இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் செய்வது உங்களிடமே சரிகட்டப்படும்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
நீங்கள் செய்வது உங்களிடமே சரிகட்டப்படும்!
Permalink  
 


இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே ஏதாவது ஒரு கோட்பாட்டின் அடிப்படியில்தான் இயங்குகிறது என்பதை அறிவியலார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். நியூடனின் விதி, பிதாகரஸ் தேற்றம் மற்றும் பாஸ்கல் விதிகள் என்று எதை எடுத்தாலும் அதற்க்கு ஒரு விதியும் ஒரு பார்முலாவும் இருக்கிறது. ஒரு விஞஞானியால் சொல்லப்படும் ஒரு கூற்று, ஒரு சமன்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிரூபிக்கப்பட்டவிட்டால் ஏன்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது எல்லோரும் அறிந்ததே!

பூமியை சுற்றும் கிரகங்கள் கூட எப்பொழுது பூமிபக்கம் வருமென்பதை ஒரு சமன்பாட்டால் அறிந்துகொள்கிறார்கள். எனவே எல்லாமே அதனதன் விருப்பத்துக்கு அலையாமல் எதோ ஒரு விதியை அடிப்படயாககொண்டுதான் இயங்குகிறது என்பது என்பதை எல்லாராலும் புரியமுடிகிறது!

ஒரு பெரிய தொழில்சாலையை எடுத்துக்கொண்டால் அது முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டு எங்கெங்கு மூலப்பொருள் போடவேண்டும் அது எந்தெந்த பிராசெசுக்கு பிறகு எங்கெங்கே முடிவுப்போருளாக வரவேண்டும் என்று திட்டமிட்டு நிறுவப்பட்டு பிறகு அது செயல்வடிவாக்கப்படுகிறது. அதேபோல் செயல்படுகிறது

அதுமட்டுமல்ல, மனிதனின் உடம்புகூட ஒரு மகத்தான தொழில்ச்சாலை போன்றதுதான். ஒரு இடத்தில் உண்ணப்படும் உணவு எவ்வாறு பல வேதி மாற்றம் அடைந்து இரத்தத்தோடு கலக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டு படைக்கப்பட்டு அப்படியே செயலாற்றுகிறது!

இங்கு எனது  கருத்து என்னவென்றால்:-

இந்த உலகமும் அதுபோல் இறைவனால் முன்வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய தொழில்சாலை போன்றதுதான்!  அதற்க்கான திட்டத்தை முன்தீர்மானித்து இறைவன்  உலகத்தை வடிவமைத்தார்! அவர் முன் தீர்மானத்தபடியே எல்லாமே சரியாக நடந்துகொண்டு இருக்கிறது. கணினியில் கமான்ட் போல அவர் முன்னமே ஒரு புரோக்ராம் பண்ணிவைத்துவிட்டார்! 

அந்த புரோக்கிராம்  என்னவெற்றால் அதுவே  கடவுளின்   வார்த்தைகளே! 
 
சங்கீதம்:119
89  கர்த்தாவே, (கடவுளே)  உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது
 
ஆம் ஆண்டவரின் வசனத்தின் அடிப்படையில்தான் இந்த பூமியே  இயங்கிகொண்டு இருக்கிறது. அதில் எழுதியிருக்கும் காரியங்கள்படிதான் 
உலகில் எல்லாமே நடக்கும்.  அதில் முக்கியமானது  மனிதன் எதை விதைக்கிறானோ அதை அறுத்தே தீருவான் என்பதே! அதாவது  அவனவன்  செய்கையின் பலன் அவனவனுக்கு திருப்பி கிடைக்கும் என்பதே! 

எனவேதான் உனக்கு நன்மை நடக்கவேண்டுமா நீ நன்மை செய், நீதி செய், நியாயம் செய் என்று இறைவன் திரும்ப திரும்ப  நம்மை எச்சரிக்கிறார்!
 
விஷ்ணு புராணத்தில் பராசரர் (1-4-51, 52) கீழே உள்ளபடி கூறுகிறார்:
நிமித்த மாத்ரம் ஏவாயம் ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
ப்ரதாநகரணீபூதா யதோ வை ஸ்ருஜ்ய சக்தய:
நிமித்த மாத்ரம் முக்த்வேதம் ந அந்யத் கிஞ்சித் அபேக்ஷதே
நீயதே தபதாம் ச்ரேஷ்ட்ட ஸ்வசக்த்யா வஸ்து வஸ்துதாம்

இதன் பொருள் - இந்த உலகைப் பொறுத்தவரை அவன் நிமித்த காரணமாக மட்டுமே உள்ளான்; ஏற்றத்தாழ்வுகள் என்பது அந்தந்த ஜீவனின் கர்மபலன் காரணமாகவே உண்டாகிறது - என்பதாகும். 
  
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கலாத்தியர் 6.7)

பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் ( லுக் 6:32) -விவிலியம் (நீங்கள் செய்வது உங்களுக்கு திருப்பிச்செயப்படும்)

ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் (திருக்குரான் 20:!5)

எல்லா மார்க்கங்களும் இதைதான் வலியுறுத்துகின்றன!  அவர் தீர்மானித்ததில், அவர் அமைத்ததில், அவர் திட்டத்தில் எந்த தவறும் கிடையாது! இருக்கவும் செய்யாது அது  நிச்சயம் நிறைவேறியே தீரும்!
 
எப்படி ஒரு கணினி தப்பாக கணக்கு போட்டுவிட்டது என்று சொல்லமுடியாதோ அதுபோல் எதையுமே இறைவன் தவறாக நடத்திவிட்டார் என்று சொல்லவே முடியாது!  எனவே எந்த சூழ்நிலையிலும், யார் நினைத்தும் இடையில் வந்து அவர் நியமனத்தை  மாற்றவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை! 
 
எல்லாமே முன்  தீர்மானத்தின்படி நடப்பதால் இறைவனை தொழ தேவையில்லையா? அவர் சொல்லும் வழிபடி நடக்க வேண்டிய அவசியம்   இல்லையா? என்ற  எண்ணம் எழலாம்!  
 
ஒருவர் இறைவனிடம் நெருங்கி உறவாடுவதன் மூலம் இந்த பிரபஞ்சத்தின் விதிகளை அவர் தெளிவாக அறியமுடியும். சில மைனுடான விஷயங்களை கூட நன்மை தீமையை தீர்மானிக்க கடவுளின் வழிகாட்டுதலை அறிந்துகொள்ள,  ஆண்டவரை அதிக சிரத்தையுடன் தொழுதுகொண்டு அவருக்கு கீழ்படிதல்  அவசியம்!   
 
அவ்வாறு ஆண்டவரின் விதிகளை  அறிந்துகொண்டு செயல்படுவதன் மூலம், இறைவன் நியமித்திருக்கும் சரியான பாதையில் பயணித்து ஆண்டவருக்கு பிரியமானதை  நிறைவேற்றி  அவர் நமக்காக வைத்திருக்கும்  பேரின்ப வாழ்வை பெறமுடியும்!
 
 


-- Edited by இறைநேசன் on Tuesday 2nd of March 2010 07:09:42 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு நண்பரின் 20 வயது மகன் பைக் கேட்கும் போது அதனால் ஏற்ப்படும் தீமைகளை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்தால் அவர் அனுமதித்து அதை வாங்கி கொடுத்தார்! ஆனால் கண் மண் தெரியாமல் ஒட்டிய அவன்  சிறிது நாளில்  விபத்துக்குள்ளாகி, பின்னால் பயணம் செய்தவர் இறக்க, இவன் மட்டும் பலத்த அடியோடு தப்பித்துகொண்டான். அப்பொழுது அவன் தப்பன் தாய்தான் இரவும் பகலும் கண்விழித்து மருத்துவமனையில் வைத்து பார்த்தனர். இங்கு எதுவும் தகப்பன் அனுமதியில்லாமல் நடக்கவில்லை!

இதுபோன்றதே இறைவனின் செயலும்! அவருக்கு தெரியாமல் அனுமதியில்லாமல் எதுவும் இங்கு நடக்க முடியாது! ஆனால் தீமையை இருக்கும் செயல்களுக்கு அவர் நியமித்த தண்டனை இருப்பதால் அதை அறிந்த இறைவன்,  அவற்றை செய்யவேண்டாம் என்று பல வேத நூல்களின் மூலம் எச்சரித்துள்ளார் ஆனால் மனிதன் செவிகொடாமல் துணிந்து செய்யும்போது அவன் விருப்பப்படி அவனே தீமைக்கான தண்டனையை   அனுபவபூர்வமாக அறிந்து கொள்ளட்டும் விட்டு விடுகிறார்

தீமைக்கு தண்டனை என்பது இறைவன் நியமித்தது எனவே அதைப்பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியும்! தீமை செய்யும் முன் அவர் மனிதர்களை பல முறை எச்சரிக்கிறார் எனவே அதுவும் அவருக்கு தெரியாமல் நடப்பது இல்லை எனவே அவரன்றி இங்கு எதுவும் நடப்பது இல்லை!

இறைவன் இல்லை என்று சொல்பவரையும் அவர் அனுமதிக்கிறார் அதே நேரத்தில் அப்படி சொல்வது நினைப்பது சரியல்ல என்பதை எடுத்து சொல்லும் மனிதர்களையும் அவரே வைத்திருக்கிறார்!

இங்கு எந்த தீமைக்கு இறைவன் காரணரும் அல்ல!  கிடைக்கும் தண்டனைக்கு அவர் பொறுப்பாளியும் அல்ல! அவனவன் செய்கையின் பலன்  அவனவனுக்கு திருப்பி கொடுக்கப்படும்.  



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard