இந்த உலகில் என்ன நடக்கிறது என்பது அநேகருக்கு ஒரு புதிராக இருக்கலாம். அனால் கொஞ்சம் ஞானத்தோடு ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இந்த உலகை ஜெயம் கொள்கிறவனுக்கான தேர்வு நடைபெறுகிறது என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அத்தேர்வில் நிச்சயம் பங்கேற்க்க வேண்டும். அதில் வெற்றிபெற ஒவ்வொருநாளும் ஓடவேண்டும்.
I கொரிந்தியர் 9:24பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்
ஆம்! இந்த உலகில் பிறக்கும் எல்லோரும் ஜெயம்கொள்கிறவன் என்று தேவன் நியமித்த இறுதி இலக்கை அடைவதற்கு பிறந்த நாளில் இருந்து மரிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் என்னவென்று அறியாமலேயே ஓடிக்கொண்டு இருக்கிறோம். அதை அறிந்து கொண்டவன் ஞானவான் அவன் எல்லாவற்றையும் அறிந்து கொள்வான்.
இத்தனை காலம் ஓடியும் இன்றுவரை ஒருவரும் அந்த இலக்கை அடைந்து ஜெயிக்கவில்லை.
தேர்வுக்கான விதி முறைகள் என்ன தெரியுமா?
தேவனின் வார்த்தைகளே தேர்வுக்கான விதி முறைகள். அவ்வார்த்தைகள் வானங்களில் நிலை நிற்று பூமியை ஆள்வதால், அது தானாக ஒவ்வொருவர் மேலும் செயல்படுகிறது. அவர் வார்த்தைகளை நாம் எவ்வளவுக்கெவ்வளவு கைகொண்டு நடக்கிறோமோ அதற்க்கு தகுந்தால்போல் முன்னால் ஓடமுடியும்.
இங்கு கிறிஸ்த்தவன் புறமதத்தான் என்ற பாகுபாடு கிடையாது, எவனொருவன் வேறு மதத்தில் இருந்து கொண்டு தேவனின் வார்த்தைகளை தான் மனசாட்சியும் அடிப்படையில் சரியாக கைகொண்டு நடந்தாலும் பரமபிதா நினைத்தால் அவனை ஒரே நாளில் இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியும்.
யோவான் 6:44என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;
இரட்சிப்பு பாத்திரவான் யார் என்று தீர்மானிப்பது பிதாவே.
இப்பொழுது ஜெயம்கொள்கிறவனுக்கான போட்டி எவ்வாறு நடை பெறுகிறது என்பதை சற்று விளக்குகிறேன்:
ஓட்ட பந்தயத்தில் முன்னால் வர வேண்டும் என்றால் நமக்கு முன்னால் ஓடுபவனை நாம் கடந்து அவனுக்கு முன்னே செல்ல வேண்டும். அதுபோல் ஜெயம்கொள்வதற்கான பந்தயத்தில் நாம் ஒருவனை கடந்து முன்னேறுவதற்கு அவனை விட எல்லா வித்திலும் தேவனின் வார்த்தையில் அடிப்படையில் நல்லவனாக மாறவேண்டும்.
இந்த உலகத்தில் நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கும் மனிதர்கள் எல்லோருமே அந்த பந்தயத்தில் நம்மை கடந்து முன்னால் ஓடிக்கொண்டு இருக்கும் போட்டி யாளர்கள்தான். நீங்கள் நல்லதே செய்துகொண்டு நல்லதையே நினைத்துகொண்டு இருந்தால் நீங்கள் தீயவர்களை எல்லாம் ஓவர் டேக் எடுத்து வந்துவிடலாம் உங்களுடன் இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆகினும் நீங்கள் அவ்வப்பொழுது செய்யும் ஒவ்வொரு தீய செயலுக்கேற்ப ஒருசில தீயவர்களையும் பார்க்க வேண்டியது வரும்.
(இதை என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணத்தின் அடிப்படையில் விளக்கினால் சுலபமாக புரியும் என்று நினைக்கிறேன்)
-- Edited by SUNDAR on Tuesday 11th of November 2014 04:46:21 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த உலகத்தில் ஜெயம் கொள்கிறவருக்கான போட்டி நடை பெறுகிறது என்றும் உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தானாகவே அந்த போட்டியில் பங்கேற்று ஓடுகிறார்கள் என்றும்நம்மை சுற்றியுள்ளவர்கள் எல்லோருமே நம்மை சோதிக்கும் நமக்கு போட்டியாளர்கள் என்றும் பார்த்தோம். ஒருவரை கடந்து முன்னேறி போக வேண்டும்என்றால் நமக்குள்ள ஒரேவழி நாம் அவரைவிட உத்தமனாக நல்லவனாக ஆண்டவர் வார்த்தைகள்படி வாழ்பவராக இருக்கவேண்டும்என்று பார்த்தோம்.
சாத்தானின் முக்கிய சோதனை கருவிகள் பணம் மற்றும் இச்சை என்பவைகளே.
இந்நிகழ்வை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் விளக்கலாம் என்று கருதுகிறேன்
மும்பை பட்டணத்தில் நான் இருந்தபோது நாங்கள் சுமார் பதினோரு பேச்சலர்கள் மொத்தமாக ஒரே ஒரு ரூம் எடுத்து தங்கியிருந்தோம்.
எங்கள் எல்லோருக்குள்ளும் தேர்வுக்கான போட்டி நடைபெற்றது. அதிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக என்னைவிட்டு பிரிய ஆரம்பித்தனர். பணம் பணம் என்று அலைபவர்களே முதலில் என்னைவிட்டு பிரிந்தனர். இவ்வாறு அங்கிருந்து வெளிநாட்டுக்கு போனவர்கள் சுமார் நான்குபேர் முதலில் பிரிந்தனர்.
பிறகு என்னுடன் சுமார் ஏழுபேர்கள் இருந்தனர் அவ்வேழு பேருக்கும் யார் யாரைவிட்டு பிரியவேண்டும் என்பதில் அவரவர் செய்யும் நன்மை/தீமை மற்றும் உத்தமத்தின் அடிப்படையில் போட்டி உண்டானது. அங்கிருந்த ஏழு பேரில் நான்குபேர் திருடரும் எமாற்றுக்காரரும் சிலர் பெண்களை அசிங்கமாக விமர்சிப்பவருமாக இருந்தனர். நானும் மத்தேயுஸ் மற்றும் பிரான்சிஸ் என்பவரும் ஓரளவு நல்லவர்களாக இருந்தோம்
இந்நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவத்தின் மூலமாக எல்லோரும் அந்த வீட்டை விட்டு காலிபண்ணவேண்டிய நிலை ஏற்ப்பட்டது. எல்லோரும் சிதறிப்போனோம். ஆனால் நானும் அந்த மத்தேயுஸ் பிரான்சிஸ் மூன்றுபேரும் தனியாக பிரிந்து வேறு இரண்டு நண்பர்கள் உள்ள இன்னொரு வீட்டுக்கு போனோம். அந்த வீட்டில் ஏற்கெனவே இருந்த இரண்டுபேரில் ஒருவர் என்னிடம் சுமார் 2000/- மற்றும் ஒரு வங்கி லோனுக்கு ஜாமீன் கையெழுத்து வாங்கிகொண்டு எதையும் திருப்பி கொடுக்காமல் ஓடிவிட்டார். இன்னொருவர் ரவி அவர் என்னிடம் ரூ 5000/- கடனாக வாங்கிகொண்டு ஊருக்கு ஓடிவிட்டார். இறுதியாக நாங்கள்மூவர் தங்கியிருந்தோம்.
அதில் அந்த பிரான்சிஸ் என்பவர் உத்தமமாய் நடப்பதில் எங்களுடன் போட்டிபோட முடியாதவராகி எங்களை கடந்து சென்றுவிட்டார். காரணம், மும்பையில் வீடுகளுக்கு இடையே வெறும் தகர அடைப்புகள் மட்டும்தான் இருக்கும். இந்த பிரான்சிஸ் என்பவர் அந்த தகரத்தில் ஓட்டைபோட்டு பிற வீட்டில் நடக்கும் காரியங்களை கண்காணிக்கும் பழக்கமுள்ளவராக இருந்ததால் எங்களை விட்டு கடந்துபோனார்.
இறுதியில் எனக்கும் எனது நீண்டநாள் நெருங்கிய நண்பனான சண்முகம் என்ற பெயர்கொண்ட மிகவும் நேர்மையான அவனுக்கும் மத்தேயுஸ் என்னும் இன்னொரு நண்பர் இம்மூவருக்கும் இடையே மிக கடுமையான போட்டி நிலவியது!
நான் இந்து மதத்தை சேர்ந்தவன், சண்முகம் இந்து மதத்தை சேர்ந்தவன் மத்தேயுஸ் என்பவர் கிறிஸ்த்தவர். நாங்கள் மூவருமே மிகுந்த நேர்மையானவர்கள் உத்தமமாய் நடப்பவர்கள் இரக்கம் உள்ளவர்கள் தங்களால் முடிந்தஅளவு பிறருக்கு நன்மையை செய்பவவர்கள், யாருக்கும் தீமையை செய்யவேண்டும் என்று எண்ணிக் கூட பார்க்காதவர்கள் எனவே போட்டியில் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்கவில்லை.
இந்நிலையில் என்னிடம் யாராவது அவசரமாக பணம் தேவை என்று கெஞ்சினால். நான் வேலைபார்த்த கம்பனியிலிருந்து பணம் எடுத்து கொடுக்கும் ஒரு திருட்டு பழக்கம் என்னிடம் இருந்தது. எனக்கென்று நான் எந்த பணமும் சேர்த்து வைப்பதில்லை. மாறாக சங்கடம் என்று கேட்டவருக்கு எடுத்து கொடுப்பேன். இதை அறிந்த சண்முகம் என்ற எனது நண்பன் "சுந்தர் உனக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது உன் ஓணர் பெரிய பணக்காரர் தானே? இது போன்றவர்களிடம் திருடி கஸ்டப்பட்டவருக்கு கொடுப்பதில் தவறில்லை. அதிகம் பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்து வை உனக்கு தேவையான நேரம் நான் தருகிறேன். எல்லோருக்கும் இதுபோல் சந்தர்ப்பம் கிடைப்பது இல்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்" என்று சொன்ன சில நாட்களிலேயே என்னை விட்டு பிரிந்து அந்த இந்து நண்பன் பின்னே தள்ளப்பட்டான்.
நானும் மத்தேயுஸ் என்ற நண்பர் மட்டும் கால்இறுதி போட்டிக்கு தகுதி பெற்றோம். இரண்டு மூன்று வருடங்கள் மிகவும் நட்போடு ஒரே வீட்டில் இருந்த எங்களுக்கும் மிகப்பெரிய போட்டி நடந்தது. எனது நேர்மையை நானும் விட்டு கொடுக்கவில்லை அவரும் விட்டுகொடுக்கவில்லை. பணத்தினால் எங்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று கருதிய
சாத்தான் இறுதியான ஒரு இஸ்லாம் பெண்ணின் மூலம் சோதனையை கொண்டுவந்தான்.
-- Edited by SUNDAR on Tuesday 11th of November 2014 04:50:06 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
(எனது வாழ்வில் நான் கடந்துவந்த ஜெயம்கொள்ளுதலுக்கான போட்டி குறித்து இங்கு விளக்குகிறேன். நான் செய்த எந்த பழைய பாவத்தையும் யாருக்கும் மறைக்க விரும்பவில்லை. இந்த சம்பவங்களில் நமக்கு சில முக்கியமான பாடங்கள் இருப்பதால் இதை பதிவிடுகிறேன். மற்றபடி யாரும் தவறாக கருதவேண்டாம்).
அந்த இஸ்லாம் பெண்ணும் பணத்தின் மீது பற்றில்லாத மிகவும் நல்ல பெண். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த அந்த பெண்ணுடன் (பிறன் மனைவி) எனக்கு பழக்கம் ஏற்ப்பட்டது. இப்பொழுது போட்டி மீண்டும் மும்முனை போட்டியாகி விட்டது. நான் மத்யாஸ் மற்றும் இந்த பெண (நான் இந்து, எனது நண்பர் கிறிஸ்த்தவர் மற்றும் அந்த இஸ்லாமிய பெண்) என்று எங்கள் மூன்று பேருக்கிடையே நடந்த கடும் போட்டியில் முதலில் எனது நண்பன் மத்தேயுஸ் பெண்கள் விஷயத்தில் தனது உத்தமத்தை தவறவிட்ட காரணத்தால் எங்களை விட்டு விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. அதைபற்றிய விளக்கத்தை கீழ்க்கண்ட தொடுப்பில்படித்து தெரிந்துகொள்ளலாம்
மும்பை சீத்தா கேம்ப் என்ற பகுதியில் ஒரு வீட்டில் எம்ப்ராய்டரி வேலை பார்த்த அவர் அதன் வீட்டில் உள்ள திருமணமான பெண்ணுடன் தவறான முறையில் பழகியிருக்கிறார். அது அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியவரவே, அவர் அந்த பெண்ணை அடித்து வீட்டைவிட்டே விரட்டி விட்டார். அந்த பெண்ணும் செய்வதறியாது இவரிடம் வந்து "என் கணவன் என்னை வீட்டைவிட்டு விரட்டி விட்டார் எனவே என்னை ஏற்றுகொள்ள வேண்டும்" என்று மன்றாட. இவரோ நீ சென்னைக்கு போ நான் அங்கே வந்து உன்னை அழைத்துகொள்கிறேன் என்று சொல்லி சென்னைக்கு அனுப்பிவிட்டு, அதன்பிறகு அந்த பெண்ணை கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டார்.
இதனால் தனது உத்தமத்தில் தவறிய அவர் போட்டியிலிருந்து வெளியேறினார் இறுதியில் எனக்கும் அதன் இஸ்லாம் பெண்ணுக்கும் மட்டுமே போட்டி நிலவியது. மிகுந்த இரக்க குணம் அன்பு நேர்மை பணத்தின்மேல் பற்றில்லாத நிலை என்று பல்வேறு நல்ல குணங்களை ஒருங்கேபெற்ற அந்த பெண் எனக்கு ஒரு தேவதை போலவே தெரிந்தாள். சுமார் இரண்டு ஆண்டுகள் அவளோடு போட்டியிட்டும் என்னால் எவ்விதத்திலும் அவளின் உத்தமத்தை மேற்கொள்ள முடியவில்லை. எனக்கு அவர் பலநேரங்களில் உணவு பண்டங்களை தயாரித்து தருவது வழக்கம். இந்நிலையில் என்மேல் மிகுந்த பாசம் அன்பு வைத்திருந்த அவள், எச்சூழ்நிலையிலும் அவளைவிட்டு நான் பிரிந்து விடக்கூடாது என்று கருதி, மாந்த்ரீக முறையில் ஏதோ மருந்து தயாரித்து எனக்கு கொடுத்த கேசரியில் வைத்து கொடுத்துவிட்டாள். சுய நலத்துக்காக பிறரை மாந்த்ரீகத்தால் மயக்குவது தேவனின் பார்வைக்கு தவறாகிவிடவே அவள் தோற்றுப்போனதால் என்னை விட்டு பிரியவேண்டிய சூழ்நிலையை தேவன் ஏற்ப்படுத்தினார். .
ஆனால் அவள் கொடுத்த மருந்தால் நான் அவளிடம் மாட்டிக் கொண்டேன். அவள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கிடந்தேன். வேலைக்கு போவதையும் உணவையும் மறந்தேன். எல்லோரும் என்னை ஒதுக்கி தள்ளி விட்டனர். என்னாலேயே என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைக்கு உள்ளானேன். அதாவது என்னை ஏதோ ஒரு சக்தி ஆட்டியது, என்னால் அந்த சக்தியை மாமிச பிரகாரமாக ஒன்றும் செய்யவே முடியாத நிலை ஏற்ப்பட்டது. அவள் என்னைவிட்டு பிரிந்து போகமுயல, ஆனால் அவள் கொடுத்த மாந்த்ரீக மருந்தோ எங்களை பிரிய விடாமல் தடுத்தது.
ஆம் அன்பானவர்களே, தேவனின் வார்த்தைகள் நம்மை புடமிடும் இருதிநிலைவரை நமது உத்தமத்தை காக்கவேண்டும். இதுபோல் போட்டிகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஒருவருக்கு இதுபோல் பெரியபோட்டிகள் வரவில்லை என்றால் அவர்கள் சின்ன போட்டிகளிலேயே தோற்றுவிட்டார்கள் என்றுதான் பொருள். யோசேப்பு, ஆபிரஹாம், தானியேல், யோபுபோன்ற பழையஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ம்ற்றும் பவுல்/ பேதுரு மேலும் அனேக புதிய ஏற்பாடு பரிசுத்தவான்களின் வாழக்கை வரலாற்றை பார்த்தால் எதாவது ஒருவிதத்தில் எல்லோருமே மிகப் பெரிய போட்டிகளில் பங்கேற்றுத்தான் வெற்றிபெற்றுக்கின்ற்னர். அவரவர் இருக்கும் நிலையிலேயே போட்டி நிலவும். கடின போட்டியற்ற சுமூகமான வாழ்க்கை இருக்கிறது என்றால் உங்கள் ஆவிக்குரிய நிலையை சற்றுசரிபாருங்கள்
ஏனெனில் ஆண்டவராகிய இயேசு சொதிக்கப்படுவதர்கென்றே ஆவியான்வராலேயே வனாந்திரத்துக்கு கொண்டு சொல்லப்பட்டார் என்று வசனம் சொல்கிறது
மத்தேயு 4:1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
அதாவது இங்கு பிசாசு அவரை கூட்டிசெல்லவில்லை ஆவியாவரே அவரை கொண்டுபோனார் ஏனெனில் ஒருவர் இந்த விழுந்துபோன பூமியில் பிறந்து விட்டாலே அவர் சோதிக்கபடுவது அவசியாமாகிறது. சோதனையில் ஜெயிப்பதும் அவசியமாகிறது. மேலும் ஆபிரகாம்/ ஈசாக்கு சோதனையில் கத்தியை தூக்கி வெட்ட போகும்வரை கர்த்தர் எதுவும் சொல்லவில்லை. அதுபோல் ஒரு மனிதனிடம் சோதனை என்பது இறுதி எல்கைவரை செல்லும். அதாவது "இனி பொருக்க முடியாது வேறு வழியில்லை இங்கு தவறித்தான் ஆக வேண்டும்" என்ற கடைசி நிலைவரை நாம் தள்ளப்படுவோம், அங்கு நமக்கு ஒருவரும் துணைக்கு இல்லாத ஒரு ஆதரவற்ற நிலையை அடைய வேண்டிய நிலை வரும். நமது இருதய முடிவு மட்டுமே அச்சூழ்நிலையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். நடக்கும் அனைத்தையும் நமது இருதயநிலைகளில் உத்தமமாக இருந்து ஜெயித்தால் மட்டுமே ஜெயம்கொள்வதற்கான படிகளில் ஏறமுடியும். மாறாக, மனதில் ஓன்று நினைத்துகொண்டு வேண்டா வெறுப்பாக செயலில் நல்லதை செய்தாலோ அல்லது யாருக்கோ பயந்துகொண்டு நல்லதை செய்தால் கூட அது தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இருதயத்தில் சுத்தம் மற்றும் உத்தமம் என்பது மிக மிக அவசியம் அதை மட்டுமே தேவன் பார்க்கிறார் மற்றபடி ஆண்டவரை அறிவதற்குமுன் அறியாமல் நாம் செய்யும் எந்த ஒரு பாவத்தையும் அவர் கணக்கிலேயே எடுப்பது இல்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஜெயம்கொள்ளுதலுக்காக நடைபெறும் இந்த போட்டியில் எனக்கு நடந்த அதே போல் காரியம் பிறருக்கும் நடக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல! ஆனால் இந்த உலகில் எல்லோருக்குமே மேலான அதிகாரங்களும் இருக்கிறது அதேபோல் நாம் அதிகாரம் செலுத்தும் அளவுக்கு கீழான நிலைகளும் இருக்கிறது. அவரவர் இருக்கும் நிலையில் அவரவர் தகுதிக்கு ஏற்ப இந்த போட்டி நடைபெறும். ஆனால் நிச்சயம் போட்டி உண்டு! அதில் இருந்து யாரும் விடுபடமுடியாது! உங்கள் உடனே கூட இருப்பவர் எவரோ அல்லது அன்றாடம் நீங்கள் சந்திக்கும் நபர் எவரோ அவரே உங்கள் போட்டியாளர்.
இந்த உலகில் இரண்டுபேருக்கு இடையே நடக்கும் செயல்பாடுகள் எல்லாமே போட்டியின் விளைவால் உருவாகும் சோதனைகளே. அச்சூழ்நிலைகளை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்ற நமது மனதின் முடிவின் அடிப்படையிலேயே அதற்காக தோல்வியும் வெற்றியும் நிர்ணயிக்கப்படும்.
உதாரணமாக நமக்கும் இன்னொருவருக்கும் இடையே பெரிய பகை உருவாகிறது என்று வைத்துகொள்வோம், வீட்டுக்கு சென்ற நாம் அவரை எவ்வாறெல்லாம் மேற் கொள்ளுவது என்று பலவிதமான சிந்தனையில் இருக்கும்போது, ஒருபுறம் அவரை பழிதீர்க்கவேண்டும் என்றும் இன்னொரு புறம், நாம் அவருக்காக ஜெயிக்கலாம் என்றும் மனபோராட்டம் உண்டாகும். இறுதியில் "அவரிடம் எப்படியாவது சமாதானமாகிவிட வேண்டும்அவர் அடித்தால்கூட நமது கன்னத்தை திருப்பி காண்பித்துவிட வேண்டும் என்று ஒரு உறுதியான முடிவு மனதில் எடுத்தால் போதும் அந்த பகையும் மறைந்துவிடும் அந்த போட்டியிலும் நாம் ஜெயித்து விடலாம். ஆனால் கோபத்தில் நாம் சாத்தானின் தூண்டுதலுக்குட் படடு அவரை பழிதீர்க்க முயன்றால் நாம் அவரை ஜெயிக்கவும் முடியாது அந்த காரியமும் ஒரு முடிவுக்கு வராது
நாம் ஒருவரை போட்டியில் ஜெயித்துவிட்டாலோ அல்லது அவர் நம்மை பார்க்கும் அளவுக்கு தகுதியற்றவராக இருந்தாலோ அவர் நமது அலுவலகத்தைவிட்டோ அல்லது நாம் கண்முன் இருந்தோ கடந்துபோயவிடுவார். நல்லவன் நல்லனுடனேயே செர்க்கப்படுவன் தீயவன் தீயவனுடனேயே சேருவான். தீயவன் இருவருக்கு போட்டி நடக்கும், அதே நேரத்தில் நல்லவன் இருவருக்கிடையே போட்டிநடக்கும். நாம் ஆண்டவரின் வார்த்தைப்படி வாழ்ந்து ஜெயிக்கும் ஒவ்வொரு நிலைகளும் ஒவ்வொரு படிகளாக நம்மை அடுத்த நிலைக்கு இன்னும் கடினமான போட்டிக்கு கொண்டுபோகும். தோற்று போனால் அதே இடத்திலோ அல்லது அதற்க்கு கீழேயோ செல்ல வேண்டிய நிலை வரும். (நாம் இங்கு என்ன நிலையில் இருக்கும் போது மரித்தோமோ அதே நிலையைத்தான் மரித்தபிறகு பாதாளத்தில் சென்று அடையவேண்டி வரும்)
என் வாழ்வில் நடந்த சம்பவங்களை திரும்பி பார்க்கும்போது இந்த உலகில் இதை தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை என்பதை ஆவிக்குரிய நிலையில் நான் ஐயமற அறிந்துகொண்டேன். அதை அறிய முடியாதவர்களுக்கு அறிந்துசெயல்படும் ஞானத்தை தேவன் தருவாராக!
இதுவரை நான் சந்தித்த பல்வேறு சூழ்நிலைகளில் வெற்றி பெற்றாலும் இன்னும் இறுதிஇலக்கை நான் எட்டவில்லை என்றே கருதுகிறேன். அதுபோல் எல்லோருமே தங்கள் தங்கள் நிலைகளில் ஜெயம்கொள்ளும் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கிறோம் அதை அறியாதவர்களும் அறிந்து தேவனின் கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்ந்து, போட்டியில் முன்னேறும் ஞானத்தை தேவன் தருவாராக!
(சுவிசேஷம் சொல்லி ஜனங்களை இரட்சிப்புக்குள் நடத்துவதும் தேவனின் ஒரு திட்டமே அதுபற்றி அக்கினிக்கு நேரான உலகமும் தேவதிட்டமும்! என்ற தொடுப்பில் விளக்கம் தந்துள்ளேன்)
ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியை பெற்று இந்த மாய உலகத்த்தின் சோதனைகளை மேற்கொண்டு சத்துருவை ஜெயங்கோள்வதே இங்கு இறுதி முடிவு ஆகும்!
அதற்க்கு ஏதுவான செயல்பாடுகளே இந்த உலகின் மொத்த இயக்கங்கள்
அவ்வாறு ஜெயந்க்கொள்ளுகிறவனுக்கு கிடைக்க போகும் முக்கிய மேன்மைகள்!
வெளி 2:7ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
வெளி 21:7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
வெளி 2:11ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
வெளி 3:21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல,ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
பதிவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு திரி மீண்டும் பார்வைக்கு வைக்கப்படுகிறது
ஜெயங்கொள்பவன் ஒருவனே!
எப்படி ஆதாம் என்னும் ஒரு மனுஷன் மூலம் பாவம் உலகுக்குள் வந்ததோ!
எப்படி இயேசு என்னும் ஒரே இரட்சகர் மூலம் பாவத்தில் இருந்து நமக்கு விடுதலை கிடைத்ததோ!
அதேபோல்
ஒரே மனுஷன் வேத வசனத்தின்படி/ தேவ சித்தத்தின்படி வாழ்ந்து, இந்த உலகையும் சத்துருவையும் ஜெயங்கொள்வதன் மூலம் எல்லோருக்கும் மீட்பு உண்டாகும்.
எனவே, சத்திய வசனத்தின்படி வாழ்வோம் சாத்தானை ஜெயிப்போம்!
-- Edited by SUNDAR on Tuesday 11th of November 2014 05:03:34 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)