இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓர் ஜெப விண்ணப்பம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஓர் ஜெப விண்ணப்பம்!
Permalink  
 


எனது தகப்பனார் அவர்கள் (வயது சுமார் 70௦)  கடந்த சில தினங்களாக மிகவும் நோய்வாய்ப்பட்டு  மருத்துவமனையில் இருக்கிறார்கள்.   
 
அவர்களுக்காக ஜெபிப்பதர்க்ககவும், தேவையான உதவிகளை செய்வதர்க்க்காகவும் நான் எனது சொந்த ஊருக்கு கடந்துபோகிறேன். ஜெபம் கேட்டு தேவன் அவர்களை  சுகப்படுத்துவார்  என்று கர்த்தருக்குள்  முழு விசுவாசத்துடன்  செல்கிறேன். 
 
கர்த்தர் தாமே  அவர்களுக்கு பூரண சுகம் கொடுக்க  தள சகோதரர்களும் சர்வவல்ல தேவனிடம்  பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
யாக்கோபு 5:16 . நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

கர்த்தர் தமது சித்தபடியே சகலத்தையும்  செய்வாராக! 

  
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

நீதிமான்களுக்கு தேவன் நன்மையானதியே செய்வார்

சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள்..........


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மிகவும் மோசமான நிலையில் இருந்த எனது தகப்பனாரின் உடல்நிலை சுமார் பத்து  நாள் கடும் போராட்டத்திற்கு பிறகு  சிறிது சிறிதாக தேறி வருகிறது.   
 
எனது ஜெபங்களும்,  "வெறும் ஜெபம் மட்டும் போதாது"  என்று  கடிந்துகொண்ட  ஆண்டவர் தெரிவித்த சில  காரியங்களையும் பற்றி விரைவில் பதிவிடுகிறேன்.  
 
மீண்டும் நான் ஓரிரு நாட்கள்  ஊருக்கு கடந்து செல்லவேண்டிய நிலை இருக்கும் என்றே கருதுகிறேன்.  
 
ஜெபித்த அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

ஜெப உதவி என்பது எல்லா நிலையிலும் அத்தியாவசியமானது என்பதை இப்போதாவது புரிந்துக்கொள்ளுங்கள்,சுந்தர்;

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பகுதியில் தங்கள் மகனுக்காகக் கூட நீங்கள் எந்த பதட்டமும் காட்டிக் கொள்ளாததை நினைவுகூறுகிறேன்;

ஜெபம் மட்டுமே ஆண்டவரை செயல்படவும் நம்மை செயலை நோக்கி ஊக்கப்படுத்தவும் உதவுகிறது என்பதையறிய வேண்டுகிறேன்.


__________________

"Praying for your Success"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சில்சாம் எழுதியது
--------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜெபம் மட்டுமே ஆண்டவரை செயல்படவும் நம்மை செயலை நோக்கி ஊக்கப்படுத்தவும் உதவுகிறது என்பதையறிய வேண்டுகிறேன்
 -------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெபத்தில் இரண்டு காரியங்கள் இருக்கின்றது
 
(1) தேவனுக்கு பிரியமான ஜெபம்
(2) தேவனுக்கு அருவருப்பான ஜெபம்
 
தேவனுக்கு பிரியமான ஜெபம்:
 
நாம் தேவனுடைய வார்த்தைக்கும் தேவனுடைய கட்டளைக்கும் கீழ்படிந்து நடந்து கொண்டோம் என்றால்
அப்பொழுது செய்கின்ற ஜெபம் தேவனுக்கு பிரியமான ஜெபமாய் இருக்கும்
நினைபதற்க்கும் ஜெபிப்பதற்கும் மேலாய் செய்திடுவார்  நம் தேவைக்காக ஜெபிக்க தேவை இல்லை  
 
மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்
 
உதாரணம்: தானியேல்
9-23. நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது 
 
தேவனுக்கு அருவருப்பான ஜெபம்:
1 யோவான் - 2 -4. அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
 
இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் சொன்னபடி நடவாமல் தன இஷ்டத்திற்கு நடந்து
செய்கின்றவனுடைய ஜெபம் தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கும்
 
வேதத்தில் கூட

நீதிமொழிகள் 28:9
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது

ஜெபத்தை மட்டும் தேவன் எதிர் பார்ப்பவர் அல்ல

அவரின் வார்த்தயை கைகொண்டு 
அதின் படி   செயன்றவனுடைய விண்ணப்பத்தை மட்டும் எதிர்பார்ப்பார்
 
I பேதுரு 3:12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது..............................................


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 24th of March 2010 09:24:03 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது 
--------------------------------------------------------------------------------------------------- 
எனது ஜெபங்களும்,  "வெறும் ஜெபம் மட்டும் போதாது"  என்று  கடிந்துகொண்ட  ஆண்டவர் தெரிவித்த சில  காரியங்களையும் பற்றி விரைவில் பதிவிடுகிறேன்
---------------------------------------------------------------------------------------------------
விரைவாக பதிக்கவும் தேவன் கடிந்து கொண்ட காரியத்தை
தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்  
 
நீதிமொழிகள் 1:23 என் கடிந்து கொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்...


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 24th of March 2010 09:16:43 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

 
 

 

நாம் தேவனுடைய வார்த்தைக்கும் தேவனுடைய கட்டளைக்கும் கீழ்படிந்து நடந்து கொண்டோம் என்றால்
அப்பொழுது செய்கின்ற ஜெபம் தேவனுக்கு பிரியமான ஜெபமாய் இருக்கும்
 

  
 
சகோதரர் எட்வின் அவர்களின் கருத்தை உறுதிப்படுத்தும் நடந்த உண்மை சம்பவம் இதோ:
 
எனது  தாப்பனாருக்கு  உடல்  நிலை  சரியில்லை என்று நான் மருத்துவமனை சென்றிருந்தபோது சுமார் பத்துநாட்கள் படுத்த படுக்கையாய் இருந்த அவர்கள் ஏறக்குறைய சாகும் நிலையில் இருந்தார்கள்.
 
அவர்களை சென்று பார்த்து அழுகையோடு நின்றிருந்த போது அவர்கள் தலை மாட்டின் பக்கம் "உனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கப்படுவதில்லை" என்ற  சிறிய கிறிஸ்த்தவ கைப்பிரதி ஓன்று கிடந்தது.  அது, ஆண்டவர் என் தந்தைக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்க போவதில்லை என்பதை சொல்வதாகவே என் கண்களுக்கு தெரிந்தது. ஏனெனில் அவர்களுக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஒருமுறை ஹார்ட் அட்டக் வந்து தெய்வாதீனமாக பிழைத்தவர். ஆகினும்  அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டு திரும்பவில்லை.
 
எனது தப்பனார் மிகவும் நேர்மையானவர். ஆனால் எந்த ஒரு கடவுளையும் முழுமையாக நம்பாதவர்கள். நான் மற்றும் பாஸ்டராக இருக்கும் எனது தம்பி இருவரும் ஆண்டவரைப்பற்றி எவ்வளவோ எடுத்து சொல்லியும் கொஞ்சமும் மனமாற்றம் அடையாதவர். அதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் வேலை செய்யும்  CSI சபைதான் என்று சொன்னால் மிகையாகாது. 
 
அத சபையில் உள்ள முக்கிய மேபர்கள் செய்யும் அனேக அயோக்கியத்தனத்தை பார்த்து பார்த்து கிறிஸ்த்தவம் என்றாலே ஏமாற்று வேலை என்ற எண்ணத்தோடு ஊளியக்கரர்களை எல்லாம் ஒரு ஏமாற்று பேர்வளியாகவே கருதி தேவையற்ற வார்த்தைகளை அடிக்கடி பேசுவார்கள்.
 
அன்றோ! எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் மரண தருவாயில் உடலை கூட அசைக்க பெலம் இல்லாமல் சாவின் விளிம்பில் கிடந்தார்கள். எல்லா  டாக்டர்களும் 70 வயதாகி விட்டது இனி  ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டனர்.
 
அன்று இரவு மிகுந்த அழுகையோடு ஆண்டவரிடம் மன்ற்றடினேன் "எனது  தகப்பனாருக்கு இன்னும் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் ஆண்டவரே, நாங்கள் எப்படியாவது அவர்களை உம்முடைய கரத்துக்குள் கொண்டுவந்துவிடுகிறோம் என்று கதறி ஜெபித்தோம்.
 
மறுநாள் காலையில் வேறு நல்ல மருத்துவமனைக்கு மாற்றி கொண்டுவந்ததோடு ஆண்டவரிடம் மன்றாட்டிலேயே தொடர்ந்து இருந்தோம். "கிட்னி, கல்லீரல், இருதயம், மூளை என்று எல்லாம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லியிருந்த நிலையில். எல்லாவற்றையும் தனி தனியே டெஸ்ட் செய்தபோது எங்குமே பாதிப்பு எதுவும் ஏற்ப்படவில்லை என்றே ரிப்போர்ட் வந்தது ஆகினும்  அடுத்து ஐந்து நாட்களுக்க் எந்த முன்னேற்றமும் இல்லை.
 
இறுதியாக அன்று  ஞாயிறு (21/௦03/10 ) இரவு சுமார் இரண்டு மணிக்கு எவ்வளவோ ஜெபித்தும்  எவ்வித  முன்னேற்றமும் இல்லாமல் படுத்திருந்த என் தகப்பனை பார்த்து எனக்கு ஆண்டவர்   மேல் மிகுந்த கோபம் வந்துவிட்டது.
 
"என்ன ஆண்டவரே? என்னிடம் யாராவது வந்து ஒரு உதவி என்று கெட்டு  அது என்னால் செய்ய  முடிந்தது என்றால்,  அவர்களை சிறிது கூட கெஞ்ச விடாமல் உடனடியாக செய்துவிடுவேன். மனிதனாகிய நானே இப்படி இருக்கும்போது மிகுந்த இரக்கம் உள்ள தேவனாகிய நீர்,  இப்படி எவ்வளவு  ஜெபம் செய்தும் பாராமுகமாய்  இருக்கிறீரே!  இனியும் நான் உம்மிடம்  ஜெபிக்க போவது இல்லை. காப்பாற்றினால்   காப்பாற்றும் இல்லையேல் கொன்றுபோடும்" என்று மிகுந்த வெறுப்பில் பேசிவிட்டு  ஜெபத்தை நிறுத்தி விட்டேன்.
 
அப்பொழுது ஆண்டவர் "நீ  திரும்ப திரும்ப என்னை நோக்கி  முறையிடுவதென்ன? நீ இவ்விடத்துக்கு வந்து இத்தனைநாள் வேதனை அனுபவிக்கிறாய் என்றால் உன்மீது நிச்சயம் குறை உண்டு,  உன் கிரியைகளை திரும்பபார்"  என்று சொன்னதோடு கீழ்க்கண்ட வசனத்தையும் எனக்கு நினைப்பூட்டினார்
 
யோசுவா 7:10 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?
12. ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.

உன் கிரியைகளை திரும்பி பார்த்து சரி செய், இல்லையேல் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது  என்ற வார்த்தையால்  என்னிடம் பேசினார்.
 
நானும் என்னிடம் என்ன தவறு இருக்கிறது என்று தீவிரமாக  யோசித்து பார்த்தால் எதுவும் எனக்கு புலப்படவில்லை.  எனவே ஆண்டவரிடம்  "ஆண்டவரே என் மனதுக்கு தெரிந்து உமது வார்த்தைகள் எதையும் நான் துணித்து மீறி நடந்ததாக எனக்கு தெரியவில்லையே. நான் எங்கு தவறியிருக்கிறேன் எனக்கு சொன்னால்தானே தெரியும், என் தவறை எனக்கு உணர்த்துங்கள் என்று மற்றாடி ஜெபித்தேன்.     
 
தொடரும்.....




-- Edited by SUNDAR on Saturday 10th of April 2010 10:42:41 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 


is981-074
அப்பொழுது ஆண்டவர் "இந்த துன்பம் ஆரம்பித்த நாளில் இருந்து  நடந்த செயல்களை மட்டும் திரும்பிபார்" என்று கட்டளயிட்டார்.
 
நான் அதை திரும்பி யோசிக்க துவங்கிய உடனேயே எனது தவறு உடனே   புரிந்துவிட்டது.
 
அதாவது கணக்கெடுப்பு  வருட முடிவாகிய இந்த மார்ச் முடிவில் வருமான
வரிக்காக சில சரிகட்டு  காரியங்களை செய்யும்படி நான் நிர்பந்திக்கப்பட்டேன். 
 
பலமுறை நான் மறுத்தும் அவர்கள் கேள்வி மேல் கேள்விகளை கேடடு என்னை அறியாமலேயே பல வழி முறைகளை என்னிடமிருந்து அறிந்துகொண்டனர்.
 
அதில் நான் செய்த தவறுகளை தேவன் என்னிடம் சுட்டிகாட்டி கடிந்துகொண்டார். உன் வழிகளை திருத்து இல்லையெனில் நீ துன்பம் அடைவது நிச்சயம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.   
 
மறுநாளே ஊர்க்கு புறப்பட்டு வந்த நான் எனது டைரக்டரிடம் "தயவு செய்து இதுபோன்ற காரியங்களில் என்னை தலையிட வைக்க வேண்டாம். என்னிடம் எந்த குறுக்கு வழி பாதையும் கேட்காதீர்கள்  இல்லையென்றால் நான் வேலையே வேண்டுமானாலும் ராஜினாமா  செய்ய  தயாராக இருக்கிறேன் என்பது போல  திட்டமாக சொல்லி விட்டேன்"
 
ஆகினும் நான் முன்னர் கொடுத்த அறிவுரையின்படி சில காரியங்களை மட்டும் செய்துவிட்டு முடித்துக்கொண்டேன் எனது துன்பமும் உடனடியாக ஒய்ந்தது.
 
ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பம்வர காரணம் அவனுடைய பாவமேயன்றி வேறெதுவும் இல்லை என்பது நான் அறிந்து கொண்ட உண்மை.
 
தேவனின் வார்த்தைகள்படி  வாழும் ஒருவனை எந்த துன்பமும் நெருங்காது.
 
 பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்
 
 உபாகமம் 5:10  என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

 II நாளாகமம் 19:11  உத்தமனுக்குக் கர்த்தர் துணை 


-- Edited by SUNDAR on Monday 12th of April 2010 10:34:46 AM

-- Edited by SUNDAR on Monday 12th of April 2010 10:35:20 AM

-- Edited by SUNDAR on Monday 12th of April 2010 10:48:42 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது.
---------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பம்வர காரணம் அவனுடைய பாவமேயன்றி வேறெதுவும் இல்லை என்பது நான் அறிந்து கொண்ட உண்மை.

தேவனின் வார்த்தைகள்படி வாழும் ஒருவனை எந்த துன்பமும் நெருங்காது.
---------------------------------------------------------------------------------------------------------
ஆம் சகோதரரே இந்த கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன்.

ஒருவேளை ஒரு மனிதன் துன்பத்தை அனுபவிகிறதற்கான காரணம் சரியாக தெரியாமல் இருக்கலாம் ஆனால் ஒரு நாளும் தேவன் யாரையும் காரணம் இல்லாமல் யாருக்கும் எதையும் செய்கிறதில்லை என்றே நினைக்கிறேன்.

மீகா 2:7
யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard