9. பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்
நண்பர்களே மிகாவேல் தேவனுடைய பிரதான தூதன் அப்படி இருந்தும் ஏன் அவர்
சாத்தானை எதிர்க்க வில்லை அவனை கடிந்து கொள்ளவில்லை
அவருக்கு அவனைவிட வல்லமை இல்லையா இல்லை ஏதாவது காரணமா ?
என்னுடைய கருத்து என்னவெனில்:
I சாமுவேல் 24:6 அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர்அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
I சாமுவேல் 24:10 இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால்அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
I சாமுவேல் 26:9 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர்அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.
ஆம் நண்பர்களே ஒரு தேவனுடைய மனிதனான தாவிதுக்கே இப்படி பட்ட குணம் என்றால்
லூசிபர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு பிரதான தூதன் அல்லவா
அந்த காரணத்தினால் தான் மிகாவேல் அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்
என்பது என் கருத்து
தளத்தின் நண்பர்கள் தங்கள் கருத்தை பதிக்கவும்..............
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 12th of March 2010 09:16:24 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)