ஒருமுறை நானும் என் நண்பனும் சாலையில் நடந்து போய்கொண்டு இருக்கும் போது மிகவும் எழ்மை நிலையில் கிழிந்த வஸ்திரங்களுடன் வந்த ஒருவர் எங்களிடம் சாப்பிட பணம் வேண்டும் என்று கேட்டார். அவர் நிலயை பார்த்து மனமிரங்கிய நான், சற்றும் யோசிக்காமல் பணம் எடுத்து கொடுத்துவிட்டேன். எனது நண்பனுக்கோ என்மேல் கடுமையான கோபம்."நீ என்ன? இப்படி கொஞ்சமும் யோசிக்காமல் பணம் கொடுக்கிறாய் அவன் பின்னால் போய்பார், மது கடையில் போய் குடித்துவிட்டு ஆட்டம் போட போகிறான்" என்று என்னை கடிந்துகொண்டான்.
அவனுக்கு என்னுடைய பதில் என்னவென்றால்
அவன் மது குடிக்கட்டும் அல்லது என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும். ஆனால் என்னிடம் வந்து கேட்டபோது "பசி சாப்பிட பணம் வேண்டும்" என்றுதான் கேட்டான். நானும் அவனுடைய நிலையை கண்டு இரங்கி அவன் பசியாரவேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் பணம் கொடுத்தேன். எனது நோக்கம் மற்றும் எண்ணம் எல்லாமே சரியான ஓன்று. ஒருவேளை அவன் நோக்கம் தவறாக இருக்குமாயின் அதற்குரிய தண்டனையை அவன் பெறுவான். ஆனால் அதே நேரத்தில் ஒருவேளை, அவன் உண்மையான தாங்கமுடியாது பசியோடு என்னிடம் வந்து கேட்டிருக்க, நான் அவன் ஏமாற்றுகிறான் எனகருதி அவனுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றால், அது எனக்கு பெரிய பாவமாக ஆகிவிடுமல்லவா?
பத்துபேரிடம் நாம் ஏமாறலாம் அனால் ஒரே ஒரு உண்மை பசியாளியை துன்பபட விடகூடாது என்றேன்.
இந்த கடைசி காலங்களில் மனிதர்கள் எல்லோரையும் இரக்கமில்லாதவர்களாக, சுபாவ அன்பில்லாதவர்களாக, கீழ்படியாதவர்களாக, பொருளாசை மற்றும் பேராசைகாரர்களாகவும் செயல்படுகின்றனர். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதை வேதாகமும் நமக்கு முன்னறிவித்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே!
நாம் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்ய உரிமை இருக்கிறது, ஆகினும் நமகாகவோ நமது குடும்பத்துக்காகவோ நாம் செய்யும் எந்த நன்மையும் சுயநலத்தின் அடிப்படையில் செய்ததது அதனால் நித்தியத்துக்கு எந்த பயனும் இல்லை. அன்னியருக்கு செய்த உதவிகளே நித்தியத்தில் நமக்கு பலனை கொடுக்கும். முக்கியமாக நாம் செய்த உதவியை திரும்பி செய்ய இயலாதவர்களுக்கு வயது முதிந்தவர்களுக்கு விதவைகளுக்கு எந்த கைமாறும் கருதாமல் செய்த உதவிகளே மிகுந்த பலனை தரக்கூடியது.
மத்தேயு 25:40மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
பிறருக்காக ஜெபிபதிலும் பிறருக்காக கொடுப்பதிலும் உதவி செய்வதிலும் வரும் மகிழ்ச்சியே உண்மையான மகிழ்ச்சி.
அடித்த வீட்டில் வறுமையில் வாடும் ஒருவருக்கோ அல்லது அடுத்த நேர உணவுக்கு வழியில்லாமல் திண்டாடும் ஒருவருக்கு உதவிசெய்ய முற்ப்படாமலோ கோவிலில் சென்று கொட்டுவதில் பயனேதும்இல்லை. ஊழியத்துக்கு கொடுப்பதோடு விட்டுவிடாமல் முடிந்த அளவு பிறருக்கு நன்மை செய்வதில் உற்ச்சாகம் கொள்வோம்.
இன்றைய உலகம் நன்மை செய்யும் பறந்த மனதுடைய மனிதர்களை மனமடிவாக்கி மீண்டும் அதேபோல பிறருக்கு உதவி செய்யவிடாமல் ஒரு வெறுப்பு நிலையை உருவாக்கி வருகிறது. காரணம் இரண்டு முறை நன்மைகளை செய்து அதனால் சில தீமையான விளைவுகளை சந்திக்கும் போது நல்லவருக்கு கூட நன்மை செய்ய தயக்கம் ஏற்ப்படுகிறது. ஆனால நாம் செய்த நனமைக்கான பலன் நமக்கு திரும்ப கிடைப்பதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது.
அன்பு தனிதுபோயிருக்கும் இந்த கால கட்டத்தில் ஒரு மாயையான தோற்றத்தை ஏற்ப்படுத்தி பிசாசாசன்வன் மக்களை திசை திருப்பி நன்மை செய்ய விரும்பு வோரையும் வெறுப்புக்கும் சலிப்புக்கும் உள்ளாக்குகிறான். எனவே சாத்தானின் செயல்களை அறிந்திருக்கும் நாம் அவனின் எந்த ஒரு தந்திரத்துக்கும் உட்படாமல் தேவனுக்கு மிகவும் பிரியமான பலியாகிய நன்மை செய்வதிலும் பிறருக்கு உதவுவதிலும் ஒருநாளும் சொர்ந்து போகாமல் இருப்போமாக!