இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தர் என்னை சந்தித்த விதம்.


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
RE: கர்த்தர் என்னை சந்தித்த விதம்.
Permalink  
 


என்னுடைய உடம்பு என்னை அறியாமலே அதிகமாக நடுங்க ஆரம்பித்தது. ஏனென்று எனக்கு தெரியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய கன்ட்ரோலை இழந்துவிட்டேன். யாரோ ஒருவர் என் அருகில் வருகின்ற மாதிரியான உணர்வு எனக்கு வந்தது.

என்னை சூழ்ந்து கொண்டிருந்த பிரசனத்தினால் என்னால் சுயமாய் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் எனக்கு எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை. மிகவும் நிசப்த்தமாக இருந்தது. என் வலதுபுறமாக என் காதுகளுக்கு மிகவும் அருகில் ஒரு சத்தத்தை கேட்டேன்.

நான் கேட்டது என்னவென்றால் "ஸ்தோத்திரம்........" "ஸ்தோத்திரம்........." என்று மிக அழகாகவும் மிகவும் இனிமையாகவும் இருந்தது. அந்த மாதிரயான் ஒரு குரல் இது வரைக்கும் நான் எங்குமே கேட்டதில்லை. அந்த சத்தத்தை கேட்டவுடன் என் கண்களை திறந்து விட்டேன். உடனே அந்த பிரசனத்தை விட்டு நான் வெளியே வந்து விட்டேன்.

இரண்டு காதுகளுக்குள் விரலை வைத்து அடைத்து கொண்டிருந்து சிறிது நேரத்திற்கு பிறகு கைகளை எடுத்தல் எப்படி இருக்குமோ அந்த மாதிரியான உணர்வு எனக்கு இருந்தது. உடனே பக்கத்தில் பாடி கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் சத்தம் மிக சத்தமாக பாடி கொண்டிருகிறது என் காதில் விழுந்தது. இதுவரைக்கும் அந்த சத்தம் எப்படி எனக்கு கேட்காமல் இருந்தது என்று எனக்கு புரியவில்லை.

என் கண்களை திறந்து பார்த்ததும் அங்கு யாருமே இல்லை ஒருவேளை இது என்னுடைய பிரமையாக இருக்குமோ என்று நினைத்து மறபடியும் கண்களை மூடி ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்தேன். ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக மறுபடியும் அந்த பிரசனத்தை உணர முடிந்தது. கொஞ்ச நேரம் ஸ்தோத்திரங்களை மாத்திரம் சொல்லிகொண்டிருந்தேன்.

மறுபடியும் இரண்டாவது முறையாக அதே இனிமையான் குரலை கேட்டேன். இந்த முறை அந்த குரல் யாருடையது என்று பார்பதற்காக மறுபடியும் கண்களை திறந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது இதனால் எனக்கு படபடப்பு அதிகமானது. இப்போது எனக்கு மறுபடியுமாக பக்கத்தில் பாடி கொண்டிருக்கும் சினிமா பாடலின் சத்தம் மிக சத்தமாக கேட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நான் என்னை அறியாமலே மிகவும் பயந்து நடுங்கி கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தேன். பிறகு மறுபடியும் கண்களை மூடி ஸ்தோத்திரம் சொல்ல ஆரம்பித்தேன். ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக மறுபடியும் அந்த பிரசனத்தை உணர முடிந்தது. மூன்றாவது முறையாக அதே இனிமையான் குரலை கேட்டேன்.

என்னால் அதற்கு மேல் அங்கு ஜெபிக்க முடியவில்லை அவருடைய மகா பரிசுத்தத்தில் என்னால் நிலை நிற்கவும் எனக்கு தைரியம் இல்லாத படியால் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி விட்டேன். என் முகமெல்லாம் மிகவும் வியர்த்து இருந்தது. என்னுடைய் இதய துடிப்பு மிகவும் அதிகரித்து கொண்டிருந்தது.

தொடரும்.....

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

கொஞ்சம் நேரம் ஓர் இடத்தில உட்கார்ந்து எனக்கு என்ன நடந்தது என்று எண்ணி யோசித்து கொண்டிருந்தேன். பிறகு என்னுடைய ஊழியகாரரான அங்கிள் கிட்ட போய் எனக்கு நடந்த எல்லாவற்றையும் விவரித்து கூறினேன்.

அவர் ஆச்சர்யபட்டு கர்த்தர் உன்னிடத்தில் மிகவும் பிரியப்பட்டு பேசும்படிக்கு வந்திருக்கிறாரே நே ஏன் ஓடி வந்து விட்டாய் என்று கேட்டார். நான் அவரிடத்தில் அங்கிள் கர்த்தர் என்னிடத்தில் பேச வேண்டும் அவர் பேசுகிற சத்தத்தை என் காதுகளில் நான் நேரடியாக கேட்க வேண்டும் என்றுதான் போனேன்.

ஆனால் என்னால் அந்த பிரசனத்தை என்னால் தாங்க முடியவில்லை அந்த பிரசனதிற்குல்லாக போகும் வரைக்கும் என்னால் தைரியமாகவும் ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் அந்த பிரசன்னம் என்னை மூடியதும் என் உடம்பு நடுங்க ஆரம்பித்து விடுகிறது இதனால் என்னால் நிற்க முடியவில்லை என்னால் அதை விவரிக்கவும் வார்த்தைகள் தெரியவில்லை.

அவர் எனக்கு ஒரு ஆலோசனை கூறினார் அது என்னவென்றால் இன்னொருமுறை நீ அந்த சத்தத்தை கேட்டால் ஆண்டவரே நீர் பேசும் அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்று கூறினார். சரி என்று தைரியத்தை வரவைத்து கொண்டு நான் மறுபடியும் கொஞ்ச நடுக்கத்துடன் சென்றேன்.

இந்த முறை செத்தாலும் பரவாயில்லை என்று உள்ளே போய் ஜெபிக்க தொடங்கினேன். ஆனால் தொடங்கினபோதே "ஆசையாய் உன்னிடத்தில் பேசும்படி வந்த என்னை நீ ஏமாற்றி விட்டு ஓடி போய்விட்டாயே என்று எனக்குள்ளே பேசின ஒரு சத்தத்தை கேட்டேன். அது நான் நினைத்தோ அல்லது நான் பேசினதோ அல்ல ..!

அதன் பிறகு என்னால் அந்த சத்தத்தை கேட்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைக்கும் அந்த நினைவிலே நான் இருந்து கொண்டிருந்தேன். மறுபடியும் வேறொரு விதத்தில் கர்த்தர் என்னோடு பேச ஆரம்பித்தார்.

அதை விரைவில் பதிக்கிறேன்.

தொடரும்............

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

ஒரு சில மாதங்கள் கடந்த பிறகு ஒரு நாள் நள்ளிரவில் நான் முதன் முதலில் வானத்தில் இருந்து என்னோடு பேசினார் என்று நான் குறிப்பிட்டிருந்தேனே அவரை மறுபடியும் கண்டேன்.

நான் வானத்தை நோக்கி பார்த்து கொண்டிருக்கையில் வானமானது மிகவும் தெளிவாக இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு பிறகு எனக்கு முன்பாக இருந்த வனத்தில் இடது புறம் தொடங்கி வலது புறம் வரைக்கும் கரும் மேகம் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது. அந்த மேகங்களுக்கு மேலாக அவர் இருந்தார்.

நான் இருந்த இடம் ஏதோ ஒரு பெரிய மைதானம் போல இருந்தது. அங்கே திரளான ஜனங்கள் இருந்தார்கள் அதில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த மேகம் வருவதற்கு முன்பாக எல்லாரும் சாதரணமாகதான் இருந்தார்கள் அந்த மேகமானது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முனை தொடங்கி மறுமுனை வரைக்கும் முன்னோக்கி வர ஆரம்பித்தது.

இதனால் நாங்கள் இருந்த இடம் மிகவும் மந்தாரமாக மாறிக்கொண்டே வந்தது. இதனால் எல்ல ஜனங்களும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள் அவர்களுடன் சேர்ந்து நானும் ஓட ஆரம்பித்தேன். திடிரென அந்த மேகத்தின் மீதிருந்து ஒரு சத்தம் கேட்க ஆரம்பித்தது. அந்த சத்தத்தை என்னால் மட்டும் அல்ல அங்கு இருந்த எல்லாராலும் கேட்க முடிந்தது.

ஆனால் யாரும் அந்த சத்தத்தை கேட்டு நின்றதாக எனக்கு தெரியவில்லை எல்லாரும் தங்களை அந்த காரிருள் போன்ற அந்த மேகத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளும்படியாகவும் விடுவித்து கொள்ளும்படியாகவும் மற்ற யாரையும் பொருட்படுத்தாமல் மிகவும் வேகமாக அங்கும் இங்குமாக சிதறி ஓடிகொண்டிருந்தார்கள்.

ஆனால் நானோ அந்த சத்தத்தை கேட்டு ஓடி கொண்டிருந்த நான் நின்று அவரை திரும்பி பார்த்தேன். அவருடைய சத்தம் வனாந்தரத்தை அதிர பண்ணும் கேதுரு மரங்களை முறிக்கும் கர்ஜிக்கிற சிங்கத்தை போலிருக்கும் என்று எல்லாம் படித்திருக்கிறேன். கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நான் அப்போதுதான் அதை நேரில் கேட்டேன்.

வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவில் இருந்தது. அந்த சத்தம் என்னை மிகவும் அதிர செய்தது.இருந்தாலும் என்னால் எப்படி அதை கேட்க முடிந்தது என்றும் எப்படி அந்த சட்டத்தை கேட்டு நிற்க முடிந்தது என்றும் இதுவரைக்கும் என்னால் கண்டுபிடிக்கம் முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

நான் வேதத்தில் படித்தேன் தானியேல் புத்தகத்தில் ஒரு கையுருப்பு வந்து எழுதியது என்று நான் அதை என் கண்களால் பார்த்தேன். அது எது வரைக்கும் இருந்தது என்றால் நம்முடைய கையில் நாம் எந்த இடத்தில் கைகடிகாரத்தை கட்டுவோமா அந்த இடம் வரைக்கும்தான் இருந்தது.

தொடரும் .................

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

நடந்த சம்பவம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நடந்த மாதிரியாக இருக்கவில்லை. வானம் எப்படி எந்த ஊரில் இருந்தாலும் யாராலையும் எங்கு இருந்தாலும் பார்க்க முடியுமோ அதுமாதிரிதான் இருந்தது.

ஒரு கிளாஸ் ரூமில் ஒரு ப்ளாக் போடில் எழுதும் வார்த்தைகள் அந்த கிளாசில் இருக்கும் எல்லாருக்கும் எப்படி பொதுவாக தெரியுமோ அப்படிதான் எல்ல ஜனங்களுக்கும் பொதுவாக தெரிந்தது எல்லாரும் பார்க்க முடிந்தது.

நான் பார்த்து கொண்டிருக்கையில் அந்த கையுருப்பு அப்படியே யாரும் பிடிக்காமலே அதுவே தானாக எழுத ஆரம்பித்தது. அந்த வார்த்தைகளை என்னால் படிக்க முடிந்தது. அது என்னவென்றால் "மெனே மெனே தெக்கேல் உப்பாசின்" (நீ தராசிலே நிறுத்தப்பட்டு குறைய காணபட்டாய் ) என்பதே,

இதை நான் படித்தவுடன் மிகவும் வேகமாக ஓட ஆரம்பித்தேன். அங்கு சிதறி ஓடி கொண்டிருந்தவர்களை பிடித்து அங்கு பாருங்கள் வனத்தில் அந்த வார்த்தை எழுதபட்டிருகிறது என்று கூறினேன். யாருமே என்னை கண்டுகொள்ளவே இல்லை பிறகு எனக்கு நன்றாய் தெரிந்த முகங்கள் எல்லாம் அங்கு காணமுடிந்தது.

அதில் ஒரு சிலர் ஆண்டவரை அறிந்தவர்கள் ஒருசிலர் ஆண்டவரை அறியாதவர்கள் எல்ல ஜனங்களும் கலந்து இருந்தார்கள் ஆண்டவரை அறியாத ஒரு அண்ணனை வலுகட்டாயமாக பிடித்து அண்ணா தயவு செய்து அங்கு பாருங்கள் இப்போதாவது மனம்திரும்புங்கள் என்று கெஞ்சினேன்.

ஆனால் அவர்களோ என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை நான் எவ்வளவோ சொல்லியும் என்னை அசட்டை பண்ணிவிட்டு போய்விட்டார்கள் வழியில் தென்படுகிற நல்லார் பொல்லார் என யாரெல்லாம் என் கண்களுக்கு தெரிகிறார்களோ எல்லாரிடத்திலும் தயவு செய்து அதை பாருங்கள் மனம்திரும்புங்கள் என்று கெஞ்ச ஆரம்பித்தேன். ஆனால் யாருமே நான் சொல்லியதை கவனித்த மாதிரியாக தெரியவில்லை.

எல்லாரும் அவர்கள் அவர்கள் வேலையை பார்த்துகொண்டு போய்விட்டார்கள் அங்கு எத்தனையோ திரளான ஜனங்கள் இருந்தார்கள் நான் எல்லாரையும் ஒருவிசை நின்று பார்த்தேன். ஆனால் எல்லாரும் அவர்களுடைய காரியத்தில்தான் மும்முரமாக இருந்தார்கள்.

இதனால் என்னால் இதற்குமேல் என்னசெய்வதென்று தெரியவில்லை சிறிது நேரம் யோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்.

தொடரும்..........................

-- Edited by Stephen on Thursday 1st of April 2010 03:00:35 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

நான் என்ன சொல்லுகிறேன் என்பதை ஒருவர் கூட புரிந்து கொள்ளாமல் அவர்கள் அவர்களுடைய காரியத்திலே மும்முரமாக இருந்தபடியால் அதற்கு மேல் அங்கு இருபதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அறிந்து சரி எனக்கு தெரிந்தவர்களிடதிலாவது சொல்லலாம் என்று ஒவ்வொரு வீடாக ஓடினேன்.

ஒரு வீடிற்குள் நுழைந்து அவசர அவசரமாக அவர்களை அழைத்து நடந்த காரியங்களை எல்லாம் சொல்லாம் என்று நினைத்தால் அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிர செய்தது.

நான் அவர்களுக்கு சொல்வதற்கு முன்பாகவே அதே வார்த்தைகள் அவர்களுடைய வீட்டின் சுவரிலும் எழுதியிருந்தது. இதனால் அங்கு எதுவுமே சொல்லாமல் இன்னொரு வீடிருக்கு ஓடினேன்.

அங்கு போய் பார்த்தால் அந்த வீட்டிலும் அதே வார்த்தை எழுதியிருந்தது நான் ஓடின எல்ல வீட்டிலும் ஒவ்வொரு சுவரிலும் நான் அங்கு பாத்த மாதிரியே எழுதிருந்தது.

இதனால் நான் சொல்வதற்கு முன்பாகவே எல்லாருக்கும் அந்த வார்த்தையை எல்லாருக்கும் எல்லா இடத்திலும் காணப்பட்டது.

அதற்குமேல் என்ன நடந்தது என்று எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை.

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர் ஸ்டீபனின் சாட்சி மிகவும் அதிசயமான அபூர்வமான 
ஒன்றாக இருக்கிறது.
 
இவ்வித சாட்சிகளை அனுபவத்தில் அறிந்தவர்கள் மற்றுமே அங்கீகரிக்க முடியும்.
 
தேவனின் வழிகள் ஆராந்து முடியாதவைகள். அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு  விதமாக  தன்னை வெளிப்படுத்துகிறார் 
 
அவருக்கே மகிமை சதா காலங்களிலும் உண்டாவதாக!  
 


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

இன்னொரு நாள் கர்த்தர் ஒரு இடத்திற்கு கொண்டு போனார். அங்கு நடந்ததையும் நான் இங்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.நான் எழுதியிருக்கிற காரியங்கள் ஒருவேளை முன்பு நடந்ததை பின்பாகவும் பின்னால் நடந்ததை முன்பாகவும் என் ஞாபகத்தில் இருந்த படி மாற்றி எழுதி இருக்கலாம்.

ஆனால் இவைகள் அனைத்தும் என் சொந்த கருத்துகளோ அல்லது என் கற்பனையோ அல்ல அனைத்தும் உண்மையை நான் அனுபவித்த உண்மை சம்பவங்கள் நான் இங்கு எழுதுகிறதின் நோக்கம் என்னவெனில் கர்த்தர் யாருடனும் பேச முடியும் யாருக்கும் எதையும் காண்பிக்க முடியும் யாரை கொண்டும் எதையும் செய்ய முடியும் அவருடைய சித்தத்திற்காக அவர் யாரையும் பயன்படுத்த முடியும்.

நான் கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பாக எப்படி பட்ட வாழ்கையை வாழ்ந்தவன் என்று எனக்கும் கர்த்தருக்கும் தான் தெரியும் கர்த்தருக்கும் சித்தாமானால் அதையும் நான் பின்வரும் நாட்களில் எழுதுகிறேன். அதனால்தான் சொல்லுகிறேன்.

தேவனுடைய அன்புக்கு ஒரு அளவை நம்மால் கொடுக்க முடியுமானால் அவர் எந்த அளவிற்கு யாரை எந்த காரியத்திற்காக பயன்படுத்துவார் என்று நம்மால் கூற முடியும்.

ஆனால் அவருடைய அன்புக்கு அளவே இல்லாதபடியால் எப்பேர்பட்டவனையும் தேவனால் ஒருநொடி பொழுதில் மாற்றவும் முடியும் அவர்களுக்கு தன்னை வெளிபடுத்தவும் முடியும் அவர்களுடன் பேசவும் முடியும்.

தொடரும் ...................

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோதரர் ஸ்டிபன்  அவர்கள் எழுதியது போல தேவன் இப்படிபட்டவெளிப்பாடுகளையும் தரிசனங்களையும்  
சகோதர்களுக்கு  வெளிபடித்தி இருந்தால்
நீங்களும் இந்த தளத்தில் பதிவிடலாமே தங்கள் சாட்சிகளை எழுதலாமே
 

இறைநேசன் சொன்னது போல
 
///   
உண்மை சாட்சிகள் என்பது அடுத்தவர் மனதில் ஆழமாக பதிய கூடியது என்னதான் போதனை செய்தாலும் ஒரே ஒரு உண்மை சாட்சி பலரை தேவனிடம் திருப்பும் வல்லமை உள்ளது! 
 
ஒவ்வொருவர் சாட்சியையும் அறிய ஆவல்!


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

ஒரு சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவில் மறுபடியும் கர்த்தர் என்னை ஓரிடத்திற்கு கொண்டு போனார். ஆனால் இந்த முறை நான் எப்படி அங்கு போனேன் என்று எனக்கு தெரியவில்லை அங்கு என்னோடு அவர் பேசினார்.

இந்த முறை நான் பார்த்த சம்பவம் சற்று வித்தியாசமானதாக இருந்தது. எப்படியெனில் நான் இருந்த இடம் மிகவும் இருட்டாக இருந்தது. எனக்கு முன்பாக ஒரு பெரிய கதவு இருந்தது. அது ஒரு சாதரணமான வீட்டின் கதவை போல அல்ல மிகவும் பெரியதாக இருந்தது. இதுக்குமுன் நான் அப்படிப்பட்ட கதவை பார்த்ததில்லை.

கர்த்தர் என்னை பார்த்து அந்த பெரிய கதவின் துவார வழியாக என்னை பார்க்கும்படி கூறினார். நான் கிட்ட போய் அந்த துவாரத்தின் வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தேன். நான் அங்கு பார்த்த காட்சி என்னை அதிரபன்னியது.

துவாரத்திற்கு இந்த பக்கம்(அதாவது நாங்கள் இருந்த பக்கம் ) மிக சாதரணமாக இருந்தது. ஆனால் அந்த கதவின் அந்த பக்கம் மிகவும் சொல்ல முடியாத அளவிர்கு காரியங்கள் நடந்து கொண்டிருந்தது. சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் அந்த கதவு ஒரு ஒரு வீட்டிற்கு உரியது போல் அல்ல.

ஒரு பெரிய கடலை இரண்டாக பிரித்து அதில் ஒரு பாதியை சுற்றிலுமாக ஒரு சுவர் போலவும் அதற்கு ஒரே ஒரு கதவு மட்டுமே வைத்து இருந்தால் அது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. வெளியில் இருந்து பார்பதற்கு ஒன்றுமே தெரியவில்லை.வெளியில் சாதாரணமாகதான் இருந்தது.

ஆனால் நான் துவாரத்தின் வழியாக பார்த்த பிறகுதான் புரிந்து கொண்டேன். அங்கு என்ன நடந்தது என்றால் அனேக ஜனங்கள் இருந்தார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அங்கு எண்ணிக்கைக்கு அடங்காத ஜனங்கள் இருந்தார்கள் அங்கு செய்யபடாத காரியமே இல்லை பார்பதற்கே மிகவும் அருவருப்பாக இருந்தது. மிகவும் கேவலமான காரியங்களெல்லாம் நடந்து கொண்டிருந்தது.

அவர்கள் செய்த அருவருப்பு அவர்களுக்கே தெரியவில்லை மிக சாதரணமாக இருந்தார்கள் என்னால்தான் அவைகளை பார்க்க முடியவில்லை.கொஞ்ச நேரத்திற்கு பிறகு என்னால் அதை பார்க்க முடியாமல் திரும்பினேன்.

அப்போது கர்த்தர் என்னை பார்த்து கேட்டார் அங்கு என்ன நடந்து கொண்டிருகிறது என்று பார்த்தாயா...? நான் அமைதியாக இருந்தேன் ஒன்றுமே பதில் சொல்லாமல் அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

இந்த ஜனங்கள் தங்களுடைய நடவடிக்கைகளினால் தங்களை மிகவும் கெடுத்து கொண்டிருகிறார்கள் என்று மிகவும் வருத்ததோடு கூறினார்.

தொடரும் ...................

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

உங்கள் அனுபவங்கள் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு கர்த்தரால் உணர்த்தப்பட்ட அனுபவங்களுக்கு ஒத்ததுபோல் இருக்கிறது.

ஆண்டவர் உங்களுக்கு அனேக உண்மைகளை உணர்த்தியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.

எல்லோருக்கும் இதுபோல் தரிசனங்கள் கிடைப்பதில்லை, அப்படி தேவன் ஒரு காரியத்தை ஒருவருக்கு காட்டினால் அதன்பின்னால் ஒரு பெரிய தேவதிட்டம் நிச்சயம் இருக்கும்.  அதையும் தங்களுக்கு தெரியப்படுத்தியிருப்பார் என்றே கருதுகிறேன்.

அதையும் நாங்கள் அறிந்துகொள்ளும்படி  தொடர்ந்து எழுதுங்கள்.

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

அவர் என்னிடத்தில் பேசும் போது நான் அவருடைய முகத்தை பார்க்காமல் கீழே குனிந்து அவர் சொல்வதை கேட்டு கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவருடைய வார்த்தைகள் மிகவும் கோபமாகவும் வேகமாகவும் வந்து கொண்டிருந்தது.

எனக்குள் மிகவும் பயம் வந்து விட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எப்படி அங்கிருந்து வெளியே வருவதென்றும் தெரியவில்லை இப்போது என்ன நடக்க போவதென்று தெரியாமல் என்னை அறியாமலே நான் மறுபடியும் அந்த துவாரத்தின் வழியாக பார்க்க ஆரம்பித்தேன்.

நான் பார்த்து கொண்டிருக்கையில் திடிரென அந்த இடம் முழுவதும் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. வார்த்தையால் சொல்ல முடியாத அளவிற்கு நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது எங்கு பார்த்தாலும் பயங்கரமாக அக்கினி பற்றி எரிந்து கொண்டிருந்தது.

அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் என் மனம் பதைக்கிறது. என்னை அறியாமல் என் உடம்பு முழுவதும் நடுங்க ஆரம்பிகிறது. யாருமே அப்பேற்பட்ட இடத்திற்கு போககூடாது என்று நான் தவிக்கிறேன். நான் பார்த்த இடம் முழுவது அக்கினி கடலை போல் மாறி போனது.

எங்கு பார்த்தாலும் ஒரே கூக்குரல் நெஞ்சை பிளக்கதக்கதான அலறல் சத்தம் என்னை அறியாமலே என் கண்களில் இருந்து தாரதாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நடந்த அனைத்து காரியங்களும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அந்த அலறலையும் கதறலையும் நேரில் பார்த்த என்னால் எப்போதும் போல சராசரியாக இருக்க முடியவில்லை அதை என்னால் மறக்கவும் முடியவில்லை இதனால் நான் மூன்று நாட்களுக்கு மிகவும் பயந்தவனாய் சுயநினைவு அற்றவனை போல இருந்தேன்.

நான் பார்த்தபோது ஒருவர்கூட சாகவில்லை ஆனால் எல்லாரும் துடிதுடித்து கொண்டிருந்தார்கள். இதனால் எனக்கும் மூன்று நாட்களுக்கு பயங்கர ஜுரம் வந்துவிட்டது. இதை நான் யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் வைத்து கொண்டிருந்தேன்.

தொடரும்........

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

Very Nice....



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard