அறிந்ததும் அறியாததும் என்று ஒரு தலைப்பை கொடுத்து சில கேள்விகளை கேடடு பதில் இருக்கிறதா? என்று கேட்போருக்கு முடிந்த அளவு விளக்கம் கொடுக்க முயற்ச்சிப்போம். ஆண்டவர் தாமே அவர்களின் இருதயத்தை திறந்து உண்மையை புரிய வைப்பாராக!
1. "மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்ற இந்த வசனங்கள் நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?
ஏசாயா 1:25நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
சங்கீதம் 104:35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள்
என்ற வார்த்தைகளின்படி உலகில் உள்ள மக்களை எல்லாம் தேவன் புடமிட்டு துன்மார்க்கரை அழித்து நிர்மூகம் ஆக்குவார் மீதம் இருப்பவர்கள் பரிசுத்த வித்து எனப்படுவார்கள்
சகரியா 13:8தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்
9. அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்
துன்மார்க்கரை நிர்மூலமாக்கி இந்த மீதம் இருக்கும் பரிசுத்த ஜனங்களாகிய மாமிசமானவர்கள் எல்லோர் மேலுமே ஒருவர் விட்டாமல் தேவனுடைய ஆவி ஊற்றப்படும் அந்நாட்களில் பூமியில் இருப்பவர்கள் எல்லோருமே கர்த்தரை அறிந்திருப்பர் என்பதையே வசனம் சொல்கிறது . மற்றபடி
2."தாவீது பரத்துக்கு ஏறிப்போகவில்லையே" (அப்2:34) என்றால் தாவீது இப்போது எங்கே?
ஏசாயா 57:2நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
என்ற வசனப்படி, தாவீது மற்றும் தேவனுக்கு விருப்பமாய் நேர்மையாய் நடந்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு சமாதனமான இடத்தில் இளைப்பாறி கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது!
3. இதுவரை (கிறிஸ்துவுக்கு வெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படும்போது நியாயத்தீர்ப்பு எதற்கு? வேறு பெரிய நரகத்தில் போடப்படவா?, அல்லது தற்போது சரீரம் இல்லாமல் வேதனை அனுபவிக்கும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு பின்னர் சரீரத்துடன் நரகத்தில் தள்ளப்படுவார்களா?
அடிப்படை புரிதலில் ஏற்ப்பட்ட தவறுகளால் இந்த கேள்வி எழுதுகிறது. என்றே நான் கருதுகிறேன்
மரித்த ஐஸ்வர்யாவான் பாதாளத்தில் வேதனை படுகிறார்கள் என்றுதான் வசனம் சொல்கிறது எனவே கிறிஸ்த்துவுக்கு வெளியே மரித்தவர்கள் பாதாளம் என்னும் இடத்தில் வேதனைப்படுகின்றனர்
இந்த பாதாளம் என்னும் இடத்தின் தலைவன் அப்பொல்லியோன் என்னும் சாத்தான் ஆவான்
வெளி 9:11அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
எனவே இங்கு தண்டிக்கப்படும் ஜனங்கள் பிசாசினால் தண்டிக்கப்படுகின்றன. ஆனால் தேவனின் நியாய தீர்ப்புக்கு பின்னர் இந்த பாதாளம் மொத்தமும் அப்படியே அக்கினி கடலில் தள்ளுண்டு போகும் அதுவே சாத்தானின் முடிவு.
நியாய தீர்ப்புக்கு முன்னேயும் பின்னேயும் உள்ள தண்டனைகளின் வேறுபாடு என்னவென்றால்:
பிசாசினால் உண்டாகி, பிசாசின் பிடியில் சிக்கி, பிசாசின் இடமாகிய பாதாளம் செல்லும் ஜனங்கள், நியாயதீர்ப்பு நாள்வரை பிசாசினால் பாதாளத்தில் வாதிக்கப்படு கின்றனர். இதை பார்க்க சகிக்காத இரக்கமுள்ள தேவன் இந்த வாதையில் இருந்து மக்களை விடுவித்து பரதீசு என்னும் இளைப்பாறும் இடத்தில்\ சேர்க்கவே தனது குமாரனாகிய இயேசுவை மனிதனாக பூமிக்கு அனுப்பி மரிக்க வைத்தார் .
I யோவான் 3:8பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
எனவே, இயேசுவை ஏற்றுக்கொண்டு மரித்தால் அவனுக்கு பிசாசின் இடமாகிய பாதாளத்தில் வேதனை இல்லை அனால் மற்றவர்களோ எவ்வளவுதான் நீதிமானாக இருந்தாலும் பாதாளத்துக்கு போகவேண்டிய நிலையில் உள்ளனர்.
ஆனால் நியாயதீர்ப்புக்கு பின் உள்ள தண்டனையாகிய அக்கினி கடல் தேவனால் தீர்மானிக்கப்பட நித்தியமான ஓன்று! அதற்க்கு முடிவில்லை. ஆவி ஜீவிகளாகிய பிசாசுகளுக்காக அது உருவாக்கபாடது .
வெளி 20:10அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
இதில் என்னுடைய புரிதல்களை நான் சற்று எழுத விரும்புகிறேன். அதாவது இந்த நித்திய அக்கினி கடலில் தள்ளப்படுபவர்கள் யார் யார் என்பதை நாம் சற்று ஆராய்ந்தால்
வெளி 19:20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
வெளி 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
வெளி 20:14அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
வெளி 20:15ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
வெளி 21:8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
தேவனின் இறுதி நியாய தீர்ப்புக்கு பின்னர் அக்கினி கடலுக்குள் தள்ளப்படுவோர்.
1. மிருகம்
2. கள்ள தீர்க்கதரிசி
3. பிசாசானவன் ( இவை மூன்றுமே பிசாசின் திரித்துவ தன்மை)
இவர்கள் எல்லோரும் தற்போது குடிகொண்டுள்ள இடம் பாதாளம் அது அப்படியே அக்கினி கடலுக்குள் தள்ளப்பட்டு விடும்.
இவர்களில் நித்திய வாதை என்பது மிருகம்/கள்ள தீர்க்கதரிசி மற்றும் பிசாசானவனுக்கு மட்டுமே என்று வேதம் சொல்கிறது.
ஜீவ புத்தகத்தில் பெயரில்லாதவர்கள் மற்றும் கொடிய பாவம் செய்தவர்கள் அக்கினி கடலில் அவர்களுடன் தள்ளப்ப்ட்டலும் அவர்களுக்கு நித்திய வாதை என்று சொல்லப்படவில்லை எனவே தேவனின் மிகுந்த இரக்கங்களின் அடிப்படையில் கொடிய தண்டனைக்கு பிறகு அவர்களுக்கு ஓர்நாள் விடுதலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது அல்லது
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
என்ற வசனப்படி அந்த நெருப்பிலேயே அவர்கள் ஆத்துமா நித்யமாக அழிக்கப்பட வாய்ப்பிருக்கிறது
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)