சகோதரர்களே, நான் காலையில் அலுவலக நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வந்து சில பதிவுகளை எழுதுவதோடு அலுவலகம் முடிந்த பிறகு சுமார் இரண்டு மணிநேரம் அமர்ந்து பதிவுகளை எழுதுகிறேன். மேலும் அலுவலக நேரங்களில் கூட ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் ஆண்டவரை பற்றி எழுத எனது ஓனரிடம் அனுமதி வாங்கியிருப்பதொடு வேலை இல்லாத நேரங்களிலும் பதிவிடும் அனுமதியை பெற்றிருக்கிறேன். இதற்காக நான் அதிக வருமானம் கிடைக்கும் வேறு வேலைகளை நிராகரித்து வருகிறேன். ஆகினும் இன்னும் எனக்கு ஆண்டவர் தெரியப்படுத்திய அனேக காரியங்கள் எழுத முடியாத நிலையிலேயே இருக்கிறது.
இவ்வாறு அனுமதி பெற்று நான் எழுதியும், என்னுடைய சிந்தனைகள் பதிவைப் பற்றிய தியானத்தில் இருக்கும் போது, நான் செய்யும் வேலைகளில் சில தவறுகள் ஏற்பட்டு . அதை மறைக்க நேர்ந்தது மேலும் எங்களுக்கு 15 நாளுக்கும் ஒருமுறை பணம் தரும் ஒரு கம்பனி, பணத்தை கொடுக்கும் முன் அதிக இம்சை கொடுத்ததாலும், வீட்டிலும் சில பிரச்சனைகள் உண்டானதாலும் ஆண்டவரிடம் "ஆண்டவரே நான் உங்கள் வார்த்தைகள் சம்பந்தப்பட்ட காரியங்க்ளை தானே இவ்வளவு வாஞ்சையுடன் எழுதுகிறேன், எனக்காக நீங்கள் செயல்பட்டு எனது வேலைகளில் தவறு வராமலும், பணம் கொடுக்காமல் பலமுறை இழுத்தடிக்கும் அந்த கன்பனியின் பணம் சரியான நேரத்துக்கு வரும்படிக்கும், எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கள் எனக்கு ஏதாவது உதவி செய்யக்கூடாத என்று ஆண்டவரிடம் கேட்டேன்.
ஆனால் ஆண்டவரோ என்னை அதிகமாய் கடிந்துகொண்டார். நீ செய்யும் காரியங்கள் எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்காக நீ எது செய்தாலும் கிரமமாய் முறைப்படி செய்ய வேண்டும். நான் இதை செய் என்று உனக்கு கட்டளையிட்டேனா? உனது திருப்திக்கு நீ செய்துகொண்டு இருக்கிறாய். முதலில் உனது கடமைகளை சரியாக செய். உன் மாமிசமானவனுக்கு எதையும் மறைத்து ஒளிக்காதே. சம்பளம் கொடுக்கும் ஒருவருக்கு அதற்க்கு தகுந்த வேலையே செய்வதில் கவனம் வேண்டும், நேர்மை வேண்டும். அலுவலக நேரங்களில் பதிவுகள் இடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். உன் முதலாளி நீ கேட்டவுடன் சம்மதம் தெரிவித்து விட்டாலும் அவர்கள் முழு மனதோடு உனக்கு அனுமதி வழங்கவில்லை. நீ என்னதான் எழுதினாலும் சிலர் உனது பதிவுகளை படித்துவிட்டு ஏற்றுக்கொண்டாலும் ஓரிரு நாளில் எல்லாவற்றையும் மறந்து விடுவர் பலர் இக்கருத்துக்களை படித்துவிட்டு பரிகசித்துதான் செல்கின்றனர். தகுந்த வெளிப்பாடும் திறந்த உள்ளமும் உள்ளவர்கள் மட்டுமே இதை ஏற்க்க முடியும். மற்றவர்கள் பலர் இவ்வார்த்தைகளை ஏற்ப்பது கடினம். எனவே நீ விழுந்துபோகாதபடிக்கு கடமையை சரியாகசெய். உன்னை நீ தற்காத்துகொள், இல்லையேல் நீ இன்னும் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று திட்டமாக சொல்லி விட்டார்.
ஆண்டவரின் இவ்வெச்சரிப்பால் இனி அலுவலக நேரங்களில் பதிவுடுவதை தவிர்க்கலாம் என்று கருதியுள்ளேன் வீட்டில் கம்புட்டர் இருந்தாலும் நான் தூங்குவதற்கு மட்டும்தான் வீடு செல்வதால் அங்கு நேரம் செலவிட முடியாது. மேலும் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு மாலைவரை நாங்கள் டிவி / கணினி/செல்போன் போன்ற எதையும் பயன்படுத்துவது இல்லை .
ஒவ்வொரு பதிவுகளுக்கும் தகுந்த வசன ஆதாரம் தேடவேண்டியுள்ளதால் ஒரு பதிவுக்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது எனவே வரும் நாட்களில் நான் முன்புபோல் பதிவிட முடியாது என்று கருதுகிறேன். கர்த்தரின் சித்தம் நிறைவேறட்டும்!
-- Edited by SUNDAR on Friday 14th of May 2010 11:11:41 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு மாலைவரை நாங்கள் டிவி / கணினி/செல்போன் போன்ற எதையும் பயன்படுத்துவது இல்லை // நண்பரே, இந்த குறிப்பிட்ட சிந்தனையே தங்களது மற்றுமொரு கருத்துக்கு ஆதாரமாகிவிட்டதோ என எண்ணுகிறேன்;அதாவது தற்போது பரபரப்பாக நாம் வாதித்து வரும் "இயேசுவானவர் ஓய்வுநாள் கற்பனையை மீறினாரா?" எனும் பதிவு..!
அதில் தாங்கள் குறிப்பிட்டவாறு ஓய்வுநாள் கற்பனையை மீறுவதினால் துன்பத்தை ஏற்றுக்கொண்டு பரலோக பாக்கியத்தை இயேசுவானவரைப் பின்பற்றி அப்போஸ்தலர்களும் அடைந்ததுபோலவே தாங்களும் செய்யலாமே?
வேலை போனால் போகட்டும் என்று வேலை நேரத்தில் வேலை செய்யாமலும் ஓய்வுநாளின்போது வேலைசெய்தும் கலகம் பண்ணுங்களேன்..!
-- Edited by chillsam on Sunday 30th of May 2010 03:15:03 AM
என்னுடைய எழுத்துக்களில் ஏறக்குறைய எல்லாமே என்னுடைய வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டது. வெறும் போதனைகளை கேட்டோ அல்லது தேவனின் வார்த்தையின் உண்மை தன்மை என்னவென்பதை அனுபவத்தில் அறியாமலோ யாருக்கும் உபதேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. தேவனின் வார்த்தைகளை கைகொண்டு அதனால் அவரும் பயன்கள் என்னவென்பதை அறிந்து ருசித்து அதை பிறரும் அனுபவிக்க வேண்டும் என்று அதனபடி எழுதுகிறேன்.
வேதத்தை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பிறருக்கு போதிப்பது சுலபம் ஆனால் அந்த வார்த்தைகளை நமது வாழ்வில் ஒரு பகுதியாக்கி அனுபவித்து பேசுவது என்பதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை எனலாம். வார்த்தைகளை மீறுவது சுலபம் ஆனால் அதை கைகொண்டு நடப்பதுதான் மிகும் கடினம், அதில் இருக்கும் மனதிருப்தி வேறு எதிலும் எனக்கு இல்லை
ஒரு கிறிஸ்த்தவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியான நிலையில் நான் எல்லா இடங்களிலும் வேலை பார்த்துவருகிறேன். இரண்டே நாளில் எனது பெயரை கெடுத்துவிடுவது சுலபம் ஆனால் மீண்டும் அந்த பெயரை திரும்ப பெறுவது முடியாத செயலாகிவிடும். "நீங்களுமா இப்படி?" என்ற ஒரு சொல்லைக்கூட நான் கேட்க தயாராகஇல்லை.
தேவனின் சித்தத்தை நிறைவேற்றத்தானே நாம் உலகுக்கு வந்திருக்கிறோம்.
அவரவர்களை தேவன் எதற்க்காக அழைத்தாரோ அதில் நிலைத்திருப்பதுதான் அவரவருக்கு நல்லது!
I கொரிந்தியர் 7:17 தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர்அவனவனைஅழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)