என்ற பதிவில் அறிந்தோம். ஆண்டவராகிய இயேசுவும் "ஒருவன் என்மேல் அன்பாயிருந்தால் எனது வார்த்தைகளை கைகொள்வான்" என்கிறார்.
இப்பொழுது இயேசுவின் கட்டளைகளை எவ்வாறு கைகொள்ளுவது என்பதுபற்றி இங்கு ஆராயலாம்.
ஆண்டவராகிய இயேசு தனது ஊழிய நாட்களில் அனேக நித்யஜீவ வசனங்களை பேசி சென்றுள்ளார். முக்கியமாக மலைபிரசங்க செய்திகள் மனிதனின் ஆவிக்குரிய ஜீவியத்துக்கு மிகுந்த பயனுள்ளவைகள். நம்மால் முடிந்தவரை அவரின் எல்லா கற்பனைகளையும் கைகொண்டு நடக்க நாம் நிச்சயம் பிரயாசப்பட வேண்டும் என்பது எல்லா மனிதர்கள் மீதும் விழுந்த கடமையாக இருக்கிறது!
ஆகினும் ஆண்டவராகிய இயேசு தனது மொத்த செய்திகளின் சாராம்சத்தையும் சுருக்கி, இரண்டே கற்பனையாக கொடுத்து சென்றுள்ளார்.
அவைகள்:
மாற்கு 12:30
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை
மாற்கு 12:31
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். இந்த இரண்டு கட்டளைகளும் இரண்டு ஏற்பாடுகளாம்!
முதல் கட்டளை பழைய மாமிசத்துக்குரிய ஏற்ப்படாகவும். ("தேவனாகிய கர்த்தர்" என்ற பதம் பழைய ஏற்ப்பாடுக்கே உரிய ஓன்று) ஆனால் அதுதான் பிரதான கற்பனையாக கூறபடுகிறது. இரண்டாம் கட்டளை புதிய ஆவிக்குறிய கிருபையின் ஏற்பாடாகவும் உள்ளது. இது பிரதான கற்பனைக்கு ஒப்பானதாக கூறப்படுகிறது
நாம் தற்போது புதியஏற்பாடு ஆவிக்குரிய காலத்தில் இருப்பதாலும் ஆண்டவராகியே இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருப்பதாலும், நாம் முன்னேறி செல்ல முதலில் இரண்டாம் கட்டளையை முழுமையாக நிறைவேற்றினால்தான் முதல் கட்டளைக்குள் செல்லமுடியும். இல்லையெனில் நாம் முதல் பிரதான கட்டளைக்குள் செல்லவே முடியாது.
எனவே முதலில் நாம் செய்யவேண்டியது.
உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
என்ற கட்டளையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்
இந்த வார்த்தையை நாம் மிகசுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் இந்த கட்டளையின் சரியான பொருள் என்னவென்பதை ஆராய்ந்தால் இதைவிட மேலான கற்பப்னை ஒன்றுமில்லை என்பதை ஐயமற ஏற்க்கமுடியும்!
"உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக" "உன்னை நீ நேசிப்பது போல பிறரை நேசிப்பாயாக" என்பதற்கு உண்மை அருத்தம் என்ன?
அதன் அர்த்தம் மிக உயர்த்து! அதை முழுமையாக விளக்க முடியாவிட்டாலும் அதை சுருக்கி சொன்னால்: "
ஒரு மிகப்பெரிய கஷ்டத்தில், அல்லது பிரச்சனையில், அல்லது துன்பத்தில், அல்லது பண நெருக்கடியில், அல்லது நோயில், அல்லது தேவையில் இருக்கும் ஒருவர் நம்மிடம் ஒரு உதவி கேட்டு வரும் போது, அதே மோசமான நிலையில் நாம் இருப்பதுபோல அஸ்யூம் செய்து, நாம் பிறரிடம் என்ன எதிர்பாப்போம் அல்லது எப்படி நடந்து கொள்வோம் அல்லது எதிர் தரப்பினர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று விரும்புவோமோ அதையே நாம் அவர்களுக்கு செய்வது ஆகும்.
தன்னை தானே நேசிக்ககாவன் இந்த உலகத்தில் வாழ முடியாது. எல்லோரும் தான் நன்றாக வாழவேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும். எந்த ஒரு துன்பமோ துயரமோ தனக்கோ தன் மனைவிக்கோ தனது பிள்ளைகளுக்கோ வந்துவிடக்கூடாது என்றுதான் நினைப்பார்கள் அதற்காகத்தான் அவர்கள் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைக்கிறான். அதில் தவறில்லை
ஆனால்
நாம் நம்மையும் நமது குடும்பத்தையும் நேசிப்பதுபோல அடுத்தவரையும் அவர்களது பிள்ளையையும் நேசிக்கிறோமா? நம்மை போலத்தானே அவர்களும் என்று அவர்களின் துன்பத்தை நமது துன்பம்போல எடுத்துக்கொண்டு ஓடிசென்று உதவி செய்கிறோமா. நண்பனை மட்டுமல்ல பகைவனையும் அதுபோல நேசிக்க வேண்டும். அவன் உங்களுக்கு எத்தனை முறை கெடுதல் செய்திருந்தாலும் சரி, அவனையும் தன்னை போல நேசிக்க வேண்டும். தன்னை நெசிப்பவர்களையே நேசிப்பதால் பலன் இல்லை என இயேசு சொல்லியுள்ளார்.
உதாரணம் 1 :
நமக்கு பழக்கம் இல்லாத பக்கத்து வீட்டுக்காரரின் 5 மாத குழந்த்தை இரவு 11 மணிக்கு இடைவிடாமல் அழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம், அந்தஅழுகுரல் உங்களுக்கு கேட்கிறது என்றால், தன் குழந்தை அழுதால் நாம் எப்படி துடிப்போமோ அதுபோல் ஓடிசென்று நம்மால் செய்ய முடிந்த உதவியை (பண உதவி, கடைக்கு போவது, தன்னிடம் உள்ள ஒரு பொருளை கொடுத்து உதவுவது போன்றவை) செய்வது ஆகும்.
உதாரணம் 2
உங்கள் குடும்பத்து பழைய எதிரி ஓரிடத்தில் அடிபட்டு கிடக்கிறான் அல்லது ஏதோ ஒரு உதவி கிடைக்காமல் ஓரிடத்தில் தவித்துக் கொண்டு இருக்கிறான், அது நமக்கு அறிய வரும்போது நம்மை அவனுடைய நிலையில் வைத்து பாவித்து அவனுக்கு தேவையானதை மனதார செய்தல் வேண்டும்.
உதாரணம் 3
ஒருவர் ஒரு பாலத்தின் ஏற்றத்தில் சுமையுள்ள வண்டிய தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு செல்வதை பார்க்கிறோம். அவ்வண்டி தள்ளும் நிலையில் நம்மை வைத்து நாம் கற்பனை செய்து அவருக்கு தேவையான உதவியை செய்யவேண்டும்.
நமக்கு கீழ் வேலை பார்ப்பவன், நமது அடுத்த வீட்டில் உள்ள பிள்ளைகள், நாம் உபயோகிக்கும் பிறருடைய பொருட்கள், நாம் பேசும் பிறரை பற்றிய பேச்சுகள், பண விஷயத்தில் நாம் பிறரிடம் எதிர்பார்க்கும் காரியங்கள்
இப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை அந்த இடத்தில் நிறுத்தி நாம் இப்படி இருந்தால் என்ன எதிர்பார்ப்போம் என்று யோசித்து அதை பிறருக்கு செய்வதுவே இக்கட்டளை
இவ்வாறு யோசித்து செய்தால் ஒருவர் மிக சுலபமாக பிறரை எவ்விதத்திலும் குற்றப்படுதவோ அல்லது தண்டனை கொடுக்கவோ விரும்பமாட்டார். எனவேதான் இயேசு "உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள்மேல் கல்லெறியகடவன்" என்று கூறினார். நம்மைப்போல நாம் பிறரை நேசித்தால் யாரையும் அடிக்கவோ குற்றப்படுத்தவோ துணிய மாட்டோம்.
இன்னும் இக்கட்டளையில் சுயநீதியை வெளிச்சம்போட்டு காண்பிக்கும் மேன்மையான விஷயம் ஓன்று இருக்கிறது அதை அடுத்து பார்க்கலாம்.
-- Edited by SUNDAR on Tuesday 25th of March 2014 08:08:44 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இரண்டாவதாக இக்கட்டளையில் அடங்கியுள்ள மிக முக்கியமான காரியம் என்னவெனில், ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு விசுவாசிக்கும் நித்தியஜீவனை சுதந்தரித்து பரலோக ராஜ்ஜியம் போய் சேரவேண்டும் என்ற வாஞ்சை இருப்பது இயல்பு. அதாவது நமது ஆத்துமாவை எப்படியாவது நித்யவாழ்வுக்கு தகுதியுள்ளதாக்குவதர்க்கு அப்பியாசப்படுகிறோம். மேலும் தேவனை விட்டு பிரிந்து தவறான இடம் போய்விடக்கூடாது என்றும் வாஞ்சிக்கிறோம்.
இதே வாஞ்சை, உலகில் உள்ள எல்லா பிறரின் மீதும் நமக்கு இருக்க வேண்டும். எவனொருவனாகிலும் கெட்டு நித்யஜீவனை இழப்பதை நாம் ஒருகாலும் விரும்ப கூடாது.
அதாவது எல்லோரும் தன்னைப்போலவே நித்யஜீவனை சுதந்தரிக்க நாம் வாஞ்சை உள்ளவராக இருக்கவேண்டும். அவன் துன்மார்க்கனாக, கெட்டவனாக, விரோதியாக இருந்தால்கூட அவனும் எப்படியாவது ஆண்டவரின் ராஜ்யத்தின் சுதந்தரிக்க வேண்டும் என்ற வாஞ்சை நமக்கு இருக்கவேண்டும் அதுவே தன்னை நேசிப்பது போல பிறரையும் நேசிப்பதற்கு சரியான இலக்கணம் .
சங்கீதம் 9:17துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
என்று வசனம் சொல்கிறதே! துன்மார்க்கன் அழிவதுதானே நியாயம் என்று நாம் வாதிடலாம்.
ஆனால் நாமும் ஒரு காலத்தில் துன்மார்க்கனாக இருந்துதான் இன்று ஆண்டவரின் கிருபையால் இந்நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.
இரண்டாவது "அவர் கர்த்தர்" அவர் பரிசுத்தர் அவர் தனக்கு இஸ்டமானத்தை செய்ய அவருக்கு வல்லமைஉண்டு ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளையோ "உன்னை நேசிப்பதுபோல பிறரை நேசிப்பதுதான்" நாம் அதை கைகொள்ளத்தான் கடமைப் பட்டிருக்கிறோமேயன்றி , தேவனின் நியாயதீர்ப்பு வசனங்களை கையில் எடுத்து, பிறரை நியாயம்தீர்க்க அல்ல! எனவே எந்நிலையிலும் தன்னைப்போல ஒவ்வொருவரையும் நேசித்து அவர்களும் நம்மைப்போல நித்யஜீவனை சுதந்தரித்துகோள்ள வேண்டும் என்ற வாஞ்சை அதற்க்கான கரிசனையுள்ள ஜெபம் இருந்தால்தான் மட்டுமே அது உன்னை நீ நேசிப்பதுபோல் பிறரையும் நேசிப்பாயாக என்ற கட்டளையின்படி சரியாக நடத்தல் ஆகும்.
அடுத்ததாக தேவன் தீமை செய்பவருக்கும் துன்மார்க்கருக்கும் கடினமான தண்டனைகளை நியமித்திருந்தாலும் அவரின் மன விருப்பம் என்னவென்பதை கீழ்க்கண்ட வசனம் மூலம் அறியலாம்
எசேக்கியேல் 18:23துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
இவ்வாறு தேவனுக்கு ஒருவரும் கெட்டுபோய்விட கூடாது என்ற வாஞ்சை இருக்கும் பட்சத்தில் நாம் அதிமேதாவியாக அதிக நீதிமானாக நம்மை கருதிக் கொண்டு துன்மார்க்கன் அழிந்தே ஆகவேண்டும் என்று ஒற்றை காலில் நிற்ப்பது, நமது சுயநீதியின் அடிப்படையில் பிறைரை நியாயம் தீர்ப்பதே குறிக்கும். தேவ நீதிக்கு முன்னாள் நமது நீதி ஒன்றுக்கும் உதவாது என்பதை கருத்தில்கொண்டு நம்மைபோலவே பிறரையும் நித்யஜீவனுக்கு தகுதியுள்ளவர்களாக மாற்றும்படி தேவனிடம் மாற்றுவதே "உன்னை நீ நேசிப்பதுபோல பிறரையும் நேசி" என்ற வாக்கியத்துக்கு சரியான விளக்கம் ஆகும்.
சாத்தானை ஜெயம்கொள்வது என்பது சுலபமான காரியம் அல்ல!
இந்த விளக்கங்கள்படி ஒருவர் சரியாக நடக்காதவரை இந்த இரண்டாம் கட்டளையை தாண்டி முதல் பிரதான கட்டளைக்கும் வரவே முடியாது! அவர் ஜெயம்கொள்வதும் முடியாது!
மனிதனின் சுயபெலத்தால் அது கூடவே கூடாது! ஆனால் தேவனின் ஆவி பூரணமாக கிரியை செய்தால் ஒருவரால் அது நிச்சயம் சாத்தியமே!
(இந்த கட்டளையை ஒரு விசுவாசி முழுமையாக கைகொள்ள முடியவில்லை என்றாலும், பிறரது குற்றங்களை மனதார மன்னித்து அனுதினம் முயற்ச்சிக்க வேண்டும். அப்பொழுது தேவன் அவரது குற்றங்களை மன்னித்து இயேசு ஆயத்தபடுத்திய்ருக்கும் பரலோக ராஜ்யத்துக்கு தகுதிபடுத்துவார்)
-- Edited by SUNDAR on Thursday 15th of April 2010 06:44:28 PM
-- Edited by SUNDAR on Tuesday 25th of March 2014 08:09:28 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்று உலகத்தில் உள்ள அனேக விசுவாசிகள் இந்த கஷ்டமான இயேசுவின் இரண்டாம் கட்டளையை கடந்து மேலே வர முடியாமல்/ வர விரும்பாமல் ஜெயம்கொள்ள முடியாத நிலையிலேயே தேங்கி கிடக்கின்றனர்.
ஒருவர் ஆண்டவரை அறிந்துகொண்டு கிறிஸ்த்தவராக இருப்பது மேன்மையான காரியம்தான். ஆகினும் கிறிஸ்த்துவை பற்றிய சுவிசேஷம் இடத்திலும் அறிவிக்கப் படுவதன் முக்கிய நோக்கம் இரண்டு:
1. ஒருவரை இயேசுவை ஏற்றுக்கொள்வதன் மூலம் நித்ய வாழ்வை சுதந்தரிக்கவைத்து நரகம் போவதிலிருந்து தப்பிக்க வைப்பது
2. யாராகிலும் ஒருவர் இயேசுவின் கற்பனைகளை கைகொண்டு மரணத்தை ஜெயித்து ஜெயம்கொள்வது
என்ற இரண்டு காரியங்களுகாகவும்தான் என்பதை அறியவேண்டும்.
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
வெளி 2:7ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
"இயேசுவின் வார்த்தைகளை சரியாக கைகொண்டு ஜெயம் கொள்பவனுக்கு தேவனுடய பரதீசின் மத்தியில் இருக்கும் ஆதாம் இழந்துபோன ஜீவவிருட்ச கனி கிடைக்கும். அதன் மூலம் அவன் மரணத்தை ஜெயித்து ஜெயம்கொள்ள முடியும்" என்பதே வேதாகமம் போதிக்கும் அடிப்படை முக்கிய செய்தி.
எனவே இயேசுவை பிரசிங்கிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் இயேசுவை அறிந்தவர்கள் அவரது கற்பனைகளின்படி வாழ்ந்து ஜெயம்கொள்வது.
ஒருவன் இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு நடந்து மரணத்தை ஜெயித்து (சாத்தானை) ஜெயம்கொள்ளாதவரை சாத்தானை கட்டவும் முடியாது, இந்த உலகுக்கு முடிவும் வராது என்பதை அறிய வேண்டும்.
எனவே மற்றெல்லா காரியங்களை விட ஆண்டவரின் கட்டளைகளை கைகொள்வதில் மிகுந்த அக்கறையோடு சிரத்தையோடு செயல்படுங்கள் அதில் யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ண வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்
-- Edited by SUNDAR on Saturday 17th of April 2010 11:44:00 AM
-- Edited by SUNDAR on Tuesday 25th of March 2014 08:09:55 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உன்னை நீ நேசிப்பதுபோல பிறரை எப்படி நேசிப்பது சொல்வதற்கு சுலபமாக தெரியும் இந்த கற்பனையின் உண்மை தன்மை என்ன?
நாம் இரட்சிக்கபட்டு தேவ பாதுகாப்பில் வந்துவிட்டோம். இன்னும் இயேசுவை ஏற்றுக்கொண்டிருக்காத எத்தனையோ கோடி ஜனங்கள் சிரியவர்கள் பெரியவர்கள் உலகில் இருக்கிறார்களே. அவர்களையும் நம்மைப்போல் நேசித்து அவர்களும் நம்மோடு கூட இரட்சிப்பை சுதந்தரிக்க் வேண்டும் என்று ஒரு நாளாவது அவர்களுக்காக கதறி அழுதிருப்போமா?
அல்லது இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நரகம்தான் கிடைக்கும். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதற்க்கு நான் என்ன செய்வது, நான் தப்பித்துக் கொண்டேன் என்று ஓரமாக ஒதுங்குகிரோமா?
அண்டை நாடாகிய இலங்கையில் நம் ஜனங்கள் சிங்கள வெறியர்களால் வேட்டையாடி சின்னபின்னமாக்கபட்டு எரிக்கபட்டு புதைக்கபட்டபோது நம்மில் எத்தனைபேர் அவர்களை நம்மைப் போல் நேசித்து கண்ணீர் விட்டு கதறி அழுதோம்? அவர்கள் குழந்தைகள் குடும்பங்கள் சூரையாடபட்டபோது அந்த குழந்தைகளை நம் குழந்தைகளாக பாவித்து அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி துடிப்போமோ அப்படி துடித்து பரிதபித்தோமா?
அல்லது எதோ யுத்தம் நடக்கிறது யாரோ சாகிறார்கள் என்று டிவியில் வேடிக்கை பார்த்துகொண்டு, அவரவருக்கு வந்தது அவரவருக்கு என்று அக்கரையின்றி இருந்தோமா?
இந்த உலகத்தில் அன்றாடம் நடக்கும் அகோர விபத்துக்கள் கொலை கொள்ளைகள், அகால மரணங்கள், வன்கொடுமைகள், பசி பட்டினிகள், கைகால் கண் இழந்தொர்கள், லாகப்பில் அடித்தே அநியாயமாக கொல்லப்படும் மனித உயிர்கள், அரசாங்க மருத்துவ மனையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அரை உயிராய் அல்லாடும் ஆத்துமாக்கள், நம் தேசத்தில் நடக்கும் தேவனுக்கு விரோதமான அருவருப்புகள் இவற்றை கண்டு எந்தனை முறை அழுது பெருமூச்சு விட்டிருப்போம். அவர்கள் பட்ட வேதனை நாம் பட்டால் எப்படி துடிப்போம் என்று சற்றேனும் எண்ணி பார்த்ததுண்டா? இவர்களை எல்லாம் எப்படி விடுவிப்பது அதற்க்கு எதாவது வழியுண்டா என்று ஏங்கி அழுததுண்டா?
இல்லை எங்கோ யாருக்கோ எதோ நடக்கிறது எனக்கென்ன? என் பிழைப்பை நான் பார்த்துகொள்கிறேன் என்று விட்டேந்தியாய் இருக்கிறோமா?
நம்மை, நமது பிள்ளைகளை, நம்முடையவர்களை நாம் எப்படி நேசிக்கிறோம்? அதுபோல்வே மற்றவர்களையும் நேசிக்க வாஞ்சிக்க வேண்டும்.
தன்னைப்போல பிறரை நேசித்த நமதாண்டவர் எருசலேமை பார்த்து கண்ணீர் விட்டழுதார். மரித்த லாசருக்காக மனமிரங்கிகண்ணீர் விட்டார். அதே இரக்கம் நம்மில் இருக்கிறதா? சற்றே யோசிப்போம்!
தேசத்தில் நடந்த அருவருப்புகளிநிமித்தம் எதிர்த்து நின்று சண்டை போட்டவர்களை அல்ல, பெருமூச்சு விட்டழுதவர்கள் நெற்றியிலே தேவன் அடையாளம் போட சொன்னார்.
எசேக்கியேல் 9:4கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
மற்றவர்களை எல்லாம் சங்காரம் பண்ணும்படியே கட்டளையிட்டார்.
எசேக்கியேல் 9:6 சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள்
எனவே அன்பானவர்களே, நமை நேசிப்பது போல பிறரை நேசிப்போம். அதைவிட மேலான கற்பனை எதுவும் இல்லை.
மாற்கு 12:31உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே;இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)