இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நமது தளத்துக்காக ஒரு சிறு ஜெபம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நமது தளத்துக்காக ஒரு சிறு ஜெபம்!
Permalink  
 


மஹா பரிசுத்தம் உள்ள எங்கள் பரம தகப்பனே இந்த நல்ல நாளுக்காக நன்றி. இந்த நாளிலும் கூட எங்களை நீர் தற்காத்து  கரம்பிடித்து வழி நடத்துகிறீர் அதற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா.

இந்த தளத்தில் பங்குபெறும் சகோதர/சகோதரிகளும் இங்குள்ள செய்திகளை வாசித்து செல்லும் அன்பர்களையும்  நீர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். இங்குள்ள செய்திகளை வாசிக்கும் பிறமத சகோதர சகோதரிகளின்  இருதயங்களில் நீர் பேசும் உம்முடைய பாதுகாப்பின் கரத்துக்குள் ஓடிவர கிருபை தாரும்  !
 
இங்கு கருத்துக்களை பதியும்  ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் பிறருக்கு தேவையான நல்ல கருத்துக்களை பதிய தேவையான ஞானத்தை தரும்படி மன்றாடுகிறோம். எங்களுக்குள் அன்பை தாரும், மன தாழ்மையை தாரும் உம்முடைய மிகுந்த இரக்கங்களால் எங்களை சத்துருவின் கரத்தில் இருந்து பாதுகாத்துகொள்ளும். ஒவ்வொருவர் குடும்பங்களையும் தனித்தனியே  நீர் ஆசீர்வதியும்.
 
உம்முடைய நாம மகிமைக்காகவும்  உம்முடைய மகிமைகளை வெளிப்படுத்தவும் உம்முடைய திட்டங்களை அறிவிக்கவும் உம்மைப்பற்றி அதிகம் தியானிக்கவும் உம்முடய வேதத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கவும் உம்முடைய இருதய எண்ணங்களை வெளிபடுத்தவும் எங்களுக்கு இலவசமாக நீர் ஏற்ப்படுத்தி கொடுத்துள்ள இந்த தளத்துக்காக உமக்கு மிகுந்த நன்றியை  எறேடுக்கிறோம்.
 
உமக்கு சித்தமானதை மாத்திரம் இங்கு எழுதவும் உமக்கு சித்தம் இல்லாத வார்த்தைகள் இங்கு எழுதப்படும்போது எங்களுக்கு  கண்டித்து உணர்த்தி அதை திருத்திகொள்ளவும் நீர் எங்களோடு இருந்து வழி நடத்தும்படி மிகுந்த  தாழ்மையும் வேண்டுகிறோம்.
 
எங்களால் அல்ல கர்த்தாவே, எல்லாமே உம்முடைய அளவற்ற கிருபையினால் நடக்கிறது! நீர் செய்ய நினைப்பதை யாரும் தடுத்துவிட முடியாது.  எங்களை கரம்பிடித்து எழுத கற்றுகொடும் எழுதப்படும் சத்திய வார்த்தைகளை அனேக அன்பவர்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அறிந்து கொண்டு அதன்படி வாழ கிருபைதாரும். ஆயிரங்களுக்கு  பயனுள்ளதாக இத்தளம் அமையட்டும்.

யாருக்கும் இடரலை ஏற்ப்படுத்தும் வார்த்தைகள் இங்குபதிந்துவிடாதபடிக்கு எங்களை   தற்காத்துகொள்ள  தேவையான ஞானத்தை தாரும். இனி வரும் காலம் குறுகியதாக 
இருந்தாலும் அந்த குறுகிய காலத்துக்குள்
நிறைவாதனை செய்து முடிக்க பெலந்தாரும் சமய சந்தர்ப்பங்களை வாய்க்கப்பண்ணும்!   .
 
தளத்துக்கு விரோதமாக செயல்படும் எல்லா அந்தகார சக்திகளும் குழப்பத்தின் ஆவிகளும்   இயேசுவின் வல்லமைமிக்க நாமத்த்தினால் செயலிழந்து போவதாக! பிரிவினைகளின் ஆவிகள் இங்கு செயல்படாதபடி நீர் பாதுகாத்தருளும்.  ஒருமனப்பட்டின் ஆவியை தாரும்.  .
 
சகலத்திலும் உம்முடைய  நாமம்   மாத்திரமே மகிமைப்படுவதாக! இயேசுவின் இனிய நாமத்தில்  ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள எங்கள் பிதாவே!  
 
ஆமென்!
 

(சகோதர சகோதரிகள் எனக்காகவும் நமது தளத்துக்க்காகவும் ஜெபித்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்)  
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

ஆமென்,ஆமென்,ஆமென்..!


__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

கடந்த சில நாட்களாக நமது தளத்தில் பதிவுகள் தரும் பல சகோதர்கள், வேலைப்பளு, கணணி இல்லாமை, எழுதும் வாஞ்சை  இல்லாமை, தியானித்து புது கருத்துகளை எழத விருப்பம் இல்லாத நிலை   போன்ற வெவேறு சூழ்நிலைகளில் ஆட்கொள்ளபட்டு, தொடர்ந்து எழுதமுடியாத  நெருக்கத்தில் இருப்பதை நம்மால் அறியமுடிகிறது.
 
இந்த தளம் தொடர்வதும் தொடராததும் தேவனின் சித்தப்படி நடக்கட்டும் ஆகினும் இந்த காரியங்கள் சத்துருவின் கிரியையால் உண்டாயிருந்தால் அதை நீக்கிபோடும்படிக்கு  நம் தள சகோதர்களுக்காக ஒரு மன்றாட்டை ஆண்டவரிடம் முன்வைப்பது நல்லது என்று கருதுகிறேன்
 

"எங்கள் அன்பின் பரலோக பிதாவே இந்த அருமையான நேரத்துக்காக உமக்கு நன்றி அப்பா. ஏதோ உம்முடைய பெரிதான கிருபையில், உம்முடய சித்தப்படி இந்த் தளம் தொடங்கப்பட்டு கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. இந்த தளத்துக்கும் எங்களுக்கு  நீங்களே பதுகாவலாராக இருந்து எங்களை வழி நடத்துகிறீர்என்பதை நாங்கள் ஐயமற அறிவோம் ஆண்டவரே!  

இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களை வாசிக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் அந்த கருத்துக்களில் உள்ள  உண்மை தன்மையை அறிந்துகொள்ளும்படிக்கு தேவன் தாமே அவர்கள்  இருதயம் திறந்து உண்மையை விளங்க பண்ணி நாங்கள் முக்கியமாக வலியிருத்துவதும்  நீங்கள் எதிர்பாப்பதுமாகிய உம்முடைய சித்தத்துக்கும் உம்முடைய கற்பனைகளுக்கும்  கீழ்படிந்து வாழ தேவையான ஞானத்தையும் பெலத்தையும் தந்தருளுவீராக. இங்கு எழுதப்படும் கருத்துகளுக்கு எடிட்டரும் ஆசிரியருமாக இருந்து உமக்கு சித்தம் இல்லாத காரியங்கள் எதுவும் எழுதப்படாதபடிக்கு நீரே பார்த்துகொள்ளுங்கள் ஐயா!

சுற்றி வளைத்து நம்மை உள்ளே இழுத்து ஒன்றுமில்லாமல் ஆக்க முயலும் உலக காரியங்களில் மூழ்கிவிடாமல் உம்முடைய வேத வசனங்களை எப்பொழுதும் தியானிக்க வேண்டும்  என்ற ஒரே நோக்கத்தோடுதான் இந்த தளத்தை நாங்கள் ஆரம்பித்தோம் என்பதை நீர் அறிவீர்! எங்களின் அந்த இருதய வாஞ்சையை ஆராய்ந்து அங்கீகரித்தருளும் உம்முடைய  நாமம் வலைத்தளங்களிலும் மகிமைப்படுவதாக!

இங்கு எழுதப்பட்ட கருத்துக்களின் உண்மையை அறிந்து, உம்மால் ஞானத்தை பெற்று, நமக்கு உற்ற துணையாக நின்ற நமது அன்பு சகோதரர்கள் தொடர்ந்து தளத்தில் கருத்துக்களை எழுதமுடியாதபடிக்கு பல்வேறு தடங்கல்கள் உண்டாயிருப்பதை நீர் அறிவீர். ஒரு வேளை அது உம்முடைய சித்தப்படி நடந்திருக்குமானால் அதில் நாங்கள் தலையிடுவதர்க்கில்லை, நீர் எங்கள் நமைக்ககவே எல்லாவற்றையும் செய்யும் தேவன் ஆனால் ஒருவேளை அந்த தடங்கல்கள் சத்துருவின் கிரியையால்  உண்டாயிருக்குமானால் அந்த தடைகள் எல்லாம் உடனே நீங்கிபோடும்படி இயேசுவின் வல்லமை மிக்க நாமத்தில் நான் கட்டளையிட்டு உம்மிடம் மன்றாடுகிறேன். சத்துரு வெட்கப்பட்டு போகும்படி செய்யும்


சங் 70:3  ,  , என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப் போவார்களாக. 4.உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக

உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக! உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூலோகத்திலும் செய்யப்படுவதாக!  உம்முடைய நாமம் மாத்திரம் எந்நாளும் மகிமைப்படுவதாக!

இயேசுவின் இணையற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவலுள்ள நல்ல பிதாவே!  


ஆமென்!
 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தளத்தில் முதலில் இருந்த விறுவிறுப்பு நிச்சயம்  குறைந்திருப்பதை அறிய முடிகிறது. காரணம், நமது  வாழ்வாதாரமாகிய தொழிலை உண்மையாக செய்ய வேண்டியது  அவசியமாகிறது. இறைவன் எல்லா காரியங்களிலும் நேர்மை மற்றும் உண்மையை எதிர்பார்க்கிறார் என்பதை தேவ பிள்ளைகளாகிய நாம் அறிவோம். எனவே நமக்கு அதிகம் எழுத முடிய வில்லை என்றாலும் முடிந்த நேரத்தில் தேவ நாம மகிமைக்கென்று எழுதுவோம்.    

மேலும்,  அன்றில் இருந்து இன்றுவரை எதிர்ப்பு என்பது யாருக்கு இல்லாமல் இருந்தது?

நல்லவனுக்கும் எதிர்ப்பு உண்டு தீயவனுக்கும் எதிர்ப்பு உண்டு இந்த உண்மையை நாம் எல்லோருமே அறிவோம். எனவே தீர விசாரித்து உண்மையை அறிவோம். 
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நமது விசுவாசம் மாத்திரம் ஒழிந்துபோகாதபடிக்கு இறைவன் நம்மை காத்துகொள்ளவே வேண்டுகிறோம்.
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: . லூக்கா 22:32
.
நமது இக்கட்டான சூழ்நிலையில் நமக்காக வேண்டிக் கொள்ளும் ஒரு ஆவியான தேவன் நமக்கு உண்டு. எனவே யாருடைய வார்த்தையாலும் சோர்ந்து போகாமல் ஆண்டவர் வரும் வரைக்கும் நம்மால் முடிந்ததை செய்வோம்.


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

தளத்தில் விறுவிறுப்பு கூடியிருப்பதற்க்காக தேவனுக்கே மகிமை உண்டாகுக!!
சகோதரர்களின் விண்ணப்பங்கள் நம்  தேவனின் சமூகத்தில் அங்கீகரிக்க பட்டதற்காக ஸ்தோத்திரம்!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard