இந்த உலகமானது பல புரட்சிகளை சந்தித்திருக்கிறது. பசுமை புரட்சியினால் நவீன ரக தானியங்கள் கண்டுபிடிக்கபட்டு உணவு பஞ்சம் நீங்கியது. அதன் பிறகு ஏற்பட்ட தொழிற் புரட்சியினால் பல அறிவியல் கண்டுபிடுப்புகள் உண்டாயின. இப்போதோ உலகம் தகவல் தொழில்னுட்ப புரட்சியின் வழியாக சென்று கொண்டிருக்கிறது. இது போலவே உலகம் கி.மு சுமார் 400 - 500 ல் ஒரு ஆன்மிக புரட்சியை சந்தித்தது. இந்த காலத்திற்க்கு பிறகு உலகமெங்கும் ஆன்மிக நிலையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது.
இந்த கால கட்டத்தில் இந்தியாவில் புத்தர், மகாவீரர், சீனாவில் லாவோ சூ, கன்பிசியஸ், ஈரானில் ஜெராஸ்டிரர், யூத நாட்டில் ஏசாயா, கிரேக்க நாட்டில் சாக்ரடீஸ் போன்றோர் தோன்றி தங்கள் ஆன்மிக உணர்வை மக்களுக்கு பரப்பினார்கள். இவர்கள் வந்த நோக்கம் என்ன? இவர்கள் என்ன போதித்தார்கள் ஒருவேளை இவர்களுக்கு பிறகு வரப்போகும் ஒருவருக்காக வழியை ஆயத்தம் செய்ய வந்தவர்களா என்பதை இப்போது பார்ப்போம்.
இஸ்ரேலில் ஏசாயா : அ. விலங்குகள் பலியிடப்படுவதை நிறுத்த :
1.11. உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
ஆ. பழைய ஏற்பாடு முடிந்து போனதை அறிவிக்க (குறிப்பிட்ட காலம் வரை) :
13. இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன். 14. உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
இ. உலக மக்களுக்காக வரப் போகிற இரட்சகரை பற்றி அறிவிக்க (புதிய ஏற்பாடு) :
42.1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதிய யூத மக்களுக்கு தேவன் புறஜாதி மக்களுக்கும் ஒரு வழியை வைத்திருக்கிறார் என்பதை அவர் ஏசாயா மூலமாக தெரியப்படுத்தினார். இதன் மூலம் அவர்களின் அகங்காரத்தை அவர் அழித்தார்.
ஈ. தேவன் தன்னை நம்புகிறவர்களுக்கு துக்கமில்லா உலகத்தை வைத்திருக்கிறார் என்று அறிவிக்க
65.17. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. 18. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். 19. நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. 20. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்;நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்றுஎண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். 21. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். 22. அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். 23. அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். 24. அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். 25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
(தொடரும் : ஈரானின் ஜெராஸ்டிரர்)
-- Edited by SANDOSH on Friday 14th of March 2014 04:37:29 AM