இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


வேத புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நரகம் / பாதாளம் / அக்கினிகடல் போன்ற சில வார்த்தைகளுக்கு அனேக விசுவாசிகளுக்கு சரியான விளக்கம் மற்றும் வேறுபாடு தெரியாத காரணத்தால் ஏற்பட்டும் தவறான புரிதல்களை தவிர்க்க,  நான் அறிந்துகொண்டவரை  விளக்கம் தர விளைகிறேன் !   
 
நரகம்: (HELL)
 
யோபு 26:6 அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

நரகம் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் HELL என்று குறிப்பிடப்பட்டு அதற்க்கு கீழ்க்கண்ட பொருள் தரப்பட்டுள்ளது.
 
Meaning:
1. the place or state of punishment of the wicked after death; the abode of evil and condemned spirits; Gehenna or Tartarus.
2. any place or state of torment or misery
 
Hell is a place of suffering and punishment in the afterlife- Wiki
 
பொதுவாக "நரகம் என்பது மரணத்துக்கு பின்னர் வேதனை அனுபவிக்கும் இடம்" என்று பொருள் கொள்ளலாம். மிக அதிக வேதனை அனுபவித்த  ஒருவர் 'நான் நரக வேதனையை அனுபவித்தேன்" என்று கூறுவதுண்டு 
 
இதன் அடிப்படையில் நரகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறிக்காமல் ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக உள்ளது. அதாவது   கொடிய வேதனை நிறைந்த அல்லது அனுபவிக்கும்  இடம் எதுவாக இருப்பினும் அது  "நரகம்" எனப்படுகிறது.
 
அதன் அடிப்படையில் நமது வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசனப்படி
 
சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே (கொடிய வேதனை உள்ள இடத்திலே) தள்ளப்படுவார்கள்.
 
 
பாதாளம் (HADES)
 
noun
1. Classical Mythology . a.  the underworld inhabited by departed souls.
 
பூமிக்கு கீழே இருக்கும் ஒரு உலகம் போன்ற இடத்தை   குறிக்குள் சொல்தான் பாதாளம் என்பது
 
ஏசாயா 14:9 கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து
 
என்ற வசனத்தின் மூலம் பாதாளம் பூமிக்கு கீழே இருக்கிறது என்பதை அறியலாம்
 
எண்ணாகமம் 16:33 அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள் 
 
தாத்தம் அபிராம் கூட்டத்தார் மோசேயை எதிர்த்ததன் காரணமாக  பூமி பிளந்து அவர்கள்  உள்வாங்கி கொண்டது. இவர்கள்  உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள் என்று வேதம் சொல்கிறது.
 
யோபு 24:19 வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
 
பாவிகளை எல்லாம் விழுங்கி வைத்திருக்கும் ஒரு இடம்தான் பாதாளம் என்று  வேதம் கூறுகிறது  இன்னும் பாதாளத்தைபற்றிய அனேக வசனங்கள் வேதத்தில் உண்டு!
 
எனவே பாதளம் என்பது பூமிக்கு கீழே மரித்தவர்கள் பாவிகள் போகும் ஒரு இடம். 
 
இந்த பாதாளம் கீழானபாதாளம், தாழ்ந்த பாதாளம், நரக பாதாளம் என்று மூன்று அடுக்குகளாக இருக்கிறது. 
 
நீதிமொழிகள் 15:24 கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி,.
சங்கீதம் 86:13  என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்
நீதிமொழிகள் 9:18  அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்
 
இந்த மூன்று அடுக்குகளான  பாதாளத்தில் நரக பாதாளம் என்னும் இடத்தில் மட்டும் கொடூர வேதனைகள் உண்டு! எனவேதான் அது நரக (வேதனையுள்ள) பாதாளம் என்று கூறப்படுகிறது.வேதம் இந்த இடத்தையும்  நரகம் என்றே குறிப்படுகிறது.  
 
மற்ற இரண்டு அடுக்கு பாதாளத்தில்  ஒன்றில் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத ஆனால் நேர்மையாய் வாழ்ந்த மனிதர்கள் தூக்க நிலையிலும்
 
ஏசாயா 57:2 நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
 
அடுத்ததில் ஓரளவு துன்மார்க்க  மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் ஆனால் வேதனை இல்லாமலும்  இருக்கின்றனர் . 
 
சங்கீதம் 31:17 கர்த்தாவே,  துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்
 
இந்த பாதாளம் என்பது சாத்தானின் சாம்ராஜ்யம்  நடக்கும் இடம். அதன் தலைவன் அப்பொல்லியோன் என்னும் சாத்தான். இங்கு ஜனங்களை வேதனைபடுத்துபவர்கள் சாத்தானின் கூட்டாளிகள்.
 
 
அவியாத அக்கினி கடல்: (GEHANNA)
 
NOUN- 1 Gehenna - a place where the wicked are punished after death
where sinners suffer eternal punishment
 
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

அக்கினி  கடல்  என்பது தேவனின்  வெள்ளை சிங்காசன இறுதி நியாய தீர்ப்புக்கு பிறகு  சாத்தானும் கொடிய பாவம் செய்தவர்களும் தள்ளப்பட போகும் இடம்.  இங்கும்வேதனை உண்டு என்பதால் இதையும் நரகம் என்று சொல்லலாம்.
 
எருசலேமில்  இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கு   என்று ஒரு இடம் இருந்தது. அங்கு மோளேகு என்னும் தெய்வத்துக்கு  பிள்ளைகளை தீயில் தகனிக்கும் செயல் நடந்தது. 
 
10. ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,

மேலும் அங்கு தேவையற்ற பொருட்கள் வீசப்பட்டு  அவியாதஅக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டு இருக்குமாம் எனவே அந்த இடத்தை ஆண்டவர் இந்த அவியாத அக்கினியுள்ள இடத்துக்கு ஒப்பிட்டு கூறியுள்ளார்
 
ஆண்டவராகிய இயேசு பல இடங்களில் குறிப்பிட்டுள்ள அவியாத அக்கினி என்பது இந்த இடமே. இது சாத்தானுக்கு நித்தியமானது.   
 
மத்தேயு 18:8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,
 
மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
இது சாத்தானுக்காக ஆயத்தப்படுத்தபட்டது.
 
சாத்தான் தேவனால் ஜெயிக்கப்பட்டபின்  பாதாளத்தில் தற்போது இருக்கும் சாத்தானின்  கிரியைகள்  அனைத்தும்  சாத்தானோடு கூட இந்த அக்கினிகடலில் தள்ளப்பட்டு போவதால் அதன் பின் பாதாளம் என்ற இடமோ அங்கு வேதனையோ இருக்காது
  
வெளி 20:14
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

தொகுப்பு:
 
நரகம்  : இது மிகுந்த வேதனை உள்ள எந்த ஒரு இடத்தையும் குறிக்கும் சொல். எனவே மிகுந்த வேதனையுள்ள எந்த இடமும் நரகமே.
 
பாதாளம் : இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஆத்துமாக்கள் மரித்த உடன் போகும் இடம்.  இது சாத்தானின் சம்ப்ராஜ்யம்.  இங்கு நரக பாதாளம் என்னும் மிகுந்த வேதனை உள்ள இடம் உண்டு.
 
அக்கினிகடல் அல்லது அவியாத அக்கினி : இது இறுதி நியாயதீர்ப்புக்கு பின்னர்
சாத்தானும் அவனது கூட்டாளிகளும் தள்ளப்பட போகும் நித்தய இடம் இங்கும் வேதனை இருப்பதால் இதுவும் 
நரகமே! 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

தொகுப்பு:

Bro.sundar wrote:
நரகம் : இது மிகுந்த வேதனை உள்ள எந்த ஒரு இடத்தையும் குறிக்கும் சொல். எனவே மிகுந்த வேதனையுள்ள எந்த இடமும் நரகமே.
 
பாதாளம் : இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஆத்துமாக்கள் மரித்த உடன் போகும் இடம். இது சாத்தானின் சம்ப்ராஜ்யம். இங்கு நரக பாதாளம் என்னும் மிகுந்த வேதனை உள்ள இடம் உண்டு.
 
அக்கினிகடல் அல்லது அவியாத அக்கினி : இது இறுதி நியாயதீர்ப்புக்கு பின்னர்
சாத்தானும் அவனது கூட்டாளிகளும் தள்ளப்பட போகும் நித்தய இடம் இங்கும் வேதனை இருப்பதால் இதுவும்
நரகமேசகோதரர் அவர்களே ..
----------------------------------------------------------------------------------
நிச்சயம் என்னால் உறுதியாக சொல்ல முடியும்..

நரகம் வேறு ..அக்கினி கடல் வேறு என்று...

 
வேதத்தின் அடிப்படையில் பாதாளத்தில் இரண்டு பிரிவு உண்டு..

1 )நியாதீர்பிற்கு காத்திருக்கும்  பரிசுத்தவான்கள் இளைப்பாறும் இடம்
2 ) நரகம் (பிசாசுகள் குறித்த காலம் வரும் வரைக்கும் வதைக்க படும் ஒரு இடம்)

மரித்தவர்கள் மாத்திரமே இவ்விடங்களுக்கு  செல்ல இயலும்..

வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

 

வேதம்,எசுவானவர் மரித்த பின்  பாதாளத்திற்கு இறங்கினார் என்று சொல்லுகிறது..அவர் பாவமில்லாத பரிசுத்தர் . நரகத்தில் அவரது பிரசன்னம் இல்லை எனவே அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை .. அவர் பூமீயின்  இதயத்தில் மூன்று நாள் இருந்தார்.(யோனாவின் அடையாளத்தை தமக்கும் அடையாளம் என்று இயேசு கூறும் பொழுது சொன்னது )

மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

ரோமர் 10:7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக

எனவே பூமியின் இதயம் பாதாளம் .அது பரிசுத்தவான்கள் தற்காலிகமாக இளைப்பாறும் இடமாக வேதத்தில் காட்டப்பட்டு உள்ளது..

 மேற்கூறிய இரண்டு இடங்களும்  காணகூடிய அளவு மட்டுமே தூரமாக உள்ளவை..கவனிக்க
ஒரு பெரும் பிளவு மட்டுமே இரண்டையும் பிரிகின்றது ..

கவனிக்க.....

லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்..

லூக்கா 16:26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்

 

வசன அடிபடையில் நிச்சயம் பாதளம் என்பது பூமீயின்  அடியில் தான் உள்ளது..

எண்ணாகமம் 16:33 அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்

பிசாசுகளையும், நியாயதீர்ப்பு பெறாத பாவிகளையும் வதைக்கும் தற்காலிகமான தற்போதய இடம் நரகம்
 

லூக்கா 8:31 தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.

நம் ஏசு மரிபதற்கு முன் பாதாளத்தின் திறவுகோல் பிசாசின் கையில் இருந்தது..மரித்து உயர்த்த பின் திறவுகோல் நம் கிறிஸ்துவிடம் கை மாறியது.. 

வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

இந்த   பிசாசின் கையில் திறவுகோல் இருந்த போது அவன் பரிசுத்தவான்களையே பாதாளத்தில் இருந்து எழுப்புகிரவனாக காணப்பட்டான்!!!

நம் கர்த்தாதி கர்த்தர் அதை தம்முடை உயிர்தெளுதலின் வல்லமைனால் திரவுகொலினை அவனிடம் இருந்து பறித்தார்..


சாமுவேலை அஞ்சனம் பார்க்கிற ஸ்த்ரி பாதாளத்தில் இருந்து எழுப்பினாளே!!



 (I சாமுவேல்28 :13-15.)

ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.

சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.



வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்

மேற்கூறிய வசனத்தில் மரணம் என குறிப்பிடபடுவது முதலாம் மரணம்- அது தற்போதுள்ள நரகம்.மேற்கூறிய வசனத்தில் பாதாளம்  என குறிப்பிடபடுவது நியாதீர்படையாத தேவ மனிதர்கள் இளைப்பாறும் இடம் 

 

அக்கினி கடல் நியாதீர்பிற்கு பிறகு நித்திய காலம் வதைக்க படும் இடம்.. இதுவே இரண்டாம் மரணம் என சித்தரிக்க படும் இடம்..

எனக்கு அருளப்பட்ட வெளிப்படின் படி பாதாளம்,நரகம் எனும் இடங்கள் பூமியிலே தான் உள்ளது..

அக்னி கடல் பூமியில் நியாயத்தீர்ப்பு நாள் அன்று ஏற்படுத்த பட்டிருக்கும்..

பின் வரும் வசனத்தை கவனிக்க...

வெளி 20:10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

இரவும் பகலும் சூரியனை மையமாக கொண்ட பூமிக்காக மற்ற கோள்களுக்காக ஏற்படுத்த பட்டது ...

ஆகவே இந்த அக்னிகடல் சூரிய குடும்பதிற்குள்ளாக  தான் இருக்க வேண்டும்..

வெளி 21 :23 . நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு

நியாயத்தீர்ப்பு முடிந்த பின் புதிய பூமி ஏற்படுத்தப்படும்.. அதற்கு சூரியனும் ,சந்திரனும் இல்லை..தேவ மகிமையே ஒளி தரும்..

வெளி 20 :14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

இவ்வசனத்தை கண்ணோக்கும் போது நிச்சயம் அக்கினி கடலானது பாதாளம், நரகம் இவ்விரண்டையும் விட பெரியதாக இருக்கும் என்பது தெளிவாகிறது..

 



------------------------------------------------------------------------------------
 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.(Iயோவான்1 :10)

 


 



 



-- Edited by JOHN12 on Wednesday 7th of December 2011 06:05:04 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Super explanation

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
RE: நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


 

மற்ற இரண்டு அடுக்கு பாதாளத்தில்  ஒன்றில் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத ஆனால் நேர்மையாய் வாழ்ந்த மனிதர்கள் தூக்க நிலையிலும்
 
ஏசாயா 57:2 நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
 
அடுத்ததில் ஓரளவு துன்மார்க்க  மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் ஆனால் வேதனை இல்லாமலும்  இருக்கின்றனர் . 
 
சங்கீதம் 31:17 கர்த்தாவே,  துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்
 
 
 
வசனம் இப்படி சொல்ல "வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்"
 
அடுத்ததில் ஓரளவு துன்மார்க்க  மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் ஆனால் வேதனை இல்லாமலும்  இருக்கின்றனர் . எப்படி ஆகும் அவர்களும் நித்திய அக்கினியில் தள்ளப்பட்டு போவார்கள் அல்லவா?
 
தேவனுடைய பிள்ளைகள் மரித்தால் எங்கு போவார்கள்? பரதீசு என்று குறிப்பிடப்படுவது எங்கு உள்ளது ?
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

///வசனம் இப்படி சொல்ல "வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்"
 
அடுத்ததில் ஓரளவு துன்மார்க்க  மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் ஆனால் வேதனை இல்லாமலும்  இருக்கின்றனர் . எப்படி ஆகும் அவர்களும் நித்திய அக்கினியில் தள்ளப்பட்டு போவார்கள் அல்லவா?///
 
 
ஆம் தள்ளப்படுவார்கள் அதற்க்கு முன்னர் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை வரிசை கிரமமாக படியுங்கள் 
 
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 
 
முதலில் மரித்தோருக்கு அவரவர் கிரியைக்கு தக்கதாக ஒரு நியாயதீர்ப்பு கொடுக்கப்படுகிறது. இதில்தான் அந்த ஓரளவு துன்மார்க்க நிலையில் இருந்தவர்கள்  நியாயத்தீர்ப்பு அடைவார்கள். 
 
அடுத்து,  
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 
அடுத்து வரும் நியாயத்தீர்ப்பும் கிரியையில் அடிப்படையில்தான் நடக்கும். (கிரியையில் முக்கியத்துவம் இங்கே விளங்கும்) 
தாழ்ந்த பாதாளத்தில் உள்ளவர்கள் இங்கு நியாயத்தீர்ப்படைவார்கள். 
   
பின்னரே மரணமும் பாதாமும் அக்கினியில் தள்ளப்படுகிறது. (அதாவது கிரியையில் தேராதவர்கள்) 
 
14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
 
இங்கு தனியாக இன்னொரு வசனம் சொல்கிறது: 
 
15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

 

 
இந்த வசனம் சொல்வதை சரியாக பார்த்தால்  "ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ"
 
அதாவது ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டு பின்னர் தேவனால் கிறுக்கிப்போடப்பட்டு அதில் பெயர் காணப்படாதவன் மாத்திரமே இங்கு அக்கினி கடலிலே தள்ளப்படுகிறார்கள்  
 
 
 
(இது வசனத்தின் அடிப்படையில் எனது கணிப்பு மாத்திரமே)


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


அப்படியாயின் தேவனை அறியாத நீதியாய் வாழ்ந்தவர்கள் பரலோகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா?

தேவனை அறியாமல் நீதியாய் நேர்மையாய் வாள்பவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுமா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


Debora wrote:

அப்படியாயின் தேவனை அறியாத நீதியாய் வாழ்ந்தவர்கள் பரலோகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா?

தேவனை அறியாமல் நீதியாய் நேர்மையாய் வாள்பவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுமா?


 


///அப்படியாயின் தேவனை அறியாத நீதியாய் வாழ்ந்தவர்கள் பரலோகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா? ////

 
யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். 
 
 
அந்த ஒரு ஸ்தலம்தான் பரலோகம் ராஜ்ஜியம் அதில் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தவிரவேறு யாரும் செல்ல முடியாது.
 
 
///தேவனை அறியாமல் நீதியாய் நேர்மையாய் வாள்பவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுமா?///
 
 
ஜீவ புஸ்தகம் என்பது கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக புஸ்தகம். 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


அப்படியாயின் கிறிஸ்துவை ஏற்று கொள்ளாதவர்கள் நன்மை செய்தாலும் சரி தீமை செய்தாலும் சரி அவர்களுக்கு பரலோகம் இல்லை.. அவர்களும் அக்கினி கடலிலே தள்ளப்பட்டு போவார்கள் அப்படியா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


காணாமல் போன ஒரே ஒரு ஆட்டினை தேடி அலைந்த தேவன் அப்படி விட்டுவிடுவார் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. 
 
தங்கள் கருத்துக்கு ஒத்த  வசனம் எதாவது வேதாகமத்தில் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.   அதை பற்றி ஆராயலாம்.
 
 
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 
 
இங்கு   புஸ்தகங்கள் திறக்கப்பட்டன 
முதலில் புஸ்தகங்கள் திறக்கப்படடன என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதால். அந்த புஸ்தங்கங்கள் ஒரு மனுஷனின் கிரியைகள் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகமாக நான் கருதுகிறேன். 
அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
எனவே கிரியைக்கு தகுந்த நியாயத்தீர்ப்பு என்று ஓன்று இருப்பதாகவே நான் கருதுகிறேன்.  அந்த நியாயத்தீர்ப்பின் தண்டனையானது  நித்தியமாக இருக்காமல் காலக்கணக்கின் அடிப்படையில் இருக்கலாம்.  . 
 
ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது;
அடுத்து ஜீவ புஸ்தகமும் திறக்கப்படுகிறது.அதில் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டவர்களை பற்றிய டீடெய்ல்ஸ் மட்டுமே இருக்கும். 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அப்படியாயின் எப்படி பார்த்தாலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தண்டனை  அனுபவிப்பது உறுதி தானே ..

 

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நீதியாய் நியாயமாய் வாழ்கிறவர்கள்  நித்திய அக்கினியில் தள்ளப்படமாட்டார்கள் என்றால் நாம் சுவிஷேசத்தை அறிவிக்க அவசியம் இருக்கிறதா? எனக்கு குழப்பமாக இருக்கிறது. அப்படி என்றால் இயேசு கிறிஸ்து இப்படி சொல்ல காரணம் என்ன அண்ணா? 

 

மத்தேயு 28 : 

19  ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

 

20  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

 

ஆண்டவரை ஏற்றுக்கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் நீதியாய் வாழ்ந்தால் போதும் என்றால் சுவிஷேஷத்திட்காக எத்தனை எத்தனை பேர் தன ஜீவனை கொடுத்தார்கள் .. இன்னும் கொடுக்கிறார்கள்.. 

 

இதெல்லாம் ஏன்? நீதியை வாழ்ந்தால் மட்டும் போதும் என்று போதிக்கலாமே...

 

எனது கணிப்பு படி பார்த்தால்  இந்த உலகத்தில் நீதியாய் நியாயமாய் பாவம் செய்யாமல் ஒருவரால் வாழ முடியாது தேவனுடைய துணை இல்லாமல் .. எனவே தேவனை ஏற்று கொள்வது முக்கியமாய் காணப்படுகிறது. ஆகவே நாம் சுவிஷேசத்தை அறிவிக்க வேண்டும்.. இது சரியா? 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்த உலகத்தில் இன்றைய கால நிலையில் ஒரே ஒருவரை சுவிசேஷம் சொல்லி கிறிஸ்த்துவுக்குள் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு நாளைக்கு 49481  பிறப்புகள் இந்தியாவில் மட்டும் நடக்கிறது. 
 
நீங்கள் சுவிசேஷம் சொல்லித்தான் எல்லோரையும் இரட்சிப்பதாக இருந்தால் அது எந்த அளவுக்கு சாத்தியம்?  நரகத்துக்கு போகும் கூடடம் கோடி கணக்கில் பெருகிக்கொண்டே போகிறதே.
 
எனவே இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு மேன்மையான காரியம் எல்லோருக்கும் சுவிசேஷம் சொல்லவேண்டும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதில் உள்ள தேவ நோக்கம் என்பது  விசேஷமான ஓன்று.  
 
அனால் 
அவரை ஏற்றுக்கொண்டவரை தவிர மற்ற எல்லோரும் நித்திய அக்கினிக்கு செல்வார்கள் என்பது வேதத்தில் சொல்லப்படாத விஷயம்.   அநேக கிறிஸ்த்தவர்கள் அதுபோல் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.   
 
இந்நிலையில் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்வதன் மேன்மை என்ன? 
 
யோவான் 3:18 வரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; 
 
அவரை விசுவாசிக்கிறவனுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை என்பது உறுதி.  ஆம் நான் என்னதான் நம் சுய பலத்தால் பரிசுத்தமாக வாழ நினைத்தாலும் அது தேவனுக்கு முன்னால் அழுக்கான கந்தை போன்றது. நம் பாவங்களுக்காக மரித்த இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நமக்கு கன்ஸேஷன் முறையில் ஆக்கினை தீர்ப்பில் இருந்து விடுதலை கிடைக்கிறது.  
 
 
ஆனால் இயேசுவை விசுவாசியாதாவனோ:
 :
விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில்  விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 
 
 
விசுவாசியாதவன் அந்த கன்ஸேஷன்  மீட்ப்பை ஏற்காததால் அவர்கள் எல்லோரும் ஜெனரல்ஆக  ஆக்கினை தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறார்கள். அந்த ஆக்கினை தீர்ப்பு எப்படிப்பட்ட்து என்பதை வெளிப்படுத்தின விசேஷத்தில் பார்க்கிறோம்  நியாய தீர்ப்பின்போது கிரியையில் அடிப்படையில் அவர்களுக்கு அதிகமாகவோ அல்லது குறைத்தோ தண்டனை கிடைக்கும்.  தண்டனை இல்லாமல் தப்பிக்க முடியாது. 
 
உதாரனமாக கொடிய குற்றம் செய்த  எல்லோருக்கும்  ஆயுள்  தண்டனை உறுதியாகிவிடடாலும் அது நிறைவேற்றப்படுவதும் நன்னடத்தை அடிப்படையில்  குறைக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும் அரசு கையில் இருப்பதுபோல்தான். 
 
அவர்களுக்கு தண்டனை என்பது நிச்சயம் உண்டு. ஆனால் அது  எல்லோருக்கும் நித்திய அக்கினியாக இருக்க வாய்ப்பில்லை அவரவர் கிரியையில் அடிப்படையில் அது குறைக்கப்படலாம் என்பதே எனது கருத்து. 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம்
Permalink  
 


 (I சாமுவேல்28 :13-15.)

ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.

சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

இதில் மரித்த பரிசுத்தவான்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது? சாமுவேல் ஏன் கலைத்தாய் என கூறப்படுவது மூலம் அது உறுதிப்படுகிறது 

 

 

லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்..

லூக்கா 16:26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்

 

பின்னர் இவ்வசனத்தில் ஆப்ரகாம் ஐஸ்வர்யவனுடன் உரையாடுகிறார் 

 

ஆக எனக்கு தெரிந்துகொள்ள வேண்டியது என்ன என்றால் 

 

1. மரித்த பரிசுத்தவான்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார்களா? இல்லையா?

 

2. அவர்களால் எழும்பி உரையாடவும் முடியுமா?

 

3. மரித்த பரிசுத்தவனை மீண்டும் எழுப்ப எப்படி அந்த மந்திரகாரியால் முடிந்தது ?

 

 

சற்று விரிவாக விளக்கவும் 

 



-- Edited by Debora on Wednesday 5th of September 2018 12:57:20 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

 

சாமுவேல் எழுப்பப்படும் இந்த பகுதியை பொறுத்தவரை அனேகன் அது சாமுவேல் அல்ல என்ற கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் ஆனால் என்னை பொறுத்தவரை அவள் எழுப்பியது சாமுவேல்தான்.. அவன் சொன்னது எல்லாமே அப்படியே நடந்தது.  
 
பழைய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை ஆண்டவராகிய இயேசு மரிக்காத காரணத்தால் யாருக்கும் மீட்ப்பு உண்டாயிருக்கவில்லை எனவே. பாதாளத்தின் எல்லா பகுதியும் சாத்தானின் கன்ரோலில் இருந்தது. அதனால் அஞ்சனம் பார்த்து சந்துருவின் உதவியுடன் தூங்குபவரை கலைக்கும்  ஒரு நிலை இருந்ததால் கர்த்தர் அஞ்சனம் பார்க்க கூடாது என்ற ஒரு கடடளையை கொடுத்திருந்தார்.  
 
ஆண்டவராகிய இயேசு மறித்து எழுந்தபோது பரிசுத்தவான்கள் எல்லோரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிடடார்கள்.
 
    1. 50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
    1. 51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.
    1. 52. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
    1. 53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
இயேசுவின் மரணத்துக்கு பிறகு அவர்கள் எல்லோரும் சந்துருவின் கரத்தில் இருந்து விடுபட்ட்தால் அவர்களை எழுப்பும் வல்லமை தற்போது மனுஷனுக்கு கிடையாது.


-- Edited by SUNDAR on Wednesday 5th of September 2018 08:52:34 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Thanks anna

லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்..

லூக்கா 16:26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்



பின்னர் இவ்வசனத்தில் ஆப்ரகாம் ஐஸ்வர்யவனுடன் உரையாடுகிறார்



ஆக எனக்கு தெரிந்துகொள்ள வேண்டியது என்ன என்றால் அவர்களால் எழும்பி உரையாடவும் முடியுமா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சிஸ்ட்டர் நான் பாதாளத்துக்குள் போனது 1992 ம் வருடம். அதாவது கிறிஸ்த்து மறித்து உயிர்த்தபின் உள்ள புதிய ஏற்பட்டு காலம். அப்பொழுது அங்கு எப்படி இருந்தது என்பதை என் அனுபவத்தின் மூலம் சொல்ல முடியும்.

லாசரு/ஆபிரகாம் ஐஸ்வர்யவான் சம்பவம் ஆண்டவராகிய இயேசுவின் காலத்தில் அவர் மரணத்துக்கு முன் இருந்தது. அப்போதுள்ள நிலையை வசனம் மூலமே அறிந்துகொள்ள முடியும்

அப்பொழுது எப்படி இருந்தது என்பதை ஆண்டவரே சொல்கிறார் அது வசனமாக எழுதப்பட்டுள்ளது அதை அப்படியே நம்பவேண்டியதுதான் நமது கடமை.

Debora
//ஆக எனக்கு தெரிந்துகொள்ள வேண்டியது என்ன என்றால் அவர்களால் எழும்பி உரையாடவும் முடியுமா? ///

முடியும்! முடிந்தது! நடந்துள்ளது! என்று ஆண்டவரே சொன்ன பிறகு நாம் என்ன விளக்கம் கொடுப்பது /கேள்வி கேட்பது சிஸ்ட்டர்

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard