இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யூதா - 9 வசனத்தின் விளக்கம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
யூதா - 9 வசனத்தின் விளக்கம்
Permalink  
 


யூதா - 1
 
 9. பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான் 
 
நண்பர்களே மிகாவேல் தேவனுடைய பிரதான தூதன்  அப்படி இருந்தும்  ஏன் அவர் 
சாத்தானை எதிர்க்க வில்லை அவனை கடிந்து கொள்ளவில்லை 
 அவருக்கு அவனைவிட வல்லமை இல்லையா இல்லை ஏதாவது காரணமா ? 
 
என்னுடைய கருத்து என்னவெனில்:
 
I சாமுவேல் 24:6 அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

I சாமுவேல் 24:10 இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.

I சாமுவேல் 26:9 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

ஆம் நண்பர்களே ஒரு தேவனுடைய  மனிதனான தாவிதுக்கே இப்படி பட்ட குணம் என்றால்
 
லூசிபர்    கர்த்தரால்    அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு பிரதான தூதன் அல்லவா
அந்த காரணத்தினால் தான் மிகாவேல் அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான் 
 
என்பது என் கருத்து

தளத்தின் நண்பர்கள் தங்கள் கருத்தை பதிக்கவும்..............


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 12th of March 2010 09:16:24 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 

லூசிபர்    கர்த்தரால்    அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு பிரதான தூதன் அல்லவா
அந்த காரணத்தினால் தான் மிகாவேல் அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான் 
 
என்பது என் கருத்து

தளத்தின் நண்பர்கள் தங்கள் கருத்தை பதிக்கவும்..............


சகோதரர் எட்வின் அவர்களே!  சாத்தானை  மட்டுமல்ல  சகமனிதர்கள் மற்றும்  எவரையுமே  தூஷனமாக  குற்றப்படுத்துவது நமக்கு தகுதியல்ல என்றே நான் கருதுகிறேன்.     
 
தீத்து 3:2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.

யாக்கோபு 4:12
  அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?

யாரையும் தூஷிக்க வேண்டாம், யாரையும் குற்றப்படுத்த வேண்டாம்.      
 
 

 



-- Edited by SUNDAR on Saturday 13th of March 2010 03:10:14 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

///  யாரையும் தூஷிக்க வேண்டாம், யாரையும் குற்றப்படுத்த வேண்டாம்////
 
சுந்தர் அவர்கள் சொல்வது போல் தேவன் விரும்புவதும்   அதுதான்  
 
அவர் உண்டாக்கின கையின் கிரியைகள் எல்லாம் வற்றிலும் அவர் அன்பாய் இருக்கிறார்
 
 
யாக்கோபு 3

8. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

10. துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

11. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
 
அன்பு சகோதரரே
 
 நாம் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும்
இயேசுவின் ரத்தத்தை நம் நாவிலும் நம் சரிரத்திலும் பூசி கொண்டே இருக்க வேண்டும்
இப்படி செய்வதினால் நாம் நம்மை எல்லாவற்றிலும் இருந்து காத்து கொள்ள முடியும் என்பது என் கருத்து.....................
 
பிசாசு நடுங்க வைக்கிற இயேசுவின்   ரத்தம்   மகா வல்லமையுள்ளது.......................


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 15th of March 2010 06:15:13 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard