இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தளம் செயல்படுவதன் முக்கிய மற்றும் அவசரமான நோக்கம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தளம் செயல்படுவதன் முக்கிய மற்றும் அவசரமான நோக்கம்!
Permalink  
 


இந்த உலகில் உள்ள மக்களை அடிமையாக்கியுள்ள  சாத்தான் என்னும் தீய சக்தியானன்வன் அவனது பிடியில் இருக்கும் மனிதர்கள் பூமியில் மரித்தவுடன் அவர்களை தனது இடமாகிய பாதளம் என்னும் ஒரு படுகுழிக்கு கொண்டுபோய்  கொடுமையாக துன்புறுத்தி வருகிறான். 
 
நமது கண்களுக்கு மறைவாக இருக்கும் அந்த இடத்தின் இப்பொழுதும் எண்ணற்ற ஆத்துமாக்கள் துன்பங்களை அனுபவித்துகொண்டு இருக்கிறார்கள். அந்த குழிக்குள் குறிப்பிட்ட  இடம்வரை  நான் சென்று வந்தததால் என்னால் அங்கு அவதிப்படும் அத்துமாக்களின் நிலையை  அறியமுடிந்தது.
 
அங்கு அவதிப்படும் அனேக  ஆத்துமாக்களை மீட்க, தேவன்காட்டிய வழிபடி முயற்ச்சிப்பதும், புதிதாக  மரிக்கும் மனிதர்களை அந்த கொடுமையான இடத்துக்கு போகவிடாமல் தடுப்பதுமேஇந்த தளத்தின் செயல்பாட்டின்  முக்கிய நோக்கம் ஆகும்.
 
1. ஒருவர் மரித்த உடன் பாதாளம் போகாமல் தப்பிக்கும் வழி!  
 
தற்போது மரிக்கும் ஒருவர்  அந்த வேதனையான பாதாளம் என்ற  இடம் போகாமல் இருக்க செய்ய வேண்டிய ஒரே ஒரு எளிதான காரியம்" மனிதனின் பாவங்களுக்காக மரித்த ஆண்டவராகிய இயேசுவை தன் சொந்த ரட்சகராக  ஏற்றுக்கொண்டு  பாவங்கள் கழுவப்படுதலே"   
 
யோவான் 3:18 அவரை (இயேசுவை)  விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்

யோவான் 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்
 
நீங்கள் பணமோ காசோ எதுவும் யாருக்கும் கொடுக்கவேண்டிய தேவையே இல்லை. அவரை விசுவாசித்தால் மட்டும் போதும். அதாவது    
 
ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவாய்.

ரோமர் 10:10
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

அதன்பிறகும் திரும்பவும் பாவ சேற்றுக்குள் போகாமல் பரிசுத்தமாக வாழ முயல வேண்டும், மற்றபடி பெரிதாக எதுவும் செய்யவேண்டிய அவசியம் இல்லை.  
  
இவ்வாறு நமது பாவங்களுக்க்கான கிரயத்தை செலுத்திய   இயேசுவை ஏற்றுக்கொண்டதிநிமித்தம் ஒருவர் மரித்த உடன் பாதாளம் என்ற கொடூர இடம் போகாமல் தப்பித்துவிட முடியும்!
 
 
2. ஏற்கெனவே பாதாளத்தில் வாதிக்கப்படுகிரவர்களை மீட்கும் வழி!  
 
இறைவன் முதல் முதல் படைத்த மனிதர்களை தீயசக்திகள் தாங்கள் தந்திரத்தால் மேற்கொண்டதாலேயே அவர்கள் தீய சக்திகளின் அடிமையாகி போனார்கள். அவ்வாறு கர்த்தர் முதல் முதலாக படைத்த ஆதாம் /ஏவாள் இருவரும் கர்த்தரின் கட்டளையை மீறி அவர் புசிக்க  தடைசெய்த கனியை புசித்ததாலேயே  அவர்கள் இறைவனின் சந்நிதியைவிட்டு துரத்தப்பட்டு சாத்தானின்  தன்மையையாகிய  கீழ்படியாமை தங்களுக்குள் சுமந்து மரித்தபின் தேவன் சாத்தானுக்காக படைத்த இடமாகிய பாதாளத்துக்கு போகும் நிலையை அடைந்தனர். அந்த ஆதாமின் சந்ததியில் வந்த ஒவ்வொருவருக்கும் அந்நிலை தொடந்தது.
 
அசுத்த சக்திகள் ஆவியாக இருந்து செயல்படுவதால் மாம்ச நிலையில் உள்ள எந்த மனிதனும் அதை மேற்கொள்ள முடியாத நிலையில் பலகாலங்கள் இந்த நிலை தொடர்ந்தது.
 
இந்நிலையில் ஆண்டவராகிய இயேசுவின் தியாக  மரணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் அவரின்  ஒரே மரணத்தின் மூலம் தேவனின் பல்வேறு திட்டங்களின் நிறைவேறவும் வழிசெய்தது.
 
தற்பொழுது ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொள்வதன் மூலம்
 
1. ஒரு மனிதன் மரித்தபின் பாதாளம் என்ற கொடூர இடம் போவதில் இருந்து உடனடியாக தப்பிக்க முடியும்.
 
2. பாவத்தை ஜெயித்து வாழ பெலன் கொடுத்து நம்மை சரியான வழியில் நடத்தும்   "பரிசுத்தஆவி" என்னும் கூடுதல் பெலன் ஒன்றை   அவரை ஏற்றுக் கொண்டடதன் மூலம் தேவனிடமிருந்து பெறமுடியும்   
 
இந்த "பரிசுத்த ஆவி" என்னும் தேவ ஆவியின் பெலத்தால் ஒருவர் உத்தமமாக நடந்து தேவனின் வார்த்தைகளுக்கு சரியாக கீழ்படிந்து வாழ்ந்துவிட்டால், ஒரு நிலையில் கீழ்படியாமையால் இழந்துபோன ஆதி மேன்மைகளை திரும்ப பெறுவதோடு, அதன் மூலம்  நம்மை அடிமையாக்கியுள்ள தீய ஆவிகளையும் மேற்கொண்டு சாத்தானை  ஜெயம்கொள்ள முடியும். 
 
அவ்வாறு சாத்தானை ஜெயம் கொண்டுவிட்டால் சாத்தானுக்கு மனிதர்கள் மேலுள்ள அதிகாரம் பிடுங்கப்பட்டு,  சாத்தானின் பிடியில் இருக்கும் எல்லா  மனிதர்களும்  தேவனின் நியயதீர்ப்புக்குள் வந்துவிடுவார்கள்
 
அத்தோடு சகலமும் தேவனால்  புதிதாக்கப்படும், வேதனை துன்பங்கள் கவலைகள் கண்ணீர்  ஒழியும்!
 
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் சாத்தானை ஜெயம்கொள்ள சரியான நேர் வழியை போதிப்பதே இந்த தளத்தின் இரண்டாவது முக்கிய நோக்கம். 
 
இந்த காரியங்களைவிட வேறு எந்த செயலுமே என்னை பொறுத்தவரை வீண்!
 
இவைகள் அனைத்தும் தேவனின் திட்டங்களும் அவரது சித்தப்படியும் நடப்பதாகவே  இருக்கிறது நாமெல்லாம் அவர் பயன்படுத்தும் கருவிகளேயன்றி வேறல்ல!


[தேவனின் நியாய தீர்ப்பின்போது  அவனவன்  கிரியைக்கு ஏற்றபலனை கொடுப்பார். அதன் பின்னர் எல்லோருக்கும் நல்லதாகவே  நடக்கும் என்று தேவன்பேரில் உள்ள நம்பிக்கையில் விசுவாசிக்கிறோம். அவர் எந்த இடத்தை அல்லது எந்த நிலையை நமக்கு கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.  மற்றபடி தங்களுக்கு உலகத்தில் சொகுசாக வாழ்வது,  அதிக பணம் சம்பாதிப்பது, பரலோகத்தில் போய் தங்க தரையில் நடப்பது, அற்ப்புத அதிசயத்தை எதிர்பாப்பது, மனிதர்களின் புகழ்ச்சியை எதிர்பார்ப்பது போன்ற  வேறு எந்த நோக்கமும் இருக்குமாயின், இங்குள்ள பதிவுகளை படிப்பதலில்  எந்த பயனும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன்] 


-- Edited by SUNDAR on Saturday 9th of October 2010 02:57:25 PM

-- Edited by SUNDAR on Tuesday 12th of October 2010 03:22:31 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard