இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவனை அனுபவபூர்வமாக அறியவேண்டுமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இறைவனை அனுபவபூர்வமாக அறியவேண்டுமா?
Permalink  
 


இன்று உலகில் அனேக மக்களுக்கு கடவுள்  மேல்  ஒரு முழு நம்பிக்கையும் அவரது வார்த்தைகளின்  மேல் முழு விசுவாசமும் வராதற்கு  காரணம்  அவர்கள்  அனுபவபூர்வமாக ஆண்டவரை  அறியாமல் இருப்பதுதான் என்றே நான் கருதுகிறேன்.
 
வெறும்  தியரியையும், எழுத்துக்களையும் அடுத்தவர் அனுபவங்களையும்  வைத்து கொண்டு ஆண்டவரைபற்றியஅறிவில் ஒருநாளும் முழுமையாக வளரவேமுடியாது. நமது சொந்த அனுபவத்தில் ஆண்டவர் இருக்கிறார் என்பதை நாமே அறிந்து உணர்த்து  கொள்ளவேண்டும் அதுவே நமக்கு அசைக்க முடியாத விசுவாசத்தையும்  எந்த நாளும் அவரை விட்டு பிரியாத ஒரு உறுதியை நமக்கு தரும்.
 
வேறு எந்த மதத்துக்கும் இல்லாத தனிசிறப்பும் கிறிஸ்த்தவத்துக்கு உண்டு!  காரணம் இங்கு இயேசுவை  ஏற்றுக்கொண்ட எவரொருவரும்  வாஞ்சித்தால் ஆண்டவரை அனுபவபூர்வமாக அறியமுடியும் என்பதுதான். அதற்காகவே தேவன் தனது ஆவியின் ஒருபகுதியை என்றென்றைக்கும் நம்மோடு இருக்கும்படி "ஆவியானவர்" என்றொரு நிலையில் பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.    
 
சில பொருட்களை கடைகளில்  வாங்கும்போது "பொருள் சரியில்லை என்றால் பணம் வாபஸ்" என்ற நிபந்தனையுடன் வாங்க முடியும்.
 
அதுபோல் எந்த மதத்தை சார்ந்த அன்பர்களாக இருந்தாலும் சரி நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பினால்  உங்களுக்கு  "தேவன் இருக்கிறார்" என்பதற்கான உண்மை அனுபவத்தை ஆவியானவர் மூலம் நிச்சயமாக பெற்றுக் கொள்ள முடியும். அவர் உங்கள் மனதில் பேசுவதை கேட்க முடியும் நீங்கள் தவறு செய்யும்போது அவர் துக்கப்படுவதை உணர முடியும். தேவையான நேரத்தில் நமக்கு தகுந்த வழியை கூறி ஆலோசனை சொல்வதை அறியமுடியும். அவ்வாறு அறியமுடியவில்லை என்றால் நீங்கள் தாராளமாக உங்கள் மதத்துக்கு திரும்பி  போய்விடலாம்
 
வெறும் தியரியை மட்டும் போதித்து "நீ இப்பொழுது நேர்மையாய்  நட  அதற்க்கான பலன் எல்லாம் மறுமையில்தான் கிடைக்கும்" என்று போதிப்பது கிறிஸ்த்தவம் அல்ல.  நீங்கள் இன்று திறந்த மனதோடும் முழு  வாஞ்சயோடும்  ஆண்டவரை அறியவேண்டும் என்ற ஒரே நோக்கில் வந்தால்  உங்களுக்கு ஆண்டவரை பற்றிய அனுபவத்துக்குள்  ஆவியானவரின் துணையுடன்  நடத்த முடியும். 
 
இனி ஒருவரும் சாக்குபோக்கு சொல்ல இடமில்லை என்பதை நான் இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
 
உங்களின் மனநிலையே இங்கு முக்கியம். இறைவனை சோதித்து பார்க்கும் நிலையில் வரக்கூடாது . அவர் எனக்கு உண்மையை உணர்த்தினால் என் வாழ்நாள் முழுவதும் அவருக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்ற நோக்கில் வரவேண்டும்.
 
தேவன் தன்னை தேடி வரும் எவரையும் வேண்டாம் என்று ஒதுக்குகிறவர்  அல்ல  
 
கிறிஸ்த்தவத்தை விரும்பும் அநேகர்கூட  கிரிஸ்த்தவத்துக்குள் வர விரும்பாதற்கு காரணம், கிரிஸ்த்தவத்துக்குள்  வந்தால் பல பாவ காரியங்களை விடவேண்டும் என்ற பயம்தானேயன்றி வேறல்ல என்றே நான் கருதுகிறேன்.
 
ஆகினும் அன்பானவர்களே, நீங்கள் உள்ளே வந்து பார்த்தால் தெரியும் எந்த தேவையற்ற காரியத்தையும் விட்டுவிட ஆண்டவரே நமக்கு பெலன் தருவார்.  மும்பையில் தறிகெட்டு வாழ்ந்து ஒரு நாளைக்கு பத்து சிகரெட்/ பான்பராக் /ஹான்ஸ் என்று கண்டதை எல்லாம் உபயோகுக்கும் நான், இன்று எல்லாவற்றையும் வெறுத்துவிட்டு, இவ்வாறு ஆண்டவரை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்றால் அதற்க்கு காரணம்   ஆவியான தேவன்  எனக்கு கொடுத்த பெலமே! அதே பெலன் உங்களுக்கும் கிடைக்கும். 
 
மேலும் பாவசந்தோசம் நிலையற்றது தேவனை அறிந்துகொள்வதோ நித்திய சந்தோசத்தை இவ்வுலகிலும் மறு உலகிலும் தரக்கூடியது என்பதை  அறிந்து கொள்ளுங்கள்.
 
மத பாகுபாடு பார்க்காதீர்கள்! உங்களுக்கு இறைவனை அனுபவபூர்வமாக அறிந்து கொள்ளவேண்டும் என்று வாஞ்சை இருந்தால்  அதை  உடனடியாக தெரியப்படுத்துங்கள் அதற்க்கான வழி நான் தெரியப்படுத்துகிறேன். நிர்விசாரமான வாழ்க்கை வேண்டவே வேண்டாம் அன்பர்களே அதன் முடிவோ மிகுந்த கசப்பாக இருக்கும்!
 
நீங்கள் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்  அவர் உங்களை நோக்கி ஒன்பது அடி எடுத்துவைத்து ஓடிவர  ஆயத்தமாக இருக்கிறார் என்பதை அறியுங்கள்!
 
 

-- Edited by SUNDAR on Wednesday 6th of October 2010 03:10:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard