நமக்கு பிடிக்காத ஒருவரைப்பற்றி நாலுபேர் குறைபேசிக்கொண்டு இருதால், அவரோடு சேர்ந்து நாமமும் நாலு வார்த்தைகளை அந்த நபரைப்பற்றி குறை சொல்லி தீர்ப்பது என்பது அநேகருக்கு மிகவும் பிடித்தமான் காரியம் என்பதை யாரும் மறுக்க முடியாது!
அரசியலில் மட்டுமே அதிகமாக இருந்து வந்த இந்த காரியம் இன்று ஆன்மீகத்துக்குள்ளும் நுழைந்து விட்டது மிகுந்த வேதனையை தருகிறது.
நாய் கடிக்கிறது என்பதற்காக நாமும் திருப்பி கடிக்க முடியுமா?
என்ற ஒரு பழமொழி உண்டு! ஆனால் இன்று அநேகர் அவ்வாறு கடிக்க முயன்று தோற்றுக்கொண்டு இருப்பதை வலை தளங்களில் அனேக இடங்களிலும் காண முடிகிறது. ஆண்டவரைப்ற்றிய போதனைகளை கேட்பதைவிட அடுத்தவர்களை குறைகூறி எழுதுவதற்கே அதிக வரவேற்ப்பு இருப்பதையும் அறிய முடிகிறது
சமீப காலமாக மனிதர்கள் தாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம்? நாம் அறிய வேண்டியது அனைத்தயும் சரிவர அறிந்திருக்கிறோமா? ஆண்டவரை இன்னும் அதிகமாக அறிய என்னென்ன முயற்ச்சிகள் எடுக்கவேண்டும், தேவன் நம்மிடம் எதிர்பாப்பது என்ன? இன்னும் நமது வாழ்வில் நாம் சரி செய்யவேண்டிய பாவபகுதி எது? என்பதையும், அவரது வேதத்தின் மகத்துவத்தை அறியும்படி அவரது பாதத்தில் அமர்ந்து முழு உண்மகளை அறிய விரும்புவதையும் மறந்து தாங்கள் எல்லாம் அறிந்ததுபோல் அடுத்தவரை மற்றும் பிற மதத்தவரை ஏதாவது ஒருவிதத்தில் குறை சொல்வதில் மிகுந்த ஆர்வமாக காட்டுகின்றனர்!
என்று வேதம் போதிக்கும் பட்சத்தில் இவ்வாறு பிற சகோதரர்களையும் பிற மதத்தவரையும் குறைகூறிக்கொண்டு திரிவது ஆண்டவருக்கு உகந்த ஒரு நிலையா என்பதை இங்கு சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன்!
இந்த தலைப்பு பற்றி சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Page 1 of 1 sorted by
இறைவன் -> விவாதங்கள் -> அடுத்தவரை தாக்கி விமர்சிப்பதில் அலாதி பிரியம்!