இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அக்கிரமத்தின் பலனை அனுபவித்தே தீரவண்டும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
அக்கிரமத்தின் பலனை அனுபவித்தே தீரவண்டும்!
Permalink  
 


ஒருசமயம் நானும் எனது நண்பர் மத்தேயு என்பவரும் மும்பை படணத்தில் சால் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் பக்கத்தில்  ஒரு தனி தகர வீட்டில் மாடியில் குடியிருந்தோம். ஆண்டவரை அறியாத அந்த  நேரத்தில் நாங்கள் இருவரும் விடுமுறை நாட்களில் எல்லாம் முழுவதும் போதையில்தான் 
இருப்போம்.
 
இந்நிலையில் ஒருநாள்  நன்றாக  போதை தலைக்கேறியபின் நான் மட்டும்  தனியாக வெளியில் சென்றேன்.  வீடுகளுக்கு இடையில் உள்ள ஒரு சிறு  ஒத்தையடி வழியில் போகும்போது எனக்கு எதிரே இன்னொரு  குடிகாரன் அதிக போதையில் வந்து, எனது சட்டையை  எட்டி பிடித்துகொண்டு கையில் உள்ள மிக நீள கத்தி ஒன்றால் என்னை குத்துவதற்கு முற்ப்பட்டான்.
 
சுதாரித்துகொண்ட நான், அவன் கத்தியால்  குத்தும்முன் அவன் கையை எட்டி மணிக்கட்டில் பிடித்துகொண்டேன். சிறிது நேரம் போராடியபின் அவனை கத்தியோடு சேர்த்து தூர தள்ளிவிட்டுவிட்டு  ஓடிவிட்டேன்.  சிறிது தொலை சென்று பார்த்தபிறகு நான்  கழுத்திலிருந்த போட்டிருந்த  தங்க செயின்  காணாமல் போயிருப்பது தெரியவந்தது. திரும்பி அதே இடத்தில் வந்து அந்த செயினை தேடியபோது அது கிடைக்கவில்லை. மிகுந்த வேதனையுடன்  வீட்டு பக்கம் வந்தபோது என்னை கத்தியை வைத்து குத்த வந்த அதே நபர் அங்கு நிற்ப்பதை பார்த்து ஆத்திரத்தில் அவனை குண்டுகட்டாக தூக்கி தண்டவாளத்தில்  கீழே போட்டுவிட்டேன்.
 
இந்த காரியம் நடந்து சுமார் அரைமணி நேரத்துக்குள் அந்த பகுதியில் உள்ள அனேக மக்கள் சிறியவர் பெரியவர் எல்லாம் சேர்ந்து என்னை அடிப்பதற்கு எங்கள் வீடுமுன் கூடிவிட்டனர்.  அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூட்டமாக குடியிருக்கின்றனர். அவர்கள் அந்த கத்தி பேர்வழிக்கு சப்போட்டாக வந்து என்னை அடிப்பதற்கு வந்து கூடிவிட்டனர்.   
 
நானும்  எனது  நண்பர்  மத்தேயுசும் நிலைமை மோசமாவதை அறிந்து மாடியிலிருந்து இறங்கி கீழேயுள்ள வீட்டுக்காரரின் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தோம். பின்னால் எங்கும்  ஓட முடியாது. ஒரே வாசல்தான்! எனவே அநேகர் கூடி வாயிற்கதவை உடைத்து உள்ளே வர முற்ப்பட்டனர். எங்கள் வீட்டு  ஓணரும்  அவர்களின்   ஊரை சார்ந்தவர் என்பதால் அவரின் சொல்லுக்கு  கட்டுப்பட்டு  நிற்றுகொண்டு, எங்கள் இருவரையும் வெளியில் கொண்டுவர சொல்லி வாதிட்டுகொண்டு இருந்தனர். அவர் என்ன சொல்லியும் கேட்காத  கூட்டத்தார்,  அவரை தள்ளிக்கொண்டு வர முற்ப்பட,  அதற்குள்  எனது நண்பர் வீட்டின் உள்ளிருந்து ஒரு துவாரத்தின்  வழியே  சரியான் வழி ஒன்றை தீர்மானித்து வேகமாக வெளியில் வந்து யாரும் எதிர்பார்க்காத நேரம் ஓடிவிட்டார்.
 
தொடரும்.....


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

யாரும் கவனிக்காத வேளையில்  வேகமாக தப்பி ஓடிய எனது நண்பனை  எல்லோரும் சேர்ந்து துரத்திக்கொண்டு ஓட, அந்த சிறிய இடைவெளியில்  நான்  வெளியே வந்து வேறுஒரு சிறிய பாதை வழியாக தப்பித்து விட்டேன். ஒரு மூதாட்டியார் ஓடிவந்து என் பனியனை பிடிக்க, பனியன் கிழிந்து விட்டுவிட்டு  நான் சுலபமாக தப்பித்துவிட்டேன்.
 
எனது நண்பன் தண்டவாளத்திலேயே தூரமாக ஓடிவிட்டார், பலர் அவரை  அநேகர்   துரத்திகொண்டு ஓடினர். ஓடியவர்கள் தூரத்தில் எதேர்ச்சையாக நின்றுகொண்டிருந்த ஒருவரை கையை காட்டி நண்பனை பிடிக்குமாற கூற, அவரும் எது என்னெவென்று அறியாமல் நண்பனை பிடித்து எல்லோரு கையிலும் கொடுத்துவிட்டனர்.
 
உண்மையில் அந்த கத்தி நபரை  தூக்கிபோட்டது நான்தான்,  அனால் தவறு செய்தது  யாரென்றே அறியாத அந்த கூட்டம்   எல்லோருமாய்  சேர்ந்து எனது நண்பரை  அதிகமாக அடித்து பக்கத்தில் ஓடிய சாக்கடை நீரில் எல்லாம் போட்டு முக்கி எடுத்து கோபத்தை தீர்த்துகொண்டனர். . 
 
அன்று சாயந்திரமே நிலைமை சரியாகி நான் திரும்பவும் அந்த வீட்டுக்கு தங்குவதற்காக வந்துவிட்டேன். எனது நண்பனை பார்ப்பதற்கே மிகுந்த  பாவமாக இருந்தது. பல இடங்களில் அடிபட்ட  காயங்கள். வேதனையில் இருந்த அவரோ நான் உங்களுக்காகத்தானே அடிபட்டேன் அதனால் எனக்கு எந்த  வருத்தமும்  இல்லை என்று சாதாரணமாக சொல்லிவிட்டார். ஆனால் எனக்காக  ஒருவர் அடிபட்டார் என்பது எனக்கு மிகுந்த வேதனையை தந்தது! 
 
எனக்கு அச்சம்பவம்  மிகுந்த வருத்தமாக இருந்தாலும் என் மனதில் அந்த சம்பவம் ஒரு பெரும் குழப்பமாக பதிந்துவிட்டது. இச்சம்பவத்தை பொறுத்தவரை நானும் கூட பெரிய தவறு என்று எதுவும் செய்யவில்லை. என்னை கத்தியை வைத்து குத்த வந்தவன்/ எனது செயினை பறித்தவனை நான் தூக்கி கீழே போட்டேன் அவ்வளவுதான் இதில் நான்  செய்த பெரிய தவறு என்ன? அப்படியே தவறு என்னுடையதாக இருந்தால் அதற்க்கு நான்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்.  அனால் இங்கு  எதற்க்காக  எல்லோரும் என்னை விட்டுவிட்டு எனது நண்பனை போட்டு அடித்தனர் என்ற கேள்வி என்னை அதிகமாக குழப்பியது. ஒருவன் செய்த தவறுக்கு இன்னொருவனுக்கு தண்டனையா?   இது எவ்விதத்தில் நியாயம் என்று இதைப்பற்றி பலநாள் சிந்தித்ததுண்டு ஆகினும் எனக்கு பதில் கிடைக்கவில்லை.
 
இந்த சம்பவம்  நடந்து சுமார் மூன்று மாதத்துக்குள் என்னை கத்தியை வைத்து குத்தவந்த அந்த நபரை வேறொருவர் வயிற்றில் குத்தி கிழித்து கொன்றுபோட்டுவிட்டார்.  
 
இதன்பிறகும் நானும் எனது நண்பனும் ஒன்றாகவே ஓரிரு வருடங்க்ள அவ்விடத்தில் இருந்தோம். இடையில்  நான் ஆண்டவரால்  அதிசயமாக தொடப்பட்ட பிறகுதான் நடந்த  அந்த சம்பவத்தை பற்றிய உண்மையை  ஆண்டவர்  எனக்கு  உணர்த்தினார்.
 
  


-- Edited by SUNDAR on Friday 9th of April 2010 04:33:48 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்த மத்தேயுஸ் என்னும் எனது நண்பர் வேறு ஒரு இடத்தில் தகாதசெயல் ஒன்றை செய்து, ஒரு பெண்ணின் வாழ்கையை கெடுத்துவிட்டு தப்பித்து ஓடிவந்துவிட்டார்.
 
மும்பை சீத்தா கேம்ப் என்ற பகுதியில் ஒரு வீட்டில் எம்ப்ராய்டரி    வேலை பார்த்த அவர் அதன் வீட்டில் உள்ள திருமணமான பெண்ணுடன் தவறான முறையில் பழகியிருக்கிறார்.  அது அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியவரவே, அவர் அந்த பெண்ணை அடித்து வீட்டைவிட்டே விரட்டிவிட்டார். அந்த பெண்ணும் செய்வதறியாது இவரிடம் வந்து "என் கணவன் என்னை வீட்டைவிட்டு விரட்டி விட்டார் எனவே என்னை ஏற்றுகொள்ள வேண்டும்" என்று மன்றாட. இவரோ நீ சென்னைக்கு போ நான் அங்கே வந்து உன்னை அழைத்துகொள்கிறேன் என்று சொல்லி சென்னைக்கு அனுப்பிவிட்டு, அதன்பிறகு அந்த பெண்ணை  கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டார்.
 
ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து, எந்த ஒரு தண்டனையும் பெறாமல் 
தப்பிவந்த அவருக்கு இங்கே தண்டனை கொடுக்கப்பட்டதாக ஆண்டவர் எனக்கு உணர்த்தினார். ஆனால் அவரோ என்னிடம் "உங்களுக்காக  நான் அடிபட்டேன்"
என்று தவறான கண்ணோட்டத்தில்  சொல்லிக்கொண்டே இருந்தார்.
 
என்னுடைய கருத்துப்படி ஆண்டவராகிய இயேசுவை தவிர  யாருடைய தவறுக்கான தண்டனையையும் யாரும் சுமப்பதுஇல்லை! அவனவன் கிரியின் பலன் அவனவன் தலையின்மேல்தான் இருக்கும் என்றாவது ஒருநாள் அது அவனுக்கு தண்டனையை கொண்டுவரும்.  
 
எனவே அன்பானவர்களே எங்கு யாரால்  நமக்கு தண்டனை கிடைக்கிறது என்பது  காரியம் அல்ல மேலும் கிடைத்த தண்டனைக்கு யாரையாவது குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல் அத்தண்டனை  எதற்க்காக கிடைத்தது என்பதை நம்மை நாமே  நாம் ஆராய்ந்து அறிந்து மீண்டும் அதுபோல்  தண்டனைக்குள் விழாமல் தப்பிக்க முயற்ச்சிப்போம்!     
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மனிதர்களாகிய நாம் என்ன காரியத்தை பூமியில் செய்கிறோமோ அதற்கான பலன்தான்  திரும்ப கிடைக்கிறது என்பது அதிக நிச்சயம். 

இன்று எதை விதைக்கிறோமோ அதை நாளை ஒன்றுக்கு பத்தாக அறுப்போம்

கலாத்தியர் 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்;  மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

தெரிந்து அபகரித்த பணம், பொருள் தெரிந்து அபகரிக்கப்படும், தெரியாமல் வந்த பொருள், பணம் தெரியாமல் போகும்.  நாம் பிறரை மோசம்போக்கினால் நம்மை  இன்னொருவன் மோசம்போக்குவான். நாம் ஒருவரை திட்டினால் நம்மை ஒருவர் திட்டுவார், நாம் ஒருவருக்கு துரோகம் செய்தால் நமக்கு இன்னொருவர் துரோகம் செய்வார்

ஏசாயா 33:1
 நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.

நாம்செய்வது நமக்கு திருப்பி செய்யப்படும் என்பதை விளக்க  என்வாழ்வில் நடந்த ஒரே ஒரு உதாரணம்.

என் மனைவி சிறு குழந்தையுடன் ஊரில் இருக்கும் போது அவளை அழைத்து வர ஊருக்கு பஸ்ஸில் சென்றேன் பஸ் மதுரை பக்கம் போகும் போது ஒரு பெண் சிறு குழந்தையுடன் வந்து நான் அமர்ந்திருக்கும் சீட்டை தரும்படி
கேட்டார்கள். நான் பிரயாண த்தால் மிகுந்த அசதியில் இருந்ததால் கடைசி சீட் காலியாக உள்ளது அங்கேபொய் அமருங்கள் இதை நான் தரமுடியாது என்று சொல்லி விட்டேன்.

என்ஊரிலிருந்து  மனைவியை அழைத்துக்கொண்டு திரும்பவரும்போது வெயிட்டிங் லிஸ்டில் இருந்த எனது டிக்கட் கன்பார்ம்ஆகி, எனது சீட் ஒரு பெட்டியிலும் என் மனைவி சீட் இன்னொரு பெட்டியிலும் போட்டுவிட்டனர். 1மாத கைக்குழந்தை வேறு. எதாவது ஒரே இடத்தில் இருவரும் இருக்கலாம் என்றுகருதி எனது சீட் பக்கத்தில் தனியாக அமர்ந்திருந்த ஒரு முஸ்லீம் சகோதரரிடம் எவ்வளவோ கெஞ்சுகேட்டும் அவர் அந்த சீட்டை தர மறுத்துவிட்டார்.

அப்பொழுதுதான் எனக்கு வரும்போது பஸ்ஸில் நடந்த சம்பவம் நியாபகம் வந்தது. நான் அந்த பெண்ணுக்கு எனது சீட்டை கொடுக்கவில்லை எனவே எனக்கு இவர் சீட்டை கொடுக்கவில்லை.நான் கொடுத்திருந்தால் எனக்கும் கிடைத்திருக்கும் என்ற உண்மையை அறிந்துகொண்டேன்.

எனவே பிறருக்கு தேவையான நேரத்தில் நமது சிரமத்தை பொருட்படுத்தாது உதவினால் நம்முடைய தேவை நேரத்தில் எங்கிருந்தாவது உதவி தானாகவரும் அதுபோல் பிறருக்கு எங்காவது கெடுதல் செய்தால் அது ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை திரும்ப தாக்கும்  என்பது முற்றிலும் உண்மை.
 

 

-- Edited by SUNDAR on Saturday 8th of May 2010 02:13:13 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard