இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்!
Permalink  
 


ஆவியானவர் யார் என்பது பற்றியும் அவரின் செயல்பாடுகள் பற்றியும்
என்ற திரியில் ஆராய்ந்தோம்.
 
அடுத்து   

நமக்குள்  தங்கியிருந்து,  தேவனுடன் நமக்கு நேரடி   தொடர்பை ஏற்ப்படுத்திதரும் பரிசுத்த ஆவியானவரை எவ்வாறு பெறமுடியும் என்பதை ஆராய்வது அனைவருக்கும் மிகவும் அவசியமாகிறது.
 
ஏனெனில் மனம்திரும்பி  இரட்சிக்கபட்டவுடன்  ஆவியானவர் தானாகவே  வந்து விடுவார் என்ற  கருத்தில் பல சகோதரர்கள்  ஆவியானவரை பெறாமலும் அவரை பெற்றுகொள்வதற்கு எந்த முயர்ச்சியும்  எடுக்காமலும்  இருந்துகொண்டு,  ஆவியானவரை பெறுவதற்கு தனியாக முயற்சி எதுவும் தேவையில்லை என்ற கருத்தில்,  இன்னும் ஆவியானவரின் நடத்துதல் இல்லாமல் தங்கள்  சுயநீதியில்  வாழ்ந்துகொண்டு இருப்பதை ஆவியில் உணரமுடிகிறது!  
 
ஆவியானவரின் அபிஷேகம் இல்லாமல் ஒருவர்  எவ்வளவு பரிசுத்தமாக வாழ்ந்தாலும் அது சுயநீதியே! என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஆவியானவர் ஒருவராலேயே ஒருவரை தேவனுக்கேற்ற பரிசுத்த  நிலைக்கு 
நம்மை ஆயத்தபடுத்தி  கொண்டுசெல்ல முடியும்.
 
II கொரிந்தியர் 5:5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
 
எனவே ஆவியானவரை பெறுவதென்பது மிக மிக அவசியமாகிறது. அவரே மீட்பின் நாளுக்கென்று அருளப்பட்ட முத்திரை
 
எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி
எபேசியர் 1:14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். 
 
அவரே நம்மை தேவனுக்கு சொந்தமாக்கும் சுதந்திரத்தின் அச்சாரமாக இருப்பதால் அவரை நிச்சயம் நாம் வாஞ்சித்து  ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை பெற்றுகொள்வது பற்றி  வேதம் காட்டும்  வழிமுறைகளை ஆராயலாம்.     
 
அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
   
இவ்வசனப்படி பாவமன்னிப்புகென்று ஞானஸ்தானம் பெற்றவர்கள்  பரிசுத்த ஆவியின் வரம்  பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். ஆகினும் ஞானஸ்தானம் பெற்றவர்கள் எல்லோரும் அப்பொழுதே ஆவியானவரின் வரத்தை பெற வாய்ப்பில்லை என்றும் ஆவியானவரின் வரத்தை பெறாமலே வெறும் ஞானஸ்தானம் மட்டும் பெற்றிருக்க முடியும் என்றும் கீழ்க்கண்ட வசனம் விளக்குகிறது. 
 
அப்போஸ்தலர் 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

இந்த நிலையில்தான் இன்றைய புரதான கிறிஸ்த்தவ சபைகளின் அனேக விசுவாசிகள் இருக்கின்றனர். இவர்கள் ஆவியானவரை அறியவில்லை என்றாலும் 
தங்களிடம் உள்ள அந்த குறைபற்றிய அறிய மனமின்றி, அதைப்பற்றி  எடுத்து சொல்பவர்களிடமும்  கோபப்படும் நிலையில் இருக்கின்றனர்.    
 
ஞானஸ்தானமும் மனம்திரும்புதலும் ஆவியானவரை பெற்றுக்கொள்வதர்க்கான   தகுதிகள் என்றாலும், ஞானஸ்தானம் பெரும் முன்னும்கூட ஆவியானவரால் அபிஷேகிக்க முடியும் என்றும் வசனம் சொல்கிறது   
  
அப்போஸ்தலர் 10:44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
அப்போஸ்தலர் 10:47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி
 
மேல்கண்ட வசனங்களில், பேதுரு பிரசங்கம் பண்ணும்போது அதை  கேட்ட அனைவர் மேலும் ஆவியானவர் இறங்குகிறார், பிறகு அவர்கள் ஞானஸ்தானம் பெறுகின்றனர். "ஞானஸ்தானம் வேறு,  ஆவியானவரின் அபிஷேகம் என்பது வேறு" என்பதை இவ்வசனம் தெளிவாக போதிக்கிறது.  
 
பரிசுத்தாவியை பெறுவதற்கான வழிமுறைகள்:-
 
1. அவரவர்கள் தாங்களாகவே ஆவியானவரின் வரத்துக்காக வேண்டுதல் செய்யலாம்:   
 
லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

ஆம்! ஆவியான்வருக்காக ஒருவர் தனியாக வேண்டுதல் செய்யவேண்டும் என்றே வேதம் சொல்கிறது.  தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், வாஞ்சையோடு ஒருமனதோடு நொறுங்குண்ட இதயத்தோடு வேண்டுபவர்களுக்கு பிதாவானவர் ஆவியானவரை 
அருளுவார். அறிவை கொண்டு  ஆவியானவர் அனுபவங்களை ஆராயநினைக்காமல் ஆண்டவரை நான் அனுபவ பூர்வமாக அறிய வேண்டும் என்ற ஒரே வாஞ்சையில்  தேடவேண்டும்,  இவ்வாறு தன்னை உடைத்து வேண்டி கொள்பவர்களுக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்படுவது அதிக நிச்சயம்!
 
2. கூட்டு பிரார்த்தனை மூலம் ஆவியானவரை பெறமுடியும்
 
அப்போஸ்தலர் 1:14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

 
ஆவியானவர் அபிஷேகத்துக்கு என்றே சில சபைகளில் கூடு பிரார்த்தனை நடைபெறுகின்றது.  அதில் கலந்து கொண்டு ஜெபிக்கும்போது நமக்கு ஒருமனப்பாடு ஏற்ப்படுகிறது  போதகர்கள் ஆவியானவரின் வரத்துக்காக ஜெபிக்க, நாமும் 
ஒருமனப்பட்டு தேவனிடம் நம்மை தாழ்த்தி மன்றாடும்போது   கூட்டத்திலுளள  
அநேகருக்கு ஒரே நேரத்தில் ஆவியானவரின் அபிஷேகம் இறங்குகிறது.  
 
3. பரிசுத்தவான்கள் நமக்காக ஜெபித்து  கையை வைப்பதன் மூலம் ஆவியானவரை பெற முடியும்.
 
அப்போஸ்தலர் 8:16 அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அப்போஸ்தலர் 8:17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
 
இவ்வகையில் ஏற்கெனவே ஆவியை பெற்ற தேவ மனிதர்கள் ஜெபித்து இன்னொருவர் தலையில்  கைவைப்பதன் மூலம் ஆவியானவை பெறமுடியும்.   
  
இன்னும் சில வழி முறைகளும் கூட  இருக்கலாம் ஆனால் வேத ஆதாரத்துடன் கூடியது  இம்மூன்றுதான்   என்று நான் கருதுகிறேன். 
 
என்னை பொறுத்தவரை நான் ஞானஸ்தானம் பெறவோ இயேசுவை  ஏற்றுக் கொள்ளவோ இல்லை. ஆகினும் உண்மை கடவுள் எதுவென்று  தெரியவேண்டும் என்று மணிக்கணக்கில் அழுது மன்றாடி பாரத்தோடு ஜெபித்தேன்  அப்பொழுதே ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டு பிறகு இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவநீதியை நிறைவேற்ற  எண்ணி ஞானஸ்தானம் பெற்றுகொண்டேன். இவ்வாறு யார் யாருக்கு எப்பொழுது ஆவியானவரின் வரத்தை  அருளுவது என்பது ஆண்டவரின் கரத்தில் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.  
 
எனவே  எப்படியாகினும் ஆவியானவரை வாஞ்சித்து பெற்றுக் கொள்வது ஆவிக்குரிய வாழ்வுக்கு மிக மிக அவசியம்!
 
அவருடைய ஆவியினாலேதான்  எல்லாம் ஆகும்!
   
  


-- Edited by SUNDAR on Monday 8th of March 2010 04:45:11 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது

//////இவ்வாறு யார் யாருக்கு எப்பொழுது ஆவியானவரின் வரத்தை அருளுவது என்பது ஆண்டவரின் கரத்தில் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். /////////////////


சுந்தர் அவர்களே கருதுவது அல்ல நிச்சயம் அது தான் உண்மை

ஞானஸ்தானம் எடுக்காமல் தீர்கதரிசனம்சொன்னர்களை பார்த்து இருக்கிறேன்
வேதத்தில் கூட கர்த்தருடைய ஆவியானவர் சவுல் மற்றும் சிம்சோன்இவர்களை விட்டு விலகினார் என்று வேதம் சொல்கிறது
ஆனால் திரும்பவும் தேவ ஆவியானவர் அவர்கள் மேல் வந்து இறங்குகிறார்....................

உண்மையாக எல்லாம் தேவனுடைய கிருபையே
எல்லாம் அவர்கரத்தில் உள்ளது............................
அவர் எப்படி நினைகிறாரோ அப்படியே செய்வார்

லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

வாஞ்சையோடு கேட்கிறவர்களுக்கு நிச்சயம் தேவன் தம்முடைய ஆவியை கொடுப்பார்...................



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

பழைய ஏற்பாட்டு காலத்தின் பரிசுத்தாவியரின் பணிக்கும் புதிய ஏற்பாட்டின் பரிசுத்தாவியரின் பணிக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு;இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாமென்றெண்ணுகிறேன்;

ஞானஸ்நானம் பெறாத ஒருவர் தீர்க்கதரிசனமாக எதைச் சொன்னார் என்பதைக் கொண்டு அவர் சொன்னது தீர்க்கதரிசனமா என்பதையும் வரையறுத்துவிடமுடியும்;

முக்கியமானதொரு அடையாளமாவது ஒருவர் தீர்க்கதரிசனம் என்று சொல்வது வாழ்வியல் சம்பந்தமான பொருளில் என்றால் அது தீர்க்கதரிசனமல்ல;

அது அந்த நபருடன் நேரடியாக ஆலோசனையாகவே பகிர்ந்துக் கொள்ளக்கூடிய விஷயம்தான்;நேருக்கு நேராக சொன்னால் எடுபடாது என்றுணர்ந்தே தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கூறுகிறார்கள்;

இது ஆவியைப் பெற்று சொல்பவர்க்கும் பெறாமலே சொந்த உணர்ச்சியிலிருந்து சொல்பவர்க்கும் சேர்ந்தே பொருந்தும்.


__________________

"Praying for your Success"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சில்சாம் எழுதியது.
 
/////// பழைய ஏற்பாட்டு காலத்தின் பரிசுத்தாவியரின் பணிக்கும் புதிய ஏற்பாட்டின் பரிசுத்தாவியரின் பணிக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு;இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாமென்றெண்ணுகிறேன்;////.....

 

சில்சாம் அவர்களே  பழைய   ஏற்பாட்டு காலத்தின் பரிசுத்தாவியரின் பணிக்கும்
புதிய ஏற்பாட்டின் பரிசுத்தாவியரின் பணிக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு என்று சொல்கிறீர்கள்
என்ன வித்யாசம் என்று நான் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறேன்.........
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

// சில்சாம் அவர்களே  பழைய   ஏற்பாட்டு காலத்தின் பரிசுத்தாவியரின் பணிக்கும் புதிய ஏற்பாட்டின் பரிசுத்தாவியரின் பணிக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு என்று சொல்கிறீர்கள் என்ன வித்தியாசம் என்று நான் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறேன்.........//

நண்பரே நீங்கள் இந்த வித்தியாசத்தை அறியாதவர் என்று என்னால் எண்ணமுடியவில்லை; ஆனாலும் பரிசுத்தாவியானவரைக் குறித்து நண்பர் சுந்தர் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை நிதானமாகப் படிக்க வேண்டுகிறேன்;இப்போதைக்கு அதுவே போதும்;

குறிப்பான ஏதேனும் கேள்விகள் இருக்குமானால் நீங்கள் தாராளமாகக் கேட்கவும்; நான் எனக்குத் தெரிந்த பதிலைக் கூற ஆயத்தமாக இருக்கிறேன்.

மேலும் இது விவாதிக்கும் பகுதியோ அல்லது இந்த பொருள் விவாதக்குரிய பொருளோ அல்ல என்பதையும் கவனிக்க வேண்டுகிறேன்;நன்றி


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்த போது,  எனது தம்பி நடத்திகொண்டிருக்கும் சபையில் செய்தி  வேளையில் ஒரு அரை மணி நேரம் எனக்கு ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அந்த அரை மணி நேரத்தில் ஆவியானவரின் அபிஷேகம் பற்றிய முக்கியத்துவத்தை பல வசன ஆதரங்களுடன்  எடுத்துகாட்டி ,  எல்லா கிறிஸ்த்தவர்களும் நிச்சயம் அபிஷேகம் பெறவேண்டும் என்று வலியுறுத்தி  போதித்துவிட்டு, அபிஷேகம் பெற விரும்புகிறவர்கள் முன்னே வாருங்கள்  அவர்களுக்காக விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்படும் என்று சொல்லி அழைத்தேன்.
 
ஒரே ஒரு சகோதரியை தவிர யாரும் முன் வரவில்லை. எல்லோரும் ஏற்கெனவே  அபிஷேகம் பெற்றவர்கள்   போலும்!?
 
முன்னால் வந்து முழங்காலில்  நின்ற அந்த சகோதரிக்கு ஆவியானவரை அறிய வேண்டும் என்ற வாஞ்சை இருப்பதை அறிய முடிந்தது.  ஜெபிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஆவியானவர் வல்லமையாக இறங்க, அந்த வல்லமையை தாங்க முடியாமல் சகோதரி தரையில்  சாய்ந்து விட்டர்கள். முதல் முதலில் இப்படி வல்லமயாக் அபிஷேகம் இறங்குவதும் பிறகு நாளாக ஆக ஆக நமக்கு  ஆவியானவரின் அபிஷேகத்தை  தாங்கும் பலம் வருவதும்  உண்டு.
 
இந்த சகோதரிக்கு நடந்த காரியத்தை பார்த்துகொண்டிருந்த இன்னொரு சகோதரி எழுந்து ஓடிவந்து "எனக்கும் ஜெபியுங்கள் நானும் அபிஷேகம் பெறவேண்டும் என்று கேட்டு கொண்டார்கள்" சரி என்று சொல்லி நானும் மிகவும் மற்றாடி இரண்டு முறை அதிக நேரம் ஜெபித்தும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அந்த சகோதரி அப்படியே நின்றார்கள்.  இறுதியில் அவர்கள் அபிஷேகம் பெறாமலே திரும்பி சென்றார்கள்.
 
ஆவியானவரின் அபிஷேகம் பெறுவதற்கு  ஆண்டவரை   அனுபவபூர்வமாக அறியவேண்டும் என்ற  விசுவாசத்துடன்  கூடிய தாகம் வேண்டும். அத்தோடு ஜெப வேளையில் மனதை சிதற விடாமல் ஒரே நோக்கமாக ஆண்டவரை நோக்கி மன்றாட வேண்டும். 
 
மற்றபடி எல்லோரும் பெறுகிறார்கள் எனக்கும் வேண்டும் என்று ஏனோதானோ என்று தேடுவதோ அல்லது,  அது என்ன ஆவியானவர்?  அறிந்துதான் பார்த்துவிடுவோமே! என்றோ, நான் பெரியவன்  எனக்கு அவர் நிச்சயம் அருளப்பட வேண்டும் என்ற எண்ணத்திலோ தேடுபவர்களுக்கு  ஆவியானவரின் கிருபை  கிடைப்பதில்லை.  
 
நாம் பிறருக்கு  அவருடைய  அபிஷ்கத்துக்காக ஜெபிபபது என்பது அவர்களை  ஒருமனபாட்டுக்குள் நடத்தமட்டுமே, மற்றபடி நமது கையில் எதுவுமே இல்லை!    
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

// அந்த வல்லமையை தாங்க முடியாமல் சகோதரி தரையில்  சாய்ந்து விட்டர்கள். முதல் முதலில் இப்படி வல்லமயாக் அபிஷேகம் இறங்குவதும் பிறகு நாளாக ஆக ஆக நமக்கு  ஆவியானவரின் அபிஷேகத்தை  தாங்கும் பலம் வருவதும்  உண்டு...நமது கையில் எதுவுமே இல்லை //

தனிப்பட்ட சிலரது அனுபவத்தையும் கருத்துக்களையும் போதனையாகக் கொள்ளக்கூடாது என்பதற்கு சுந்தர் அவர்களின் மேற்கண்ட கருத்து ஒரு உதாரணமாகும்;

தொடர்ந்து...

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34879991


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பழைய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தரின் மகிமையை கண்டு முகம் குப்புற விழுந்த பலர் இருந்தபோதிலும்,  புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவின் வார்த்தையை
கேடடு தரையில் விழுந்த பவுலை தவிர, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இறங்கியபோது யாரும் கீழே விழுந்து புரண்டதர்கான ஆதாரம் எதுவும் வேத  புத்தகத்தில் இல்லை.
 
ஆகவே  நான் ஜெபித்தபோது அந்த சகோதரி கீழே விழுந்து புரண்டதர்க்கு காரணம்  வேறு அசுத்த ஆவியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது!
 
மாற்கு 9:20 அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

எப்படியோ அங்கு ஜெபித்தபோது ஒரு தேவ பிரசன்னத்தை உணர முடிந்த்து. இனி அடுத்த முறை போகும்போதுதான் அது எவ்வித ஆவி என்பதை ஆராய்ந்து அறியவேண்டும்.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

மாற்று கருத்துக்கு இதமான சமிக்ஞை காட்டுவதற்கும் கூட ஆவியானவரின் வழிநடத்துதல் வேண்டும்;அந்த வகையில் தங்கள் ஆவியைக் குறித்து நான் தேவ சமூகத்தில் ஆனந்தமடைகிறேன்;

ஆவியானவர்,அக்கினி,அபிஷேகம்,வல்லமை,வரங்கள்,அந்நியபாஷை போன்ற கருகலான பொருளில் தியானங்களை விரைவில் சமர்ப்பேன்;சற்று பொறுத்திருங்கள்;



__________________

"Praying for your Success"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்!
Permalink  
 


sundar wrote on 25-03-2010:

//முன்னால் வந்து முழங்காலில்  நின்ற அந்த சகோதரிக்கு ஆவியானவரை அறிய வேண்டும் என்ற வாஞ்சை இருப்பதை அறிய முடிந்தது.  ஜெபிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஆவியானவர் வல்லமையாக இறங்க, அந்த வல்லமையை தாங்க முடியாமல் சகோதரி தரையில்  சாய்ந்து விட்டர்கள். முதல் முதலில் இப்படி வல்லமயாக அபிஷேகம் இறங்குவதும் பிறகு நாளாக ஆக ஆக நமக்கு  ஆவியானவரின் அபிஷேகத்தை  தாங்கும் பலம் வருவதும்  உண்டு.//

sundar wrote on 26-03-2010:

//ஆகவே  நான் ஜெபித்தபோது அந்த சகோதரி கீழே விழுந்து புரண்டதர்க்கு காரணம், வேறு அசுத்த ஆவியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது!

மாற்கு 9:20 அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.//


தான் ஜெபிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் தன் முன்னே முழங்காலில் நின்ற சகோதரியின் மீது ஆவியானவரின் வல்லமை இறங்கியதாக சகோ.சுந்தர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
ஆனால் அடுத்த நாளிலேயே, அந்த சகோதரியின் மீது இறங்கிய ஆவி அசுத்த ஆவியாக இருக்குமோ என சந்தேகப்படுவதாகக் கூறுகிறார்.

சந்தேகத்திற்குரியதான ஒரு விஷயத்தில், இது ஆவியானவரின் வல்லமைதான் என ஆரம்பத்தில் எவ்வாறு கூறினார்? இப்படி மாற்றி மாற்றி அவர் கூறினால், அவரிடம் பேசுகிற ஆவியானவரும் சந்தேகத்திற்குரியவராகத்தானே இருக்கமுடியும்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

தான் ஜெபிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் தன் முன்னே முழங்காலில் நின்ற சகோதரியின் மீது ஆவியானவரின் வல்லமை இறங்கியதாக சகோ.சுந்தர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
ஆனால் அடுத்த நாளிலேயே, அந்த சகோதரியின் மீது இறங்கிய ஆவி அசுத்த ஆவியாக இருக்குமோ என சந்தேகப்படுவதாகக் கூறுகிறார்.

சந்தேகத்திற்குரியதான ஒரு விஷயத்தில், இது ஆவியானவரின் வல்லமைதான் என ஆரம்பத்தில் எவ்வாறு கூறினார்? 


சகோதரர் அன்பு அவர்களே என்னை பொறுத்தவை அந்நேரத்தில் அவர்கள்மேல் இறங்கியது பரிசுத்த ஆவியானவர் அபிஷேகம்தான் என்றே   கருதுகிறேன்.  மற்றபடி அவர்களின் கனிகளை வைத்துதான் அது வேறு ஆவியா என்பதை என்னால் உறுதியாக்  தீர்மானிக்க முடியும். (எனவேதான் அடுத்த முறை போகும்போது அது பற்றி  அறிந்து சொல்கிறேன் என்ற கருத்தில் எழுதினேன்.)
 
ஆனால் இந்த காரியம் முடிந்தபிறகு    எனது தம்பியாகிய அந்த சபை பாஸ்டரும் சரி இங்கு நம்மோடு விவாதித்த இந்த பாஸ்டரும் சரி அது அசுத்த ஆவி என்று சொல்கின்றனர்.
 
அவர்களோடு எதித்து  நின்று வாதிட நான் விரும்பவில்லை ஏனெனில் நான் இவ் விஷயத்தில் அதிக அனுபவமற்றவன். நான் ஜெபித்தபோது ஒரு சகோதரி கீழே விழுவதும் இதுதான் முதல் முறை.  மற்றும்  அது ஆவியானவர்தான் என்பதை  நிரூபிக்க திரும்ப அதேபோல் ஒரு சூழ்நிலைக்கு கடந்து சென்று நிரூபிபதர்க்கு  எந்த ஆதாரமும் என்னிடம்இல்லை. மேலும் நான் அபிஷேகம் பெற்றதாக கருதும் அந்த சகோதரியின் வாழ்க்கை நடைமுறை நிலைகளை ஆராயாமல் அவர்கள் பெற்றது ஆவியானவரின் அபிஷேகம்தான் எனபதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது .

எனவே அவர்களது கருத்தையும் ஒதுக்க விரும்பாமல் இரண்டுக்கும் 
இடை நிலையில் நின்றுவிட்டேன்.  

 anbu57 wrote:
////இப்படி மாற்றி மாற்றி அவர் கூறினால், அவரிடம் பேசுகிற ஆவியானவரும் சந்தேகத்திற்குரியவராகத்தானே இருக்கமுடியும்?////

இது நிச்சயம் ஆராய வேண்டிய கருத்துதான்.

 
என்னுடைய கருத்துப்படி எனக்கு போதித்த ஆவியானவர்
என்னை நடத்தும் விதத்தை வைத்தே  நான் அது ஆவியானவரின் வார்த்தைகள் என்பதை அறிந்துகொள்கிறேன்
அவர் என்னை கண்டித்து நடத்தும் விதத்தை கீழ்கண்ட கட்டுரையில் கொடுத்துள்ளேன்.  அதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று ஆராயுங்கள்
 
 
ஒருவேளை அது உண்மையான ஆவியானவராக இல்லாமல் இருந்தாலும், அவர் போதிக்கும் காரியங்களில் யாருக்கும் எந்த தீங்கும் இல்லமால் ஒரு தாழ்மையான நிலையாக உண்மையான உத்தமமான காரியமாக இருக்கும் பட்சத்தில்
அதை தேவன் என்றும் தள்ளிவிடுவது இல்லை என்ற கருத்திலேயே அவர் வார்த்தைகளுக்கு நான் கீழ்படிகிறேன். 
 
ஒருவருக்குள்  இருக்கும் ஆவி எப்படிபட்டது என்பதை அவர்கள் நடத்தை மூலம் மட்டுமே அறியமுடியும். மற்ற காரியங்களாகிய  ஆடுதல் அன்னியபாஷை பேசுதல் கீழே விழுதல் அல்லது மேலே எம்பி குதித்தல் போன்ற வேறு எந்த  காரியத்தை  வைத்தும்  என்னால் தீர்மானிக்க  முடியாது  
 
மற்றபடி நம்முள் இருக்கும் ஆவியானவர் உணமயானவரா? என்பதை அறிவதற்கு வேறு எந்த கருவியோ அல்லது வழி முறைகளோ இருப்பது போல் எனக்கு தெரியவில்லை சகோதரரே!  
 
இருந்தால் சொல்லுங்கள் அந்த வழிமுறையையும்  வைத்து என்னுள்  இருக்கும்  ஆவியானவர் உண்மையானவரா 
என்பதை அராய்ந்து பார்த்துவிடலாம்! 
   

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

ஒருவர் இயெசு கிறிஸ்துவை எற்றுக்கொண்டவுடனேயே  பரிசுத்த ஆவியானவரை பெற்றுவிட்டதாக கருதுவது ஒரு தவறான கருத்து. இந்த கருத்தின் அடிப்படயில் இன்று  இரட்சிப்பை பெற்ற அனேகர் இன்னும் பரிசுத்த ஆவியானவரை வாஞ்சித்து பெற்றுக கொள்ளாமல் இருப்பதை நாம் அறிய‌ முடிகிறது. அதுவே இன்றய கிரிஸ்த்தவ மார்க்கபேதஙகளுக்கு அதிகமதிகமாக வழிசெய்கிறது.  
 
பரிசுத்த ஆவியை பெற்றவர்கள், ஆவியானவரை ஒரு தனி ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை அறிந்து கொள்வதோடு  இறைவனின் அன்பு இருதயத்தில் ஊற்றப்படுவதால்  அதிகமதிகம் இரக்கம் உள்ளவர்களாகவும் அடுத்தவர்களூக்காக பரிதபிப்பவர்களாகவும்   பிறரை குறை கண்டுபிடிக்க தீவிரிக்காமல் அவருக்காக ஜெபிக்க தீவிரம் உடயவர்களாகவும் இருப்பர். இன்னும் சொல்லப் போனால் பிறருக்காக அழும் மனநிலயில் இருப்பார்கள்.     
 
புதிய உடன்ப்டிக்கையின் அடிப்படயில் பரிசுத்த ஜீவியம் செய்வதர்க்கு ஆவியானவர் அபிஷேககம் மிக மிக அவசியம்! பரிசுத்த ஆவியை பெற்ற எவரும் அவரை சார்ந்துதான் தன்னுடய வாழ்க்கையையும் கருததுக்களயும் முன்வைப்பர்.
 
எனவே அன்பானவர்களே இந்த திரியில் முதல் பதிவில் சொல்லப்பட்டுள்ள வழி முறைகளில் எதாவது ஒரு முறையில் பரிசுத்த ஆவியை பெற்று தஙகள் கிரிஸ்த்தவ வாழ்க்கயை மேம்படுத்த வேண்டுகிறேன். ஏற்க்கெனவே ஆவியை பெற்றுக்கொண்ட வர்கள் ஆவியில் அனலாய் இருக்கும்படி வேண்டுகிறேன்.

சென்னை சின்னமலையில் உள்ள புது வாழ்வு A G சபையில் ஒவ்வொரு மாதமும்   மூன்றாம் ஞாயிறு அன்று பரிசுத்த ஆவி அபிஷேகத்துக்கு என்று விசேஷமான குழு பிரார்த்தனை எறேடுக்கப்படும் அங்கு வரும் அநேகர் ஆவியில் அபிஷேகம் பெற்று வித விதமான அனுபவத்துக்குள் கடந்து செல்வதை பார்க்க முடியும் தாங்களும்  அது போல் ஒரு அனுபவத்தோடு அபிஷேகம்  பெற வாஞ்சித்தால் அந்த  கூடுகையை பயன்படுத்திகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்   


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்!
Permalink  
 


ஞானஸ்தானம் பெறுதல் மற்றும் பரிசுத்தாவி அபிஷேக பெறுதல் இரண்டும் இரு வேறுபட்ட  அனுபவங்கள் ஆகும்!  
பரிசுத்த ஆவியை பெறாமல் ஞானஸ்தானம் மட்டும் பெற்றிருக்க முடியும் என்பதற்கு கீழ்கண்ட நடபடிகள் ஆதாரமாக உள்ளது. 
 
அப்போஸ்தலர் 8 :15. இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
 
அப்போஸ்தலர் 8:17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
 
அதுபோல் ஞானஸ்தானம் பெறாமலேயே பரிசுத்த ஆவியை பெறமுடியும் என்பதற்கு கொர்நேலியு வீட்டில் நடந்த கீழ்கண்ட வசனம் ஆதாரமாக உள்ளது.
 
அப்போஸ்தலர் 10:43. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
 
44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்தஆவியானவர் இறங்கினார்.
 
47. அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
 
48. கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
 
நான் ஆவியில் அபிஷேகம் பெற்று நீண்ட நாட்களுக்கு பின்னரே மாம்ச பிரகாரமான ஞானஸ்தானம்  பெற்றுக்கொண்டேன்.    
 
அவரவருக்கு அனுபவம் வேறுபடலாம்! எனவே தேவனின் செயல்பாட்டை "இப்படிதான் நடக்கும்"  என்று அறுதியிட்டு சொல்வது முடியாது எனபது எனது கருத்து.
 


-- Edited by SUNDAR on Thursday 18th of September 2014 03:23:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard