பிற தேவ ஊழியர்களின் செயல்பாடுகள் பற்றி நமது தளத்தில் விவாதிக்கவோ, குறைகூறவோ வேண்டாம் என்று சகோதரர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
நமது தளத்தில் விவாதங்களில் பங்குபெருபவர்களின் குறை நிறைகளை வேண்டுமானால் விவாதிக்கலாம். அனால் அதற்கே எதிர்ப்பும் விளக்கம் தர விரும்பாத நிலையும் இருக்கும்போது பால் தினகனரனை பற்றி இங்கு விவாதிப்பதால் பயனேதும் இருக்கபோவதாக எனக்கு தெரியவில்லை.
என்னை பொறுத்தவரை அவர் ஒரு மிகப்பெரிய தேவ ஊழியர். அனேக ஆத்துமாக்களை ஆண்டவருக்கும் வழி நடத்த தேவன் பயன்படுத்தும் ஒரு பாத்திரம் என்றே நான் கருதுகிறேன். அவரை நியாயம் தீர்க்கபோகிறவர் தேவன் ஒருவரே! அபிஷேகம் பெற்ற அவரைப்பற்றி வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை
மற்றபடி அவர் மகத்தான தீர்க்கதரிசியா என்பது பற்றி அறிந்துகொள்ளகூட நான் ஆசைப்படவில்லை. ஏனெனில் கிறிஸ்த்துவுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் மேன்மையானவர்களே.
அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஆண்டவர் ஆவியில் எனக்கு உணர்த்தி யிருந்தாலும், காலம் வரும்முன் அதை பலர் முன்னிலையில் பகிர்ந்துகொள்ள நான் விரும்பவில்லை
கிறிஸ்த்தவ சமுதாயத்தில் உள்ள ஆயர்/பேராயர்/பிஷப்/ ரெவரண்ட போன்ற தேவையற்ற பல பட்டங்கள் இருப்பதுபோல "இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி" என்பதுவும் அவருக்கு கிடைத்த ஒரு பட்டமாக எடுத்துகோளோம்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நண்பர் சுந்தர் அவர்களின் அச்சம் தேவையற்றதும் சத்தியத்துக்கெதிரானதுமாகும்;
தேவையற்றது என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் சத்தியத்துக்கு எதிரானது என்ற வார்த்தை இங்கு தேவையில்லை என்றே நான் கருதுகிறேன்.
கொரிந்தியர் 4:5கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்.
என்ற வசனத்தின் அடிப்படையில், பிற தேவ ஊழியர்களின் எந்த ஒரு காரியத்தை குறித்தும் தீர்ப்பு செய்தல் நமக்கு அடுத்ததல்ல.
அவர் இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசிதானா, இல்லையா என்பதை ஆண்டவர் ஒருவரே அறிவார். அதைகுறித்து தீர்ப்பு செய்ய நமக்கு அனுமதியில்லை என்றே நான் கருதுகிறேன்.