரயாசமும் எடுக்காமல் ஆண்டவராகிய இயேசுமேல் விசுவாசம் வைத்தால் போதும் நிச்சயம் அவர் ஆண்டவரின் கிருபைபின் கரத்துக்குள் வந்துவிடுவார். அவரை உறுதியாக பற்றிக்கொண்டால் அதன் மூலம் அவர் நிச்சயம் பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசித்துவிட முடியும். அதற்க்கு ஈடாக எதுவுமே இல்லை!  எனவே தேவனின் கிருபை ஒன்றே ஒருவருக்கு போதுமானது என்று  ஒருவர் வாதிட்டால் நான் நிச்சயம் மறுப்பதற்கில்லை.
 
இவ்வாறு கிருபை மட்டுமே போதும் என்று தேவனும் நினைத்தால் அவர் ஏன் திரும்ப திரும்ப எனது வார்த்தைகளை கைகொள்ளுங்கள் என்று சொல்லி கிரியை பற்றி அதிகம்  போதிக்க வேண்டும் என்பதையும் நாம் சற்று யோசிக்கவேண்டும்!  
 
மலை பிரசங்கத்தில், ஆண்டவராகிய இயேசு
 
மத்தேயு 7:24 , நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்
 
என்பதில் ஆரம்பித்து வெளிப்படுத்தின விசேஷம் கடைசிவரை 
 
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

ஆண்டவராகிய இயேசு கிரியைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார் எனபதை
கொஞ்சமேனும் நான் சிந்தித்து பார்க்கவேண்டும்    
  
உலகில் அனேக மனுஷர்கள் உள்ளனர் அதில் புத்தியுள்ள மனுஷனாகவும் பாக்கியவானாகவும்  இருப்பது மிக உயர்ந்தது அல்லவா அவ்வாறு  இருப்பதற்கு அவரது வார்த்தைகளின்படி செய்யவேண்டும் என்றே  வேதம் நமக்கு போதிக்கிறது  
 
மேலும் தவன் தன்னை முழுமையாக நம்பி தன்னிடத்தில் சரணா கதி அடைபவர்களை முற்றிலும் ஆட்கொண்டு சரியான பாதையில் தன் ஆவியின் பலத்தால் நடத்த வல்லவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!.
 
அனால் தேவனை அறிந்த மனிதர்கள் எல்லோரும் அவ்வாறு அவர் சித்தத்துக்கு உட்பட்டு தங்கள் வாழ்க்கை காரியங்கள் எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்பு கொடுத்துவிடுவது இல்லை.
 
எந்த ஒரு பெரிய பாஸ்டரும் தன் மகனுக்கோ/மகளுக்கோ ஒரு தாழ்ந்த நிலையில் ஏழைகுடும்பத்தில் வரன் தேடுவது இல்லை. அவர்கள் நிலைக்கு மேலான நிலையே தேடுகின்றனர் இதுபோல்  அனேக காரியங்களை நாம் சுயமாக முடிவெடுத்துதான் செய்கின்றனர். நாம் சுயமாக சுய சித்தப்படி  வாழ்ந்துகொண்டு "ஏதோ ஆண்டவர் கையில் நம்மை ஒப்புகொடுத்துவிட்டோம் அவர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார்" என்று நம்மை நமாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறோம். 
 
சுயத்தையும் சுய கிரியையும் உடைத்து, தன்னை முழுமையாக தேவனின் கரத்தில் ஒப்பு கொடுத்த ஒருவர், கிரியைகளை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை! அது பவுலின் வாழக்கைக்கு ஈடாக இருக்கவேண்டும்.
 
மற்றபடி அப்படி ஒரு தியாக வாழ்க்கை இல்லாதவர்கள் எல்லோருமே தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடக்க  பிரயாசப்படுத்தல் அவசியம்!     
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard