இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தரின் கரத்துக்குள் பயமில்லை!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
கர்த்தரின் கரத்துக்குள் பயமில்லை!
Permalink  
 


உலகப்போர் நடந்த கால கட்டங்களில் "பாம் ஷேல்டர்ஸ்" என்று ஒரு இடம் இருக்கும்.  போர் நேரங்களில் தப்பிக்க நினைப்பவர்கள் எல்லாம் ஓடிபோய் அதனும் தஞ்சம் புகுந்துவிடுவார்கள், பின்னர் அதன் கேட் மூடப்படும். அவ்வாறு கேட் மூடப்பட்டபின்  வெளியில் இருப்பவர்கள் உள்ளே வரமுடியாது. அதுபோல்  பிறகு வெளியில் நடக்கும் எந்த பாதிப்பும்  இந்த ஷெல்டருக்குள் இருப்பவர்களை அணுகமுடியாது.  இந்த ஷெல்டரின் மகிமையை உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வெளியே நின்றுகொண்டு "இந்த  ஷெல்டராவது  என்னை காப்பவதாவது" என்று கருதினால் கடைசியில்  கவலைதான் மிஞ்சும்!
 
அதுபோல் இறைவன் தரும் பாதுகாப்பு மற்றும் அதன் மகிமை  என்பது அவரை
அறிந்தவர்களுக்கு மட்டும்தான்  தெரியும்.  அவரை அறியவேண்டிய விதமாக   அறியாமல் இறைவனின் ஷெல்டருக்கு வெளியில் இருப்பவர்களுக்கோ 
"எப்பொழுது  எங்கு பூகம்பம் வரும், யார் எப்பொழுது மடியப்போகிறார்,  எங்கே  என்ன நடக்கபோகிறது,  யாரால் எப்பொழுது எமாற்றப்படபோகிறோம்" என்கின்ற  எல்லாமே புதிராகவும் புரியாததாகவும் இருக்கும். ஆனால் அவரின் அன்பு  கரத்துக்குள் இருப்பவர்களுக்கு எந்த பயமோ பாதிப்போ இல்லை.
 
கோழி தன குஞ்சுகளை கூவி  அழைத்து  இறகுகளின் அடியில் வைத்து பாதுகாப்பதுபோல  நமது அன்பு இறைவனும் அனைவரையும்  தனது  அன்பு கரத்தின்கீழ் வருமாறு  அனேக அடியார்கள் மூலம்  அழைத்துக்கொண்டே இருக்கிறார்.  


மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

ஆனால்  வரமாட்டேன் என்று  அடம்பிடித்து தான்தோன்றிதனமாக  அலையும் கோழி குஞ்சுகள் பருந்துக்கும் கீரிக்கும்  பலியாவதுபோல,  இறைவனின் அழைப்புக்கு இணங்கி அவரின் கரத்தின்கீழ்  வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள்  மனுஷ கொலைபாதகனாகிய  சாத்தானிடம்  மாட்டி  தப்புவிக்கப்பட முடியாமல்  துன்பபடவேண்டிய  நிலைவரலாம்.  
 
எனவே இறைவனை அறிந்தவர்களுக்கு எந்த கவலையும் எப்பொழுதும் இல்லை.   
 
வாஞ்சையுடன்  வாருங்கள் வருத்தமின்றி வாழுங்கள்!  
  

 

-- Edited by SUNDAR on Friday 12th of March 2010 10:48:10 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//வாஞ்சையுடன் வாருங்கள் வருத்தமின்றி வாழுங்கள்!//

Having GOD in your boat doesn't mean that you will not face any storm!
But it means that no storm can sink your boat!!




__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

timothy_tni wrote:

//வாஞ்சையுடன் வாருங்கள் வருத்தமின்றி வாழுங்கள்!//

Having GOD in your boat doesn't mean that you will not face any storm!
But it means that no storm can sink your boat!!



ஆம் நல்ல சரியான கருத்து!
 
தேவனின் கரத்துக்குள் இருக்கும்போது நாம்  எதை  குறித்தும் பயப்படவேண்டிய  அவசியமில்லையே என்பதுதான் கருத்தே  தவிர, துன்பமே வராது என்றோ,  என்னாளும் மகிழ்ச்சிதான் என்றோ உத்திரவாதம் கொடுக்கமுடியாது.
 
இயேசு பயணம் செய்த படகில்கூட பெருங்காற்று மோதத்தான் செய்தது

மத்தேயு 8:24 அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ (இயேசு) நித்திரையாயிருந்தார்.
      
ஆனால் பயப்படாமல் விசுவாசத்துடன் இருந்தால் அனைத்தையும் ஆண்டவர் துணையால் மேற்கொள்ள முடியும்!      
 
26.  அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

நாம் தேவனின் கரத்துக்குள் வரும்போது அவருடையஆவியின் அபிசேகம்பெற்று
அவருடைய எல்லா கட்டளைக்கும் நாம் கீழ்படிந்து நடப்போம் ஆனால்
நமக்கு இருக்கிற பலன் மற்றும்  எதை குறித்தும் பயமேஇல்லாத ஒரு இருதயம் நமக்குள்இருப்பதை நாம் அறிய முடியும்
 
உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன்
 
நான் ஆண்டவரை ஏற்று கொள்ளும் போது பரிசுத்த ஆவினால்
அபிசேகம் பெற்ற பின் வேலை ஸ்தலத்தில் வெளியே செல்லும் போது 
நடந்து கொண்டே  பிசாசுக்கு சவால் விட்டு இருக்கிறேன்  
பிசாசே உன்னால் என்ன செய்ய முடியும் முடிந்தால் என் பக்கம்  வந்து என்னிடத்தில் மோது என்று கூறுவேன்  மற்றும் வீட்டில் தூங்கும் போது அதிகாலையில்  1 மணி நேரத்தில் மணியாட்டிகாரன்
வருகின்ற சத்தம் கேட்கும் அப்பொழுது  தூங்கும்  நான் அவனுடைய சத்தத்தை கேட்டு எழுந்து அவன் எதிரே  போய் நிற்பேன் ஏனென்றால் அவன் என்னை பார்த்து பயப்பட வேண்டும் என்று அந்த அளவுக்கு
தேவன் மேல் அன்பும் ஒரு வைராக்கியமும்  இருப்பதினால்  
 
I யோவான் 4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
 
நான் சொல்லும் வரும் கருத்து என்னவென்றால் நாம் தேவனுடைய இருதயத்திர்கேற்ப  நடந்தோம்   என்றால்
பயம் பலவீனம் போன்ற எந்த ஒரு ஆவியும் நம்மிடத்தில் இருக்காது வராது  ஏனென்றால் நாம் இருப்பது
 
கர்த்தரின் கரத்துக்குள்


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard