தேவன் சிலருக்கு இக்கட்டு நேரங்களில் மறைந்துகொண்டு தனது பிரசன்னத்தை மறைத்து கொள்கிறார் என்பதைபற்றி வேத புத்தகத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செயல் தேவன் ஏதோ காரணம் இன்றி தன்து இஸ்டத்துக்கு செயல்படுகிறார் என்றொரு தவறான எண்ணத்தை அநேகருக்கு ஏற்ப்படுத்துகிறது.
உதாரணமாக யோபுன் துன்ப நேரங்களில் தேவன் தனது முகத்தை மறைத்து கொண்டது
இய்சுவின் சிலுவை மரணத்தின் கடைசி நிமிடங்களில் தனது பிரசன்னத்தை மறைத்துகொண்டது
போன்றவை
ஆனால் தேவன் தன் செய்கையில் எல்லாம் நீதியுள்ளவர். அவர் தான்செய்யும் எந்த ஒரு காரியத்துக்கும் சரியான நீதியான பதிலை தரவல்லவர் என்பதை அறிய வேண்டும். அவர் முகத்தை மறைப்பதர்க்கான உண்மை காரணத்தை அதை அறிந்து கொள்வதும் அறிய விரும்பாததும் நமது கரத்திலியே இருக்கிறது.
ஒரு கடுமையான துன்பத்திநூடே நாம் கடந்து சொல்லும்போது தேவன் தனது முகத்தை மறைத்துக் கொண்டு நம்மை தனியாக விட்டுவிடுகிறார் என்று வைத்துகொள்வோம். ஒரு ஆவிக்குரிய நிலையில் இருக்கும் நாம் கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாம்
1. அவர் தேவன் தனக்கு சித்தமானதை செய்கிறார் என்ற கருத்தில் அவர் செய்வதை குறைகூறாமல் ஏற்றுக்கொள்வது
2. தேவன் ஏதோ காரணம் இல்லாமல் இதை செய்யமாட்டார் எனவே இதை தாங்கிகொள்வதே நல்லது என்று எண்ணி அப்படியே விட்டுவிடுவது
3. தேவன் தனது முகத்தை பிரசன்னத்தை நம்மைவிட்டு எடுக்கிறார் என்றால் என்னிடம் ஏதோ தவறு இருக்கிறது அதை நாம் நிச்சயம் தேவனிடம் கேட்டு அறியவேண்டும் என்று வாஞ்சிப்பது.
இந்த மூன்று நிலைகளில் எது சிறந்தது எனபது பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம்:-
1. "அவர் தேவன் தனக்கு சித்தமானதை செய்கிறார்" என்ற கருத்தில் அவர் செய்வதை குறைகூறாமல் ஏற்றுக்கொள்வது:
I சாமுவேல் 3:18 . அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
கர்த்தர் செய்யும் எந்த காரியங்களையும் ஏன் என்று எதிர்கேள்வி கேட்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது இந்த நிலை.
ஏலியின் நாட்களில் ஏலியின் குமாரர்களின் தவறான போக்கிநிமித்தம் அவர்கள் மீது கோபம் மூண்டவராக இருந்து சாமுவேலிடம் இவ்வாறு கூறுகிறார்.
11. கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
12. நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.
13. அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்
இதை கேட்ட ஏலி என்னும் ஆசாரியன் சொல்வதுதான் "அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக" என்பது.
இங்கு ஏலி கர்த்தரின் வார்த்தைகளை கேட்டு மனஸ்தாபபடவோ அல்லது தன் குமாரர்களுக்காக தாழ்மையுடன் விண்ணப்பம் பண்ணவோ செய்யாமல். அவர் கர்த்தர் அவர் இஸ்டத்துக்கு செய்யட்டும் என்று சொல்கிறான். விளைவு:
17. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப் போயிற்று என்றான்.
இது ஒரு மிகுந்த கீழ்படிதலுள்ள நல்ல காரியம்போல தெரிந்தாலும் இந்நிலை சரியானது அல்ல என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் நமது கர்த்தர் மிகுந்த இரக்கம் உள்ளவர். எந்த தவறு செய்தவனையும் மன்னிக்க கூடியவர். ஒருவேளை ஏலி கர்த்தரிடன் தன் மகன்களுக்காகவும் ஜனங்களுக்காகவும் மன்றாடி விண்ணப்பம் செய்திருந்தால் வந்த தண்டனைகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது எனது கருத்து.
தொடர்ந்து பார்க்கலாம்......
-- Edited by SUNDAR on Friday 10th of September 2010 02:52:10 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
2. தேவன் ஏதோ காரணம் இல்லாமல் இதை செய்யமாட்டார் எனவே இதை தாங்கிகொள்வதே நல்லது என்று எண்ணி அப்படியே விட்டுவிடுவது
ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக அல்லது பெலஹீனத்துகாக பலமுறை ஜெபித்தும் மன்றாடியும் அதற்க்கு சரியான பதில் தேவனிடம் இருந்து கிடைக்காதபோது அதற்க்கான காரணம் நமக்கு சரியாக தெரியவராதபோது. "ஏதோ காரணத்தினால் தேவன் நமது ஜெபத்தை கேட்கவில்லை இக்காரியத்தை நமக்கு அனுமதித்திருக்கிறார், எனவே அப்படியே அவரது சித்தத்துக்கு விட்டுவிடுவோம் என்று அதற்குமேல் சிந்திக்காமல் தேவனின் சித்தத்துக்கு ஒப்புகொடுப்பது இந்நிலை.
பவுல் அப்போஸ்தலருக்கு இருந்த ஒரு முள்ளை குறித்து வேதம் சொல்கிறது
II கொரிந்தியர் 12:7நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது
8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். 9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.
இவ்வாறு பவுல் வேண்டிகொண்டபோது கர்த்தர் அந்த முள்ளுக்கான சரியான காரணத்தை பவுலுக்கு தெரிவிக்காதபோதும் அதை சந்தோசத்தோடு ஏற்றுக் கொண்டு கிருபையில் நிலை நிற்கும் வழியை தெரிந்துகொண்டார். அனேக கிறிஸ்த்தவர்கள் இந்நிலையை தங்களுக்கு ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டு ஒரு குறிப்பிட்ட நிலை வேண்டுதலோடு அல்லது மன்றாட்டோடு நின்றுவிடுகின்றனர்.
இந்த இரண்ட்டாம் நிலை ஓரளவுக்கு சரியானதே என்றாலும் 100௦% சரியானது அல்ல! இங்கு பவுல் அப்போஸ்த்தலர் ஆண்டவரின் மறைபொருள் நிறைந்த மேம்போக்கான பதிலில் திருப்தியாகி விட்டார் என்றே நான் கருதுகிறேன். அதனால் அவர் மறைத்துள்ள இன்னும் ஆளமான அடிப்படை காரியங்களை நமக்கு அறிய முடியாமல் போனது என்பதே எனது கருத்து!
நான் இந்த நிலையில் திருப்தியடைய விரும்பவில்லை எனக்கு உலகில் நடக்கும் அனைத்துக்கும், என வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் நீதியான காரணம் வேண்டும்! தேவன் சில சூழ்நிலைகளில் தன்னை மறைத்துக்கொள்ள காரணம் என்ன? அதை அறியும்வரை விடமாட்டேன். எனவே மூன்றாவது நிலைக்கு போகிறேன்.
தொடர்ந்து பார்க்கலாம்....
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
3. உலகில் நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கான கரணத்தையும்
தேவனிடம் கேட்டு அறியவேண்டும் என்று வாஞ்சிப்பது.
இந்த உலகில் தேவனுக்கு தெரியாமல் எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேள்வி கேட்டால் "நிச்சயமாக இல்லை" என்பதுவே எல்லோருடைய பதிலாகவும் இருக்கும். இவ்வாறு உலகின் அனைத்து நடபடிகளுக்கும் நீதியான விளக்கம் தேவனுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில், நாம் நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு வருத்தமான சம்பவங்களுக்கும் தேவனிடமிருந்து பதில் அறிந்துகொள்ள நினைப்பதே இந்த மூன்றாவது நிலை.
ஒருவர் தன்னை திருத்திகொள்ளும் நோக்கில் தேவனிடம் வாஞ்சையோடு கேட்டால் அவர் எதையும் யாருக்கும் மறைப்பது இல்லை கர்த்தரும் "என்னிடம் கேள்" என்று நமக்கு அறிவுரை கூறுகிறார்!
ஏசாயா 45:11இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்
எனவே எந்த ஒரு காரியம் சம்பந்தப்பட்ட உண்மையானாலும் கேட்பவர்களுக்கு தெரிவிக்க தேவன் வாஞ்சையோடு இருக்கிறார் என்பதை நாம் அறியவேண்டும்!
பழய ஏற்பாட்டு காலத்தில் வேதம் குறித்த பல மறைபொருள்கள் அறியப்படாமல் இருந்தன எனவே "உபாகமம் 29:29மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்" என்று மோசே குறிப்பிட்டார் ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் எதுவுமே மறைவாக இல்லை லூக்கா 12:2வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை என்பதை ஆண்டவராகிய இயேசு தெளிவாக சொல்லிவிட்டார்.
எனவே இது இயற்கையை நடக்கிறது இங்கு தேவன் தலையிட மாட்டார் இதற்க்கு தேவனிடம் பதில் இருக்காது இங்கு தேவன் சோதிக்கிறார் என்று நாமே முடிவுகளை எடுத்துகொண்டு விட்டுவிடுவோமாயின் நிச்சயம் அதற்க்கு பதிலை அறியவே முடியாது! .
என்னை பொறுத்த வரை எனது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கான சரியான காரணத்தை போராடியாவது ஆண்டவரிடம் தெரிந்துகோள்ளுவேன். நான் எங்கு தவறு செய்கிறேன் என்று அறிந்தால்தானே என்னை நான் திருத்திகொள்ள முடியும்?
ஆரம்பத்தில் வேத புத்தகத்தில் ஆண்டவாகிய இயேசு சொல்லியிருக்கும் "உலகத்தில் உங்களுக்கு உபத்திரியம் உண்டு" என்ற வார்த்தையை படிக்கும்போது எனக்கு திருப்தியே இல்லாமல் இருந்தது இதை சொல்வதற்கு பெரிய ஞானம் தேவையா? தெருவில் நிற்கும் ஒரு பிச்சைகாரனை கேட்டால் கூட இதை சொல்லிவிடுவானே! என்று கருதியதுண்டு. நீண்டநாள் அதைஒதுக்கி விட்டுவிட்டேன் அனால் ஒருநாள் "நான் உலகத்தை ஜெயித்தேன்" என்ற இயேசுவின் அடுத்து வரும் வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தன!
முதல் வார்த்தையில் எந்த பெரிய கருத்தும் இல்லை ஆனால் இரண்டாம் பகுதியில் ஆழ்ந்த கருத்து இருப்பதை அறிந்தேன். இவ்வளவு பெரிய உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து வளர்ந்த இயேசு மொத்த உலகத்தின் கிரியைகளையும் ஜெயித்துவிட்டேன் என்று சொல்கிறார். அவ்வாறு இருக்கையில் உலகத்தின் கிரியைகளின் அடிப்படை காரணம் அனைத்தும் தெரியாமலா அவர் உலகை ஜெயிக்க முடியும்? எனவே தாழ்மையோடு பிடிவாதமாக ஆண்டவரிடம் கேட்டால் அனைத்து காரியங்களுக்கும் பதிலை அறிய முடியும் என்ற உண்மையை அறிந்து அதை நடைமுறையில் செயல்படுத்தியும் வருகிறேன்.
நமது வாஞ்சை மற்றும் நாம் அறிந்தகொள்ள கருதுவதின் நோக்கம் மற்றும் நமது ஆவிக்குரியதகுதி இவற்றின் அடிப்படையில் அனைத்து காரியங்களுக்கும் சரியான விளக்கத்தை ஆண்டவரிடமிருந்து ஒருவரால் பெறமுடியும் என்பதே எனது முடிவான கருத்து!
இறுதியாக தேவன் காரணமின்றி யாருக்கும் தனது முகத்தை மறைப்பதில்லை. அவர் தனது முகத்தை மறைக்க முக்கிய காரணம் நமது பாவம்தான் என்பதை வேதம் திட்டவட்டமாக சொல்கிறது.
ஏசாயா 57:17நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்;நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்
உபாகமம் 31:18அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும்நான் அந்நாளிலேஎன் முகத்தை மறைக்கவே மறைப்பேன்
எசேக்கியேல் 39:23இஸ்ரவேல் வம்சத்தார் .... எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்;
இன்னும் அனேக வசனங்கள் தேவன் தனது முகத்தை சில நேரங்களில் தமது மறைக்க மனிதனின் பாவம்தான் காரணம் என்பதை நமக்கு போதிக்கின்றன.
எனவே அன்பானவர்களே தேவன் தனது முகத்தை/பிரசன்னத்தை மறைக்கும்போது நிர்விசாரமாக இருக்காமல், தேவனிடம் மற்றாடி ஜெபித்து நமது பாவத்தை கண்டறிந்து அதை அறிக்கை செய்து விட்டு தேவனுடன் ஒப்புரவாகுதலின் மூலம் மீண்டும் தேவபிரசன்னத்தை பெற்றுக்கொள்ள முடியும்!
I யோவான் 1:9நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
நன்றி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///////இறுதியாக தேவன் காரணமின்றி யாருக்கும் தனது முகத்தை மறைப்பதில்லை. அவர் தனது முகத்தை மறைக்க முக்கிய காரணம் நமது பாவம்தான் என்பதை வேதம் திட்டவட்டமாக சொல்கிறது.///////
நல்ல ஒரு ஆராய்ச்சி சகோதரரே. நீங்கள் சொல்வது சரியே.
கீழே நான் பதியும் வசனத்தின் படி தேவன் அருகில் இருந்தும் யோபுவால் காண முடியவில்லை என்று தெரிகிறது. யோபு 9:11 இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன். இதன் அர்த்தம் என்ன. அவர் அருகிலிருப்பினும் தன்னை யோபு காண முடியாத படிக்கு மறைந்திருந்திருக்கிறார் என்பதல்லவா?
கீழ்வரும் வசனம் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது. யோபு 23:9 இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
அதாவது தேவன் யோபுவால் காணப்பட கூடாத படிக்கு ஒளிந்து கொண்டார் என்று பார்க்கிறோம். நீங்கள் சொன்னபடி தேவன் தாம் மறைவதற்கு பாவம் தான் காரணம் என்றால் யோபுவின் பாவத்தினிமித்தம் என்று கூற வேண்டியுள்ளது. இவ்விடயம் தங்கள் கருத்துக்க சற்று மாற்றமாக உள்ளது.
உங்களுடைய கூற்று உண்மைதான் சகோதரரே. யோபுவால் அறியமுடியாதாடிக்கு தேவன் கிரியை செய்தார் என்பது உண்மையே.
இப்பொழுது இந்த காரியங்களை நாம் சரியாக புரிந்துகொள்ள இரண்டு வேத வசனம் எடுத்துகொள்வோம்.
ஏசாயா 59:2உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது
உபாகமம் 31:18அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தைமறைக்கவே மறைப்பேன்.
மேலே சொல்லப்பட்டுள்ள கர்த்தர் சொன்ன இந்த வார்த்தைகள் சாத்தியமானது என்றும் மாறாதது இதன் மூலம் நாம் தெளிவாக புரிந்துகொள்ள கூடிய கருத்து என்னவெனில் தேவனுக்கு பிடிக்காத காரியங்களை நாம் செய்யும்போது தேவன் தன்னுடைய முகத்தை மறக்கவே மறைக்கிறார்.
வேறு எந்த ஒரு சம்பவத்தை வைத்தும் இந்த வசனத்தின் கருப்பொருளை யாராலும் மாற்றமுடியாது என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள
கடவோம்.
இப்பொழுது தாங்கள் சொல்லியுள்ள யோபுவை பற்றிய வசனத்துக்கு வருவோம்:
இந்நாடகளில் ஒருவரை பார்த்து உனக்கு வரும் தண்டனை உன் பாவத்தால்தான் வந்தது என்று சொன்னால் உடனே அவர்கள் யோபுவை முன்னுதாரணமாக காண்பித்து அவனுக்கு தண்டனை என் வந்தது? அதுபோல்தான் எனக்கும் என்று தங்கள் குறைகளை மறைத்து தங்களை யோபுவுக்கு ஈடாக காண்பிக்க நினைக்கிறார்கள்.
யோபு தன்னை பற்றி சொல்லும் பரிசுத்தமான நிலையானது யோபு 31:1இப்படி ஆரம்பித்து
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
31:40 ல் அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான்.
என்று முடிகிறது.
அதை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அவனைப்போல ஒருவான் உத்தமனாகவும் சன்மார்க்கனாகவும் வாழ்வது மிகமிக கடினம் என்பது புரியும். இதை சரியாக அறியாமலேயே பலர் தங்களை யோபுவுக்கு ஈடாக நினைத்துகொண்டு பேசுகிறார்கள். சரி அதை விடுவோம் தங்கள் கருத்துக்கு வருவோம்.
////கீழ்வரும் வசனம் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது. யோபு 23:9 இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். அதாவது தேவன் யோபுவால் காணப்பட கூடாத படிக்கு ஒளிந்து கொண்டார் என்று பார்க்கிறோம். நீங்கள் சொன்னபடி தேவன் தாம் மறைவதற்கு பாவம் தான் காரணம் என்றால் யோபுவின் பாவத்தினிமித்தம் என்று கூற வேண்டியுள்ளது. இவ்விடயம் தங்கள் கருத்துக்க சற்று மாற்றமாக உள்ளது.///
முதலில் இங்கு யோபு இந்த வார்த்தைகளை சொல்லும் கருத்தே வேறு. அதாவது தேவன் சகல இடங்களிலும கிரியை செய்கிறார் அவர் செய்வதை நாம் காண முடிவதில்லை என்ற பொதுவான ஒரு கருத்தை யோபு சொல்கிறான். தேவன் ஆவியாயிருக்கிறார் அவர் செய்யும் செயல்களை நாம் நம் கண்களால் காண முடியாது அதைத்தான் இங்கு யோபு சொல்கிறான். என்பது என்னுடைய கருத்து
ஆகினும் உங்கள் கருத்துப்படியே நாம் எடுத்துகொள்வோம்:
யோபுவை பற்றி ஆண்டவர் சொல்லும்போது "உத்தமன் சன்மார்க்கம் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன்" என்றுதான் சொல்கிறாரேயன்றி எந்த பாவமும் செய்யாதவன் என்று சொல்லவில்லை என்பதை அறியவேண்டும். அவன் "வாயினால் பாவம் செய்யவில்லை" என்று மட்டுமே வசனம் சொல்கிறது. சிந்தனை மற்றும் செயலினால் அவன் பாவம் செய்தானா என்பதற்கு நமக்கு தெளிவு இல்லை காரணம் வசனம் இவ்வாறு சொல்கிறது
சங்கீதம் 143:2ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
சங்கீதம் 14:3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
ஏன் அப்படி இருக்க முடியாது என்று யோபுவே சொல்கிறான்: யோபு 25:4மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
மனுஷன் பிறக்கும்போதே பாவத்தில் பிறக்கிறான் எனவே அவன் என்னதான் உத்தமனாக சன்மார்க்கனாக இருந்தாலும் ஆதாமின் பாவம் அவனுக்குள் உண்டு எனவே அவன் பாவம் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். இதை கீழ்கண்ட அவன் சொன்ன வசனங்கள் உறுதி செயகின்றன.
யோபு 7:21என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?
என்னில் மீறுதல் உண்டு அதை நீர் மன்னிக்கவில்லை என்றும் என் சிறு வயதில் செய்த அக்கிரமத்தை பலிக்க பண்ணுகிறீர் என்று அவன் தன வாயாலேயே ஒப்புக்கொள்கிறான்.
எனவே முடிவாக நான் சொல்ல வருவது:என்னவெனில் "தேவன் சொன்ன வார்த்தைக்கு எந்த மாற்றும் கிடையவே கிடையாது!
"உங்கள் பாவங்களே என் முகத்தை மறைக்கிறது" என்றால் அது அப்படிதான்! வேறு காரணமே இல்லை. இங்கு தேவன் மறைந்து கிரியை செய்ய யோபு எந்த வயதில் என்ன பாவம் செய்திருப்பான் என்றுதான் ஆராயவேண்டும் தவிர, யோபு பாவமே செய்யாத பரிசுத்தம் என்று நாம் ஆராயகூடாது. காரணம் ஸ்திரியிடத்தில் பிறந்த எவனும் சுத்தம் இல்லை என்று அவன் தன வாயாலேயே சொல்கிறான் பிரதர்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அசாதாரண விளக்கங்கள் சுந்தர் அண்ணா.. மிக மிக பயனுள்ள பதில்கள்.. உங்களை தேவன் மென்மேலும் பயன்படுத்துவராக என்று சொல்வது தவிர வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை.. தேவனின் வெளிப்பாடுகள் இன்னும் இன்னும் உங்களை நிரப்புவதாக...