இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்
Permalink  
 


தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்

தொகுத்து வழங்கியது: மு.சாதிக்

சர்வ புகழும் வல்ல இரட்சகனுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் இறைவனின் தூதர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகுக என வேண்டியபின்:

சில கிறிஸ்தவ சகோதரர்கள், இயேசு பற்றி குர் ஆனின் கருத்தென்ன? என்ற கேள்வியைக் கேட்டனர். அதற்குப் பதிலளிக்கும் நோக்கத்தோடும், பொதுவாக ஏனைய சகோதரர்களும் பிரயோசனம் அடைவர் என்ற நல்ல நோக்கமும்தான் இத்தகவல் வெளியிடக் காரணம்.

குர்ஆனின் கருத்துக்களுடன் பைபிளின் கருத்துக்களும் ஆதாரங்களோடு மிகச்சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இது இத்தொடரின் முதலாம் பகுதியேயாகும். இதன் தொடர்கள் இறைவனின் உதவியுடன் தொடராக வெளிவரும் (அவன் நாடினால்).

1 - இயேசு ஒரு மனிதரே !

குர்ஆனில்:

"(வானவர்கள்) மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையின் மூலம் உனக்கு (ஒரு பிள்ளையை) நன்மாராயம் கூறுகிறான், அவரின் பெயர் மஸீஹ்-மர்யமின் மகன் ஈஸா (இயேசு) என்பதாகும். அவர் இம்மையிலும் மறுமையிலும் மிக்க அந்தஸ்துடையவராகவும் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவரகளிலொருவராகவும் இருப்பார்" என்று கூறியபோது -

"அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்போதும் (தந்தாயின் பரிசுத்தத்தையும்) பருவ வய்திலும் (தன் நபித்துவத்தைப் பற்றியும்) மனிதர்களுடன் பேசுவார். மேலும் அவர் நல்லொழுக்கமுடையவராகவுமிருப்பார்" (என்றும் கூறினர்).

"(அதற்கு மர்யம்) "என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" என்று கேட்டாள், (அதற்கு) "அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான், அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் "ஆகுக!" என்பதுதான், உடனே அது ஆகிவிடும்" என்று (அல்லாஹ் கூறினான்".

"மேலும் அவன், அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்றாத்தையும் இஞ்ஞீலையும் கற்பித்தான், "இஸ்றாயீலின் மக்களுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் அல்லாஹ் கூறினான்) (அவர் வாலிபத்தை அடைந்தபின் இஸ்றாயீலின் மக்களிடம்) "நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன், உங்களுக்காக களி மண்ணிலிருந்து பறவையின் கோலத்தைப்போல் செய்து, பின்னர் அதில் நான் ஊதுவேன், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (உயிருள்ள) பறவையாகிவிடும். பிறவிக் குருடனையும் வெண்குஷ்ட ரோகியையும் நான் குணப்படுத்துவேன். மேலும் அல்லாஹ்வின் அனுமதியோடு இறந்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். மேலும் நீங்கள் புசிப்பவற்றையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் விசுவாசம் கொள்பவர்களாக இருந்தால் நிச்சயமாக் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்) (3:45-50)

"மேலும் (இயேசுவை நிராகரித்த) அவர்கள், சதிசெய்தனர் (அவரைக் கொல்வதற்கு). அல்லாஹ்வும், (அவர்களுக்குச்) சதிசெதுவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்து கூலி கொடுப்பவர்களி)ல் மிகச்சிறந்தவன்."

(இயேசுவை நோக்கி) "ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னளவில் உயர்த்திக் கொள்பவனாகவும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மைப் ப்ரிசுத்தமாக்கி வைப்பவனாகவும், உம்மை பின்பற்றுவோரை, நிராகரிப்போர்மீது மறுமைநாள் வரையில் மேலாக ஆக்குபவனாகவும் இருக்கிறேன்." என்று அல்லாஹ் கூறியதை (நினைவு கூர்வீராக!) (3:4-55).

"நிச்சயமாக அல்லாஹ்விடம், ஈஸா(இயேசு)வுக்கு உதாரணாம், ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன், அவரை(ஆதமை) மண்ணால் படைத்து பின் அதற்கு (மனிதனாக) "ஆகுக" என்று கூறினான், அவர் (அவ்வாறு) ஆகிவிட்டார்."

"(நபியே! ஈஸா(இயேசு)வைப் பற்றிய  இந்த) உண்மை உமதிரட்சகனிடமிருந்துள்ளதாகும், ஆகவே (இதைப்பற்றிச்) சந்தேகப்படுவோரில் உள்ளவராக நீர் ஆகிவிடவேண்டாம்". (3:59-60).

மேலே நாம் குறிப்பிட்டுக் காடடிய குர்ஆனிய வசனங்க்ளில், இயேசு ஒரு மனிதரென்றும், அவரின் தாயின் பெயர் மர்யம் எனவும், இயேசுவை கடவுள் அவனுடைய "குன்" எனும் வார்த்தையின் மூலம் படைத்தான் என்றும், அவர் சிறுவயதிலேயே தனது தாயின் பரிசுத்தம் பற்றியும், பருவ வயதை அடைந்தபின், தனது நபித்துவம் பற்றியும் பேசினார் எனவும், அவருக்கு இறைவன் அளித்திருந்த சில அற்புதங்கள் போன்ற பல விசயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, அவவரைப் பற்றிய வேறுபல செய்திகளையும் பல்வேறு இடங்களில் குர்ஆன் தெரிவிக்கின்றது. அவற்றை அவ்வப்போது சுருக்கமாக நாம் பார்க்கலாம்.

பைபிளில்:

கிறிஸ்தவ மதத்தின் சில வேதநூற்களான மத்தேயு, முர்குஸ், லூக்கா, யோவான், பர்னாபா போன்ற சகல பைபிள்களும் இயேசு ஒரு மனிதனே என்றும், (மனிதனுக்கு ஏற்படுகின்ற) பசி, தாகம், தூக்கம், மறதி, மரணம் (கிறிஸ்தவ சகோதரர்களின் நம்பிக்கையின் பிரகாரம்) போனற சகல விசயங்களும் அவருக்ககும் ஏற்பட்டன எனவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது இப்படியிருக்க, இயேசுவையே கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், கடவுளே அல்லது கட்வுளின் மகனே சிலுவையில் அறையப் பட்டதாகவும் நம்புவது எப்படி நியாயமாகும்?

2 -  இயேசு கடவுளின் தூதரே!.

குர்ஆனில்:

"மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் மகனோ) இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்றுவிட்டனர்". (5:75).

பைபிளீல்:

")இயேசு தனது சீடர்களிடம்) "யார் உங்களை (பிரச்சாரத்தை) ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் என்னை ஏற்றுக் கொண்டார். யார் என்னை ஏற்றுக் கொண்டாரோ அவர் என்னைத் தூதராக அனுப்பியவனை(கடவுளை) ஏற்றுக் கொண்டார்" என்று கூறினார். (மத்தேயு 40:10)

"இயேசு, தனது சீடர்களைப் பல பட்டினங்களுக்கும், பிரச்சாரத்திற்காக அனுப்பியபோது, உங்களுக்கு செவி மடுப்ப்வர் யாரோ, அவர் எனக்குச் செவிமடுத்து (வழிபட்டு)விட்டார்; யார் உங்களை இழிவாக்கினானோ, அவன் என்னை இழிவாக்கிவிட்டான், எவன் என்னை இழிவாக்கினானோ, அவன் என்னைத் தூதராக அனுப்பியவனை(கடவுளை)யே இழிவாக்கிவிட்டான்" என்று கூறினார் (லூக்கா 16:10). இதைத் தவிர லூக்கா(43:4), யோவான்(34:4, 3:17) போன்ற பல இடங்களில், தான் ஒரு தூதரேயென்றும், (கடவுளோ, கடவுளின் மகனோ அல்ல என்வும்) தனது இறைவனே தன்னைத் தூதராக அனுப்பினான் எனவும் தெளிவாகவே இயேசு பிரச்சாரம் செய்தார் என்பது விபரமாகக் கூறப்பட்டுள்ளது.

3 - இயேசு, பனூ இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதராகும்!

குர்ஆனில்:

"இஸ்ரவேல் மக்களுக்கே (அவரை) ஒரு தூதராக (அனுப்பினோம்)..."(3:49).

பைபிளில்:

ஒரு தடவை கன்ஆன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இயேசுவிடம் வந்து, தனது பைத்தியம் பிடித்த மகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டியபோது, "நான் வழிகெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை (மட்டுமே) நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்டுள்ளேன்" என்று இயேசு கூறிவிட்டார். (மத்தேயு 24:15)

இயேசு தனது சீடர்களை, யூத பட்டினங்களுக்கு பிரச்சாரத்திற்காக அனுப்பியபோது, "சாமிரிய்யீங்களின் பட்டினத்தினுள்ளோ, வேறு சமூகங்களின் பட்டினத்தினுள்ளோ நீங்கள் போகாதீர்கள், வழி கெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை சீர்செய்வதற்காக சுதந்திரமாக நீங்கள் செல்லுங்கள்" என்று சொன்னார். (மத்தேயு 5:10)

இதிலிருந்து பனூ இஸ்ரவேலர்காளுக்கு மட்டுமே இயேசு தூதர் என்பதையும், ஏனையோருக்கு அவர் தூத்ராக அனுப்பப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

4 - இயேசு, கடவுளை மட்டுமே வணங்கவேண்டும், அவனுக்கு யாரையும், எதனையும் இணையாக்கக் கூடாது என்றே பிரச்சாரம் செய்தார்!.

குர்ஆனில்:

(இயேசு) 'நிச்சயமாக அல்லாஹ்தான் என் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான், ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழியாகும் (என்று கூறினார்)'. (3:51)

பைபிளில்:

"உனது கடவுளுக்கு மட்டுமே சிரம்தாழ்த்தி அவனை மட்டுமே நீ வணங்கு" என்று, இயேசு மக்களுக்குக் கட்டளையிட்டார் (மத்தேயு 10:4)

கடமைகளிலும், உபதேசங்களிலும் முதன்மையானது எதுவென இயேசுவிடம் கேட்கப்பட்டபோது "இஸ்ரவேலர்களே! கேளுங்கள்!! உபதேசங்களிலெல்லாம் மிக முதன்மையானது, இரட்சகனான எமது கடவுள், ஒரே ஒருவன்தான் என்பதும், உனது இரட்சகனாகிய உனது கடவுளை முழுமையாக நேசிப்பதுவுமாகும்" என பதிலளித்தார். (முர்குஸ் 29:12).

5 - மூஸா நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுபவராகவும், அதனைப் பூரணப் படுத்துவற்காகவுமே இயேசு வந்தார்!.

குர்ஆனில்:

"மேலும், என்முன் இருக்கும் தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவனாகவும், உங்களுக்கு விலக்கப் பட்டவைகளில் சிலவற்றை, நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும், மேலும் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடனும் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, எனக்கும் கட்டுப்படுங்கள்". (3:50).

பைபிளில்:

"நாமூஸாயோ, அல்லது ஏனைய நபிமார்கள் கொண்டு வந்த(மார்க்கத்)தையோ செயலிழக்கச் செய்வதற்காக நான் வரவில்லை, மாறாக அதனைப் பூரணப்படுத்துவதற்காகவே நான் வந்தேன் என இயேசு கூறினார்" (மத்தேயு 17:5).

இதைத் தவிர இன்னும் பல இடங்களில் குர்ஆனிய  உண்மைகள், பைபிளில் விபரிக்கப்பட்டுள்ளன. எனவே, உண்மையைத் தேடுவோம், அதனை விளங்குவோம், அதனை ஏற்போம், அதன்பால் அழைப்போம். வல்ல இரட்சகன் நம்மனைவருக்கும் நேரான வழிகாட்டுவானாக!



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

அன்பு நண்பர் சிட்டிக், நீங்கள் கீழ்க்கண்ட தொடுப்பில்
தொடர்ந்து  இஸ்லாம்
சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நமது அன்பு சகோ. உமர் அவர்கள்   கொடுத்துள்ள விளக்கங்களை படித்து உண்மையை கண்டறியுங்கள்
 
 
இயேசு இறைமகன் என்பதை திருக்குர்ஆன் வேண்டுமானால் மறுக்கலாம்  ஆனால் வேதாகமத்தில் அனேக வசனங்கள் அவர் தெய்வதன்மையை உறுதி படுத்துகின்றன.
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இயேசு தன்னை தேவன் என்று எங்கும் கூறிக்கொள்ளவில்லை கரணம் அவர் பூமிக்கு வந்த நோக்கம் தன்னை தேவன் என்று எல்லோரும் புகழ  வேண்டும் என்பதற்காக அல்ல நமது பாவங்களுக்காக மரிக்கவே வந்தார். 
 
மத்தேயு 20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.
 
ஒருவர் என்ன நோக்கத்தோடு வந்தாரோ அதை செய்வதுதான் சிறந்தது. எனவே
தன் ஜீவனை கொடுக்கும் நோக்கத்தோடு வந்த இயேசு தன்னை எங்கும் பெரியதாக காட்டிக்கொள்ளவில்லை
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

கேள்வி
பீஜே அவர்களுக்கு, "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25) என்று கூறுகிறாரே. இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொல்ல முடியுமா?

PJ அவர்களின் பதில்
முதலில் நீங்கள் ஒரு வசனத்தை எடுத்துக்காட்டினால் அதை சரியான பொருளில் புரிந்து கொண்டு கேட்க வேண்டும். நீங்கள்சுட்டிக்காட்டும் வசனங்களுக்க்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்களை சேர்த்துபார்த்தால் இதன் பொருள் உங்களுக்கே விளங்கி விடும்.

யோவான் 11 அதிகாரத்தில் 21 முதல் 26 வரை உள்ளவசனங்களை பாருங்கள்

21.மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன்மரிக்கமாட்டான்.

22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத்தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

23. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்என்றார்.

24. அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலேஅவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும்ஜீவனுமாயிருக்கிறேன்,என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும்மரியாமலும் இருப்பான்;இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

உயிர்த்தெழுதல் என்பதன் பொருள் உலகம்அழிக்கப்பட்ட பின் அனைவரும் மீண்டும் உயிர்க்கப்படுவதைத் தான் குறிக்கிறது. 24வசனத்தில் மார்த்தாள் கூறுவதில் இருந்து இதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் இதில் கூறப்படும் அனைத்துமே நேரடிப்பொருளில் அர்த்தம் செய்ய முடியாதவையாக உள்ளன. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும்பிழைப்பான் என்று இயேசு கூறுகிறார். மரித்துப் போன் கிறித்தவர்கள் அனைவரும் உடனேபிழைத்துக் கொண்டும் இருக்கிறார்களா நிச்சயமாக இல்லை. அப்படியானால் மரித்தாலும்பரலோக ராஜ்ஜியத்தில் பிழைப்பதை தான் இயேசு கூறுகிறார் என்று விளங்கிக் கொள்ளலாம். உயிர்த்தெழுதல்என்பது அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு விஷ்யம் தான் என்று இயேசுவே விளக்கம் தந்துவிட்டார்.

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரிக்கமாட்டான் என்று இயேசு கூறுகிறாரே? கிறித்தவர்கள் யாரும் மரிப்பதில்லையா? அப்படித்தான்அர்த்தமா? நிச்சயமாக இல்லை. அப்படி அர்த்தம் கொடுத்தால் இயேசுவை நீங்கள்பொய்யராக்கி விடுகிறீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் உயிர்த்தெழுவதால் அவர்மரிப்பதில்லை என்ற கருத்தில் தான் இதை இயேசு கூறுகிறார். அது போல் இயேசுதன்னைப்பற்றியும் அப்படி கூறுகிறார், நான் மரணித்த பிறகும் மற்றவர்களைப் போல்உயித்தெழுப்பப்படுவேன் என்கிறார். இது கடவுள் தனமையைக் கூறவில்லை, கடவுளின்குமாரன் என்பதையும் கூறவில்லை.

இதை நீங்கள் மறுத்தால் மேற்கண்ட அனைத்துவசனக்களுக்கும் நேரடி அர்த்தம் செய்து காட்டி கிறித்தவர்கள் சாக மாட்டார்கள்என்பதையும் செத்தாலும் உடனே பிழைப்பார்கள் என்பதையும் நீங்கள் நிரூபித்துக்காட்டுங்கள்.

அத்துடன் இயேசு தன்னை கடவுல் அல்ல என்று கூறியவசனங்களையும் செர்த்து சிந்தியுங்கள்

__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

mathew 40:10, Luke 43:4, John 34:4(given in topic 2, there r no such chapters in Bible)..... Y r u cheating yourself??????????????????????

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard