இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊழியர்களை/விசுவாசிகளை தாக்கி விமர்சித்தல்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஊழியர்களை/விசுவாசிகளை தாக்கி விமர்சித்தல்!
Permalink  
 


நவீன நாட்களில்  தேவ ஊழியர்களை மட்டம்தட்டி தாக்கி  பேசுவது என்பது எங்கும் சகஜமாகிவிட்ட ஒரு செயலாக இருக்கிறது.விசுவாசி அவிசுவாசி என்று பாகுபாடின்றி அனைவருக்கும்  பிடித்த ஒரு விஷயம், தேவ ஊழியர்களை குறை சொல்லுவதுதான்.  ஒரு  பத்து ரூபாய்  காணிக்கைகூட போடவிரும்பாத, ஆண்டவருக்காக ஒரு சிறு கல்லை கூட நகர்த்த விருபாத ஒரு சாதாரண விசுவாசி கூட  தனது  சபை பாஸ்டரை பற்றி  பலவாறு  விமர்சித்து  பேசுவதை தவிர்ப்பது இல்லை.
 
இவ்வாறு மற்ற விசுவாசிகளையும்  ஊழியர்ககளை தாக்கி பேசுவது சரியான ஒரு செயலா?
 
விசுவாசிகளாகிய நாமெல்லாம் அற்பமான இந்த உலகவாழ்க்கைகாக யாரோ மனிதர்களிடம் கையைகட்டி வேலைபார்க்கிறோம் ஆனால் ஊழியர்களோ தேவாதி தேவனின் நேரடி வேலைக்காரர்களாக இருக்கின்றனர். அவர்களை குற்றப்படுத்தி பேசினால் தேவன் நிச்சயம் பொறுத்துக்கொள்ளமாட்டார் என்றே நான் கருதுகிறேன்.
 
ரோமர் 14:4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே
 
தேவனுடைய ஊழியக்காரர்களை நியாயம்தீர்க்க யாருக்கும் இங்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
 
அதற்காக ஊளியகாரர்கள் எல்லோரும் சரியாக நடக்கின்றனர் என்றுநான் சொல்ல வரவில்லை. ஊழியக்காரராக இருந்தாலும் விசுவாசியாக இருந்தாலும் எல்லோரும் குறையுள்ள மனிதர்களே.  எல்லோரிடமும் குறை இருக்கத்தான் செய்யும் எனவே ஊழியர்களை மட்டும் விசேஷமாக குற்றப்படுத்த நினைப்பது எவ்விதத்திலும் சரியானது அல்ல.  தேவஅன்பு முழுவதும் ஊற்றப்படாத நிலையில் இருப்பவர்களே இவ்வாறு குறைகூறி திரிகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.  ஏனெனில் குறைகூறி திரிவதும் குற்றம்சாட்டுவதும் சாத்தானின் வேலையின்றி வேறல்ல. ஆண்டவராகிய இயேசு என்னதான் பரிசுத்தவானாக நடந்துகொண்டாலும் அவரையும் குற்றம்சாட்ட பரிசேயர்/சதுறேயர் என்னும் பொறாமை நிறைந்த கூட்டம் இருக்கத்தான் செய்தது.        
 
ஒருவர தவறான காரியங்களை செய்யும்போது கடிந்துகொண்டு திருத்தவேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது அதற்காக ஒருவர் தன சகோதரனின் நிர்வாணத்தை   வெளிச்சம் போட்டு ஊருக்கெல்லாம்  காண்பித்தால் கானானுக்கு ஏற்ப்பட்ட  கதிதான் அவருக்கும்  ஏற்ப்படும் என்பதை கருத்தில் கொள்க.
 
தவறு செய்யும் சகோதரர்களை/ தேவ ஊழியர்களை  திருத்த வேதம் சில வழி முறைகள் நமக்கு போதித்துள்ளது
 
மத்தேயு 18:15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ் செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய்.

16. அவன் செவிகொடாமற்போனால், இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே
 சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி,
இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக் கொண்டு போ.

17.
அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

இதில் மூன்று காரியங்கள் வலியுறுத்தப்படுகின்றன ஓன்று தனியாக போய் தவறு செய்பவர்களிடம் குற்றத்தை எடுத்து சொல்வது.
அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால்  இரண்டு மூன்று சாட்சிகளை கூட அழைத்துக்கொண்டுபோய் அவரின் குற்றங்களை எடுத்து சொல்வது அதையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர் குற்றத்தை சபைக்கு தெரியப்படுத்துவது   அதற்க்கு அவர் செவிகொடுக்கவில்லை என்றால் அவரை யாரோ ஒரு வேண்டாதவனாக நினைத்து விட்டுவிடவேண்டியதுதான். 
 
ஊருக்கெல்லாம் தெரியும்படி பொதுவான ஒரு பத்திரிக்கைகளில்  குறிப்பிட்ட தேவ ஊழியரின் குற்றங்களை வெளிச்சம்போட்டு  காண்பிபத்து அதை படிக்கிற  பிறமதத்தினருக்கு கிரிஸ்த்தவத்தின் மேல் தீராத வெறுப்புதான் வரும்.
 
பொதுவான கட்டுரைகள் மூலம் ஒரு தேவே ஊழியன் எவ்வாறு இருக்கவேண்டும் எதெல்லாம் செய்யகூடாது என்று எழுதலாம்.  மற்றபடி  அடுத்தவருக்கு வெளிச்சம் போட்டு காண்பிபதைவிட உண்மையான அன்பு  அவர்மேல் இருக்குமாயின் அவருக்காக ஜெபியுங்கள்.

I யோவான் 5:16
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன்
 
இததான் தேவன் நம்மிடம்  எதிர்பாப்பது.
 
சிலர் கீழ்க்கண்ட வசனத்தை சுட்டிகாட்டி பாவம் செய்தவரை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொல்வதில் தப்பில்லை என்று கருதுகின்றனர்.
 
I தீமோத்தேயு 5:20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
  
புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஆவியில் நடத்தபடுகின்றனர். ஆவியில் நடத்த்படுகிரவர்களை பாவம் மேற்கொள்ள முடியாது என்று வேதம் சொல்கிறது. ஆவிக்குரிய மனிதன் ஒருவன் எவ்விதத்தில் தேவனால் நடத்தப் படுகிறான் என்பது தேவனுக்கும்  அவருக்கும் மட்டுமே தெரியும். நமது பார்வைக்கு தவறுபோலதெரியும் பலகாரியங்கள் தேவனே அனுமதித்து அவர் செய்திருக்கலாம் நாம் அவரை குற்றம் கண்டுபிடிப்பதால் தேவனின் செய்கையே குற்றமாக தீர்க்கிறோம் என்பதை கருத்தில் கொள்க.  
 
ஆண்டவராகியே இயேசு பரிசேயர் சதுரேயரை பகிரங்கமாக கடிந்து கொண்டார். காரணம் அவர் பாவமில்ல பரிசுத்தர். அனால் நாம் அப்படியல்ல நம்மிடம் ஆழ்ந்து நோக்கினால் ஆயிரம் குறைகள் இருக்கும் அந்த குறைகளை அதாவது நமது கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துபோட முதலில் வழிபார்க்க வேண்டும் பிறகு அடுத்தவர் கண்ணில் உள்ள துரும்பை எடுத்துபோடலாம்.   
 
இறுதியாக:
 
மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை
மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்
.
 
மேலேசொன்ன வசனம்போல் பிறரின் தப்பிதங்களை மனதாரமன்னியாமல் ஊருக்கு
வெளிச்சம்போட்டு காண்பித்தது நமது இச்சை தீர்த்துகொண்டால் உங்கள் குற்றங்களையும் தேவன் ஒருபோதும்
மன்னிக்கவேமாட்டார்    என்பதை
வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.  
 
இது எனது பொதுவான கருத்து. ஒரு சிலருக்கு தேவன் தனிப்பட்ட அபிஷேகத்தை கொடுத்து, தாவீது ராஜாவையே கண்டித்த நாத்தனைபோல், அடுத்தவரை கண்டிக்கும் அதிகாரம் கொடுத்திருந்தால்  அவர்களின் செயல்பாட்டை குற்றம் கூறுவது முறையாகாது.  ஆகினும் நாத்தான் நேரடியாக தாவீதுவிடம் போய் அவனது பாவத்தை சொன்னானேயன்றி பப்ளிக்கில் மேடைபோட்டு பேசவில்லை என்பதை கருத்தில் கொள்க. எனவே ஒருவர்மீது  குற்றம்  கண்டுபிடித்தால் சிரமத்தை பார்க்காமல் நேரடியாக அவரிடம் சென்று பேசுங்கள். இவ்வாறு நேரடியாக பேசும்    போது, எதிர் தரப்பினரின் நியாயம் என்னவென்பதை அறிய வாய்ப்பிருக்கிறது அவருடய உண்மை  நிலை என்னவென்றுதெரியாமல் நாமாக குறைகூறிக்கொண்டு இருந்தால் நாம் நிச்சயம் குற்றவாளியாக தீர்க்கப்ப்டுவோம் என்றேகருதுகிறேன்.     

 

-- Edited by SUNDAR on Monday 10th of May 2010 07:50:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: ஊழியர்களை/விசுவாசிகளை தாக்கி விமர்சித்தல்!
Permalink  
 


SUNDAR wrote:
நம்மிடம் ஆழ்ந்து நோக்கினால் ஆயிரம் குறைகள் இருக்கும் அந்த குறைகளை அதாவது நமது கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துபோட முதலில் வழிபார்க்க வேண்டும் பிறகு அடுத்தவர் கண்ணில் உள்ள துரும்பை எடுத்துபோடலாம்.   

 இறுதியாக:
 
மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை
மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்
.
 



இயேசுவின்  நாட்களில் விபச்சாரம் என்ற மோசமான
பாவம் செய்த ஸ்திரி கையும் களவுமாக பிடிக்கப்பட்ட போது, அநேகர் கூடிநின்று  நியாயப்பிரமாண வார்த்தையின் அடிப்படையில் அவளை  கல்லெறிந்து கொல்வதற்கு தயாராக இருந்தனர்.    
 
அந்த பரமயோக்கிய கூட்டத்தாரை பார்த்து நமதாணடவர்:
 
யோவான் 8:7  உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்
 
என்று சொன்னார். அதைகேட்ட அனைவரும் தங்கள் இருதயத்தில் குத்தப்பட்டு கலைந்து போய்விட்டார்கள்.
 
இன்றும் கூட சக விசுவாசிகளையும் தேவ  ஊழியரகளையும் குற்றம் சாட்டுவதிலும் நியாயம் தீர்ப்பதிலும் அதிகமாய்  ஆர்வம் காட்டும்  நீதிவான்களை பார்த்தும் ஆண்டவர் இதைதான் சொல்லுவார்:
 
"உங்களிடம் ஒரு குற்றமும் / பாவமும் இல்லை என்றால்  நீங்கள் மற்ற ஊழியர்களையும் தேவ பிள்ளைகளையும் குற்றம் சொல்லுங்கள்" என்பதுதான்.
 
இக்காலகட்டங்களில் மனசாட்சிக்கு கூட மரியாதை இல்லாமல் போய்விட்டதே பிறகு மனசாட்சி எப்படி குத்தபோகிறது?
 
ஆண்டவரை அறிந்து இறைவனின் கரத்தின் கீழ்வந்த ஒருவர் அந்த இறைவனின் வேலைக்காரர், அடுத்தவரின் வேலைக்காரரான அவரை நாம்  நியாயம்தீர்ப்பது தகுமா? அதுவும் இறைவனின் உளியக்காரரை நாம் நியாயம் தீர்க்க முடியுமா?  
 
வசனம் என்ன சொல்கிறது?   
 
ரோமர் 14:4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
 
இறைவனின்  நியாயதீர்ப்பு என்னும் பட்டயத்தை தனது கையில் வைத்து வீசுவது ஆபத்தானது எனபது
அநேகருக்கு புரியவில்லை போலும்


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
ஊழியர்களை/விசுவாசிகளை தாக்கி விமர்சித்தல்!
Permalink  
 


Superb msg

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard