இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரட்சிக்கப்பட்ட யாவர்கும் மீட்பு நிச்சயமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இரட்சிக்கப்பட்ட யாவர்கும் மீட்பு நிச்சயமா?
Permalink  
 


இந்த தலைப்பு மிக முக்கியமான ஒரு தலைப்பாக நான் கருதுகிறேன்.
 
ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுகொண்ட எல்லோருக்குமே தேவனுடயபிள்ளைகள் ஆகும்படி அதிகாரம் கொடுக்கப்பட்டது என்று வசனம் சொல்கிறது.
 
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
 
இவ்வாறு ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசித்து அறிக்கை பண்ணும் எல்லோருக்கும்மே நித்யஜீவன் வாக்குபண்ணப்பட்டுள்ளது.   
 
யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை
 
இயேசுவை  நாம் தேவனின் குமாரன் என்று விசுவாசித்தால் போதும், அதன்மூலம் நித்யஜீவனை பெறவே சுவிஷேஷமே எழுதப்பட்டது என்பதை கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
 
யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது
 
ஒருவர் நிதய ஜீவனை பெற  செய்யவேண்டிய குறைந்தபட்ச கட்டளை:
   
ரோமர் 10:10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
 
இவ்வாறு கிறிஸ்த்துவின் விசுவாசத்துக்குள் வந்து கிருபையின் கீழ் இருக்கும் எவரையும் பாவம் மேற்கொள்ள முடியாது என்றும் வசனம் சொல்கிறது  
 
ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால், பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது
 
பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது என்றால் கிறிஸ்த்துவின் விசுவாசத்துக்குள் இருக்கும் வரை நமக்கு நித்யஜீவன் நிச்சயம் உண்டு என்றே பொருள்படுகிறது. ஏனெனில் அவரது இரத்தத்தால் நாம் கிரயத்துக்கு கொள்ளபட்டு இருக்கிறோம்
அந்த கிரயமாகிய அவரது  இரத்தத்துக்கு மேலான பாவம் ஒன்றும் இல்லை.  
 
மேலும் எந்த காரியமுமே நம்மை கிறிஸ்த்துவின் அன்பைவிட்டு பிரிக்க முடியாது என்றும் வசனம் சொல்கிறது:
 
ரோமர் 8:36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
ரோமர் 8:39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
 
மேலும் ஆண்டவராகிய இயேசு, பிதா தனக்கு தந்தவர்கள் ஒருவரையும் இழந்து போகாமல் கடைசி நாளில் எழுப்புவேன் என்று கூறுகிறார்  
 
யோவான் 6:39 அவர்  எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது
 
எனவே  வசனத்தின்  அடிப்படையில்  ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து
ஏற்றுக்கொண்டு அறிக்கை செய்த ஒருவருக்கு நித்ய ஜீவன் நிச்சயம் உண்டு என்பது தெளிவாகிறது.
 
மாற்கு 13:13 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

என்ற வசனத்தின் பொருள், முடிவு பரியந்தமும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை காத்துகொள்பவன் இரட்சிக்கப்படுவான் என்பதே! கிறிஸ்த்துவின்  மேலுள்ள  விசுவாசத்தை விட்டு விலகி போகுதல் அல்லது கிறிஸ்த்துவை மறுதலித்தல் மட்டுமே ஒருவனை நித்யஜீவனுக்கு அபாத்திரராக்கும் என்று நான் கருதுகிறேன். 
 
II தீமோத்தேயு 2:12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
எபிரெயர் 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.

இப்படி விசுவாசத்திலிருந்து விலகி மறுதலித்து போனவர்களை மீண்டும் புதுப்பித்தல் முடியாத காரியம் என்று வேதம் சொல்வதால் ஆண்டவராகிய இயேசுவின் இரட்சிப்பின் கரத்தின் கீழ் வந்த ஒருவர் அவரை மறுதலித்து விசுவாசத்திலிருந்து  விலகி போகாதவரை அவர் நித்ய ஜீவனுக்கு பாத்திராக இருக்கிறார் என்றும் வேறு எந்த பாவமோ அல்லது தீமையோ கூட ஆண்டவரின் கரத்தில் இருந்து அவரை பிரிக்கமுடியாது என்பதயும் அறியமுடிகிறது.
 
இது சம்பதமான  கருத்துக்களை தள சகோதரர்கள் பதிவிடவும்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 17
Date:
SALVATION AND FINAL REDEMPTION
Permalink  
 


உண்மை இரட்சிப்பு (கிருபை + விசுவாசம்) இயேசு கிறிஸ்துவை சார்ந்த ஓன்று. அந்த மெய்யான இரட்சிப்பு இறுதியில் நம்மை மீட்பிற்கு நடத்தும். இரட்சிப்பு என்பது ஒரு பெரிய தலைப்பு. முதலாவது இரட்சிப்பு நம்மை பாவத்தின் விளைவாகிய நரகம், நித்திய அக்கினி அல்லது அக்கினி கடல் என்பவைகளிளிருந்து காத்து விடுகிறது. இரண்டாவதாக நிகழ கால அல்லது நடை முறை இரட்சிப்பு என்பது அப்படி இரட்சிக்க பட்ட ஒருவனை "பாவத்தின் வல்லமையிலிருந்து / பிடியிலிருந்து"நம்மை இரட்சிக்கிறது. மூன்றாவதாகவும் / கடைசியாகவும் இயேசு கிறிஸ்துவின் வருகையில் அவருக்குள் மரித்த எல்லாரையும் "பாவத்தின் பிரசன்னதிளிருந்தே" இரட்சிக்கிறது. இதைத்தான் "மீட்பு" என்கிறோம். பின்பு முடிவிலா நித்திய தேவ ராஜ்யத்தில் பாவம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசிர்வாதம் ...................

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
இரட்சிக்கப்பட்ட யாவர்கும் மீட்பு நிச்சயமா?
Permalink  
 


இது கொஞ்சம் யோசிக்க கூடிய விசயம்தான் ஏனென்றால் இரட்சிக்கப்பட்டால் மட்டும் போதும் மீட்பு நிச்சயம் என்று சொன்னால்

மாற்கு 13:13 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

என்ற வசனத்தின்படி இரட்சிக்கப்பட்டால் மட்டும் போதாது முடிவுபரியந்தம் நிலைநிற்க வேண்டும் என்று வேதம் போதிக்கிறது.

ஆனால் இந்த வசனம் குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று போதிக்கிறது.

யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை.

சுந்தர் எழுதியது
==========================================
மேலும் எந்த காரியமுமே நம்மை கிறிஸ்த்துவின் அன்பைவிட்டு பிரிக்க முடியாது என்றும் வசனம் சொல்கிறது:

ரோமர் 8:36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

ரோமர் 8:39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்
==========================================

மேலே உள்ள வார்த்தைகளை எழுதிய பவுல் இந்த வார்த்தைகளையும் கூறியுள்ளார்.

ரோமர் 7 அதிகாரம் 23.

ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

24. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?


இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு மனுஷன் உயிரோடிருக்கும் நாள் வரைக்கும் அவன் நிச்சயமற்ற வாழ்க்கையைத்தான் வாழ்கிறான்.

ஒவ்வொரு நாளும் அவனுக்கு என்ன காரியங்கள் நடக்க போகிறது என்று தெரியாத படியால் எந்த ஒரு காரியத்தையும் நம்மால் நிச்சயமாய் கூற முடியாது என்றே நான் கருதுகிறேன்.

சுந்தர சொன்னது போல தேவன் ஒரு வசனத்தை கொண்டு அவனுக்கு மீட்பை கட்டளையிடவும் முடியும் அல்லது ஒரு வசனத்தை கொண்டு அவனை நியாயம் தீர்க்கவும் முடியும் என்றே நானும் கருதுகிறேன்.

 சிலுவையில் இருந்த கள்ளன் இரட்சிக்கப்பட்டனா இல்லையோ தெரியாது ஆனால் அவனுக்கு கடைசி வேளையிலே அவனுக்கு இரங்கி மீட்பை கட்டளை இட்டிருக்கிறாரே...!

மத்தேயு24 அதிகாரம்

13. முடிவுபரியந்தம்நிலைநிற்பவனேஇரட்சிக்கப்படுவான்.
 



-- Edited by Stephen on Tuesday 4th of May 2010 06:01:17 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Stephen wrote:

 மத்தேயு24 அதிகாரம்

13. முடிவுபரியந்தம்நிலைநிற்பவனேஇரட்சிக்கப்படுவான்.
 




 சகோதரர் ஸ்டீபன் அவர்களே,

 
முடிவுபரியந்தம் நிலை நிற்ப்பவன்  என்றால், முடிவு பரியந்தம் எதில் நிலை நிற்ப்பவன்?  
 
நற்கிரியைகளிலோ   அல்லது  ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்வதிலோ இல்லை என்றே  நான் கருதுகிறேன்.   
 
எந்த சூழ்நிலையிலும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடாமல் அல்லது இயேசுவை மறுதலிக்காமல் முடிவுமட்டும் காத்துகொள்பவனைதான் இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று நான் கருதுகிறேன்.
 
அத்தோடு ஆண்டவரே நம்மை முடிவு பரியந்தம் ஸ்திரப்படுத்துவார் என்றும் வசனம் சொல்வதால், இரட்சிப்பை பற்ற ஒருவரை  அவ்வளவு சீக்கிரம் ஆண்டவர் கைவிட்டுவிடமாட்டார்  என்பது எனது கருத்து.   
 
I கொரிந்தியர் 1:௮  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.

முடிவின் மொத்த செயல்பாடும் ஆண்டவரின் கரத்திலேயே உள்ளது!  ஒருவனை நிலைநிருத்துவது அவரால் மட்டுமே ஆகும்.  




__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Stephen wrote:

 சுந்தர சொன்னது போல தேவன் ஒரு வசனத்தை கொண்டு அவனுக்கு மீட்பை கட்டளையிடவும் முடியும் அல்லது ஒரு வசனத்தை கொண்டு அவனை நியாயம் தீர்க்கவும் முடியும் என்றே நானும் கருதுகிறேன்.
 


ஆம்!  இதுதான் நான் மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரு காரியம்!  

தேவனிடம் யாரும் பெருமை பாராட்ட முடியாது!  நான்  இக்காரியங்களை எல்லாம் செய்திருக்கிறேன் என்னை நீர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று யாரும் அவரிடம் போய் வாதிடமுடியாது. அவர் வேறொரு வசனத்தின் மூலம் நம்மை குற்றவாளியாக்கிவிடமுடியும்.
 
இறுதி முடிவு அவர் கையில்தான் உள்ளது!

  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

/..................இறுதி முடிவு அவர் கையில்தான் உள்ளது! ................/

இதை நானும் ஒத்து கொள்கிறேன்.

/...............நற்கிரியைகளிலோ அல்லது ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்வதிலோ இல்லை என்றே நான் கருதுகிறேன். ................./

தாங்கள் மேலே கூறியுள்ள காரியத்தை பார்த்தல் ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் ஒரு மனுசனால் மீட்பை அடையபோவதிலை என்று கருதி தன் இஸ்டம் வாழ தோனுமல்லவா.!

அவனவுடைய கிரியைகுத்தக்க பலன் என்னோடு கூட வருகிறது என்று கர்த்தர் சொல்லி இருக்கிராறே ..!

மனுஷனுடைய கிரியைகளினால் அவன் மீட்பை பெறமுடியாது என்றுதான் நானும் கருதுகிறேன். ஆனால் அதற்காக மனிதன் செய்ய வேண்டிய சில காரியங்களை நிச்சயம் அவன் செய்ய வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்.

எனக்கு தெரிந்த எத்தனையோ நண்பர்கள் ரட்சிக்கப்பட்டு பின்னாட்களில் ஆண்டவருடைய வார்த்தைகளின்படி நடக்காமல் பின்வாங்கி போய் தங்களுக்கு மிகவும் மோசமான நிலையை வருவித்து கொண்டார்கள்.

என்ன இருந்தாலும் கர்தர்தானே மீட்பை கட்டளை இடுகிறவர் நான் எதற்காக எல்லாவற்றிலும் ஒடுக்கி வாழவேண்டும் என்று என்ன தோன்னுமல்லவா.!

கர்தர்தானே முடிவு எடுக்க போகிறார், கர்தர்தானே எல்லாவற்றையும் செய்ய போகிறார் என்று எண்ணி
தாலந்தை பெற்றவன் மூடி வைததுபோல் வைக்காமல் ஒவ்வொருவரும் தனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையிலே கர்த்தருடைய துணைகொண்டு தன் ரட்சிப்பை காத்து விசுவாசத்தை விடாமல் ஒவ்வொருநாளும் தன் இரட்சிப்பு நிறைவேற பரிசுத்த ஆவின் துணையோடு அவருடைய முகத்தை நோக்கி பார்க்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறன்.

தேவன் நமக்கு கொடுத்த பெலத்திலே நமக்கு நியமித்த வாழ்கையின் ஓட்டதிலே நாம் நிச்சயம் நம்முடைய கடமையை செய்தே ஆகவேண்டும் அதற்கும் மேல் அவருடைய சித்தம் அதை யாராலும் தடுக்க முடியாது.

அவர் தன்னுடைய விருப்பம்போல யாருக்கு வேண்டுமானாலும் இரக்கம் செய்யலாம் கிருபைபாராட்டலாம் அது அவருடையது.

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Stephen wrote:

மனுஷனுடைய கிரியைகளினால் அவன் மீட்பை பெறமுடியாது என்றுதான் நானும் கருதுகிறேன். ஆனால் அதற்காக மனிதன் செய்ய வேண்டிய சில காரியங்களை நிச்சயம் அவன் செய்ய வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்.

 


தங்களின் கருத்து சரியானதே!

 
இன்று அனேக புறமதத்தினர் எது நடந்தாலும்  "எல்லாம் அவன் செயல்" மற்றும் "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்"  என்பது போன்ற வார்த்தைகளை சொல்லிக்கொண்டு தங்கள் விருப்பபடி வாழ்வதை பார்க்கமுடியும்.
 
இறுதி முடிவு இறைவனின் கையில் இருப்பதால் தங்கள் விருப்பம் போல வாழ்ந்து கொண்டு எல்லோருக்கும் ஒரு முடிவுதான் என்ற எண்ணத்தில் இருப்பது எவ்விதத்திலும் சரியான செயல் அல்ல!
 
நான் சொல்லவந்ததன் கருத்து,  
 
லூக்கா 17:10நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

நாம் என்னதான் தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடந்தாலும் தேவன் முன்னாள் பெருமை பாராட்டாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். அவருடைய வார்த்தைகளை கைகொள்ளும்படி வசனம் அனேக இடங்களில் வலியுறுத்துவதால் அவைகளை கைகொண்டு நடந்தபின்பு, நான் அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்ற நிலையிலேயே  இருக்கவேண்டும்.
 
மற்றபடி  அவரவர்  செய்கையின் பலன் அவரவர் தலையின்மேல்  நிச்சயம் திருப்பும் எந்த நிலையிலும் அவரவர் கிரியைகளுக்கு தகுந்த பிரதிபலன் நிச்சயம் உண்டு. 
 
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard