40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இதை பற்றி இன்றைய உபதேசங்கள்
யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்
இயேசு இப்படி சொல்கிறாரே பின்பு எப்படி அவன் பரலோகத்துக்கு போக முடியும் என்று சொல்கின்றனர்
மற்றும் சில போதகர்கள் தேவன் அவனுக்கு சொன்னது என்ன வென்றால் இன்றைக்கு நீ என்னுடன் பரதேசியில் இருப்பாய்
அதாவது இன்றைக்கு மட்டும் இயேசு அவனை பரதேசியில் வைத்து கொண்டு நாளைக்கு பாதாளத்துக்கு அனுப்பி விடுவாராம் இந்த வசனத்தின் விளக்கம் குழப்பமாகவே உள்ளது அவன் பரலோகத்திற்கு போய் இருப்பானாஅல்லது அன்றைக்கு மட்டும் தேவன் அவனை பரதேசியில் வைத்து கொண்டு பிறகு பாதாளத்தில் அனுப்பி விடுவாரா
இந்த விளக்கம் தெரிந்த தல நண்பர்களும் மற்றும் பார்வையிடும் நண்பர்களும் தங்கள் கருத்தை பதித்தால்
தெரிந்து கொள்வதற்கு பிரோஜனமாய் இருக்கும் .....................
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 15th of March 2010 10:25:55 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சகோதரர் எட்வின் குறிப்பிட்டுள்ள இவ்வசனத்தின் அடிப்படையில் எனது இரண்டு விதமான புரிதல்:
1. தேவனால் எதையும் எப்பொழுதும் செய்யமுடியும்! எந்த வசனமோ அல்லது யாருடைய வார்த்தையோ அல்லது எந்த ஒன்றுமோ அவரை/அவரது செயல்களை கட்டுபடுத்த முடியாது.
வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் தேவன் தான்சொன்ன பல்வேறு வசனங்களை பல சூழ்நிலைகளை தனது இஸ்டப்படி மாற்றி அனேக காரியங்களை சிலருக்கு நன்மையும் சிலருக்கு மாற்றியும் செய்திருப்பதை அறியமுடியும்.
உதாரணம் 1:
உபாகமம் 23:3அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
என்று திட்டவட்டமாக கர்த்தர் தெரிவித்திருந்தும், மோவாபிய இனத்தின் குனசாலி ஸ்திரியாகிய ரூத்தின் கீழ்படிதலிநிமித்தம் தனது கோத்திரத்துக்குள் அனுமதித்ததோடு அவள் பெயர் இயேசுவின் வம்ச அட்டவணையிலும் வரும்படி அருள் செய்திருக்கிறார்
ரூத்
11. ; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
மோசேயின் சகோதரனாகிய ஆரோன் கர்த்தருக்கு ஆசாரியஊழியம் செய்யும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, எடுக்கப்பட்டார்கள். நித்ய ஆசாரிய பட்டம் அவர்களிடமே இருந்தது
யாத்திராகமம் 29:8பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.
ஆகினும் சாமுவேலின் நாட்களில் ஏலியின் குமாரர்கள் மோசமாக நடந்துகொண்ட போது தேவன் தனது வார்த்தைகளை மாற்றி
I சாமுவேல் 2:30ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதுபோல் தேவன் தனது வார்த்தைகளை மாற்றி செயல்கள் செய்த பல சம்பவங்கள் வேதத்தில் உண்டு. அவர் தேவன்! அவர் விரும்பியதை செய்ய அவருக்கு வல்லமை உண்டு. அவரிடம் யாரும் ஏனென்று கேட்க முடியாது.
போன்ற வசனங்களின் அடிப்படையில் எந்தவித முன் அறிவித்தலுமின்றி சிலுவையில் தொங்கிய கள்வனின் கடைசி நேர கீழ்படிதல் மற்றும் மன நிலைகளின் அடிப்படையில் தேவன் ஒரு உன்னதமான இடத்தை அவனுக்கு கொடுத்தார் என்று எடுத்து கொள்ளலாம்.
மத்தேயு 20:15என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
அவருடையதை அவரது இஸ்டபடி கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு. ஆகினும் அது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியல்ல நமக்கு சொல்லப்பட்டவை களுக்கு நாம் நிச்சயம் கீழ்படிந்தே ஆகவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
இதற்க்கு இன்னொரு கோணத்தில் வேறொரு விளக்கமும் உண்டு.
-- Edited by SUNDAR on Wednesday 24th of March 2010 08:40:59 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மத்தேயு 20:15என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
அவருடையதை அவரது இஸ்டபடி கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு. ஆகினும் அது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியல்ல நமக்கு சொல்லப்பட்டவை களுக்கு நாம் நிச்சயம் கீழ்படிந்தே ஆகவேண்டும் என்றே நான் கருதுகிறேன்
13. அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
14. உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
15. என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
கர்த்தருடைய வார்த்தையை கேட்டு கை கொண்டு நடந்தால் நித்ய ஜீவனை தருவேன் என்று
நமக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணி இருக்கிறார்
அதே போல் ஒரு நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ அவன் அவரை ஆண்டவர் என்றும்
அவருக்கு ஒரு ராஜ்ஜியம் உண்டு என்றும் விசுவாசித்தான் அந்த நேரத்திலே அறிக்கை செய்தான்
ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
கள்ளன் : நாமோ நியாயத்தின் படி தண்டிக்க படுகின்றோம் என்று அந்த கள்ளன் தன பாவத்தை அறிக்கை செய்தான் வேதம் சொல்கின்றது
I யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
அவருடையதை அவரது இஸ்டபடி கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு.....................
நிச்சயமாய் அந்த கள்ளன் என்று சொல்ல பட்டவன் பரலோகத்தில் தான் இருப்பான்
அவர் உண்டாக்கின கையின் கிரியைகள் எல்லாவற்றில் மேலும் அவர் அன்பாய் இருக்கிறார்
பாவிகள் மனம் திருந்துவார்களா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார் நமக்காய் ஜீவனை கொடுத்த தந்தை................
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 24th of March 2010 10:36:48 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)