நமது தளத்தில் இதுவரை பதிவிட்ட அனேக கருத்துக்கள் வசனத்தின் அடிப்படையிலேயே இருந்த போதிலும் "தமிழ் கிறிஸ்த்தவ திரட்டியில்" நமது தளத்தை பதிவிட நமது சகோதரர் முயன்றபோது அதற்காக அனுமதியோ அல்லது "அனுமதிக்க முடியாது" போன்ற எந்த ஒரு பதிலோ கூட கிடைக்க வில்லை. அதாவது நம்மை அவர்கள் ஒரு கிறிஸ்த்தவர்களாக எடுத்துகொள்ள விரும்பவில்லை போலும்!
அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இப்பொழுது இத்தளத்தில் உள்ள கருத்துக்களை எல்லாமத சகோதரர்களுக்கு பயன்படும் வகையில் பொதுவான திரட்டிகளில் நமது தளத்தை பதிவு செய்யலாம் என்று கருதியபோது, மற்றமத சகோதரர்கள், கட்டுரையில் உள்ள செய்திகளை மட்டும்தான் கவனிப்பார்களேயல்லாமல் அதில் உள்ள அனேக வசனங்கள் அவர்களுக்கு புரிவதற்க சிரமத்தை ஏற்ப்படுத்தும். எனவே இனி புதிதாக எழுதும் கட்டுரைகளை அவர்ளுக்கும் புரிவதற்கு ஏற்றார்போல் எழுதவேண்டுகிறேன் .
இனி இங்கு யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, பதிவுகளை தருவதற்கு நேரம் செலவிட்டு வசன ஆதாரங்களை தேடி பதிவிட வேண்டிய அவசியமும் இனி இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்.
வசன ஆதாரம் கேட்பவர்கள் கேட்டுகொண்டேதான் இருப்பார்கள். வசன ஆதாரம் கொடுத்ததுடன் அப்படியே அதை ஏற்று இறைவனின் வார்த்தைக்கு கீழ்படிந்துவிடபோவது இல்லை. அவர்களின் நிலையைவிட்டு அவர்கள் வெளியே வரப்போவதும் இல்லை. இறைவன் யார்யாருக்கு என்னென்ன தகுதியை நிர்ணயித்திருக்கிராரோ அதுதான் நடக்கும். சகோ. அன்பு அவர்கள் மிகசரியாக வசனத்தை ஆதாரம் காட்டிதான் எல்லா கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள் ஆனால் அவர்களையும் தவறான உபதேச பிரிவிலேயே வைக்கின்றனர். எனவே நமக்கு அவர்கள் நிலைபற்றி புரிந்துகொள்ள முடியவில்லை
நல்ல கருத்துக்குள் எதுவாக இருந்தாலும் இங்கு பதிவிடதடை இல்லை.
சகோ. சந்தோஷ் போல எல்லாமத சகோதரர்களையும் கருத்தில் கொண்டு பதிவுகளை தரலாம்!
நமது நிலையையும் நாம் அறிந்தவைகளையும் நேர்த்தியாக இங்கு எழுதிவைப்போம். மற்றபடி யாரையும் புண்படுத்தும் பதிவுகள் இங்கு வேண்டாம்!
நமது முக்கிய நோக்கம்:
இறைவனை அறியாதவர்களை இறைவனை அறிய வைப்பது!
இறைவனை நம்புகிறவர்களுக்கு உண்மை இரட்சிப்பை அறியவைப்பது!
இறைவனை அறிந்து இரட்சிப்பை பெற்றவர்களை உலகத்தை ஜெயிக்கவைப்பது!
நமது பிரயாசத்தால் ஒரே ஒரு ஆத்துமா சரியான இறை வழியில் திருப்பப்படுமானால் அதுவே நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
தளத்துக்காக ஜெபியுங்கள்! நல்ல பதிவுகளை தாருங்கள் அனேக ஆத்துமாக்கள் தொடப்படட்டும்!
நன்றி
அன்புடன்
இறைநேசன்.
-- Edited by இறைநேசன் on Tuesday 21st of September 2010 10:16:44 PM
இவ்விஷயத்தில் நீங்கள் சற்று அவசரப்பட்டுவிட்டீர்களோ என நினைக்கத் தோன்றுகிறது.
உங்கள் வேண்டுகோளுக்குப் பதில் கிடைக்காமற்போனதற்கு மென்பொருள் பிரச்சனை ஒரு காரணமாயிருக்கலாம், அல்லது சம்பந்தப்பட்டவர்களின் நேரமின்மை ஒரு காரணமாக இருக்கலாம். எனவே இன்னும் சற்று பொறுத்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
எனது தனிப்பட்ட ஆலோசனை:
நீங்களும் நானும் மனிதனையோ மனித பலத்தையோ சார்ந்திருக்கவில்லை. எனவே மனித ஒத்தாசை சம்பந்தமான காரியங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவேண்டியதில்லை. நம்மைப் போன்றவர்களுக்காகத்தான் தேவன் இவ்வசனத்தை வேதாகமத்தில் எழுதி வைத்துள்ளார்.
எரேமியா 17:7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
இவ்வசனத்திற்கு எதிரிடையான வசனத்தைக் குறித்து நாம் அதிக எச்சரிக்கையாயிருப்பது மிகஅவசியம்.
எரேமியா 17:5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என்னையும் தவறான உபதேசப் பிரிவில் வைத்துள்ளார்கள் என்று சொல்லி எனக்காக ஆதங்கப்பட்டதற்கு எனது நன்றி.
ஆனால் அவர்கள் என்னை தவறான உபதேசப் பிரிவில் வைக்கவில்லை, வித்தியாசமான உபதேசப் பிரிவில் தான் வைத்துள்ளனர். அவர்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். வேதத்திற்குப் புறம்பான தவறான உபதேசங்களில் ஜனங்கள் ஊறிப்போயிருக்கும் இந்நாட்களில், வேதத்தின்படியான உபதேசம், அவர்களுக்கு வித்தியாசமாகத்தான் தோன்றும்.
அம்மண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள். அதன்படியே தவறான உபதேசங்களில் திளைத்திருக்கும் அவர்களுக்கு, சரியான உபதேசத்தைச் சொல்பவர்கள் வித்தியாசமாகத்தான் காணப்படுவார்கள்.
என்னை வித்தியாசமான உபதேசப் பிரிவில் வைத்துள்ள அற்புதம் என்பவர், தன்னைத்தானே பாஸ்டர் அற்புதம் என்று சொல்லிக் கொள்கிறார். பாஸ்டர் என்பதற்கு தமிழில் போதகர் என அர்த்தம். அதாவது அவர் தன்னைத்தானே போதகர் எனச் சொல்லிக் கொள்கிறார். ஆனால் இயேசு சொல்வதென்ன?
நாம் போதகர் என அழைக்கப்படுவதற்குக்கூட அனுமதிக்கக்கூடாது என இயேசு சொல்கிறார். ஆனால் இவர்களோ தாங்களாகவே முன் வந்து தங்களுக்கு போதகர் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொள்கின்றனர். குருவானவர் (ரெவரெண்ட்) பேராயர் (பிஷப்) Father என்றெல்லாம் மிகச் சாதாரணமாக தங்களைச் சொல்லிக்கொண்டும் அழைக்கப்பட்டுக்கொண்டும் இருப்போர் ஏராளமான பேர் இருக்கையில், அவர்களின் செயலுக்கு மாறான உபதேசத்தை நான் போதித்தால், அது அவர்களுக்கு வித்தியாசமாகத்தான் தோன்றும்.