அன்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு, உங்கள் அனுமதியில்லாமல் நான் செய்த ஒரு காரியத்தினால் உங்களது பார்வையாளர் எண்ணிக்கை இதோ "ஜம்ப்"ஆகியிருக்கிறது;அது என்ன என்று கேட்கவேண்டாம்;இது நான் செய்துள்ள இரண்டாவது முயற்சியாகும்;
இந்த தளத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது;அதுபோலவே நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதே என்னுடைய தரிசனமாகும்;
சகோதரர் எட்வின்,. ஸ்டீபன், தீமொத்தே, சந்தோஷ், அருள்ராஜ் யாருமே புதிய பதிவுகள் எதுவும் தராமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
இறைவனின் சித்தம் இல்லாமல் யாரும் ஒரு சிறு கல்லைக்கூட நகர்த்த முடியாது என்பது அனைவரும் அறிந்ததே
தாங்கள் விரும்பினால் தாங்கள் பதிவுகளை நிறுத்திவிட்ட காரணத்தை இந்த திரியில் தெரியப்படுத்தலாம் தவறுகளை திருத்திகொள்ள வசதியாக இருக்கும் ............................ /
தங்களுடைய அன்புக்கு நன்றி
எனக்கு exam இருந்தபடியாலும் வேலை சற்று அதிகாமாக இருந்தபடியாலும் என்னால் தொடர்ந்து பதிக்க இயலவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இந்த தளத்தை பார்வையிட்டு கொண்டுதான் இருக்கிறேன்.
சகோதரர் சுந்தர் , சந்தோஷ் இறைநேசன், சில்சாம் அவர்கள் எழுதுகிற காரியங்கள் படித்து தெரிந்து கொள்ளத்தான் முடிகிறது மிகவும் அறிய காரியங்களை எழுதுகிறபடியால் அதை பற்றிய கருத்துகள் தெரிவிக்கும் அளவிற்கு எனக்கு போதிய அறிவு இல்லாதபடியால் என்னால் கருத்துகளை பதிக்க முடியவில்லை.
எனக்கு தெரிந்த கருத்துகளை நானும் விரைவில் பதிகிறேன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
அன்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு, உங்கள் அனுமதியில்லாமல் நான் செய்த ஒரு காரியத்தினால் உங்களது பார்வையாளர் எண்ணிக்கை இதோ "ஜம்ப்"ஆகியிருக்கிறது;அது என்ன என்று கேட்கவேண்டாம்;இது நான் செய்துள்ள இரண்டாவது முயற்சியாகும்;
இந்த தளத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது;அதுபோலவே நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதே என்னுடைய தரிசனமாகும்;
அதற்கான காலம் கனியட்டும்..!
தங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி சகோதரரே!
தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
நாம் எல்லோருமே ஒரேதேவனைப் பற்றித்தான் எழுதிக்கொண்டுஇருக்கிறோம். சிறுசிறு கருத்து வேறுபாடுகளை தவிர வேறு எதுவும் நமக்குள் இல்லை. என்னை பொறுத்தவரை சகோ. பேரேயன்ஸ் சொல்வதிலும்சரி சகோ. அன்பு சொல்வதிலும் நீங்கள் சொல்வதிலும் அனேக உண்மைகள் இருப்பது மறுக்க முடியாது. ஆனால் அது மட்டும்தான் உண்மை என்ற நிலையில் அடுத்தவரை தாழ்த்தி எழுதுவது எனக்கு வருத்தமளிக்கிறது. யாரையும் குற்றம் சுமத்துவது நமது தளத்தின் நோக்கமல்ல.
எனக்கு யார்மீதி சிறிதும் மனகசப்பு கிடையாது .
அவரவர் தங்கள் அறிந்தவரை பதிவிடுகின்றனர். அவரவருக்கு தெரிந்ததைதானே அவரவர் எழுத முடியும்.
சமீப நாட்களாக தங்கள் எழுத்துக்களில் பிறரை அணைத்து செல்லும் அளவுக்கு நல்ல முன்னேற்றம் தெரிகிறது . வாழ்த்துக்கள்!
அன்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு, உங்கள் அனுமதியில்லாமல் நான் செய்த ஒரு காரியத்தினால் உங்களது பார்வையாளர் எண்ணிக்கை இதோ "ஜம்ப்"ஆகியிருக்கிறது;அது என்ன என்று கேட்கவேண்டாம்;இது நான் செய்துள்ள இரண்டாவது முயற்சியாகும்;
இந்த தளத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது;அதுபோலவே நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதே என்னுடைய தரிசனமாகும்;
அதற்கான காலம் கனியட்டும்..!
சகோதரர் சில்சாம் அவர்களுக்கு கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!
தாங்கள் எடுத்த முயற்ச்சியால் தளத்தை அநேக தேவபிள்ளைகள் பார்வையிடும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. உங்கள் முயற்ச்சிக்கு கர்த்தருக்குள் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எந்த செய்தி யாருக்கு போய் செரவேண்டுமோ அது ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் பொய் சேரும் அதை யாராலும் தடுக்க முடியாது. எவ்விதத்திலேனும் தேவனின் சித்தம் நிறைவேறவேண்டும் அதுவே நமது விருப்பம்!
அவருக்கே சதாகாலமும் மகிமை உண்டாவதாக!
-- Edited by SUNDAR on Tuesday 8th of June 2010 11:25:35 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனக்கு exam இருந்தபடியாலும் வேலை சற்று அதிகாமாக இருந்தபடியாலும் என்னால் தொடர்ந்து பதிக்க இயலவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இந்த தளத்தை பார்வையிட்டு கொண்டுதான் இருக்கிறேன்.
சகோதரர் சுந்தர் , சந்தோஷ் இறைநேசன், சில்சாம் அவர்கள் எழுதுகிற காரியங்கள் படித்து தெரிந்து கொள்ளத்தான் முடிகிறது மிகவும் அறிய காரியங்களை எழுதுகிறபடியால் அதை பற்றிய கருத்துகள் தெரிவிக்கும் அளவிற்கு எனக்கு போதிய அறிவு இல்லாதபடியால் என்னால் கருத்துகளை பதிக்க முடியவில்லை.
எனக்கு தெரிந்த கருத்துகளை நானும் விரைவில் பதிகிறேன்.
தங்கள் பதிவிற்கு நன்றி சகோதரரே! கடமை, நேர்மை, உத்தமம் என்பது மிக மிக முக்கியம். நேரம் கிடைக்கும்போது பதிவுகளை தர மறவாதீர்கள்.
நாம் யாரும் ஒருவரில் ஒருவர் தாழ்ந்தவர் அல்ல. உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாமல் இருக்கலாம் எனக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். மேலும் தெரியாத காரியங்கள் எதுவானாலும் நமது தேவன் தெரியப்படுத்த வல்லவராக இருக்கிறார் அவரிடம் பட்சபாதம் இல்லை.
சில கருத்துக்களில் வேறுபாடுகள் வரலாம் அனால் அது நிரந்தரமானது அல்ல. கருத்து வேறுபாடுகளை களைய நமது மாமிச குணங்ககளை வெல்லவேண்டியது அவசியமாகிறது.
தொடந்து வாருங்கள். இந்த உலகில் நாம் சந்திக்க முடியாவிட்டலும் ஆண்டவரின் ராஜ்யத்தில் நிச்சயம் ஓர்நாள் சந்திக்கலாம்.
-- Edited by SUNDAR on Tuesday 8th of June 2010 11:38:54 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நானும் ஒரு எழுத்தாளன் (..?!) என்பதால் தங்கள் காயங்களை அறிந்திருக்கிறேன்;ஆனாலும் தங்கள் பார்வையாளர் எண்ணிக்கை 30 அல்லது 33 லேயே தொடர்வதைக் கண்டு வருந்தியதுண்டு;நம்முடைய பிரயாசம் சிறியதாகவும் பலன் பெரியதாகவும் இருத்தல் வேண்டும் என்பதே பவுலடிகளின் பாணி;
இதனை மாற்ற நான் செய்த ஒரு சின்ன முயற்சி என்ன என்பதை நல்லபிள்ளையாக இருந்து கேட்காதது குறித்து அதிக மகிழ்ச்சி;
இனி தினமும் குறைந்தது 500 பேராவது வந்து செல்லும் தளமாக உயர நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பதைக் குறித்து யோசியுங்கள்;
கர்த்தர்தாமே தங்கள் முயற்சிகளை வெற்றியடையச் செய்வாராக..!
இந்த தளத்தில் கருத்துகளை பார்வையிட்டு அதன் படி ஒருவன் நடந்தால் போதும் அந்த ஒருவன் 1000 களை கொண்டு வருவான் அதில் சந்தேகமே இல்லை
தளத்தை 500 நபர்கள் பார்ப்பது முக்கியம் அல்ல தளத்தை பார்கின்ற அனைவரும் கர்த்தருடைய இருதயத்தின் படி நடப்பதே முக்கியம் இதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் பிரியாச பட வேண்டும் என்பதே என் நோக்கம்
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இந்த தளத்தில் கருத்துகளை பார்வையிட்டு அதன் படி ஒருவன் நடந்தால் போதும் அந்த ஒருவன் 1000 களை கொண்டு வருவான் அதில் சந்தேகமே இல்லை
தளத்தை 500 நபர்கள் பார்ப்பது முக்கியம் அல்ல தளத்தை பார்கின்ற அனைவரும் கர்த்தருடைய இருதயத்தின் படி நடப்பதே முக்கியம் இதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் பிரியாச பட வேண்டும் என்பதே என் நோக்கம்
ஆயிரத்தில் ஒரு வார்த்தையாக அருமையாக சொன்னீர்கள் எட்வின் அவர்களே.
கோலியாத்தை பார்த்து பயந்து ஓடும் ஆயிரம் ஆயிரம்பேர் ஆண்டவருக்கு என்றுமே தேவையில்லை. அவர்களால் ஆண்டவருக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் "உம்முடைய கற்பனைகளை கண்நோக்கும்போது வெட்கப்பட்டு போவதில்லை" என்று ஆரைகூவலிட்டு கோலியாத்தை ஒரே மனிதனாக எதிர்த்து நின்று ஜெயித்த தாவீதைப்போல ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து வாழும் ஒரே ஒருவர்தான் இன்று தேவனுக்கு வேண்டும். அந்த ஒருவனே கோலியாத்து போன்ற சாத்தானை ஆண்டவரின் பெலத்தால் மேற்கொள்ள முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு, உங்கள் அனுமதியில்லாமல் நான் செய்த ஒரு காரியத்தினால் உங்களது பார்வையாளர் எண்ணிக்கை இதோ "ஜம்ப்"ஆகியிருக்கிறது;அது என்ன என்று கேட்கவேண்டாம்;இது நான் செய்துள்ள இரண்டாவது முயற்சியாகும்;
இந்த தளத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது;அதுபோலவே நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதே என்னுடைய தரிசனமாகும்;
அதற்கான காலம் கனியட்டும்..!
நமது தளத்தில் இன்று ௦01/07/2010௦ அன்று சுமார் 200௦௦௦ வருகையாளர்களுக்கு மேல் வந்து சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்க்கு பேருதவி செய்த நண்பர் சில்சாம் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
இத்தனை வருகையாளர்கள் கடந்து சென்றும் ஏனோ செய்திகளை பார்வையிடுவோரின் எண்ணிக்கை உயராமல் இருக்கிறது காரணம் தெரியவில்லை.
தளத்தை பார்வையிடும் சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை ஓரிரு வரிகளில் பதிந்தால்கூட பலருக்கு பயனுள்ளதாக அமையும்
தளத்தில் உறுப்பினர்களாக பதிவுசெய்துள்ள சகோதரர்கள் தங்கள் நேரத்தை செலவுசெய்து வாரத்துக்கு ஒருபதிவு தந்தால் கூட அது பலருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் சோதனைககளும் அதை ஆண்டவர் துணையுடன் ஜெயித்த நேரங்களும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதுபோன்ற சம்பவங்களை பதிவுதன்மூலம், பிறருடைய விசுவாசம் வளர வாய்ப்பிருக்கிறது. வேதாகமம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள்தான் நிறைந்திருக்கின்றன.
நடந்த உண்மையையும் அதனால் அறிந்துகொண்ட பாடங்களையும் அவரவர் கருத்துக்களையும் எழுதி வைப்போம். அது யாருக்காவது ஒருவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.