இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன்! உண்மை என்ன?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
நித்திய ஜீவன்! உண்மை என்ன?
Permalink  
 


இயேசு கிறிஸ்த்து பூமியில் வாழ்ந்த காலங்களில்  ஒரு வாலிபன் அவரிடம் வந்து "நித்திய ஜீவனை சுதந்தரிப்பதர்க்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேள்வி எழுப்பினான்.
 
அதற்க்கு இயேசு,      மத்தேயு 19:17  நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். என்று பதிலளித்தார்!
 
பழைய  ஏற்பாட்டு  காலத்தை  பொறுத்தவரை ஜீவனில் பிரவேசிக்க கற்பனைகளை கைகொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது என்று கருதுகிறேன்.  ஆனால் இயேசு உலகத்தின் மொத்த  பாவங்களுக்கும் மரித்து உயிர்த்தபின்னர்,  புதிய ஏற்பாட்டு காலத்தில் நித்திய ஜீவன் என்றால் என்ன என்பதற்கு பதிலை கீழ்கண்ட தருகிறது என்று எண்ணுகிறேன். 

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
 
இங்கு இரண்டுபேரை பற்றி நாம்  அறிந்துகொள்வதே நித்திய ஜீவன் என்று  வேதம் திட்டவட்டமாக  சொல்கிறது. 
 
1. மெய் தேவன்
2. இயேசு கிறிஸ்து
 
ஆனால்  இங்கு  ஒரு கூட்டத்தினர் "இயேசுவை மட்டுமே பிரதானமாக போதித்து  எல்லாம் அவரே! பிதா/ குமாரன்/ தேவன் எல்லாம் அவர்தான்" என்று கூறி வருகின்றனர்.  வேறுசிலர் "தேவனை மட்டுமே எல்லாம் என்று போதித்து இயேசுவின் தேவத்துவ தன்மையை அறியாமல்  ஒரு  தூதரின் அந்தஸ்த்துக்கு குறைக்கின்றனர்"  இதில் எது உண்மை?
   
மெய்தேவனை அறியாமல் இயேசுவை  மட்டும் அறிவதாலோ அல்லது இயேசுவை அறியாமல்  மெய் தேவனை அறிவதாலோ நித்தியஜீவனை பெறமுடியுமா?
 
இது குறித்து சகோதரர்களின் கருத்துக்கள் என்ன?    


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

1 யோவான் 4:7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்;

1 யோவான் 2:3,4 இயேசுவின் கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

எரேமியா 22:15,16  நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

இத்திரி துவக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் யாரும் பதிவைத் தர முன்வரவில்லையே! திரியைத் துவக்கிய சகோ.இறைநேசன் கூட பாராமுகமாக இருக்கிறாரே, காரணம் என்னவோ?

நித்திய ஜீவன் பற்றிய உண்மையை அறிய ஆவலில்லையா, அல்லது ஏற்கனவே எல்லோரும் உண்மையை அறிந்துவிட்டார்களா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தேவனையும் அவர் அனுப்பிய  இயேசு  கிறிஸ்துவையும் அறிவதுதான் நித்திய ஜீவன் என்பது வசனம் போதிக்கும் உண்மை.
 
இங்கு தாங்கள் குறிப்பிடுவதுபோல் தேவனை அறியும் அறிவு என்பது தேவனுக்கு ஏற்ற கிரியைகளை செய்வது, அதாவது அவரது கற்பனையை கைகொள்ளுவது மற்றும் நற்க்கிரியைகளை செய்வது என்பதை தாங்கள் பல்வேறு வசனங்கள் மூலம் விளக்கியுள்ளீர்கள்.
 
கொலோசெயர் 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து,  
 
தேவனை அறிகிற அறிவில் விருத்தியடந்தவன் சகலவித நற்கிரியைகளால் நிறைந்திருப்பான் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒருவரின் நற்கிரியைகள் மூலமே  அவர் தேவனை அறிந்திருக்கிறாரா இல்லையா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.
 
ஆகினும் ஒரு காரியத்தை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
 
மனிதன் தன் சுயமுயச்சியால்  என்னதான் நற்கிரியைகள் செய்தாலும் அது தேவன் எதிர்பார்க்கும்  நிலையை எட்டுமா என்பது சந்தேகத்துக்குரியது. எனவே தேவன் எதிர்பார்க்கும் விதத்தில் நம்முடைய நற்கிரியைகள் அமையவேண்டும்! அதுவே தேவனை சரியாக அறியும்முறை. இவ்வாறு தேவன் எதிர்பார்க்கும் கிரியைகளை சரியாக செய்வதற்கு தேவனுடய  ஆழங்களை அறிந்த ஆவியானவர் ஒருவராலேயே முடியும்  
 
I கொரிந்தியர் 2:10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
 
அதாவது,
 
1. தேவனை அறிகிற அறிவு வேண்டும்  : அதற்க்கு பரிசுத்த ஆவியின்
அபிஷேகம் வேண்டும் 
(தற்காலத்தில் பரிசுத்தத் ஆவி என்ற பெயரில் அனேக போலி ஆவிகள் கிரியை செய்கின்றன ஒருவர் உண்மையான பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறாரா என்பதை அவரது நற்கிரியைகள் மற்றும் பிறருக்காக பரிதபிக்கும்/ கருணையுள்ள மனநிலை போன்றவற்றை வைத்தே அறியமுடியும்)
 
2. அவர் அனுப்பிய இயேசுவை அறிய வேண்டும் : இயேசுவை தேவ குமாரனாக 
விசுவாசித்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டு
பாவமன்னிப்பை பெற்றிருக்க
வேண்டும்.   
 
இவ்வாறு  இயேசுவை விசுவாசித்து பாவமன்னிப்பை பெறுதலும் அதன்பின் ஆவியானவரின் அபிஷேகம்பெற்று அவர் நடத்துதலில் நிலைத்திருப்பதுமே நித்திய ஜீவனை அடையும் வழிகள் என்பதே வேத வசனங்கள் அடிப்படையில் எனது கருத்து!   
      


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard