இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை எதற்க்காக முன்னிறுத்துகிறோம்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
இயேசுவை எதற்க்காக முன்னிறுத்துகிறோம்?
Permalink  
 


நான்  வசிக்கும்  சென்னையில் எனது உறவினராகிய  "சித்தப்பா" ஒருவர் உண்டு. அவர் ஒரு நல்ல பதவியில், உயர்ந்த இடத்தில் பணியில் இருக்கிறார். 
 
நான் சென்னைக்கு வந்த புதியதில் எந்த ஒரு காரியம், பிரச்சனை, தவறு, சண்டை போன்றவை நடந்தாலும்; அல்லது யாரிடம் பேசினாலும் எனது சித்தாப்பாவை பற்றியே முதலில் பேசுவேன். "அவர் அப்படி" 'அவர் இப்படி" 'அவர் அதைசெய்வார்'
'அவர் இதைசெய்வார்' என்று நான் அவரை பெரிதுபடுத்தி பேசினாலும் அவர் உண்மையில் எவைகளை எல்லாம் எனக்கு செய்வார் என்பது எனக்கு நிச்சயம் தெரியாது.
 
என் சித்தப்பா நல்லவர்தான் அவர் எனக்காக யாவையும் செய்யலாம் ஆனால் நான் என் சித்தப்பாவை அவ்வளவு உயர்த்தி சொன்னதற்கு காரணம் அவர் மீதுள்ள பற்றோ அல்லது பாசமோ அல்ல.  எனக்கு ஏற்ப்பட்ட சூழ்நிலைகளில்  பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, எனக்கு பெரிய இடத்தில் ஒரு சப்போட் இருக்கிறது என்பதை அடுத்தவர் புரிந்துக்ள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே.
 
அதாவது என்னுடைய தவறுகள், என்னுடைய மீறுதல்கள், என்னுடைய கீழ்படியாமைகளை எல்லாம் என் சித்தப்பாவை முன்னிறுத்தி சமாளித்து கொள்வேன் இதுதான் எனது நிலை.
 
இன்று நன்றாக ஆராய்ந்து பார்த்தால் கிறிஸ்த்தவத்தில் அதேபோன்ற ஒரு நிலை இருப்பதை அறியமுடிகிறது.
 
எதற்க்கெடுத்தாலும்   "இயேசு அதை செய்வார்" "இயேசு இதை செய்வார்" இயேசு "சமாதானம் தருவார்"  "இயேசு சந்தோசம் தருவார்"  "இயேசு உன்னை விடுவிப்பார்"
என்று எங்கு பார்தாலும்
கிறிஸ்த்தவர்கள் இயேசுவை மிகவும் உயரத்தில் உயர்த்தி போதிப்பதை பார்க்கமுடிகிறது. அதில் எந்ததவறும் இல்லை! ஆண்டவராகிய இயேசு அனைத்தையும் செய்ய வல்லவர்தான்!  ஆனால் போதிப்பவர்கள் போதிக்கும் நோக்கத்தில்தான் மாறுபாடு இருக்கிறது. அவர்கள் அவர்மேலுள்ள பற்றிலோ பாசத்திலோ அவ்வாறு போதிக்காமல், அநேகர் தங்கள் பிழைப்புகளை ஓட்டவும், தங்கள் மேல் விழுந்த கடமைகளில் இருந்து எஸ்கேப் ஆகவுமே இவ்வாறு எதற்க் கெடுத்தாலும் அவரை முன்னிருத்தி தாங்கள் அவர் பின்னால் ஒளிந்து கொள்வது போல் ஒரு நிலையை ஏற்ப்படுத்துகின்றனர்.   ஆண்டவராகிய இயேசு போதித்த அடிப்படை அன்பு கூட அவர்களிடம் இருப்பதில்லை.  
     
இயேசுவே  அனைத்தையுமே செய்துவிட்டார்/ செய்துவிடுவார் நாம் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை  என்றால் புதிய ஏற்ப்பாடு புத்தகமே வேண்டாமே!  அனைத்தையும் அறிந்த இயேசு  ஒரே வார்த்தையின் "என்னை விசுவாசி நான் எல்லாவற்றயும் பார்த்துகொள்கிறேன், உனக்கு நித்திய ஜீவனை நிச்சயம் தந்துவிடுவேன்" என்று சொல்லிவிட்டால்  போதுமே.
 
அவர் அவ்வாறு சொல்லாமல்"
 
"ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைகொள்" என்றும்
"ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் என் கற்பனையை கைகொள்வான்" என்றும் 
"என் பிதாவின் சித்தம் செய்பவனே பரலோகத்தில் பிரவேசிப்பான்"
 
என்று சொன்னதும் அல்லாமல் சரியாக நடக்காதவனின் நாமத்தை ஜீவ புஸ்த்தகத்திலிருந்து  கிறுக்கிபோடுவேன் என்று கூட எச்சரித்துக்ள்ளார்.   
 
நாம்  இன்று அடையாளம்  காட்டும் கிறிஸ்த்து அதே கிறிஸ்த்துதானா?
 
அல்லது அவர் என்ன செய்வார் என்ன செய்யமாட்டார் என்பதை சரிவர அறியாமல் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சரிவர புரியாமல் நமது சுய மேன்மைக்காக சுய லாபத்துக்காக அவரை முன்னிருத்துகிரோமா?  
   
போருக்கு போகிற கோழைகள் தங்கள்  முன்னால் யாரையாவது போகவைத்து அவர்கள் பின்னால் பதுங்கி கொள்வார்கள். காரணம் அவர்களுக்கு அவரது கடமையை செய்யவோ, துணிந்து  எதிரியுடன் போரிடவோ அதிக தயக்கம். இந்த உலகில் சொகுசாக இன்னும் அதிகநாள் வாழவேண்டும் என்ற ஆதங்கம்.  எதிரிசுட்டால் முதலில்  விழுவது முன்னால் நிற்பவர்கள்தானே நாம் தப்பித்து கொள்ளலாம் அல்லவா?  அவ்வாறு தப்பித்துகொள்ளவே இன்று இயேசுவை முன்னிறுத்தி அவர்பின்னால் எல்லோரும் பதுங்கி பதுங்கி போவதுபோல் எனக்கு தெரிகிறது.
 
இயேசு சொல்கிறார் "அதை செய்" "இதை செய்" "அப்படி செய்" "இப்படி செய்" என்று ஆனால் நாம் சொல்கிறோம் "அவர் நல்லவர்" "அவர் வல்லவர்"  "அவர் சுகமாக்குவார்"  "அவர் ஆசீர்வதிப்பார்" என்று. சொல்வதை செய்யாமல் சுரையை பிடுங்கினான் என்றொரு கதைஉண்டு அதுபோல் தான் எங்கும்  நடக்கிறது.       
 
ஒருதரம்  ஆண்டவராகிய இயேசு நமக்காக நமது  பாவத்துக்காக  தானே நிராயுத பாணியாய் எதிரியின்  கரத்தில் தன்னை ஒப்புகொடுத்து,  எண்ணிலா வேதனையை அனுபவித்து தன் கடைசி சொட்டு இரத்தம்வரை சிந்தி மரித்துவிட்டார். அவர் தன் பக்கத்தில் இருந்து செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்து,  "எல்லாம் முடிந்தது". என்று சொல்லி போய்விட்டார். ஆனால் மனிதர்கள் இன்னும் உணர்வடைத்து அவர் காட்டிய  ஏழ்மை தாழ்மை வழியில், உலகத்தை வெறுத்து ஒதுக்கி, அவரை பின்பற்றி  நடவாமல் தாங்கள் சுகமாக வாழ்ந்துகொண்டு அவரை   முன்னால் நிறுத்தி,  தங்கள் சுயலாபத்துக்காக அவரை பயன்படுத்தி வருகின்றனர் .  
 
எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
 
என்ற வசனத்தை கருத்தில்கொண்டு, ஒருபுறம் அவரை புகழ்ந்தாலும் போன்றினாலும் சுவிசேஷம் சொல்லி மக்களை ஆண்டவரின் கரத்துக்குள் கொண்டு வந்தாலும்  இன்னொருபுறம் அவர் அருளிய ஆவியானவரின் பெலத்துடன் அவரது வார்த்தைகளை கைகொள்ள   நம்மை அற்பணித்துவாழ பிரயாசபட வேண்டும் அதுவே இன்றைய உலகுக்கு  முக்கியதேவை!      
 
பழய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தர் நமக்கு: 
 
கர்த்தர்  எனக்காக யாவையும் செய்து முடிப்பார் 
கர்த்தர் உனக்கு முன்னேபோய் கோணலானவைகளை செவ்வாய் பண்ணுவார் 
தடைகளை தகர்த்துபோடுகிறவர் உனக்கு முன்னே போகிறார்   
 
என்று அருமையான வார்த்தைகளை சொல்லி  நமக்கு முன்னேபோய் அனைத்தையும் நமக்காக செய்துமுடித்த நிகழ்வுகளை  அறிந்திருக்கிறோம்.  (அவ்வாறு முன்னால் போகும் கர்த்தர், ஏதாவது மீறுதல்  நடந்துவிட்டாலோ அல்லது யாராவது இடும்பு பண்ணினாலோ  ஆயி மக்கள் கையிலோ அல்லது அம்மோன் புத்திரர் கையிலோ பிடித்து கொடுத்துவிட்டு போய்விடுவது வேறு விஷயம்)
 
ஆனால் புதியஏற்பாட்டு காலம் அப்படியல்ல. ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தரின் சேனையில் ஒவ்வொரு போராளி. வான மண்டலத்தில் பொல்லாத ஆவிகளின் சேனையாகிய  "வஞ்சக ஆவி, பொறாமையின் ஆவி,  பில்லி சூனியஆவி. விக்ரக ஆவி, இச்சையின் ஆவி போன்ற பல்வேறு பொல்லாத ஆவிகளுடன்  ஒவ்வொரு வருக்கும் தனித்தனியே  போராட்டம் உண்டு.  அவற்றோடு போராடி மேற்கொள்ள தேவையான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் எல்லாமே ஆண்டவராகிய இயேசுவால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி சத்துருவை ஜெயிக்க பிரயாசப் படாமல் "இயேசு" என்ற வார்த்தையை ஏதோ பணம்  உருவாக்கி தரும் மந்திர சொல்போல பயன்படுத்திக்கொண்டு சுகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பது "நீந்தி  கரையைகடக்க  விரும்பாத ஒருவன் ஆண்டவர் பெயரை சொல்லிக்கொண்டு ஆற்றில் போய்  விழுந்த  கதைதான்".  அது ஒரு  சரியான நிலை அல்ல!


(இந்த கட்டுரை ஒரு பொதுவான கட்டுரை. யாரையும் தனிப்பட்ட முறையில் கருத்தில்கொண்டு இது எழுதப்படவில்லை)  
  
 


-- Edited by SUNDAR on Tuesday 25th of May 2010 05:45:25 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

இன்றைய நாட்களில் பல ஊழியர்கள் தங்கள் உலக பிழைப்பை நடத்தவும் பணம் சம்பாதிக்கவும் மட்டுமே இயேசுவை முன்னிறுததுவதை நாம் அறிய முடிகிறது.  

 
போகட்டும், அவர்கள் குடும்ப பிழைப்புக்கு பணம் அவசியம்தான். ஆனால் அவ்வாறு இயேசுவை முன்னிறுத்தி சம்பாதிக்கும் பணத்தை இயேசுவின் வார்த்தைக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு பகட்டான வாழ்க்கைக்கு செலவு செய்வதை பார்த்தால்தான் மனம் நோகிறது.
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard