தளத்தில் புதியதாக பதிவு ஒன்றை தந்துள்ள சகோதரி immaculate அவர்களை நம் இரட்சகராகிய இயேசுவின் இனிய நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம்!
தங்களின் இந்த பதிவு "எதுவுமேமனிதனின் பலத்தினால் அல்ல" என்ற கருத்தின் அடிப்படையில்மிகுந்த பொருள் பொதிந்ததாக இருப்பதால் இதை இங்கு தனி பதிவாக பதிவிடுகிறேன்.
கர்த்தருக்குள் அன்பின் வாழ்த்துக்கள் சில நாட்களாக தங்களது தளத்தை பார்த்து வருகிரேன் நல்ல வாழ்க்கை வாழமுயன்றுவருகிறிர்கள் என்று உங்கள் எழுத்தின் தெரிந்தேன் நன்றி. என்னுடைய நம்பிக்கை என்றாள் கடவுளுடைய உண்மையான வார்த்தை வரும்போது முழுவதும் நல்ல எண்ணங்கள் தான் வரும் சில காலம் தங்கி பின்னர் பின்னடைவு ஏற்படாதூ. நம்மில் ந்ல்லபழக்க்ங்கள் உண்டு ஆமாம். ஆமாம் ஏன்றாள் நாம் ஏன் தவறுகின்றேஅம் ஏனென்றாள் நாம் முமூமைஅடையவில்லை. உங்களது தளத்தில் நீங்கள்வெளியிட்டுள்ள எழுத்துக்கள் மூலம் தெரிந்தேன்.ஆதலால் நம்முடைய நல் வாழ்க்கையல்ல. கடவுளின் வார்த்தை மட்டுமே உயிருள்ளது நம்முடைய வெளிவேடம் அல்ல வெளிவேடம் நிலைஅற்றது.கடவுள் கிருபை உள்ளவர்கள் பாக்கியவான்.பதிவு இன்னும் தொடரும் நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள்..... தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
சகோதரர் immaculate wrote: /// என்னுடைய நம்பிக்கை என்றாள் கடவுளுடைய உண்மையான வார்த்தை வரும்போது முழுவதும் நல்ல எண்ணங்கள் தான் வரும் சில காலம் தங்கி பின்னர் பின்னடைவு ஏற்படாதூ.///
இதை எவ்வாறு இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை அன்பரே. ஒரு முறை இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் பின்னடைவு அடைந்ததே கிடையாதா?
தேமா (பவுலோடு சேந்து ஊழியம் செய்தவன்) இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான் என்று பவுல் சொல்லவில்லையா?
சத்துரு கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாம் என்று அலைகிறான், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கபட வாய்ப்புள்ளது என்றல்லவா வேதம் சொல்கிறது?
ஒருவன் பூமில் வாழும் நாள் வரை எக்கணத்திலும் ஆண்டவரை விட்டு பிரிந்துபோக வாய்ப்பிருக்கிறது எனவே விழிப்புடன் இருப்பது நலம்!
இயேசு சொன்ன வார்த்தையின்படி வாழ்பவனே எந்த நிலையிலும் அசைக்கமுடியாமல் இருக்கும் அஸ்திபாரம் உள்ளவன்
மத்தேயு 7:24,25
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
"நம்மால் முடியாது" "நம்மால் முடியாது" என்று சொல்லி வார்த்தைகளை கைகொள்ளாமல் வாழ்பவன் கடும் சோதனையில் விழுந்துபோவான்!
சகோதரர் immaculate wrote: ///நம்மில் ந்ல்லபழக்க்ங்கள் உண்டு ஆமாம். ஆமாம் ஏன்றாள் நாம் ஏன் தவறுகின்றே அம் ஏனென்றாள் நாம் முமூமை அடையவில்லை. உங்களது தளத்தில் நீங்கள்வெளியிட்டுள்ள எழுத்துக்கள் மூலம் தெரிந்தேன். ஆதலால் நம்முடைய நல் வாழ்க்கையல்ல. கடவுளின் வார்த்தை மட்டுமே உயிருள்ளது நம்முடைய வெளிவேடம் அல்ல வெளிவேடம் நிலைஅற்றது.கடவுள் கிருபை உள்ளவர்கள் பாக்கியவான்.பதிவு இன்னும் தொடரும் நன்றி.///
நம்முடைய நீதியால் தேவ நீதியை எட்ட முடியாது என்பதை யாரும் மறுக்க முடியாது! ஆகினும் ஒரு குழந்தையால் தன் தாயுடன் வேகமாக நடந்து வரமுடியாது என்பதற்காக அந்த குழந்தையை தாய் என்றும் தன் கையில் தூக்கி வைத்துக்கொண்டே அலைவது இல்லை. அதற்க்கு நடக்க கற்று கொடுக்கிறாள் அதன் அடிப்படையில் அந்த குழந்தை ஒருநாளில் தாயைப்போல நடக்கிறது.
இதுவே தேவனின் நிலையும்! அவர் நீதியை நிச்சயம் நம்மால் எட்டமுடியாது ஆனால் நம்மால் முடிந்த நீதி நியாயத்தை செய்து பாவத்தை விட்டு விலகி இருக்கவேண்டும் என்பதை இயேசு பவுல் எல்லோருமே வலியுருத்தியுள்ளனரே!
தேவனுடய கிருபை என்பது மிக உயர்ந்தது அதற்க்கு ஈடு இணை இல்லைதான் ஆனால் அது எல்லோருக்குமே இலவசமாக கிடைக்கிறது. கிருபையை பெற்ற நம்மிடம் கிரியை இல்லை என்றால் செத்த விசுவாசம் உடையவர்களே!
எனவே ஒரேயடியாக என்னால் எதுவும் முடியாது எல்லாம் தேவனாலே ஆகும் என்று எண்ணி உத்தமத்தையும் உண்மையையும் அசட்டை செய்பவன் தன்னிடம் உள்ள தாலந்தை புதைத்து வைத்த மனிதனை போன்றவனே.
ஒரு மனித வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் அனேக பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே எனது பதிவுகளை தந்துள்ளேன். எல்லோர் வாழ்விலும் இதுபோல் சோதனைகள் நிச்சயம் வரும். அவற்றை தேவபெலத்தில் நிற்று நாம் நிச்சயம் ஜெயிக்க பிரயாசப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
அதையே தேவன் விரும்புகிறார்.
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். I யோவான் 5:3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்;
அவரது கற்பனையை கைகொள்ளாதவனிடம் சத்தியமில்லை
I யோவான் 2:4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
இவ்வாறு வசனங்கள் கூறுகையில் ஒருவன் கற்பனைக்கு கீழ்படிந்து நடக்கும் நீதியான வாழக்கைக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்றால் வசனப்படி அவன் பொய்யனே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)