நான் இவ்வளவு விளக்கியும் திரும்ப அதே முதல் நிலையில் வந்து நிற்கிறீர்கள். நீங்கள் மேலானவைகளையும் அறியவேண்டும் என்று நான் சொல்லுகிறேன் ஆனால் நான் 1வது வகுப்பில் படித்தது உண்மையா? என்பதை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்.
3 - 2 = 1 என்பது எக்காலத்திலும் உண்மை என்பதுபோல்
உங்கள் நம்பிக்கையில் எந்த தவறும் இல்லை சிஸ்ட்டர். அது முற்றிலும் உண்மை. நான் ஏற்கிறேன்
-- Edited by SUNDAR on Tuesday 18th of October 2016 12:46:19 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தாங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதை அறியவே கேட்டேன்..
தங்களின் விசுவாசம் என்ற பகுதியில் அநேக காரியங்களை நான் நேற்று அறிந்து கொண்டேன்....
மேலும் நான் அநேகமாக கிறிஸ்தவ தளங்களுக்கு செல்வதில்லை ஏனெனின் சில தவறான கருத்துக்கள் மற்றும் கள்ள உபதேசங்களும் போதிக்கப்படுவதால் ஆனால் உங்களது இந்த தளத்தில் தான் அநேகமாக கட்டுரைகளையும் கருத்துக்களையும் வாசித்துள்ளேன்.. சகலமும் வேத ஆதாரத்துடன் கூறப்படுவது மிகவும் சிறந்தது...
கடந்த ஞாயிற்று கிழமை எங்களுக்கு ஒரு வேதபாடம் நடந்தது அந்த பாடம் தேவனின் பரிசுத்த நிலைகள் பற்றியதாக இருந்தது,
அதில் அதை கற்று கொடுத்தவர் பிதாவாகிய தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் சமனான வல்லமை இருப்பதாக கூறினார் .. நான் அவரிடம் கேட்டேன் அப்படியாயின் இயேசு சொல்கிறார் என் பிதா என்னிலும் பெரியவர் , நான் வரும் நாழிகையையும் பிதா ஒருவரே அறிந்திருக்கிறார் இவைகளை வைத்து பார்க்கும் போது பிதாவே வல்லமையில் பெரியவர் என்று கூறினேன். அதட்கு அவர் அப்படி அல்ல இயேசு மனிதனாக இருந்ததால் தான் அப்படி சொல்கிறார் .. அவர் தேவனுக்கு சமமாயிருக்கிறார் என்று சொன்னார்.
அதட்கு வசன ஆதாரமாக பிலிப்பியர் 2 : 6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
காட்டினார்
வல்லமையில் இருவரும் எந்த வகையில் வித்தியாசப்படுகிறார்கள் என்பதை விளக்கவும்
நீங்கள் சரியான வசனங்களை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாடடார்கள் அவர்களோடு போராட வேண்டாம்.
இருவேறுபடட வல்லமைகளை அனுபவபூர்வமாக அறியவில்லை என்றால் இதை ஏற்றுக்கொள்வது கடினம்.
அதான் நான் கேட்டேன்
பவுலுக்கு இயேசுவை பற்றி அதிகம் தெரியுமா
இயேசுவுக்கு தன்னை பற்றி அதிகம் தெரியுமா என்று
இயேசுவுக்கு தெரியாத பல காரியங்கள் தேவனுக்கு தெரியும்.
உதாரணமாக வேதத்தின்படி பார்த்தால்.
அவர் வரும் நாழிகை
அவருடைய வலது பாரிசத்தில் யார் அமருவது என்பது போன்றது
அவர் மனுஷனாக இருந்தார்தான்! ஆனால் அவர் கிரியைகளும் வார்த்தைகளும் தேவனுக்கு சமமாக இருந்தது அல்லவா?
பின்னர் இந்த சில விஷயங்கள் மட்டும் அவர் அறியவில்லை என்று சொல்ல காரணம் என்ன?
காரணம்
பிதா தன ஆதீனத்தில் வைத்திருக்கு சில காரியங்களை மனுஷ குமாரனும் அறியார்!
இவ்விஷயங்களை குறித்து யாருடனும் வாக்குவாதம் பண்ண வேண்டாம்.
மத்தேயு 11:27சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
அனுபவமில்லாதவர்களுக்கு புரியாது.
நீங்கள் அறிந்து தேடுங்கள் வல்லமையிலுள்ள வித்யாசத்தை அறிந்து கொள்வீர்கள் பிறகு என்னுடைய விளக்கம் உங்களுக்கு தேவைப்படாது.
-- Edited by SUNDAR on Wednesday 21st of August 2019 04:42:47 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)