இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இருதயத்தில் அவமதித்தேன் தண்டிக்கப்பட்டேன்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இருதயத்தில் அவமதித்தேன் தண்டிக்கப்பட்டேன்!
Permalink  
 


நேற்று (17/09/2010) அலுவலக  வேலை முடிந்து அண்ணா சாலை வழியாக இரவு வீடு திரும்பும்போது.நந்தனம் பக்கம்  ஏதோ காரியத்துக்காக ஒரு பிரபல கட்சிகாரர்கள் அனேக விளம்பர பேனர்கள் மற்றும் விளக்குகளை  சாலை ஓரத்தில் நாட்டி  வைத்திருந்தார்கள். 
 
அதை பார்வயிட்டுகொண்டே மெதுவாக வாகனத்தில் போய்கொண்டு இருந்த எனக்கு அந்த பேனரில் இருந்த ஒரு சிலருடைய முகங்கள் உப்பிபோய் இருப்பதை
பார்த்ததும்
இருதயத்தில் "நல்லா தின்று கொழுத்துபோய் இருக்கிறார்கள், வெடிக்க போவதுபோல் மூஞ்சு உப்பிகொண்டு போகிறது.  ஊர்பணத்தை தின்னுதானே இப்படி கொழுக்கிறார்கள்" என்ற்றொரு எண்ணம் உண்டானது.
 
இப்படி எண்ணிக்கொண்டு ஒரு மிகப்பெரிய  பேனரின் பக்கம் நான் போகும்போது திடீர் என்று ஒரு  பேனர் அப்படியே சரிந்து என்மேல் விழவந்தது.  தடுமாறி போன நான்  அதிலிருந்து தப்பிக்க    வேறுபக்கம் வாகனத்தை  திரும்பியபோது இன்னொரு பைக்கில் மோதி நின்றேன்.  கால்களில் சிறு காயங்கள் ஏற்ப்பட எப்படியோ தப்பித்தேன்.

அங்கு பல கட்சிகாரர்கள் நின்றுகொண்டு இருந்தனர் ஆனால் யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை. மாறாக அந்த பேனரை தூக்கி நிறுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்டிகொண்டு இருந்தார்கள் மற்ற எதுவுமே அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை போலும்.  ஒருவேளை அந்த நேரத்தில் ஏதாவது பேருந்து அந்த பக்கம் வந்திருந்தால் நான் அம்போதான்.  என் தேவன் என்னை பாதுகாத்து விட்டார்!    
 
தேவனுக்கு நன்றிசொல்ல கடமைப்பட்ட நான் மனதில் மிகவும் நொடிந்துபோனேன். ஏன் ஆண்டவரே இப்படி?  நான்வரும் வேளைபார்த்து இந்த பேனர் சாய்ந்தது என்று வேதனையோடு சொல்லிக்கொண்டே வாகனத்தை  ஓட்டினேன்.
 
அப்பொழுது ஆண்டவர் எனக்கு தெரியப்படுத்திய தெளிவான பதில்:
 
யாரையும் இருதயத்தில் அவமதிக்காதே! அவர்கள்  பாவம்! அவர்கள் தங்களை ஆட்டிவைக்கும் பிசாசின் செயல்களை பற்றி ஒன்றும் தெரியாமல் புரியாமல் இதெல்லாம் செய்துகொண்டு இருக்கிறார்கள். நீ இவ்வாறு அவமதித்தது சாத்தானுக்கு தெரிந்துவிட்டதால் அது அதே பேனரை உன்மேல் தள்ளிவிட்டு உன்னை நிலை குலைய செய்தது. இப்படிபட்டவர்கள்மேல் இரக்கப்பட வேண்டுமேயன்றி வேறு எந்த நினைப்பும் உனக்கு மனதில் வரவேண்டாம். இவர்களை பிடித்து ஆட்டும் ஆவிதான் அனைத்துக்கும் காரணம். அவர்களுக்காக ஜெபிப்பதே  நல்லது. என்பதே.
 
ஆணடவர் யாரையுமே அவமதிக்கவோ  தரக்குறைவாக இருதயத்தில் சிந்திக்கவோ என்னை அனுமதிக்கவில்லை. இனி யாரையும் பற்றி இதுபோல் தவறாக சிந்திக்க கூடாது என்று முடிவெடுத்தேன்.
 
ஆண்டவர் காரணம் இல்லாமல் தண்டனையை அனுமதிக்க மாட்டாரே என்று கருதி    
இதற்க்கு வேதஆதாரம் எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்த போது. நிச்சயம் இருக்கிறது 
 
சங்கீதம் 37:1 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
நீதிமொழிகள் 24:19 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

என்ற வசனம் அனைத்துக்கும் பதிலாக கிடைத்தது!


-- Edited by SUNDAR on Monday 20th of September 2010 02:56:47 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard