இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யாரால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
யாரால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
Permalink  
 


பாவத்தின் கொடூரம் என்னவென்பதை புரியவைக்கவும் பாவத்தால் வரும் தண்டனை மிகப்பெரியது அது   சரிசெய்யவே  முடியாதது என்பதை எல்லோருக்கும் விளக்கவும் ஆண்டவராகிய இயேசு சிறிதும்  இரக்கமிலாமல் சில காரியங்களை செய்யும்படி கட்டளை கொடுத்தார்!   
 
மத்தேயு 5:30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

மத்தேயு 18:8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

மாற்கு 9:43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

இவ்வாறு பாவம் செய்தவன் அவியாத அக்கினியிலே வேதனைப்படுவான் என்பதை இயேசு மிக தெளிவாக பல்வேறு வசனங்களில்  கூறியிருக்க, ஆண்டவருக்காக தன் ஜீவனையே தியாகம் செய்த எத்தனையோ பரிசுத்தவான்களுக்கு தெரியாத்   உண்மைகளை தங்களின் அறிவால் ஆராய்ந்து  அறிந்துகொண்டதாக  கருதும்  சிலர், ஓரிரு வசனங்களை தவறாக புரிந்துகொண்டு  உண்மையை அறிய மனதில்லாமல்   "நரகமில்லை பாதாளமில்லை வேதனையில்ல யாருக்கும் துன்பமில்லை  சுவிசேஷம்   எதுவும்   சொல்லாமலே எல்லோருக்கும் மீட்பு " என்று வேதத்துக்கு முற்றிலும் புறம்பான கருத்துக்களை பரப்பி,  மனிதர்களை ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியவிடாமல் துணித்து இடறல்களை ஏற்ப்படுத்தி வருகின்றனர் என்பது நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும் செய்தியாக இருக்கிறது.
 
மத்தேயு 5:22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; 
......... தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்
.
 
என்று ஆண்டவராகிய இயேசு தனது வாயாலேயே சொல்லியிருக்க, இவர்கள் பிற சகோதரர்களை  
மூடன் முட்டாள் மதிகேடன்  என்றெல்லாம் துணிந்து  வர்ணித்து தங்களிடம் இன்ன ஆவியிருக்கிறது என்பதை பிறருக்கு காண்பிப்பதோடு,  
 இயேசுவின் வார்த்தைகளை ஈசியாக அசட்டைபண்ணி தங்களுக்கு தாங்களே ஆகினையை  வருவித்து  கொண்டிருக்கினற்றனர்.
 
இயேசுவை   வேதவார்த்தைகளை வைத்தே சாத்தான் சொதித்ததுபோல், வேதவார்த்தைகளை வைத்தே   தெரிந்துகோள்ளப்பட்டவர்களையும் இடற செய்யமுடியும் என்பதை  அறியும்போது இவர்களின் அறிவுத்திறன் எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது.  

விசுவாசிகள்  இவர்களின் வஞ்சக வலையில் விழுந்துவிடாமல் இருக்கவும்,
ஆண்டவர் இவர்களின் கண்களை திறந்து உண்மையை  உணர அருள்புரியும்படி ஜெபிபோமாக!  
 
 


-- Edited by SUNDAR on Thursday 25th of February 2010 10:34:18 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இவ்வாறு "எல்லோருக்கும்  மீட்பு"  என்ற நல்ல  செய்தியை   பரப்பிவரும் அருமை சகோதரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது  ஒன்றே ஒன்றுதான்!
 
நீங்கள் ஆராய்ந்து கண்டுகொண்ட   உண்மை ஒருவளை சரியானதாக இருக்குமானால், அதாவது 
 
I இராஜாக்கள் 8:32 அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி,

அவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் ,

நீதிமொழிகள் 13:2
மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துன்மார்க்கனின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.

என்ற வார்த்தைகள் படி நடக்காமல்

சங்கீதம் 37:38
அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

என்ற வார்த்தைகள்படி துன்மார்க்கள் அருப்புண்டுபோகாமல்

நீதிமொழிகள் 2:22
துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.

என்ற வார்த்தைகள் நிறைவேறாமல் 
 
சன்மார்க்கன் துன்மார்க்கன்   எல்லோருமே எந்த துன்பமும் இல்லாமல் மீட்கப்பட்டுவிடுவார்கள்  என்பது உண்மையானால், அது  என்போன்றவர்களுக்கு மிகுந்த சந்தோசத்தையே கொண்டுவரும். ஏனெனில் எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதுதான்  எங்களது வாஞ்சையும்    விருப்பமாகவும் இருக்கிறது.  நீங்கள் அறிந்த உண்மையை நாங்கள  அறியாத காரணத்தால் ஒரு ஆத்துமாவும் கெட்டுபோககூடாது என்ற ஆதங்கத்தில்யே நாங்கள் இவ்வாறு காலம் நேரம் பார்க்காமல் உண்மைகளை எழுதி மக்களை எச்சரிக்கிறோம்.  
 
உங்களுக்குத்தான் எல்லோருக்கும் மீட்பு என்ற மிகபெரிய உண்மை தெரிந்துவிட்டதே! பிறகு  நீங்கள் சமாதானமாக இருக்கலாமே! எங்களைப்போல அறியாமல் வேலை செய்துகொண்டிருக்கும் தேவ ஊழியர்களையும் என்னையும் பார்த்து மனதில் சிரித்துகொண்டு உங்கள்  வழியை பார்க்கலாமே.  உங்கள் கருத்துப்படி நல்ல முடிவுதானே? அதுதானே எல்லோரும் எதிர்பார்ப்பது!   அப்படி ஒரு முடிவு வந்து,  நியாயதீர்ப்பு நாளில்  ஆண்டவர்  எங்களை பார்த்து  "நீ ஏன் ஜனங்களை சன்மார்க்க வழியில் நடக்க சொல்லி போதித்தாய்"   என்று  கேட்டால் "ஆண்டவரே நீங்கள்தான் உன்னை நீ நேசிப்பதுபோல பிறரை நேசி என்றும்  பாவம் செய்யலாமா? கூடாதே!  என்றும் திடமாக  எச்சரிக்கையை உமது சத்திய  வேதத்தின் மூலம் தந்திருக்கிறீர் அதைதான் கைகொள்ளும்படி நான் போதித்தேன்"நான் ஜனங்களை நேர்மையாக  வாழசொன்னது தவறாக உங்களுக்கு தெரியுமாயின், நீங்கள் என்ன  தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று அவர் பாதத்தில் விழுந்துவிடுவேன். சில தண்டனைகள் கிடைத்தாலும்  உங்கள் கருத்துப்படி  எல்லோருக்கும் மீட்பு உண்டு எனவே நான் நிச்சயம் தப்பிததுகொள்வேன்.  
 
ஆனால்! ஒருவேளை தேவன் எனக்கு தெரிவித்தவைகளும்  மற்ற வேத வசனங்கள் சொல்லும் வார்த்தைகளும் உண்மையாகிப்போனால்?!  
 
அதாவது....
 
சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்
.
என்ற சந்கீதகாரனின் கூற்று உண்மையாகி நரகம் என்றொரு இடமிருந்து,  அங்கே,  தங்கள் போன்றவர்களின் போதனையை கேட்டு  நிர்விசாரமாக பலர் பாவம் செய்து  
 
மாற்கு 9:45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
 
என்ற இயேசுவின் வார்தைகளின்படி  பாவம் செய்தவர்கள்   அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்பட்டு
 
வெளி 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
 
இரவும் பகலும் சதா காலத்திலும் வாதிக்கப்படும் நிலை நேர்ந்தால்!?
 
அந்நேரத்தில்  உங்களிடம் ஓடிவந்து உங்கள் போன்றவர்களால்தான்  நாங்கள் இங்கு வந்து மாட்டினோம்  என்று கதறி அழுதாலும் எந்த பயனும் ஏற்ப்படாது. ஏனெனில் உங்களையே உங்களால் காப்பாற்றமுடியாத ஒரு கொடூர  நிலையில் நீங்கள் இருப்பீர்கள். 
 
எனவே இறுதியாக நான் உங்களுக்கு  வேண்டிக்கொள்வது 
எனனவென்றால்.  உங்கள் கருத்துப்படி எல்லோரும் மீட்பு இருந்தால் எல்லோருக்கும் நல்லதே! அதை நான் நிச்சயம் வரவேற்கிறேன்!  எனக்கு மேலான  இடம் வேண்டும் என்றோ அல்லது  வேறு எதற்காகவோ  நான் சிறிதும் மனவருத்தமடையவோ  மாட்டேன்.  எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதே  எனது  பிரதான எண்ணம்!  அது நடந்துவிட்டால் பிறகு எனக்கு வேறு என்னவேண்டும்.
 
ஆனால் 
 
நாங்கள் அறிந்துசொல்வதுபோல் மற்றும் வேத வசனங்கள் சொல்வது போல்  ஒருவேளை  பாதாளமும்  நரகமும் உண்மையானால் நாங்கள் சொல்வதை நம்புபவர்களாவது   தப்பித்து கொண்டு போகட்டுமே!   தயவு செய்து  விட்டுவிடுங்களேன்!
 
உங்களிடம்  எந்த  வம்புக்கும் வராத என்னைப்பற்றி தரகுறைவாக  
எழுதி  மனமடிவை ஏற்ப்படுத்தும்  உங்களுக்கும்  எனக்கும் இடையில் ஆண்டவர்  நின்று நியாயம்  தீர்பாராக!  




-- Edited by SUNDAR on Friday 26th of February 2010 09:15:52 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இன்று  காலையில் எனது 9 வயது  மகனிடம் ஒரு காலி குடத்தை கொடுத்து இதை குழாய் பக்கத்தில் கொண்டு வை தண்ணீர் அடிக்கவேண்டும் என்று சொன்னேன்.
 
உடனே என் மகன் "இந்த சிறிய வேலையை கூட உங்களால் செய்யமுடியாதா" என்று என்னிடம் கேள்விகேட்டான்.   
 
"எனக்கு  எது   செய்யவேண்டும்  எது செய்யகூடாது என்பது  நன்றாகவே   தெரியும் 
நான் சொவதை மட்டும் நீ  செய்யடா" என்று சொல்லி இரண்டு மூன்று அரை விட்டேன். 
 
இந்நிகழ்ச்சியின் மூலம்  "நாம் ஒன்றுமே செய்யவேண்டிய தேவையில்லை  இறைவன் எல்லோரையும் மீட்டுவிடுவார்" என்று பிடிவாதம் பிடித்து வாதிடும்  சில சகோதரர்களுக்கு பாடம்  இருப்பதால் அதன் விளக்கத்தை இங்கு பதிகிறேன்.    
 
நான் எனது மகன்மேல் மிகுந்த பாசம் உள்ளவன், அவன் துன்பபடுவதை பார்க்க விரும்பாதவன், அவனது எதிர்காலத்தை பற்றி மிகுந்த கரிசனை உள்ளவன்தான் 
அவன்  எந்நாளும்  நன்றாக இருக்கவேண்டும்  என்பதுதான்  எனது  விருப்பமும் கூட!  இதற்கிடையில்  எனக்கு அந்த குடத்தை தூக்கி கொண்டுபோய் 
வைப்பதென்பது மிக சுலபமான காரியம்தான் ஆகினும்! நமது மகனும் ஏதாவது சிறு சிறு வேலைகள்  செய்வது அவனது  உடம்புக்கு  நல்லது, நாளைய வாழ்வுக்கும் நல்லது, மேலும் நாம் வேலையினிமித்தம் அங்கு இல்லாத நேரங்களின் தங்கள்  வேலைகளை தாங்களே செய்துகொள்ளும் பக்கும் உண்டாகும் போன்ற பிள்ளைகளின்  பல்வேறு எதிகால நிலைகளை மனதிகொண்டு இவ்வாறு சிறுசிறு வேலைகளை இப்பொழுதே செய்ய பழக்குவது நல்லது என்று கருதியே அவற்றை செய்யசொல்கிறோம்.  
 
ஆனால் இது புரியாத அந்த சிறுவன் என்னை பார்த்தே கேள்வி கேட்பதோடு "நீங்களே எல்லாம் செய்யுங்கள்" என்பதுபோல் கூறுவது  அவனது மதியீன தன்மையே காட்டுகிறது
 
 
அதுபோல்
 
மாற்கு 10:27  தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

II பேதுரு 3:9
  ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி
     
என்றும் வேதம் பல இடங்களில் சொல்வதும்  தேவன் அவ்வாறே விரும்புவதும்  முற்றிலும் உண்மை.
 
ஆகினும் நம்மேல் மிகுந்த  கரிசனை உள்ள நமது தேவன்,   நாம் எக்காலத்திலும் எவ்வித துன்பமும் இன்றி இன்பமாக வாழ வேண்டும் என்ற கருத்திலேயோ  அல்லது நமது அறிவுக்கு எட்டாத ஏதோ  சில மறைவான  காரியங்களை மனதில் கொண்டோ    சிலபல கட்டளைகள் மற்றும் கற்பனைகளை நமக்கு போதித்து அதை கைகொண்டு நடவுங்கள் என்று திருமப் திரும்ப வலியுறுத்துகிறார்.
 
எரேமியா 7:23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள்
 
ஆனால் அதில் உள்ள முக்கியத்துவத்தையும்  தேவனின் உண்மை மனநிலைகளை புரியாத  சில அதிமேதாவிகள்
 
"உம்மால்தான் எல்லாம்  செய்யமுடியுமே!  நீரே இதையும்  சேர்த்து செய்துவிடும்"    "எல்லோரையும்  மீட்பதுதானே உமது சித்தம் நான் எப்படியும் வாழ்வேன் என்னையும் சேர்த்து மீட்டுவிடும்"என்று சொல்லி   அவர் வார்த்தைகளை அசட்டை பண்ணுவதோடு தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படியநினைக்கும் மற்றவர்களையும்
"பிரதர் நமது தகப்பனாகிய தேவன் மிகவும்  நல்லவர் மிகுந்த இரக்கமும் அன்புள்ளவர் நாம் எப்படி நடந்தாலும் நம்மை மீட்பதுதான் அவரது கடமை  எனவே  நம்மை எப்படியாகிலும்  மீட்டுவிடுவார் அதை அவரே வேதத்தில்  பல இடங்களில் சொல்லியிருக்கிறார்  எனவே அவரது வார்த்தைகளை  கொண்டு நடக்க அவருக்கு கீழ்படிய வேண்டிய  தேவையில்லை" என்று போதிக்கின்றனர்.
 
அற்ப அறிவும்  அப்பிரயோஜனமான மனிதர்களாகிய நாம் எக்கேள்வியும் கேட்காமல்  அவரின் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு :
 
லூக்கா 17:10  : நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்
 
என்று சொல்லாமல்,  இவ்வாறு வேதத்தை குறித்து பட்சபாதம் பண்ணிக்கொண்டு இருப்பது தேவகோபத்துக்கே வழி செய்யும்: 
 
மல்கியா 2:௯  நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்
 
தேவன் தான் சொன்னதுபோல் எல்லோரையும் மீட்டுவிடலாம் அப்படியே
மீட்டுவிட்டாலும் இப்படிபட்டவர்களை அழைத்து "நான் உனக்கு என்ன சொன்னேன் நீ என்ன செய்தாய்? 
 
I சாமுவேல் 13:13 : புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.I சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது

என்று தள்ளியதுபோல தள்ள நேரிடும் என்பதை கருத்தில் கொள்க  அப்பொழுது
"ஐயோ   நான் பாவம் செய்தேன்" என்று சவுலை போல புலம்பினாலும் பயனிராது!
 
மேலும் நீ  என் வழிகளை கைகொள்ளாததோடு  அதற்க்கு கீழ்படிய நினைத்த வர்களுக்கும் தொடர்ந்து  இடரலை  ஏற்ப்புத்தினாய் என்று சொல்லி தண்டிக்ககூடும்!  
 
மத்தேயு 18:7  எந்த மனுஷனால்  இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

உலக
தோற்றம் முதல் மட்டுமல்ல அனாதியாக தேவன் எல்லாமே அறிந்தவர்!
எல்லாம் செய்ய வல்லவர்.  அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது!
யார்  முன்குறிக்கபட்டவர்கள், யாரை அழைத்து  நீதிமானாக்க  வேண்டும்  என்பதெல்லாம் அவர் ஒருவரே அறிந்த விஷயம்! தேவன் தனது சித்தத்தையும் திட்டத்தையும் எப்படியும்  நிறைவேற்றுவார்! 
 
ஆனால் அப்பிரயோஜனமான ஊழியக்காரராகிய நம்மேலும்  மற்றும் அனைத்து மனிதர்கள் மேலும் விழுந்த கடமை என்ன?
 
பிரசங்கி 12:13 காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
 
சொல்லப்பட்டதை  மாத்திரம் நாம் கருத்தாக செய்வோம்! கைகொள்ளாமல்  முரண்டாட்டம் பண்ணுவதற்கு   காரணம் தேவனுக்கு தேவையில்லை!


-- Edited by SUNDAR on Tuesday 9th of March 2010 02:22:50 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard