"ஞாயிற்றுக்கிழமையா...தவறாமல் நான் சர்ச்சுக்கு போய் விடுவேன்" என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறோம். ஆனால், சர்ச்சுக்குப் போனதும் பைபிளை வாசிப்பதைக் கேட்கிறீர்களா? பிரசங்கத்தை செவிமடுக்கிறீர்களா? அங்கே, ஏதோ நடந்து கொண்டிருக்க, நீங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறி, சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால், என்ன லாபம்? 1930ல் காந்திஜி தென்ஆப்ரிக்காவில் இருந்தார். சில கிறிஸ்தவ நண்பர்களின் ஆலோசனைப்படி ஞாயிறுதோறும் சூவெஸ்லியன்' சர்ச்சுக்கு சென்றார். அங்கு சென்றதைப் பற்றி அவரே சொல்கிறார், கேளுங்கள். "அங்கு நடந்த எந்தக் காரியங்களும் எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. சபையார் நடந்து கொண்ட முறையில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்ல முடியாது. உலக சிந்தையுள்ளவர்களாகவே இருந்ததைக் காண முடிந்தது. ஆலயத்திற்கு வருவதை ஒரு பொழுதுபோக்காகவும் ஏதோ சடங்காச்சாரத்திற்காகவும் வருகிறவர்கள் போல் தான் தெரிந்தது. அந்த ஆலயத்திலிருந்த வேளையில் அநேக சந்தர்ப்பங்களில் என்னையும் அறியாமல் தூங்கி விடுவேன். தொடர்ந்து, ஆலயத்திற்கு செல்வதால் எந்த பயனுமில்லை என்று நினைத்து அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்," என்கிறார்.
அவர் சொல்லி 77 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது நம் ஆலயம் எப்படி இருக்கிறது? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பைபிளை கற்றறிகிறோமா? பிரசங்கங்களை கேட்கிறோமா? சுய பரிசோதனை செய்து பாருங்கள். "சகல மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்படும் நிருபமாக" என்ற வசனப்படி நாம் மாற வேண்டும். ஒரு நடமாடும் பைபிளாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்
-- Edited by timothy_tni on Thursday 11th of March 2010 07:37:08 PM
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரரே! இந்த நாட்களில் சபைகளில் (எல்லாம் அல்ல) வேத வசனத்திற்கு ஏற்ப வியாக்கியானம் இல்லை. தேவ செய்தி ஆவியின் உந்துதலின் பேரில், நித்திய நோக்கைக் கொண்டதாக இல்லை. சில சபைகள் அதன் தலைவர்கள் பலர் பண நோக்குடன் மக்களும் செவிக்கு இனிதாக இருக்கும் படி பிரசங்கத்தை ஒழுங்கு செய்கிறார்கள். சில அல்ல பல போதகர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள், தங்களுடைய பெருமையையும், மேன்மையையுமே பெரிதாக எண்ணி, சக விசுவாசிகளை துச்சமாக எண்ணி தவறாக பயன் படுத்துகிறார்கள். கிறிஸ்தவம் பின் தங்கி இருக்கலாம். ஆனால் கிறிஸ்து இயேசுவை மெய்யாய் சார்ந்து கொண்ட மெய் ஊழியர்களும், மெய் விசுவாசிகளுமோ அவருக்குள் நன்கு ஜொலிக்கிறார்கள்.
தூங்குகிறவன் தூங்கட்டும்; விழித்து ஊழியம் செய்கிறவன் மெய்யாய் தேவனுக்கு ஊழியம் செய்யட்டும். மனுக்குல ஒரே இரட்சகரும், நியாதிபதியும், தேவாதி தேவனுமான இயேசு கிறிஸ்து இதோ சீக்கிரம் வருகிறேன் என்று கூறிஇருக்கிறார். ஆமென்.