இது சபிக்கப்பட்ட உலகம்! இவ்வுலகில் எதாவது ஒரு குறை இல்லாத மனிதன் இருக்கவே முடியாது என்றே நான் கருதுகிறேன். எல்லா மனிதனுக்கு எங்காவது அல்லது எதிலாவது குறைகள் மற்றும் பிரச்சனைகள் இருந்துகொண்டே இருப்பதை நாம் அறியமுடியும். இந்த குறைகள் அடிக்கடி மனதை பாதித்து குத்திக் கொண்டு இருந்தாலும் அதனால் வரும் துன்பங்கள் தாங்க முடியாத அளவு இருந்தாலும், இந்தகுறைகள் எல்லாம் ஏதாவது ஒரு நன்மைக்காகவே நமக்கு கொடுக்க பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டால் நாம் அந்த குறைவுகளிலும் மிகுந்த சந்தோசத்தை அடையமுடியும்.
எனக்கு ஒரு முக்கியமான குறை உண்டு! நான் வாலிப வயதில் இருந்த நாட்களில் அந்த குறையை நினைத்து அடிக்கடி வருந்துவதோடு, இந்த உலக வாழ்வின் மேலேயே ஒரு வெறுப்பு வந்து எப்பொழுதும் சோகபாடல்களை கேட்டு கொண்டு நாளையை பற்றி எந்த கவலையும் இல்லாமல், பணத்தின் மீதோ அல்லது எந்த ஒன்றின் மீதும் பற்றில்லாமல் வாழ ஆரம்பித்தேன். சம்பாதிக்கும் பணத்தை யார் கேட்டலும் கொடுத்துவிடுவேன். எனக்கென்று எந்த சேமிப்பும் வைப்பது கிடையாது, "இப்படி வாழ வேண்டும்" "அப்படி வாழவேண்டும்" என்ற எந்தஎதிர்கால ஆசையுமே இல்லாமல் மிகுந்த சோகமாகவே எப்பொழுதும் காட்சியளிப்பேன்.
ஆனால் என்ன ஆச்சர்யம்! என்னுடைய இந்த உலக பற்றில்லாத வாழ்க்கையே யாருமே அடைந்திராத ஒரு அரிய அனுபவத்துக்குள் என்னை அழைத்து சென்றது! ஆம்! தேவனாகிய கர்த்தரை நான் முகமுகமாக அறிந்ததுபோல் அறிந்து கொண்டேன். அவர் என்னை அபிஷேகித்து "நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை உன்னை என்று கைவிடுவதும் இல்லை" என்று வாக்குகொடுத்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துகொடுத்ததோடு, இந்த உலகை பற்றிய அனேக உண்மைகளை தெரியபடுத்தி பெரிய சமாதானதாயும் எனக்கு தந்து இன்றுவரை என்னை கரம்பிடித்து நடத்தி வருகிறார்.
இன்றும் எனக்கு அந்த குறை இருக்கத்தான்செய்கிறது, ஆனால் அந்த குறையிலும் நிறைவாய் வாழும் வாழ்க்கை ஒன்றை தேவன் கட்டளையிட்டுள்ளார். அந்த குறை மாற்ற முடியாததுதான் ஆனால் தேவன் அதற்காக எல்லாவற்றையும் மாற்றி எனது குறையை நிறைவாக்கிவிட்டர்.
ஒருவேளை நான் எல்லாவிதத்திலும் பெர்பெக்ட்ஆக படைக்கப்பட்டு இருந்தால் நான் நிச்சயம் இந்த உலக ஆடம்பர வாழ்வினால் இழுக்கப்பட்டு, மும்பையில் கிடைத்த யாரோ ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு இருதயம் அடைபட்ட நிலையில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இந்த உலக ஜனங்களை போல கேடுகெட்ட உலக வாழக்கையில் உழன்றுகொண்டு இருந்திருப்பேன்.
ஆனால் இன்றோ நான் சொல்லமுடியாத அளவுக்கு மன திருப்தியோடும் நித்தியத்தை பற்றிய நம்பிக்கையோடும் தேவனின் திட்டம் நிரவேற நானும் ஒரு பாத்திரமாக செயல்படுவதோடு, அவர் வரும் நாளையும் அவரது ஆளுகையின் கீழ் வாழப்போகும் நித்திய வாழ்வையும் எதிர்பார்த்து ஆவலோடு காத்துகொண்டு இருக்கிறேன்.
ஆம் அன்பானவர்களே!
உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய குறை இருக்கிறதா? இதை நிவர்த்தி பண்ணவே முடியாது என்ற நிலை இருக்கிறதா? அந்த குறை அனுதினம் உங்களை குத்திக் கொண்டு இருக்கிறதா? அந்த குறையினால் நீங்கள் பலரால் பரியாசம் பண்ணப்ப்டுகிரீர்களா? எல்லோரும் உங்களை வெறுக்கிறார்களா?
நான் உறுதியாக சொல்கிறேன் உங்கள்மேல் தேவனின் ஏதோ ஒரு உன்னத திட்டம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தேவன் மீதும் மனிதர்கள் மீதும் கோபமும் வெறுப்பும் அடைவதை விட்டுவிட்டு, இந்த உலகத்தையும் அதன் மேன்மையையும் வெறுத்துவிட்டு முழு மனதோடு ஆண்டவரை நோக்கி பாருங்கள்! அப்பொழுது ஆண்டவர் உங்களை அபிஷேகித்து உங்கள் மீதான திட்டத்தை போதிப்பதோடு, உங்களை எடுத்து பயன்படுத்தி உங்கள் குறைகளை எல்லாம் நிச்சயம் நிறைவாக்குவார்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பொதுவாக, இந்த உலகவாழ்க்கையில் எந்த குறையும் இன்றி அனைத்து இன்பங்களையும் பெற்று வளமாக வாழ்பவர்கள், இறைவனை தேடுவதற்கோ அல்லது அவரை அறிந்துகொள்வதற்கோ அதிகம் அக்கறை காட்டுவது இல்லை.
சகல வசதியும் படைத்த எனது நெருங்கிய நண்பன் ஒருவனிடம் நான் நித்தியத்தை குறித்து பேச்சை எடுத்தாலே அதை ஏதோவேண்டாத வார்த்தையாகவே கருதி விலக்கிவிடுவதொடு எனக்கும்கூட "இறைவன் இறைவன் என்று அலையாதே" என்று சொல்லி அதிக அறிவுரைகூற ஆரம்பித்துவிடுவான். பரிதபிக்கபட்டவனாக இருக்கும் அவனை நினைக்கும் போது எனக்கு யோபு சொன்ன கீழ்கண்ட வசனம்தான் நியாபகத்துக்கு வரும்.
யோபு 21:14அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
துயரப்படுபவர்களாகவும்,லாசரு போன்ற ஏழைகளாகவும், பிறரின் துன்பங்களை பார்த்து பரிதபிக்கிறவர்களாகவும் எப்பொழுதும் ஏதாவது குறை உள்ளவர்களாகவும் நம்மை படைத்ததற்காக நமது ஆண்டவருக்கு நாம் நன்றி சொல்லுவோம். அப்படி ஒரு நிலையில் நாம் படைக்கபட்டதால்தான் இன்று இறைவனை அறிந்துகொண்டோம் என்றே நான் கருதுகிறேன்.
துயரப்படும் நமக்கு நிச்சயம் ஆறுதல் உண்டு!
மத்தேயு 5:4துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.