ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள். அந்த தாய் முதல் குழந்தையை பார்த்து என் செல்லமே, என் உயிரே என்று கொஞ்சுகிறாள். பிறகு இரண்டாவது குழந்தையும் பார்த்து அதே போல கொஞ்சுகிறாள். இப்போது ஒரு சந்தேகம் வரலாம் தாயிடம் இருப்பதோ ஒரு உயிர். அந்த உயிர் ஒன்று முதல் குழந்தைக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது இரண்டாவது குழந்தைக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது என் உயிர் இருவருக்கும் பாதி, பாதி என்றாவது சொல்ல வேண்டும். எப்படி ஒரு ஒரு குழந்தையும் என் உயிர் என்று தனித்தனியாக சொல்ல முடியும்? என்ற சந்தேகம் வரலாம். ஆனால்
அந்த தாய் சொன்னதும் சரியானதே அன்பு என்பது முழுமையானது அந்த முழுமை தன் குழந்தைகள் அனைவருக்கும் தனிதனியாக சொந்தமானது. இதுவே அன்பின் தனித்தன்மை. தேவனும் உன்னத பாட்டில்
6.9. என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே;
என்று சொல்கிறார். இதன் பொருள் ஒருவர் மட்டுமே அவருக்கு விருப்பமானவள் என்பதல்ல. அன்பின் மிகுதியால் தன் முழு மனத்துடன் அவருக்கு பிரியமானவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் தனித்தனியாக தேவன் சொல்லும் வார்த்தையே அது.
இதை போன்ற வார்த்தை பிரயோகங்களை இன்னொரு சந்தர்பத்திலும் தேவன் பயன்படுத்துகிறார். ஒரு கூட்டத்தை நோக்கி பேசினாலும் தனிதனியாக பேசுவது போல் பேசுவதே அது.
இங்கே காதுள்ளவன் என்று ஒருமையிலே சொல்லியிருப்பதால் காதுள்ளவன் ஒருவதான் என்று அர்த்தம் இல்லை. காதுள்ளவர்கள் எவர்களோ என்பதே இதன் அர்த்தமாகும். அப்படியானால் இப்படியே சொல்லாமல் அப்படி சொல்ல என்ன காரணம்? இது பேசுவதிலுள்ள ஒரு பாணி. கூட்டத்திற்க்குதானே இந்த வார்த்தையை சொல்லுகிறார்கள் என்று சாதாரணமாக இந்த வார்த்தையை எடுத்து கொள்ளாதிருக்க ஒரு கூட்டத்தை பார்த்து பேசினாலும் தனிதனியாக பேசுவது போல் பேசுவதே அது.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ என்பது ஒருமையில் வந்துள்ளதால் அது ஒருவரைத்தான் குறிக்கும் என்று சொல்கின்றனர் ஆனால் மேலே சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும். இயேசு வந்தது முதல் இதுவரை பவுலை போன்ற ஊழியர்கள் அனேகர் வந்துள்ளனர். ஒருவருக்கு என்றால் அவர்களில் ஏழு பேர் நிச்சயம் இதை ஏற்கனவே பெற தகுதியுள்ளவர்களாயிருப்பார்கள். அப்படியானல் ஏழு பேருக்கு மட்டுமே பொருந்தும் (ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு மட்டுமே பொருந்தும்) வசனத்தை எல்லோர் கையிலும் கொடுக்க வேண்டியது என்ன?
மேலும் இதை படிக்கும் போது நீ, நீங்கள், உங்கள் என்பது மாறி மாறி வருவதை காணலாம். இப்போது மேலும் இதை பற்றி பார்க்கலாம்.
22.2. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
6. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
இப்படி இன்னும் சொல்லலாம்.
பவுலின் ஓட்டம் :
தான் சென்ற எல்லா நாடுகளிலும் இயேசுவை பற்றி சொல்லி அவர்களை ஏற்று கொள்ள வைக்கவும், அவர்களை விசுவாசத்தில் முன்னேற வைக்க வைப்பதும் பவுலுக்கு மிக பெரிய சவாலாக இருந்தது. அதற்காக ஒரு சில கருவிகளை பவுல் பயன்படுத்த வேண்டி இருந்தது. அவைகளில் ஒரு கருவியே இந்த வசனம்
1.கொரி 9.24. பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
விசுவாசிகளிடையே விசுவாசத்தை தூண்டி விடுவதற்காக சொல்லப்பட்ட இந்த வசனத்தை ஒரு சிலர் அப்படியே அர்த்தம் கொண்டு ஒருவர் மாத்திரமே பந்தய பொருளை பெறுவார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் அதை பவுலே பெற்று கொண்டிருப்பார். மற்றவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஒரு இடத்தில் இப்படி சொன்ன பவுல் இன்னொரு இடத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
7. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
8. இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
பவுல் முன்பு சொன்னது எது போன்றது என்றால் நம் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அவனிடம் முதல் மதிப்பெண் எடுத்தால் உனக்கு சைக்கிள் வாங்கி தருவேன் என்று சொல்வது போன்றது. இது போல ஒரு சில கருவிகளை பவுல் உபயோகித்துள்ளார். அவைகளை பற்றி தனி பதிவில்.
ஓட்ட பந்தயம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து (ஓடும் தூரம், எல்லை கோடு, மைதானம்) இலக்கை அடைய முயல்வது. இது எப்போதும் மனிதனுக்கு பொருந்தாது. ஒரு மனிதனின் வாழ்க்கை போல அடுத்த மனிதனுக்கு இருப்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடி நாம் அடைய வேண்டிய அதிகபட்ச இலக்கை அடைய வேண்டும் என்பதே இதன் உட்கருத்து. ஒருவனே பந்தயத்தை பெறுவான் என்று சொன்னது, அழைக்கப்பட்டவர்கள் அனேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்று இயேசு சொன்னதற்கு ஒப்பாகும். இது ஓட்டப் பந்தயம் சுலபமல்ல என்பதை சொல்வதற்காக சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
தேவன் ஒருவர் செய்த செயல்கள், மற்றும் அவர் தன் மேல் வைத்திருக்கும் அன்பு இந்த அடிப்படையிலேயே மனிதர்களை பார்க்கிறார். மற்ற மனிதர்களுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு மனிதனை அவர் அளவிடுவதில்லை. தேவன் ஓட்டப் பந்தயம் நடத்துகிறவர் அல்ல (ஒரு சிலர் சொல்வது போல). மற்ற மனிதர்களுடன் ஒப்பிட்டு ஒரு மனிதனின் தகுதியை தீர்மானிப்பது உலகத்தின் வழி. அது கடவுளின் வழி அல்ல.
அடுத்தவனை விட அதிக மார்க்கு வாங்க வேண்டும் என்று சொல்லியே இந்த உலகம் குழந்தைகளின் மனதில் நஞ்சை கலக்கிறது. இதன் மூலம் அந்த குழந்தையின் மனதில் பொறாமை, வஞ்சகம் முதலியன உருவாகின்றன. இதில் வெற்றி பெற்ற குழந்தைகள் பெருமைக்கு அடிமையாவதும், தோற்றவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையாவதும் அவர்கள் பிற்காலத்தில் பாவத்திற்க்கு இடமளிக்க வழி வகுக்கிறது. மனிதன் தன் சூழ்னிலைகளோடு போட்டி போட வேண்டுமே தவிர மற்ற மனிதன் ஒருனாளும் பிறனுக்கு போட்டி அல்ல. மற்ற மனிதர்களோடு ஒப்பிடுவது என்பது ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. அது ஆன்மிகமும் அல்ல.
மேலும் ஓட்ட பந்தயம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து (ஓடும் தூரம், எல்லை கோடு, மைதானம்) இலக்கை அடைய முயல்வது. இது எப்போதும் மனிதனுக்கு பொருந்தாது. ஒரு மனிதனின் வாழ்க்கை போல அடுத்த மனிதனுக்கு இருப்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடி நாம் அடைய வேண்டிய அதிகபட்ச இலக்கை அடைய வேண்டும் என்பதே இதன் உட்கருத்து.
இந்தியாவில் தன் சரக்கை விற்க வந்த பெப்சி கம்பெனியும், கொகோ கோலாவும் முதலில் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் இலாபம் குறையவே, பிறகு இந்தியனை சுரண்டுவதுதான் நமக்கு தேவையே தவிர ஒருவருடன் போட்டி போடுவது அல்ல என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்குள் போட்டியிடாமல் உடன்பாடு செய்து கொண்டு இந்தியனை நன்றாக சுரண்டி வருகின்றன.
-- Edited by SANDOSH on Wednesday 23rd of June 2010 09:57:56 PM
சகோதரர் சந்தோஷ் அவர்களே பொதுவாக தங்கள் கருத்துக்களில் நான் தலையிட விரும்பவில்லை ஏனெனில் நமது இரண்டுபேர் புரிதலிலும் சில அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நான் அறிவேன். அவரவர் விசுவாசித்தபடி அவரவருக்கு நடக்கலாம். அதைதான் வசனம் சொல்கிறது எனவே உங்கள் கருத்தில் தலையிடுவது எனக்கு உகந்ததல்ல என்றே கருதுகிறேன்.
ஆகினும் இந்த பதிவு என்னுடைய வெளிப்பாடுகளில் இடைபடுவதால் இதற்க்கு தகுந்த பதில் தரவேண்டியது எனது கடமையாகிறது.
SANDOSH WROTE: /////ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள். அந்த தாய் முதல் குழந்தையை பார்த்து என் செல்லமே, என் உயிரே என்று கொஞ்சுகிறாள். பிறகு இரண்டாவது குழந்தையும் பார்த்து அதே போல கொஞ்சுகிறாள். இப்போது ஒரு சந்தேகம் வரலாம் தாயிடம் இருப்பதோ ஒரு உயிர். அந்த உயிர் ஒன்று முதல் குழந்தைக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது இரண்டாவது குழந்தைக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது என் உயிர் இருவருக்கும் பாதி, பாதி என்றாவது சொல்ல வேண்டும். எப்படி ஒரு ஒரு குழந்தையும் என் உயிர் என்று தனித்தனியாக சொல்ல முடியும்? என்ற சந்தேகம் வரலாம். ஆனால் அந்த தாய் சொன்னதும் சரியானதே அன்பு என்பது முழுமையானது அந்த முழுமை தன் குழந்தைகள் அனைவருக்கும் தனிதனியாக சொந்தமானது. இதுவே அன்பின் தனித்தன்மை. ////
உலக மனுஷியாக இருக்கிற ஒரு தாய் அன்பின் மிகுதியால் தன் பிள்ளையை எப்படி வேண்டுமானாலும் கொஞ்சலாம் கோபத்தின் மிகுதியால் திட்டலாம் அல்லது எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லி பயம்காட்ட்லாம் அல்லது உணவு ஊட்டலாம், அது எங்கும் எழுதப்பட போவதும் இல்லை அதை யாரும் கேட்டு, நீ சொல்வது தவறு என்று சொல்லப்போவது இல்லை. ஆனால் தேவனின் வார்த்தைகள் அப்படிபட்டது அல்ல! அவர் பொய்யாக சொல்வது அன்பின் மிகுதியால் உளருபவரோ அல்ல! அவரது வார்த்தைகள் அழியாத நித்ய வார்த்தைகள்! என்றென்றும் நிலைக்கும் வார்த்தைகள் மனிதன் சாத்தான் தேவர்கள் என்று எல்லோருக்கு முன்னும் ஜீவிக்கும் ஜீவனுள்ள வார்த்தைகள். இவ்வார்த்தைகளை ஒரு தாய் தன் அன்பின் மிகுதியால் பேசும் பொய்யான வார்த்தைகளுடன் ஒப்பிடவேண்டாம். தேவன் வாயில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையும் மனிதனுக்கு ஜீவனை தரும்! அதை "அப்படி இப்படி" என்று மாற்றி பொருள்கொள்ள நான் விரும்பவில்லை. அதுவும் மிக தெளிவாக சொல்லும் தேவனும் உன்னத பாட்டின் கீழ்க்கண்ட வசனத்தை நீங்கள் சுட்டியுள்ளீர்கள்
6.9. என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே;
"ஒருத்தியே" என்ற வார்த்தையை "அநேகர்" என்று மாற்றி பொருள்கொள்ள நான் விரும்பவில்லை. அது ஒருத்தியே! நமது கருத்துக்கு ஒத்துவராமல் இருக்கும் ஒரு சில வாசனங்களின் பொருளை சற்று மாற்றினால் போதும், மொத்த வேத புத்தகத்தின் சாராம்சமே பொருள் மாறிவிடும். வேறு ஒரு புதிய கோணத்தில் எல்லாமே தோன்றும். எனவே எந்த ஒரு வசனத்தையும் நான் பொருள் மாற்றவோ அல்லது ஒருத்தி என்று சொல்வதை பலபேர் என்று எதிரிடையாக மாற்றவோ நான் விரும்பவில்லை.
மேலே தாங்கள் குறிப்பிட்ட வசனத்துக்கு முன்னால் உள்ள இந்த வசனத்தையும் சற்று கவனிக்க வேண்டும்.
தேவனால் தெரிந்துகோள்ளபட்டவர்கள் மீட்பை அடைபவர்கள் நித்ய ஜீவனை சுதந்தரித்து கொள்பவர்கள் அநேகர் உண்டு அதில் சில ராஜஸ்திரீகள் இருக்கலாம் சில மருமனையாட்டிகள் இருக்கலாம் அனேக கன்னியர்கள் இருக்கலாம் ஆனால் ஜெயம் கொள்பவன் ஒருவனே அவனே தேவன் குறிப்பபிடும் அந்த "ஒருத்தி"
SANDOSH WROTE: ////இதை போன்ற வார்த்தை பிரயோகங்களை இன்னொரு சந்தர்பத்திலும் தேவன் பயன்படுத்துகிறார். ஒரு கூட்டத்தை நோக்கி பேசினாலும் தனிதனியாக பேசுவது போல் பேசுவதே அது.
இங்கே காதுள்ளவன் என்று ஒருமையிலே சொல்லியிருப்பதால் காதுள்ளவன் ஒருவதான் என்று அர்த்தம் இல்லை. காதுள்ளவர்கள் எவர்களோ என்பதே இதன் அர்த்தமாகும். ஒரு சிலர் இந்த வார்த்தையை தொடர்ந்து வரும்
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ என்பது ஒருமையில் வந்துள்ளதால் அது ஒருவரைத்தான் குறிக்கும் என்று சொல்கின்றனர் ஆனால் மேலே சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும்.////
ஒரு கூடாமாக இருக்கிற ஜனங்களை பார்த்து "பசியுள்ளவன் எவனோ அவன் இங்கு சாப்பிடவரலாம்" என்று அழைப்பு விடுத்தால் அது நிச்சயம் ஒவ்வொருவரையும் தனிதனியாக அழைப்பதாகவே பொருள்படும். அங்கு பலபேர் சாப்பிட வரமுடியும் ஆனால், "வேகமாக சாப்பிடவேண்டும், அதிகம் சாப்பிட வேண்டும்" என்பது போல வழி முறைகளை தெரிவித்துவிட்டு "ஜெயிப்பவன் எவனோ" என்று தெரிவித்தால், அவ்வாறு பலபேர் செய்துவிட்டாலும் செய்ய முயன்றாலும் அதில் ஒருவன்தான் முதலிடம் பிடிக்க முடியும். அதுபோல் சபைகளுக்கு செய்தி சொல்லும் தேவன் பல கட்டளைகளை சொல்லி பின்னர் ஜெயம்கொள்பவன் எவனோ என்று குறிப்பிடுகிறார் எனவே அது ஒருவரைத்தான் குறிக்கும். ஏனெனில் ஒருவன் சாத்தானை ஜெயித்தபின் போட்டி முடிந்து விடும். மேலும் வேதம் சொல்லும் ஜெயம்கொள்ளுதலில் பல விதமான நிலைகள் இருக்கிறது. அந்திகிறிஸ்த்துவின் முத்திரையை தரிக்காமல் ஜெயம் கொண்டவர்கள் பலர் என்று பண்மையில் வேதம் குறிப்பிடுகிறது.
வெளி 15:௨மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
ஆனால் நான் குறிப்பிடும் அவருடைய கற்பனைகளின்படி செய்து ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவானாகி சாத்தானை ஜெயிக்கபோகும் ஜெயம்கொள்கிரவனோ ஒரே ஒருவதான் என்பதை கீழ்க்கண்ட வசனம் மிக தெளிவாக சொல்கிறது.
வெளி 21:௭ஜெயங்கொள்ளுகிறவன்எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
"ஜெயம்கொள்கிறவன்" என்றும் "அவன்" "அவன்" என்றும் திரும்ப திரும்ப ஒருமையில் குறிப்பிடப்படுகிறது. இவ்வார்த்தைகளை பண்மையில் மாற்றி பொருள்கொள்ள நான் விரும்பவில்லை
SANDOSH WROTE: /// இயேசு வந்தது முதல் இதுவரை பவுலை போன்ற ஊழியர்கள் அனேகர் வந்துள்ளனர். ஒருவருக்கு என்றால் அவர்களில் ஏழு பேர் நிச்சயம் இதை ஏற்கனவே பெற தகுதியுள்ளவர்களாயிருப்பார்கள்.///
அந்தே ஏழுபேர் மட்டுமல்ல இன்னும் எத்தனையோபேர் அதை பெற தகுதியுள்ள வர்களாக இருக்கலாம். ஆனால் அதை அவர்களால் இப்பொழுது பெற முடியாது நான் குறிப்பிவதுபோல் ஒருவன் ஜெயம்கொண்டு சாத்தானை ஜெயித்த பிறகே மற்றவர்களுக்கும் அது கிடைக்கும். அப்படி ஒரு பவுலோ அல்லது யோவானோ சாத்தானை ஜெயம் கொண்டிருந்தால் இன்று இந்த உலகம் அதே பழைய விழுந்து போன நிலையிலேயே இருக்காது. நாமும் "ஜெயம் கொள்கிறவன் எவனோ" என்ற வார்த்தையை மீண்டும் படித்துகொண்டு இருக்க மாட்டோம் எனவே அது இனிமேல் தான் நடக்கபோகும் செயலாக இருக்கிறது.
SANDOSH WROTE: /////அப்படியானல் ஏழு பேருக்கு மட்டுமே பொருந்தும் (ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு மட்டுமே பொருந்தும்) வசனத்தை எல்லோர் கையிலும் கொடுக்க வேண்டியது என்ன?///
சகோதரரே உலகத்திலே மொத்தம் ஏழு சபைகள்தான் இருக்கிறதா? அப்படி ஏழு சபையை மட்டும் தேவன் தெரிந்துகொண்டால் பின்னாளில் உருவான மற்ற எல்லா சபைகளையும் தேவன் நிராகரிக்கிறாரா? அப்படியல்ல
20. என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழுபொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
அதாவது இந்த உலகத்தில் உள்ள எல்லா சபைகளுமே தங்கள் தங்கள் செயல் பாட்டின் அடிப்படையில் இயேசுவின் வலது கரத்தில் உள்ள அந்த ஏழு சபை பிரிவுக்கும் அடங்கிவிடும். அந்தந்த சபைகளின் குறை நிறைகளை தேவன் தனித் தனியே குறிப்பிடுகிறார். மேலும் உன் கிரியை அறிநிருக்கிறேன் என்று திரும்ப திரும்ப சொல்வதால், ஒவ்வொரு சபையின் அதன் கிரியின் அடிப்படையில் அந்த ஏழு சபை பிரிவுக்குள் அடங்கிவிடும் என்பதே அதன் பொருள். எனவே ஆவியானவர் குறிப்பிடும் வார்த்தைகள் சபை என்ற பிரிவின் கீழ் இருக்கும் எல்லோருக்குமே பொருந்தும்.
SANDOSH WROTE: /////மேலும் இதை படிக்கும் போது நீ, நீங்கள், உங்கள் என்பது மாறி மாறி வருவதை காணலாம். இப்போது மேலும் இதை பற்றி பார்க்கலாம்.
SANDOSH WROTE: ////22.2. நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்./// அந்த ஒரு மனுஷன் ஜெயம்கொண்டதநிமித்தம் ஜீவ விருட்சம் மனுக்குலம் முழுவதற்கும் சொந்தமாகும்
ஜெயம் கொள்பவன் முதல் மரணத்தை ஜெயித்து இரண்டாம் மரணத்தின் அதிகாரத்தையும் முறியடிப்பான்
SANDOSH WROTE: /////முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.//// அதன் அடிப்படையில் முதல் மரணமடைந்த பரிசுத்தவான்கள் முதலாம் யிர்தெழுதல் அடைந்து இரண்டாம் மரணத்தை ஜெயிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
SANDOSH WROTE: ////பவுலின் ஓட்டம் :7. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.8. இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.////
சகோதரரே! நான் ஒரே ஒருவன் மட்டும்தான் கிரீடம் பெறுவான் என்றோ ஒரே ஒருவன்தான் தப்பிப்பான் என்றோ எங்கும் சொல்லவில்லை.
வெளி 21:ஜெயங்கொள்ளுகிறவன்எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்
மற்றவர்கள் அதன அடிப்படையில் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள். எப்படி ஒரே இயேசுவின் மரணத்தால் விசுவாசிக்கும் எல்லோருக்கும் பாவ நிவாரணம் கிடைத்ததோ அதுபோல நடக்கும் என்றே கூறுகிறேன்.
மற்றும் கீழ்க்கண்ட வசனத்தை நன்றாக கவனியுங்கள்
வெளி 3:21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல,
இயேசு வருவதற்கு முன் எத்தனையோ பரிசுத்தவான்கள் இந்த உலகில் தோன்றி மறைந்தார்கள், அனால் இயேசு ஒருவர்தான் ஜெயம் கொண்டு பிதாவின் சிங்காசனத்தில் அவரோடு அமர்ந்திருக்கிறார் அதே போல
வெளி 3:௨௧ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
அதுபோல் அவரது மரணத்துக்கு பின்னும் எத்தனையோ பரிசுத்தவான்கள் வாழ்ந்து மரித்துள்ளனர் ஆனால் இயேசுவோடு சிங்காசனத்தில் அமரப்போவது அந்த ஜெயம் கொள்ளப்போகும் ஒருவனே!
SANDOSH WROTE:
///ஓட்ட பந்தயம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து (ஓடும் தூரம், எல்லை கோடு, மைதானம்) இலக்கை அடைய முயல்வது./// இது எப்போதும் மனிதனுக்கு பொருந்தாது. ஒரு மனிதனின் வாழ்க்கை போல அடுத்த மனிதனுக்கு இருப்பதில்லை.////
உலகில் மனிதனாக பிறக்கும் எல்லோருக்கும் இந்த உலகம் என்ற மைதானத்தில் தான் சோதனை நடக்கிறது எல்லோருக்கு ஒரே தலைதான் ஒரே இருதயம்தான் இருக்கிறது! ஆனால் அவரவர் ஓடும் சூழ்நிலை மாறுபடுகிறது. பள்ளியில் ஓடி ஜெயித்தவன் மாநில அளவில் ஓட முயல்வதுபோல. ஓரிடத்தில் ஒருசூழ்நிலையில் ஓடி ஜெயித்தவன் அடுத்த சூழ்நிலைக்கு கொண்டு செல்லப்படுவான். இங்கு ஆராயபடுவது அவன் ஓடும் சூழ்நிலை அல்ல அவனுடைய இருதய நிலைகள் மட்டுமே
SANDOSH WROTE: ///தேவன் ஒருவர் செய்த செயல்கள், மற்றும் அவர் தன் மேல் வைத்திருக்கும் அன்பு இந்த அடிப்படையிலேயே மனிதர்களை பார்க்கிறார். மற்ற மனிதர்களுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு மனிதனை அவர் அளவிடுவதில்லை. மற்ற மனிதர்களுடன் ஒப்பிட்டு ஒரு மனிதனின் தகுதியை தீர்மானிப்பது உலகத்தின் வழி. அது கடவுளின் வழி அல்ல.////
பிறருடைய நடத்தைக்ளை சுட்டிகாட்டி அதைபோல் நீ நடக்கவேண்டும் என்று தேவன் பல இடங்களில் ஜனங்களுக்கும் ராஜாக்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறார்
II நாளாகமம் 7:௧௭உன்தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்
எசேக்கியேல் 16:௫௧நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன்பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
தேவன் ஒருவருடன் இன்னொருவரை ஒப்பிட்டு பார்க்கிறார் என்பதை நிரூபிக்க இதுபோல் அனேக வசனங்களை சுட்ட முடியும்
SANDOSH WROTE: ///தேவன் ஓட்டப் பந்தயம் நடத்துகிறவர் அல்ல (ஒரு சிலர் சொல்வது போல). மற்ற மனிதர்களுடன் ஒப்பிட்டு ஒரு மனிதனின் தகுதியை தீர்மானிப்பது உலகத்தின் வழி. அது கடவுளின் வழி அல்ல.////
சகோதரரே, தேவன் இங்கு ஓட்டபந்தயம் நடத்துகிறார் என்று நான் எங்கும் சொல்லவில்லை. சாத்தானை ஒருவன் ஜெயிக்க வேண்டியது கட்டாயமாகிறது! எனவே அதற்க்கான வழிமுறைகளாகிய "என்னை போல நீங்கள் பரிசுத்தராக இருங்கள்" "என் வார்த்தையை கைகொண்டு நடவுங்கள்" என்று சொல்லி தேவன் அதற்க்கு மனிதர்களை உற்சாகப்படுதுகிறார் நமக்குண்டான இடத்தை சாத்தான் பிடித்துகொண்டான் அவனை வீழ்த்துவதர்க்காக பலவித ஆவிக்குரிய ஆயுந்தங்களோடு எல்லோரும் ஓடுகிறோம் சாத்தானின் தலைவனை நெருங்க முடியாமல் பொறாமை வஞ்சம்/ கோபம்/ புறம்கூறுதல்/ இச்சை/கஞ்சதனம் போன்ற பல்வேறு சாத்தானின் கையாட்கள் நமை தடுக்கின்றனர். அவரவர் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப சண்டையிட்டு சமாளித்து ஒவ்வொருவரும் ஓடுகிறோம் இறுதியில் சாத்தானுடன் நேருக்கு நேர் போட்டியில் நின்று ஜெயிப்பவனே ஜெயம்கொள்பவன். அவனை நெருங்குவதும் ஜெயிப்பதும் சுலபம் அல்ல! இங்கு தேவனின் பங்கு நமக்கு பெலன் தனது வழிகாட்டி நம்மை உற்சாகபடுத்துவதே.
SANDOSH WROTE: /// மற்ற மனிதன் ஒருனாளும் பிறனுக்கு போட்டி அல்ல. மற்ற மனிதர்களோடு ஒப்பிடுவது என்பது ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. அது ஆன்மிகமும் அல்ல.///
வேத புத்தகத்தில் உள்ள அனேக மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் சிலரை போல நாம் செய்ய கூடாது சிலரைபோல நாம் செய்யவேண்டும் என்ற ஒப்பீட்டு படிப்பினைக்காகவே எழுதப்பட்டுள்ளது
யோபு 1:௮ கர்த்தர்சாத்தானை நோக்கி: உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். II இராஜாக்கள் 18:5(ராஜாவாகிய எசேக்கியா) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.
கர்த்தரே ஆன்மீக நிலையை சிலருடன் ஒப்பிட்டு "ஒருவனும் கிடையாது" கூறும் போது தங்களின் கூற்று சரியானதா என்று யோசிக்கவும்! ஒப்பீடு இல்லாமல் உலகில் ஒன்றும் இல்லை.
SANDOSH WROTE: ///மேலும் ஓட்ட பந்தயம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து (ஓடும் தூரம், எல்லை கோடு, மைதானம்) இலக்கை அடைய முயல்வது. இது எப்போதும் மனிதனுக்கு பொருந்தாது. ஒரு மனிதனின் வாழ்க்கை போல அடுத்த மனிதனுக்கு இருப்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடி நாம் அடைய வேண்டிய அதிகபட்ச இலக்கை அடைய வேண்டும் என்பதே இதன் உட்கருத்து. ///
அப்படி எல்லோரும் அதிகம் அதிகம் ஓடி அடையக்கூடிய முடிவில்லா இலக்கு என்று எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். எல்லாவற்றிக்குமே ஒரு முடிவு உண்டு:
நீதிமொழிகள் 23:18நிச்சயமாகவே முடிவுஉண்டு;
அந்த முடிவை எட்டியபின் யாரும் ஓடவேண்டிய அவசியம் இல்லை!
வேத புத்தகத்தில் எத்தனையோ பரிசுத்தவான்களை பற்றி எழுதப்பட்டிருந்தாலும் தேவனின் இருதயத்து ஏற்றவன்" என்ற பட்டத்தை பிடித்தவன் தாவீது ஒருவனே
அப்போஸ்தலர் 13:௨௨ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்;
அது அவரது தெரிவு! எதன் அடிப்படையில் இந்ததெரிவு என்பது நமக்கு தெரியாது எனவே எத்தனைபேர்கள் இருந்தாலும் 6.9. என் உத்தமியோ ஒருத்தியே; என்று தேவன் தெரிவு செய்ய நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.
இயேசு தெரிந்துகொண்ட பன்னிரண்டு பேரில் ஒருவன் பிசாசாய் இருந்தான் ஒருவன் இய்சுவுக்கு அன்பான சீடனாக இருந்தான், ஒருவன் சபை கட்டுவதற்கு கல்லாக அறியப்பட்டான். அவரவர் தெரிவில் வேறுபாடுகள் இருக்கிறதல்லவா? இதில் யூதாசையும் பேதுருவையும் தனித்தனியே பிரித்துதான் பார்க்கமுடியும். எனவேதான் அவனவன் கிரியின் அடிப்படையில் தேவனும் பிரித்து பார்க்கிறார்.
சகோதரரே! அடிப்படை கருத்துக்களில் சில மாறுபாடுகள் இருந்தால் அனைத்துமே மாறுபாடாகி விடும் என்பதை அறியவேண்டும். எனது மொத்த கருத்துக்களையும் தொகுத்து நான் ஆதியிலிருந்து இன்றுவரை உலகில் நடப்பதென்ன? என்ற திரியில் பதிவிட முயற்ச்சிக்கிறேன் . அதேபோல் தாங்களும் ஒரு தனி திரி தொடங்கி தொடக்கம் முதல் முடிவுவரை என்ன நடந்தது என்பதை தங்கள் புரிதலின் அடிப்படையில் பதிவிடுங்கள். பிறகு இரண்டுபேர் பதிவிலும் உள்ள குறை மற்றும் நிறைகளை ஆராயலாம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)