////இன்று இரவு (14/03/2010 இரவு 9.30க்கு) ஆசீர்வாதம் டீவியில் பார்த்த (கேட்ட) ஒரு சம்பவம். ஊழியக்கார் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார், அவரின் பிரசங்கத்தில் அவர் சொன்ன ஒரு காரியம், என்னவென்றால், அவர் ஜெபிக்கும் போது தேவ மகிமை வந்து அவரை மூடுமாம். அந்த மகிமையின் சுற்றளவு 3 கிலோமீட்டராம். அதாவது அந்த 3 கி.மிக்குள் சாத்தான் புக மாட்டானாம், அதற்கு அந்த பக்கம் தான் அவனால் இருக்க முடியுமாம். அதாவது தேவனின் மகிமை சுமார் 3 கி.மி வரை தான் என்று இவர் சொல்லுகிறார். என்ன வேடிக்கையான பிரசங்கம். தேவ மகிமையை இப்படி கொச்சை படுத்தி பேசுவதை மக்களும் அல்லேலூயா, மற்றும் ஆமென் சொல்லி ஆமோதிக்கிறார்கள்.////
இந்த வசனத்தை நீங்கள் வேதபுத்தகத்தில் பார்த்திருப்பீர்கள் இதை படித்துவிட்டு நீங்கள் என்ன பதில் சொல்லபோகிறீர்கள் கர்த்தரின் மகிமை ஆலயத்தை மட்டுதான் நிரப்புமாம். தேவனின் மகிமையை சாலமோன் கொச்சை படுத்தினார் என்று சொல்ல போகிறீர்களா?
அம்பானியின் மகன் காசுவேண்டும் என்று அவன் அப்பாவிடம் அடம்பிடித்து கேட்டான். அவனது அப்பாவும் தன் பையனிடம் ஒரு பத்துரூபாயை எடுத்து கொடுத்துவிட்டார். பையன் அதை கையில் எடுத்துகொண்டு "நான் என் அப்பாவிடம் கேட்டபோது அவர் பத்து ரூபாய் எனக்கு கொடுத்துவிட்டார்" என்று சொல்லிக்கொண்டு தெருவில் ஓடுகிறான். அதை பார்த்த ஒருவர் "அவனுடைய அப்பாவின் செலவசெழிப்பை இந்தபயன் கொச்சைபடுத்துகிறான் அவரிடம் வெறும் பத்து ருபாய் மட்டும்தான் இருக்கிறதாம்" என்று சொன்னதுபோல் இருக்கிறது உங்கள் பதிவு.
தேவனிடம் உலகம் முழுவதையும் மூடும் அளவுக்கு மகிமை இருக்கிறது ஆனால் அது எல்லா நேரமும் எல்லோருக்கும் வெளிப்படுவது இல்லை அதை எல்லோருக்கும் காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அதில் ஒரு சிறு பகுதியை அவருக்கு தேவன் காண்பித்திருக்கிறார் இதில் என்ன தவறிருக்கிறது?
சகோதரர் பெரேயன்ஸ்
///மேலும் தீட்டு உள்ள இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! அதாவது தேவனின் சர்வவல்லமைத்தனத்தை கேலி பண்ணுகிறார்கள் இவர்கள். இவர்களுடன் தேவன் நரகத்திற்கு கூட சென்று இவர்களுக்கு நரகத்தை காண்பித்து வருவாராம், ஆனால் தீட்டு இருக்கும் இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! எப்படி தான் வேதத்தை அறிந்தவர்கள் இதர்கு ஆமென் அல்லேலூயா சொல்லி கேட்கிறார்களோ!////
ஒரு நல்ல மனிதனின் மகன் ஒரு மோசமான விபசார விடுதிக்குள் என்ஜாய் பண்ண போய்விட்டான். அவனை தேடிவந்த அந்த மனிதன் அந்த மோசமான இடத்துக்குள் போக அருவருத்து வெளியில் வரட்டும் பார்க்கலாம் என்று வெளியிலேயே அமர்ந்துவிட்டார். அவர் நினைத்தால் உள்ளே போகமுடியும் அதற்க்கு அவருக்கு வல்லமை உண்டு ஆனால் கண்றாவிகளை அவர் பார்க்க விரும்பவில்லை அவ்வளவுதான் அதனால் உள்ளே போகவில்லை.
ஒரு பத்து ரூபாய் காசு சாக்கடையில் விழுந்து விட்டால் அதன் உள்ளே இரங்கி கிரியை செய்து எடுக்க நம்மால் முடியும். ஆனால் அதற்காக அந்த துர்நாற்றத்துக்குள் இரங்க தேவையில்லை என்று விட்டுவிடுவது போலதான் இச்செயலும் இதில் என்ன சர்வவல்லமையை மட்டுபடுத்தும் கருத்து என்ன இருக்கிறது?
தேவனாகிய கர்த்தர் பரிசுத்தராக இருக்கிறார் அவர் "நான் பரிசுத்தர் எனவே நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்று சொன்னதோடு பல இடங்களில் உங்களை தீட்டு படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
எண்ணாகமம் 35:34நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்;
II நாளாகமம் 23:19யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான். வெளி 21:27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை
எசேக்கியேல் 43:8 , என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
அதை கவனித்து அவரது விருப்பபடி தீட்டுள்ளதை தவிர்த்து நடப்பதை விட்டுவிட்டு, தீட்டுள்ள இடத்துக்கு தேவன் வர முடியுமா? முடியாதா? என்று கேள்வி கேட்டுகொண்டு இருப்பதுதான் தேவனின் வார்த்தையை அசட்டை செய்து அவரது அனந்த ஞானத்தை குறைகூறுவதுபோல் இருக்கிறது.
இது எதற்கு? மனிதனின் கழிவுகள் மூடப்படாமல் சுத்தம் இல்லாமல் இருந்தால்கூட கர்த்தர் விலகி போய்விடுவார் என்று வசனம் சொல்கிறது
உபாகமம் 23:13உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்
14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.
அதற்காக கர்த்தரை அசுத்தமான அவ்விடத்திலும் இருந்து கிரியை செய்ய முடியாதவர் என்று வேதம் அவரது மகிமையை குறைத்து சொல்கிறது என்று எழுதுவீர்களா?
-- Edited by SUNDAR on Saturday 15th of May 2010 04:30:10 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்."(கொலோசெயர்.1:27)
மேற்கண்ட வேதவாக்கியத்தின்படி மிக எளிமையாகவே நான் அறிந்திருக்கிறேன்,மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் அல்ல,ஒரு அங்குலத்துக்கு அப்பால் இருந்தாலும் சாத்தான் என்னை நெருங்கமுடியாது;ஏனெனில் தேவ மகிமையானது இன்று எனக்குள் இருக்கிறது;
எனவே இதுபோன்ற வேண்டாத அபரிமிதமான அதீத வர்ணனைகளை தேவ ஊழியர்கள் தவிர்க்கவேண்டும்;சாத்தானைக் குறித்து அதிக பயமும் எச்சரிக்கையுணர்வும் இருப்பதாலேயே ஆண்டவர் பெரிய மனது பண்ணி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மிருகங்களை அடைத்து வைத்துப் பார்ப்பதைப் போல சாத்தானையும் எங்கோ தூரத்தில் தடுத்து வைத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுகிறோம்;
வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுடன் நமக்கு இடைவிடாத போராட்டம் உண்டு என்று வேதம் சொல்லுமிடத்து தேவ மகிமை எங்கே செல்லும்..?
எனவே இதுபோன்ற வேண்டாத அபரிமிதமான அதீத வர்ணனைகளை தேவ ஊழியர்கள் தவிர்க்கவேண்டும்;
சகோ. அவர்களே அது வர்ணனையா அல்லது உண்மையா என்பதை அனுபவித்த அந்த ஊழியருக்கு மட்டுமே தெரியும். ஒருவருக்கு அதுபோல் அனுபவம் இல்லை என்றால் அது வர்ண்ணனை என்ற முடிவுக்கு வருவது சரியான நிலை அல்ல.
என் வாழ்வில் நான் பெற்றதுபோன்ற அனுபவன் பெற்றவர்கள் எத்தனைபோரோ தெரியவில்லை, ஆனால் அதுபோல் அனுபவம் பெற்றவர்கள் ஆலன் பால் சொல்வது எல்லாவற்றிலுமே உண்மை இருக்கலாம் என்று நம்ப வாய்ப்புண்டு. சாது சுந்தர் சிங் அவர்களை பற்றியும் அறிந்திருப்பீர்கள், அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் எல்லாம் பலருக்கு நம்ப முடியாதவைகளே ஆனால் அனைத்தும் உண்மை என்பது என்போன்றவர்களுக்கு புரியும். நமக்கு புரியவில்லை நம் அறியவில்லை என்பதற்காக அது வர்ணனை என்பதுபோல் தீர்மானிக்க வேண்டாம்.
இன்றைய நாட்களில் கொஞ்சம் அதிகமாக வேதத்தை ஆராய்ந்து தெளிவு பெற்றவர்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் எண்ணமெல்லாம் " நான் அறிந்து கொண்டதுதான் உண்மை அதற்குமேல் ஒன்றுமில்லை" என்பதுதான். இப்படி ஒரு பெருமையான எண்ணம் இருந்தாலே தேவன் அதிகமாக ஒன்றையும் தெரியப்படுத்த மாட்டார்.
இவ்விஷயத்தில் மட்டும் பலர் ஒத்துபோவது ஆச்சர்யமே!
இனி யாருக்கும் வக்காலத்து வாங்கவும் நான் விரும்பவில்லை. நான் எழுத வேண்டிய காரியங்கள் அநேகம் இருக்கிறது அதை எழுதிவைத்துவிடுகிறேன். புரிந்துகொள்ள விரும்புகிறவர்களாவது புரிந்துகொண்டு போகட்டும். புரிந்துகொள்ள விரும்பாதவர்களுக்கு இது ஒருநாளும் புரியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// கனவுகள்,பரலோகக் காட்சிகள் ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவைகளாக இருப்பினும் வேதத்துக்கு எதிரானதல்ல;அப்படியானால் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் என்பதே பொய்யாகிவிடுமே..?
மனிதர்களோடு சர்வ வல்லவர் இடைபடும் போது மனிதனுடைய புரிதலுக்காகவும் தமது வல்லமையை விளங்கப்பண்ணவும் அவர் தமக்கேற்ற விதத்திலும் தனித்தன்மையிலும் செயல்படுவார்;அது மனிதனுக்கு பிரமிக்கத்தக்கதாகவும் இருக்கும்;
மென்மையான இருதயமுள்ளவர்களுக்கு இயற்கைக்கு மாறுபட்ட காட்சிகள் தோன்றுவதுண்டு;அது தெய்வீகமானதாக இருந்ததானால் வெளிப்படுத்தப்படும் செய்தியில் தெரிந்துவிடும்;எனவே இந்த அனுபவங்களை முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது. // -இது நான் மற்றொரு தளத்துக்காக அளித்த பதிலாகும்;
நண்பரே,"வர்ணனை" எனும் சொல்லானது எந்த வகையிலும் "கற்பனை" எனும் பொருளைத் தராது;
இதனால் நமது ஊழியர்கள் பொய்சொல்லுகிறார்கள் என்றோ ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை;
பொதுவாகவே மென்மையான உணர்வுள்ளோர்க்கே இதுபோன்ற அனுபவங்கள் சாத்தியம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்;
ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தைப் பொருத்த காரியத்தையே சார்ந்து அதைக் குறித்து பேசுவதால் வேதத்தின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தரிசனமும் சொப்பனமும் பெருத்துப்போகும்;
மனிதனின் எண்ணங்களே செயல்வடிவம் பெறுகிறது;அந்த எண்ணங்களும் எண்ணற்றவை மற்றும் அதன் ஆழம் ஒருவரும் அறியமுடியாதது;
இதனால் விசித்திர விநோத கற்பனைகளான "ஹாரிபாட்டர்" போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறுகிறது;மறுபுறம் அதற்கு சற்றும் குறையாமல் ஊழியர்களும் எதையாவது சொல்லி தங்களை பெரிய "சக்திமான்"களாகக் காட்டியாக வேண்டிய அவசியமாகிவிட்டது; இல்லாவிட்டால் நமக்கு கவர்ச்சி இருக்காதல்லவா?
இறுதியாக வேதம் மட்டுமே அனைத்துக்கும் இறுதியானது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.