இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட நிலை....


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட நிலை....
Permalink  
 


ஏசாயா 6:௧௦  இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும்,  தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
 
மேலே சொல்லபட்டுள்ள வார்த்தைகள்படி எல்லா  மனிதர்களின் கண் காது இருதயம் எல்லாம் அடைக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது என்பதை அறிவீர்களா?
 
அவைகளில் ஏதாவது ஓன்று திறக்கப்பட்ட அனுபவத்துக்குள்  யாராவது   கடந்து சென்றிருக்கிறீர்களா? அனுபவம் இருப்பவர்களுக்கு நான் எழுதுவது புரியும். அப்படி ஒரு அனுபவம் இல்லாதவர்கள் இதெல்லாம்  வெறும் டூப்பு என்று எண்ணாமல்  உண்மை என்னவன்பதயாவது சற்று புரிந்துகொள்ளுங்கள்.  
 
நாம் நமது இந்த வெளிப்புற கண்ணால் பார்க்கும் காட்சிகள் எதுவுமே ஒரு உண்மையான காட்சியே அல்ல!  எப்படி  நிலையாய் இருக்கும் சூரியன் கிழக்கில்  தோன்றி  மேற்கில் மறைவதுபோல் ஒரு மாயையாக   தெரிகிறதோ அதுபோல்   எல்லாமே வெறும் மாயையான நிகழ்ச்சிகள் காட்சிகள்தான்!  ஆகினும் இவைகள் எல்லாம் நமது அடைபட்டிருக்கும் கண்கள் மற்றும்  இருதயம் பார்க்கும் போது அதற்க்கு  ஏதோ ஒரு அர்த்தத்தை அது  தருகின்றன!
 
அனால் கண்களும் இருதயமும் திறக்கப்பட்டிருக்குமானால் நாம் பார்க்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உயர்ந்த ஒரு பொருளையும் அதில் சொல்லப்படும் தேவனின் செய்தியையும் அறியமுடியும்!  நமக்குள்ள செய்தியும் நமக்கு தேவையான எல்லாமே நமக்கு வெகு அருகில் கைக்கு எட்டிய தூரத்திலேயே இருக்கிறது ஆனால் அதை நம் அடைக்கப்பட்ட  கண்களால் பார்க்க முடியாது
 
ஆகாரின் கண்களை திறந்த தேவன்!
 
ஆதியாகமம் 21:19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

கண்கள் அடைக்கப்பட்ட நிலையில் அறிய முடியாதிருந்த தண்ணீர் துறவு தேவன் கண்களை திறந்தவுடன் அறிய முடிந்தது. அதாவது அந்த துறவு அவள்  அருகில்தான் இருந்தது! ஆனால் அடைக்கப்பட்டிருந்த அவள் கண்களால் அந்த துறவை பார்க்க முடியவில்லை. தேவன் கண்களை திறந்தபோதோ அவள் கண்களுக்கு அது தெரிந்தது.   அதுபோல் அநேகருக்கு தேவையான நன்மைகள் எல்லாம் அவர்கள் அருகிலேயே இருந்தும் எங்கெங்கோ அழைத்து குருடரைபோல் தடவி திரிகிரார்கள் அதற்க்கு காரணம்  காரணம் மனிதர்கள் கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்காமல் சக மனிதர்களிடம் நம்பிக்கை வைப்பதுதான் என்று கர்த்தர் சொல்கிறார்
 
எரேமியா 17:
5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

கர்த்தர்மேல் நாம் வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே நமது கண்களை திறந்து கர்த்தர் நமக்கு  வைத்திருக்கும்   நன்மைகளை   பெறுவதற்கு  நேராக வழிநடத்தும். 
 
பிலேயாமின் கண்கள் திறக்கப்படுதல்!
 
இங்கு கழுதையின் மேலேறி,  இஸ்ரவேல் ஜனங்களை சபிபதக்காக பிலேயாம்    பயணம் செய்கிறான். அவ்வேளையில் கழுதைக்கு  எதிரே கர்த்தரின் தூதுவன் உருவிய பட்டயத்துடன் வந்து  நிற்க, அதை பார்த்த கழுதை வழிவிலகி போகிறது. ஆனால் கழுதை   மேலிருக்கும் பிலேயாமின் சாதாரண கண்களுக்கு அவனுக்கு   எதிரே இருக்கும் கர்த்தரின் தூதன்  தெரியவில்லை எனவே கழுதைதான்  தன்னை பரியாசம் பண்ணுவதாக கருதி அதை அடிக்கிறான்.   
 
எண்ணாகமம் 22:31 அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
 
கர்த்தர் கண்களை திறந்தபோதோ நடக்கும் காரியத்தின் உண்மை நிலையை அறிந்து முகம்குப்புற விழுகிறான். இதேபோல் தேவனுக்கு விரோதமான காரியங்களில் நாம் ஈடுபடும் போது தேவன் பல வழிகளில் நமக்கு அதை உணர்த்துகிறார் ஆனால் நமது கண்கள் அடைபட்ட நிலையில் இருப்பதால் அவற்றை எல்லாம் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு இல்லாமல் போகிறது. அவர் கண்களை திறக்கும்போதோ பல உண்மைகளை அறியமுடியும்!  
 
வேலைக்காரன் கண்களை திறந்த தேவன்!
 
இங்கும் ஒரு இக்கட்டான  நிலை  தேவ மனுஷனாகிய எலிசாவை பிடிப்பதற்காக   சீரிய ராஜா  குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். எலிசாவின்  வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.

II இராஜாக்கள் 6:
16. அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்
17 அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

ஆம் தேவன் நமக்கு தந்திருக்கும் பாதுகாப்பு வளையத்தை பார்ப்பதற்கு நமது சாதாரண கண்களுக்கு தகுதியில்லை. ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு  இரண்டு  தேவதூதர்கள் போகும் இடமெல்லாம் காவலுக்கு பின்னால் வருகிறார்கள்.  நாம் ஓடினால் அவர்களும் ஓடி வருவார்கள் நாம் நடந்தால் அவர்களும் நடந்து வருவார்கள்.  நாம் வாகனத்தில் போனால் அவர்களும் அதேபோல் வேகமான நம்மோடு வருவார்கள்  இவையெல்லாம்  நமது சாதாரண கண்களுக்கு தெரியாது.  இவைகளை பார்ப்பதற்கு நமது அடைக்கப்பட்ட கண்கள் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு  திறக்கப்பட்டபோது இயற்க்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை நாம் காணமுடியும். 
 
கண்கள் திறக்கப்படுதல் என்பது ஒரு உயர்ந்த உன்னத அனுபவம். அந்த அனுபவம் வேண்டுபவர் ஒரு சிறு குழந்தைபோல  ஆண்டவரிடம் மன்றாடி  ஜெபித்தால் ஆண்டவர் உங்களின் கண்களையும் திறந்து உலகின் உண்மை நிலையை காட்டுவார். அவர் பட்சபாதம் உள்ளவர் அல்ல!   
    
மேலே நாம் ஆராய்ந்த காரியங்களை இங்கு பதிவிடுவத்தின் முக்கிய காரணம், நமது சாதாரண அறிவுக்கு ஒருவிதமாக புரியும் வேத வசனங்கள் எவ்வளது அதிகமாக  ஆவியில் நிறைந்து வாசிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக   முற்றிலும் வேறு பொருள் தருவதாக அமையும் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காகவே.  உலகில் மனிதர்கள்  உருவாகியுள்ள பல படங்கள் ஒருபுறம் திருப்பி பார்க்கும்போது ஒரு உருவமாகமும் இன்னொருபுறம் திருப்பி பாக்கும்போது இன்னொரு உருவமாகவும் தெரிவதை பார்க்கமுடியும். 
 
ஆண்ட சராசரங்களை படைத்த ஆண்டவரின் அதிசயமான் வார்த்தைகள் அனேக அருத்தம்  தரவல்லது அதிசயமானது என்பதை அறியவேண்டும்!   
 
ஆண்டவரின் இருதய நிலையை அறிந்து அனேக சங்கீதங்களை பாடிய தாவீது பின்வருமாறு ஜெபிக்கிறேன்
   
சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.

  
எனவே நாமும் நாம் அறிந்தது மட்டும்தான்  உண்மை என்று நமது அறிவால் தீர்மானிக்காமல் ஆண்டவரிடம், "ஆண்டவரே  உமது வேதத்திலுள்ள உண்மைகளை  அறியும்படி எனது கண்களை திறந்தருளும்" என்று வாஞ்சையோடு ஜெபித்து உண்மையை அறிவோமாக!
 
 

-- Edited by SUNDAR on Friday 11th of March 2011 11:11:45 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கண் திறக்கப்பட்ட நிலை....
Permalink  
 


தேவனால் ஒருமனிதனின் கண்களை திறந்து,  நமது மாமிச  கண்களால் பார்க்க முடியாத அதிசய காரியங்களை பார்க்க வைக்கமுடியும் என்பதை மேலயுள்ள  பதிவில் வசன ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளேன்.   
 
கர்த்தரின்  கிருபையால்  மூன்று நான்கு  முறைகள் கண் திறக்கப்பட்ட நிலைக்கு நான்  கடந்து சென்றிருக்கிறேன். அது தரிசனமோ அல்லது சொப்பனமோ அல்ல உண்மை நிகழ்ச்சி  அப்பொழுது நான் கண்டவை  கேட்டவைகள் மற்றும் உண்மை சம்பவங்களை இங்கு பதிகிறேன்.     
                                                   
முதல் முதலில் 1992  ம ஆண்டு ஒரு காலை வேளையில் கர்த்தர் என் கண்களை திறந்தார்.
 
1. ஒரு மனிதனை பிடித்து வைத்துள்ள ஆவியை அறிய முடியும்!  
 
கண்கள் திறக்கபட்டால் நம்மால் நமக்கு எதிரே இருந்து பேசும் மனிதனிடம் எவ்விதமான ஆவி கிரியை செய்கிறது என்பதை அவரின் கண் மற்றும்   முகச்சாடையில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.  ஆவிகளை பகுத்தறியும் வரம் என்று கூட இதை சொல்லமுடியும்.
 
லூக்கா 6:45  இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
 
ஆம்! ஒரு மனிதனின் இருதய நிலை என்னவென்பதை  அவனது முகத்தில் அப்படியே பார்க்க முடியும்.   அவ்வாறு நான் மூன்று நகபர்களின் உள்ளிருந்து   கிரியை செய்த மூன்று வித  ஆவிகளை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.
 
1. எனது நண்பர் மத்தேயுஸ்:-  
 
ஆண்டவர் எனது கண்களை திறந்தபின் முதல் முதலில் சந்தித்தது
இவரைத்தான். எனது உயிர் தோழன்போன்ற இவர் எவ்வித சரியான காரணமும்  இன்றி என்னை கொன்றுவிடுவேன் என்று சொல்லிக்கொண்டு மிகுந்த கோபமாக இருந்தார்.  முந்தய நாள்   நான் அவரை கொன்று விடுவதுபோல ஒரு சொப்பனம் கண்டாராம் அதன் அடிப்படையில் நீ என்னை கொல்வதற்கு முன், நான் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொல்லி பயங்கரமாக மிரட்டிக்கொண்டு இருந்தார். 
 
நான் அவரிடம்  " ஒரு சாதாரண சொப்பனத்தை நம்பி நீங்கள் என்னை கொன்று விடுவேன் என்று சொல்கிறீர்களே நாம் எத்தனை வருட  நண்பர்கள்" என்று சொல்லி அழுதேன். ஆனால் அவரோ உன்னை கொன்றே ஆகவேண்டும் என்று சொன்னதோடு, வீட்டு ஓனரிடம் போய் "இவரை வீட்டை விட்டு விரட்டுங்கள் அல்லது இவரை கொன்றுவிடுவேன்" என்று மிரட்டினார்"
 
அவருக்குள் இருந்து கிரியை செய்த விழுந்துபோன தூதனாகிய  லூசிபரின் ஆவியை என்னால் அப்படியே பார்க்கமுடிந்தது. இந்த ஆவியின்  எண்ணமெல்லாம் ஆண்டவரின் ஆவியால் ஒருவன் நிரம்பபடும்போது இவனால் நமக்கு ஆபத்து வருமோ என்று பயந்து அவனை கொல்வதற்கு முயர்ச்சிப்பதுதான்.  
 
ஆகினும் என்னுள் இருந்து கிரியை செய்த ஆண்டவர் அவரை ஒரு வார்த்தைகூட திட்டாதே என்று சொன்னதோடு அவரிடம் மிகுந்த தாழ்மையோடு நடந்துகொள்ளும் பக்குவத்தை என்னில் கட்டளையிட்டார்.
 
தொடரும்......
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சகோதரரே மிகவும் அருமையான காரியங்களை ஆவியானவர் தங்களை கொண்டு குறிபிட்டுள்ளார். இந்த பதிவு மிகவும் ஆச்சரியமாகவும் உண்மையானதாகவும் உள்ளது.

என்னால் முழுமையாக இதை ஒப்புகொள்ள முடிகிறது. எத்தனையோ முறை வேதத்தை படித்தாலும் அதின் ரகசியம் வெளிப்படும்போதே வசனத்தின் மேன்மை புரிகிறது

தங்களை கொண்டு கர்த்தர் வெளிபடுத்தின காரியத்திற்காக என் தேவனுக்கு நான் நன்றியை செலுத்துகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

ஆகாரின் கண்களை திறந்த தேவன்!
 
ஆதியாகமம் 21:19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

இஸ்மவேல் அப்போது மட்டும் அல்ல இன்று வரை துரவினாலேயே
(எண்ணெய் கிணறு) பிழைத்துக் கொண்டிருக்கிறான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.



-- Edited by SANDOSH on Thursday 8th of April 2010 10:02:12 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அடுத்ததாக  கண்கள் திறக்கப்பட்ட நிலையில் நான் சந்தித்தது எனது தகப்பனார்.
 
என்மீது எந்த கோபமோ கசப்போ இல்லாத அவர் ஆண்டவரின்  ஆவியில்  நிறைந்து  இருந்த   என்னை பார்த்த உடனே,  வெகு கோபமாக பற்றி எறிந்தார்.  எனது திறக்கப்பட்ட கண்கள் மூலம் அவருள் இருந்து கிரியை செய்த ஒரு இந்து  சாமியின் ஆவியை என்னால் பார்க்க முடிந்தது.  உன்னை போலீசில்  பிடித்து கொடுத்துவிட்டுதான் நான் மறுவேலை பார்ப்பேன் என்று சொல்லியதோடு எனது சகோதரனிடம் போலிசுக்கு போன் பண்ணுமாறு கட்டளையிட்டார். என்  சகோதரர் மறுக்கவே பல்லை கடித்துக்கொண்டு என்னை அடிப்பதற்காக வந்தார் எல்லோரும் சேர்ந்து அவரை பிடித்து கொண்டனர்.
 
அவர் என்னை போலீசில் பிடித்து கொடுப்பேன் என்று சொன்னதற்க்கான காரணம் மற்றும் என்மீது ஏன்  கோபத்தோடு அடிக்க வந்தார்  என்பதுபற்றி  அறிய வேண்டு மென்றாலோ,  இந்த சாமி யார் என்பது பற்றிய முழுவிபரமும் தெரிவிக்க வேண்டும்.  இங்கு இப்பொழுது வேண்டாம் ஆகினும் ஒரு சிறு விளக்கம் மட்டும் தருகிறேன்.
 
இந்த  இந்து சாமி மிகவும் நல்லவர்தான். ஆனால் அவருக்கு தான்தான்  ஒரே கடவுள் என்ற எண்ணம் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஒருநாள்  தனக்குமேலே ஒரு  கடவுள் இருக்கிறார் என்று தெரியவந்தது. (நமது கர்த்தர்  எல்லா தேவர்களுக்கும் மேலான தேவன் )   ஆனால் அந்த மேலான தேவனை ஏற்க்க மறுத்து அவர்மேல் கடும் கோபமானது. எப்படி  தாவீதுடன் கர்த்தர் இருக்கிறார் என்பதை அறிந்த சவுல் அவன் மேல் கோபமாக பற்றி எறிந்தானோ  அதேபோல் ஒரு நிலையின் என்மேல் கோபமானது. .       
 
  
ஒரு சபையின் பாஸ்டர்.
 
அடுத்ததாக நான் திறந்த கண்களோடு சந்தித்த நபர் ஒரு பெந்தெகொஸ்தே கிளை சபையின் பாஸ்டர்.  நான் இதற்க்கு முன் பார்த்திராத  மிகப்பெரிய நபரான அவரது வீட்டுக்கு எனது தம்பி என்னை அழைத்துக்கொண்டு சென்றிருந்தார்.
 
அவர் மிகவும் நல்லவர் மிகுந்த அன்போடு பணிவோடு  எங்களிடம் பேசினார். ஆனால் அவருக்குள் "நான் ஒரு பெரிய  பாஸ்டர்" என்றொரு பெருமையின் ஆவி உள்ளே இருப்பதை அப்படியே எனது திறந்த கண்கள் மூலம் பார்க்க முடிந்தது. 
 
(இது போன்ற நிலையை  பார்த்து அனுபவித்தவர்களை   தவிர வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆவி ஒருவருள் இருக்கும்போது அவர்  பேசுவது மற்றும் அவர்கள் நடப்பது எல்லாமே அந்த ஆவியின் செல்பாட்டால்  தானேயன்றி  சுய நிலையில் செய்வது  அல்ல, அந்த ஆவி வெளியேறினால்தான் அவர் சுயநிலைக்கு வருவார். ஆண்டவராகிய இயேசு சிலுவையில் தொங்கும் போது அவரை அடித்தவர்கள் குத்தினவர்களுக்கு உள்ளிருந்து  கிரியைசெய்த ஆவியை அவரால் பார்க்க முடிந்ததாலேயேதான் இவர்களை மன்னியும் அவர்கள் செய்து என்னவென்று அவர்கள் அறியவில்லை என்று வேண்டினார்.) 
 
நான் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவரிடம் "பாஸ்டர் உங்களிடம் நான் பாஸ்டர் என்றொரு பெருமையின் ஆவி  இருப்பது எனக்கு தெரிகிறது" என்று கூறிவிட்டேன். உடனே அந்த பெருமையின் ஆவி என்னிடம் ஒரு அசட்டு சிரிப்போடு  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை  பிரதர்  நீங்கள் கிளம்புங்கள் என்று வாசலில்வைத்து சொல்லியே வழியனுப்பி வைத்துவிட்டது.       
 
மேலும் கண்கள் திறக்கப்பட்ட நிலையில் நான் பார்த்த அனேக காரியங்களை
கர்த்தருக்க் சித்தமானால்  "எனது வாழ்வில் இறைவன் இடைபட்ட இனியநேரங்கள்" என்ற தொடரில்  எழுதுகிறேன்.
 

 

-- Edited by SUNDAR on Friday 9th of April 2010 04:29:57 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் சொல்லும் காரியம் ஏற்றுகொள்ளதக்கதாக உள்ளது. 

ஒரு மனிதர்  வெளிநாட்டிற்கு சென்றால் அந்த நாட்டில் பேசப்படும் மொழி தெரிந்து இருக்க வேண்டும்  அப்படி தெரியவில்லை என்றால் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நம்முடைய தாய்மொழி மட்டுமே தெரிந்த நம்மால்  புரிந்து கொள்ள முடியாது.

அது போல ஒரு ஆவிக்குரிய மனிதனுக்கு ஆவிக்குரிய வாழ்கை வாழ்வதற்கு ஆவிக்குரிய கண்கள் திறந்திருப்பது மிகவும் அவசியம் நம்முடைய உலகபிரகாரமான  கண்களை வைத்து கொண்டு  ஆவிக்குரிய காரியங்களை அறிந்து கொள்ள நினைப்பது மொழி தெரியாதவர் திகைப்பதை போன்றுதான்.
 
எபேசியர் 1:19

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
  


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது
------------------------------- --------------------------------------------------------------------------
இந்த  இந்து சாமி மிகவும் நல்லவர்தான். ஆனால் அவருக்கு தான்தான்  ஒரே கடவுள் என்ற எண்ணம் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஒருநாள்  தனக்குமேலே ஒரு  கடவுள் இருக்கிறார் என்று தெரியவந்தது. (நமது கர்த்தர்  எல்லா தேவர்களுக்கும் மேலான தேவன் )   ஆனால் அந்த மேலான தேவனை ஏற்க்க மறுத்து அவர்மேல் கடும் கோபமானது. எப்படி  தாவீதுடன் கர்த்தர் இருக்கிறார் என்பதை அறிந்த சவுல் அவன் மேல் கோபமாக பற்றி எறிந்தானோ  அதேபோல் ஒரு நிலையின் என்மேல் கோபமானது. .       
 ---------------------------------------------------------------------------------------------------------
சர்வவல்ல  தேவன் தான் இந்து சாமிகளை படைத்தார் என்று நான் உம்முடைய பதிவுகளில் படித்து இருக்கின்றேன் ஆனால் இந்த சாமிக்கு  தான்தான்  ஒரே கடவுள் என்ற எண்ணம் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது என்று நீங்கள் சொல்கின்றீர்கள்   படைத்த நாயகனை இந்த இந்து சாமிக்கு தெரியாதா
அவர் தானே படைத்து அந்த கூட்டத்துக்கு தலையாக இந்த சாமியை நியமித்தார்
இப்படி இருக்க
 
/////   ஒருநாள்  தனக்குமேலே ஒரு  கடவுள் இருக்கிறார் என்று தெரியவந்தது///////////
 
இந்த இந்து சாமிக்கு ஆரம்பத்தில் தெரியாதா உருவாக்கியவர் யார் என்று
திடிரென்று  எப்படி தெரிந்தது- ? 

சற்று விளக்கமாக கூறுங்கள்
 


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 10th of May 2010 08:39:41 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
 /////   ஒருநாள்  தனக்குமேலே ஒரு  கடவுள் இருக்கிறார் என்று தெரியவந்தது///////////

 
இந்த இந்து சாமிக்கு ஆரம்பத்தில் தெரியாதா உருவாக்கியவர் யார் என்று திடிரென்று  எப்படி தெரிந்தது- ? 

சற்று விளக்கமாக கூறுங்கள்
 

 
மிக  நல்ல  கேள்வியொன்றை  எழுப்பியுள்ளீர்கள்.   
 
இந்த உலகத்தில் மனிதனாக பிறந்துள்ளவனுக்கு தனது சுவாசத்தை தானே கையாளும் திறன் கிடையாது,  யாருடைய தயவிலேயோ சுவாசிக்கிறான் அதுபோல் இயற்கையை கட்டுப்படுத்தும்  திறனும் அவனுக்கு கிடையாது. இப்படி அற்ப மனிதர்களாக பிறந்துள்ளவர்களிலேயே பலர்  "மனிதன் தான் கடவுள்" என்று தம்பட்டம் அடித்து, "கடவுள் என்று யாரும் இல்லை" என்று அடித்து பேசி வருகின்றனர்.  இவர்களுக்கு நம்மை மீறிய சக்தி ஓன்று இருக்கிறது அதுதான் நம்மை படைத்தது என்று அறியும்அளவுக்கு மண்டையில் மதி இல்லையா என்ன?
 
ரோமர் 1:21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப் படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
     
அதுபோன்றதொரு நிலைதான் இங்கும் நடந்துள்ளது.
 
ஆதியிலே எலோஹிம் என்று ஒரு கூட்டாக இருந்த இந்த தேவ ஆவியானவர் தேவ தூதர்களைபோலவே  " தேவர்கள்"  எனப்படுபவர்களை சிருஷ்டித்து அவர்களுக்கு அதீத வல்லமைகள் அதிகாரங்களை கொடுத்ததோடு,  அவர்களுக் குள்ளேயே தங்கியிருந்து காரியங்களை நடப்பித்தார் (பரிசுத்த ஆவியானவர்போல)
ஆதலால் அவர்களது மனதில் தாங்களே கடவுளர்கள் என்ற எண்ணம் தலைக்கு
ஏறி,  தகாத செயல்களை செய்ய ஆரம்பித்தனர். போட்டி பொறாமை வஞ்சம் பிறன்மனைவியை அபகரித்தல் போன்ற அசுத்த காரியங்களை நிறைந்தனர் (சில புராணங்களை படித்து பார்த்தால் தெரியும்).    பரிசுத்தமுள்ள தேவனின் பரிசுத்த செய்கைகளுக்கும் ஒவ்வாத இச்செயல்களால்  தேவஆவியானவர் அவர்களை விட்டு வெளியேறியும் அதை அறிய உணர்வில்லாதவர்களாக தாங்கள்தான் கடவுளர்கள் என்றும் தன்னைதவிர வேறு ஒருவரும் இல்லை என்றும் வாழ்ந்தனர்
 
ஏசாயா 47:10 உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.

இப்படி "தாங்கள்தான் கடவுளர்கள் தன்னை உருவாக்கியவரும் தனக்குளேதான்
இருக்கிறார்"  என்று மமதையில் இருந்தவர்களுக்கு திடீரென்று தேவஆவியானவரை
வேறு ஒருவரிடம் பார்த்தபோது  நம்பமுடியாமல் கடும்கோபம் அடைந்து அவ்வாற்று செயல்பட்டனர். 
 
கர்த்தரின் பொய்யின்  ஆவியின் மூலம் தீர்க்கதரிசனம் சொன்ன சிதேக்கியா என்ற தீர்க்கன் உண்மையான கர்த்தரின் ஆவியை உடையவனான மிகாயாவின் தீர்க்கதரிசனத்தை நம்பாமல் அவனை கன்னத்தில் அடிக்கவில்லையா?
 
II நாளாகமம் 18
23. அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

அதுபோன்றதொரு நிலைதான் இங்கும்.
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது
////// இப்படி அற்ப மனிதர்களாக பிறந்துள்ளவர்களிலேயே பலர் "மனிதன் தான் கடவுள்" என்று தம்பட்டம் அடித்து, "கடவுள் என்று யாரும் இல்லை" என்று அடித்து பேசி வருகின்றனர்//////

நீங்கள் சொல்வது நம்ப கூடிய காரியம் தான் கடவுளிடம் பக்தி கொண்டு
அதிகமான வெளிப்பாடுகளையும் மற்றும் வல்லமைகளையும் பெற்ற உடன்
ஒரு சில சாமியார்களுக்கும் போதகர்களுக்கும் நான் தான் கடவுள் என்ற எண்ணம் உருவாகும் போது இவர்களுக்கும் நிச்சயம் அப்படி பட்ட எண்ணம் உருவாகி இருக்கலாம் என்பதை நானும் எற்றுகொள்கின்றேன்

உங்கள் விளக்கத்திற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஒருமுக்கிய காரியத்தை நாம் அறியவேண்டும், தேவனின் கிருபையும்அவருடைய தயவும் நமக்கு இருக்கும்வரைதான் நம்மால் அவரை நம்பவும் அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு பிரியமாய் வாழவும் முயற்ச்சிக்க முடியும். அவர் தமது கிருபையை ஒருவரை விலக்கிவிட்டார், அதன்பிறகு  எந்நிலையிலும் அவர்கள் தேவனை தேவன் என்று அறிந்தாலும் அவரை  ஏற்று  அவரை மகிமைபடுத்தாமல் அவரை எதிர்த்துதான்  நிற்ப்பார்கள். 
 
அதற்க்கு காரணம் சாத்தானின்  ஆவி,  
 
சாத்தனுக்கு தேவனை நன்றாகவே தெரியும் அவரது வல்லமையும் அவனுக்கு புரியும்.  ஆனாலும்  அவரை தனக்கு மேலானவர் என்று ஏற்று மகிமைபடுத்த மனதில்லாமல் தானே உயர இருக்கவேண்டும்  என்று எண்ணியே தரையில் விழ வெட்டப்பட்டான். அதே ஆவிதான் இன்று பலருக்குள் இருந்து கிரியை செய்கிறதை பார்க்கமுடிகிறது.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஆவிக்குரிய கண்கள் திறக்கபட்ட அனுபவத்துக்குள் கடந்து வருவது மிகவும் அவசியம்.  இந்த உலகம் என்ன நிலையில் இருக்கிறது அதில் நமதுநிலை என்ன? மனிதர்கள் என்னநிலையில் இருக்கிறார்கள் என்பதை இருக்கிறபடியே அறிந்துகொள்ள ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும்.
     
ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட நிலையிலேயே இருந்தால் நம்மால் இந்த உலகத்தில் வாழவே முடியாது. ஆகினும் ஆவிக்குரியகண்கள் திறக்கப்படாமலேயே அடைபட்டு கிடந்தால் இந்த உலகத்தின் உண்மை நிலையை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. 
 
எனவே ஆண்டவரிடம் "ஆண்டவர் எனக்கு ஒரே ஒரு முறை மட்டும் எனது ஆவிக்குரிய கண்களை திறந்து உம்முடைய கண்களால் இந்த உலகத்தை பார்க்கும் பாக்கியத்தை தாரும் என்று கடுமையாக ஜெபிக்க வேண்டும். அப்பொழுது ஒருவேளை ஆண்டவர் உங்கள் ஆவிக்குரிய கண்களை திறக்கலாம். அவ்வாறு திறக்கபட்டால் நாம் இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட காரியங்களை காணமுடியும். எந்த அனுபவமும் இல்லாமல் வெறும் வேதத்தை மட்டும் படித்துவிட்டு ஆண்டவரின் சத்தத்தை கூட கேட்க முடியாமல் அடுத்தவரின் அனுபவங்களை தரக்குறைவாக விமர்சித்துகொண்டும்  வாதிட்டுகொண்டுருக்கும் ஒவ்வொருவரின் வாயும் அத்தோடு அடைபட்டு போகும்.  எனவே உண்மையை அறிய கடுமையாக ஜெபியுங்கள்.  
 
ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு ஒரு காரியத்தை நாம் ஒருமுறை பார்த்துவிட்டால் அடுத்து நாம் அந்த குறிப்பிட்ட காரியத்தில் இடறல் அடையாமல் இருப்பதற்கு அது நமக்கு மிகுந்த பிரயோஜனமாக இருக்கும்.
 
ஒரு முறை நான் ரயிலில்  மும்பையில் இருந்து சென்னை வரும்போது மிக அதிமாக்  பைபிளை  படித்துக்கொண்டே இருந்ததால்  ஆண்டவர் ஏன் ஆவிக்குரிய கண்களை திறந்துவிட்டார். கையில் இருந்த ஏதோ ஒருபொருள் கீழே விழுந்திடவே அதை எடுப்பதற்காக கீழே குனிந்த நான் சீட்டுக்கு கீழே இருந்த லக்கேஜ் எல்லாமே கருப்பு கருப்பு  பிசாசுகளாக குத்த வைத்துகொண்டு இருப்பதுபோல அப்படியே பார்த்தேன்.  அப்பொழுது ஆண்டவர் என்னிடம்  "இந்த உலகத்தில் நீங்கள் தூக்கிக் கொண்டு அலையும், அல்லது  வாங்குவதற்காக அலைபாயும்  ஒவ்வொரு பொருளுமே ஒரு பிசாசுதான். நீ எவாளவு அதிகமாக பொருள் வைத்திருக்கிறாயோ அவ்வளவு அதிகமாக பிசாசை தலைமேல் தூக்கிக்கொண்டு திரிகிறாய் என்பதை அறிந்துகொள்.   நீ ஒன்றுமே இல்லாமல் என்னை முழுமையாக  விசுவாசித்து நடந்தால், இந்த பொருட்கள் எதுவுமே இல்லாமலும் உன்னை என்னால் நடத்த முடியும்" என்று கூறினார்    
 
அன்றோடு நான் பொருகளை வாங்கும்போதெல்லாம் பிசாசுகளை காசு கொடுத்து வாங்குவதாகவே எண்ண தோன்றும். இந்த காரியம் எனது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்து,  உலக போருட்கள்மேல் இருக்கும் பற்றை என்னை விட்டு நீக்கிபோட்டது.
 
அதுபோல் ஆண்டவர் நமது கண்களை திறந்து ஒரு காரியத்தை குறித்த உண்மை தன்மையை தெரிவித்துவிட்டால் பின்னர் நமக்கு அந்த குறிப்பிட்ட காரியம் சம்பந்தப்பட்ட சந்தேகம் எல்லாமே நீக்கபட்டுபோகும் பின்னர் அது சம்பந்தப்பட்ட  பாவத்தை நாம்  சுலபமாக மேற்கொள்ள முடியும். 
 
எனவே ஒவ்வொரு ஆவிக்குரிய பிள்ளைகளும் ஆண்டவரிடம் மற்றாடி ஜெபித்து தங்கள் ஆவிக்குரிய கண்களை ஒருமுறையாவது திறந்து இந்த உலகத்தின் உண்மை தன்மையை காணும் கிருபையை பெறவேண்டும் என்பதே எனது விருப்பம்.
 
கேளுங்கள் கொடுக்கப்படும்!


-- Edited by SUNDAR on Friday 11th of March 2011 11:10:35 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard