இரக்க குணம் இல்லாத மனிதனிடம் நீதி நியாயங்களை என்னதான் எடுத்து சொல்லியும் பயனேதும் ஏற்ப்படாது என்பதை நான் எனது வாழ்வில் பல சூழ்நிலைகளில் அறிந்துகொண்டேன்.
சமீபத்தில் ஒருவர் என்மேல் தகாத நான் சற்றும் நினைத்துகூட பார்க்காத குற்றம் ஒன்றை சுமத்தினார். அவரின் எண்ணம் தவறு என்பதை நிரூபிக்க நான் எவ்வளவோ சம்பவங்களை எடுத்து சொல்லியும் அவர் சற்றும் அதை கேட்க மனதில்லாமல் என்மேல் மீண்டும் மீண்டும் கோபம் கொவதிலேயே குறியாக இருந்தார். அவர் உள்ளிருந்து கிரியை செய்யும் சாத்தானின் ஆவியை அறிந்து நான் அவரைவிட்டு விலகினேன்!
இதேபோல் சந்தர்ப்பங்களி பலர் தங்கள் வாழ்வில் சந்தித்திருக்க கூடும்.
என்னுடன் வேலை பார்க்கும் ஒரு சகோதரரின் மகள் அவரிடம் "அப்பா நீ எப்பப்பா சாவாய்? இந்த வீடு எனக்கு எப்பம்ப்பா கிடைக்கும்" என்று நேரடியாகவே கேட்கிறதாம்.
பாருங்கள் காலம் என்ன நிலையில் போய்கொண்டு இருக்கிறது என்பதை! ன்னும் இதைவிட கொடிய காலம் வரும் என்றுதான் வேதம் எச்சரிக்கிறது!
"யார் வீடு எரியும் என்ன பிடுங்கலாம்" என்றும் "யார் சாவார்கள் நமக்கு என்ன சொத்து கிடைக்கும்" "எவரை உயிரோடு வைத்து கழுத்தை அறுத்து கிடைத்ததை பிடுங்கலாம்" என்றும் மனிதர்கள் ஏங்கும் காலம் இன்று நடப்பதை நாம் கண் கூடாக பார்க்கமுடிகிறது!
லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யும் ஒருவருக்கு எதிர் தரப்பினர் என்ன சூழ்நிலையில் இருக்கிறார் என்பதைஎல்லாம் பற்றி சற்றும் கவலையே இல்லை! தனக்கு போடுவதை போட்டுவிடு அதன்பின் மற்றது உன்பாடு என்ற நிலையில் இரக்கமற்று திரிகின்றனர்.
பரிசுத்த ஆவியானவர் தற்போது உலகத்தில் கிரியை செய்து வருவதால் தான் ஓரளவுக்கு இரக்கமும் நீதி நேர்மையும் உலகில் இருக்கிறது!. தேவ ஆவியானவர் இந்த உலகின் கிரியையில் இருந்து விலகி கொண்டால் அல்லது நீக்கப்பட்டால், மனிதர்கள் எல்லோரும் மனிதத்தன்மையை இழந்து விடுவார்கள் பின்னர் மீதம் உள்ள மனிதர்களிடம் பேய்தன்மைதான் மீதம் இருக்கும் அங்கு இரக்கம் அன்பு நீதி நேர்மை ஒன்றுக்கும் மதிப்பிருக்காது.
இப்பொழுதும் நாம் நீதி நியாயம் இரக்கத்தை பற்றி என்னதான் எழுதினாலும் எதையாவது காரணம் காட்டி எப்படி அதிலிருத்து தப்பிப்பது என்றுதான் வழியை பார்க்குமேயன்றி அதில் உள்ள உண்மைகளை அறிந்துகொள்ள அது விரும்பாது.
பிசாசுகளிடம் என்னதான் நீதி நேர்மையை எடுத்து சொன்னாலும் அது இயேசுவை பரிகாசம் செய்ததுபோல பரிகாசம் செய்யுமேயன்றி, அதில் நமது துன்ப துயரங்களையோ கேட்டு அதன் மனம் சற்றும் இரங்காது. ஏனெனில் பிசாசுகள் என்றுமே நீதி நேர்மைக்கு எதிரிகள்! மேலும் இரக்கம் என்னும் குணமே அவைகளிடம் கிடையாது! சாத்தானின் கையில் மாட்டிகொண்டபிறகு இரக்கத்துகாக கதறுவதில் பயனேதும் இல்லை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உலக மக்கள் எப்படியோ இருந்துவிட்டு போகிறார்கள் விட்டுவிடோவோம். அவர்கள் தேவனை அறியாதவர்கள். ஆனால் ஆவிக்குரியவர்கள் என்று சொல்லிக்கொண்டு தேவனை அறிந்திருக்கிறோம் என்று சொல்பவர்களும்
கூட, சற்றும் நீதி நியாயம் இல்லாமல் காரியங்களை
செய்வதுதான் மிகுந்த வேதனையை தருகிறது.
தேவன் அதிகம் விரும்பும் "நீதி நியாயத்தையும், உத்தம நடக்கைகள்" பற்றிய செய்திகளையும் சபைகளில் கேட்பதே அரிதாக இருக்கிறதே.
இன்னும் சிலபடி மேலேபோய், சில ஆவிக்குரியவர்களிடம் "நீதி நியாயமாகவும் உத்தமமாக நடக்க வேண்டும்" என்று சொன்னாலே, அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருவது ஆச்சர்யமே.