இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெருமை எப்படி தோன்றினது....?


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
பெருமை எப்படி தோன்றினது....?
Permalink  
 


என்னிடத்தில் ஒரு சகோதரர் வேதத்தை பற்றி தனக்கு தெரிந் காரியங்களை சொல்லி பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்.

நானும் அவரிடத்தில் ஒரு சில காரியங்களை குறித்து பேசி கொண்டிருந்து கடைசியாக ஒரு கேள்வியையை கேட்டேன்.
 
லூசிபர் பெருமையினால் கீழே தள்ளப்பட்டு  வீழ்ந்து போனான் என்று சொல்லுகிறோமே அவனுக்கு பெருமை எங்கிருந்து எப்படி வந்தது.
அவன் தேவனோடு இருந்தவன் அல்லவா...இதற்கு காரணம் என்னவென்று கேட்டேன்.

அதற்கு அவரோ அந்த எண்ணம் தானாக தோன்றினது என்று கூறினார் ஆனால் எனக்கு இதில் சரியான உடன்பாடில்லை இப்படி தானாக தோன்றினால் அதற்கு லூசிபர் எப்படி பொறுப்பாக முடியும் தேவன் எப்படி இதற்க்கு தண்டனையை கொடுக்கமுடியும் ஆகவேதான் கேட்கிறேன்.  இந்த பெருமை எங்கிருந்து தோன்றினது இதற்கு ஆரம்பம் எங்கே....?
 
தெரிந்தவர்கள் தங்கள் பதிவுகளை தரலாம்......
 


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Stephen wrote:
லூசிபர் பெருமையினால் கீழே தள்ளப்பட்டு  வீழ்ந்து போனான் என்று சொல்லுகிறோமே அவனுக்கு பெருமை எங்கிருந்து எப்படி வந்தது.

அவன் தேவனோடு இருந்தவன் அல்லவா...இதற்கு காரணம் என்னவென்று கேட்டேன்.

அதற்கு அவரோ அந்த எண்ணம் தானாக தோன்றினது என்று கூறினார் ஆனால் எனக்கு இதில் சரியான உடன்பாடில்லை இப்படி தானாக தோன்றினால் அதற்கு லூசிபர் எப்படி பொறுப்பாக முடியும் தேவன் எப்படி இதற்க்கு தண்டனையை கொடுக்கமுடியும் ஆகவேதான் கேட்கிறேன்.  இந்த பெருமை எங்கிருந்து தோன்றினது இதற்கு ஆரம்பம் எங்கே....?
 
தெரிந்தவர்கள் தங்கள் பதிவுகளை தரலாம்......
 


சரியான  கேள்வியொன்றை   முன்வைத்துள்ளீர்கள் சகோதரர் ஸ்டீபன் அவர்களே.
 
அதிகாலை மகனாகிய விடிவெள்ளி என்று சொல்லப்பட்ட சாத்தானுக்கு "பெருமை" வந்து
உன்னதமான தேவனுக்கு  ஒப்பாக  எண்ணினான் என்று விவிலியம் சொல்கிறது    
 
ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
ஏசாயா 14:14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

தீமை என்று எதுவுமே இல்லாத ஒரு மனதினுள் இந்த
பெருமை எப்படி உண்டானது?
 
தூதர்களை தேவன் சுயாதீனத்தொடு படைத்தார் என்று எடுத்துகொண்டாலும் தெரிவு செய்வதற்கு இரண்டு
சாய்ஸ் இருந்தால் மட்டும்தானே நம்மால் ஒன்றை தெரிந்துகொள்ள முடியும்? 
 
அதாவது ஒரு தட்டில் சாதமும் இன்னொரு தட்டில் சப்பாத்தியும் தயாரித்து வைத்தால் மட்டுமே இரண்டில் எதுவேண்டும் என்பதை நாம் தெரிவு செய்ய முடியும். அப்படியெனில் இரண்டையும் யாராவது ஒருவர் செய்து நம்முன் வைக்க வேண்டும்.
 
அதுபோல் 
 
நன்மைகள் மட்டுமே இருந்த அந்த நேரத்தில் "பெருமை" மற்றும்   "தன்னை தேவனுக்கு மேலாக
உயர்த்துதல்" போன்ற எண்ணங்களை யார் அவனுக்கு முன்னால் வைத்து தெரிவு செய்யவைத்தது?
 
சுருக்கமாக சொன்னால்:
 
இன்று ஒரு மனிதனுக்குள் தீமையான எண்ணங்களை விதைப்பது சாத்தான் என்று பொதுவாக குற்றம் சாட்ட படுகிறது!  தேவனும் தூதர்களுமே இருந்த தொடக்க காலத்தில்  அந்த சாத்தானுக்கு மனதில் பெருமையை  விதைத்தது யார்? 
 

 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

லூசிப்பர் எனப்படும் சாத்தானுக்கு தேவனுக்கு சமமாவேன் என்பதற்கு ஈடான  "உன்னதமானவருக்கு ஒப்பாவேன்"  என்ற எண்ணம் எவ்வாறு உண்டானது?
 
ஒருவேளை தூதர்கள் படைக்கப்ப்படும்போதே நன்மை தீமை அறிந்தவர்களாக படைக்கபட்டிருந்தார்களா?
 
அப்படிஎன்றால் "தீமை" "கெடுதல்" "பெருமை" போன்றவற்றையும்  தேவன்தான் படைத்தாரா?  அப்படியும் ஏற்க்க முடியாதே ஏனெனில் வசனம் இவ்வாறு சொல்கிறேது.  
 
ஆதி 1:31 தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;
 
"சாத்தான் விழுந்து தேவனுக்கு சத்துருவானான்" என்பது வேதம் சொல்லும் உண்மை . இந்த சாத்தானை  தேவனுக்கு சத்துருவாக்கியது யார்?  
 
தேவன் தனது சாயலாக மனிதனை படைத்தார் என்றுதான் வேதம் சொல்கிறது! தூதர்களை பற்றியோ:
 
சங்கீதம் 104:4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்
 
அதாவது தேவன்தான் தூதர்கள் செய்யவேண்டியதை செய்ய வைக்கிறார் என்று சொல்கிறது. இவ்வாறிருக்க இந்த லூசிப்பருக்கு மட்டும் எப்படி தன்னை படைத்த தேவனுக்கு ஈடாக தன்னை உயர்த்தும் சித்தனை மனதில் வந்தது?
 
எப்படி சிந்தித்தாலும் பொருந்தவில்லை! தெரிந்தவர்கள் யாராவது சற்று விளக்குங்கள் ஐயா!  அல்லது அதற்க்கான பதில் இருக்கும் இடத்துக்கு தொடுப்பு தாருங்கள்.
 


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

ரோமர் 8.21. அந்தச் சிருஷ்டியானது (சாத்தான் உட்பட சகல சிருஷ்டியும்) சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.



-- Edited by SANDOSH on Wednesday 5th of January 2011 07:32:47 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

SANDOSH wrote:

ரோமர் 8.21. அந்தச் சிருஷ்டியானது (சாத்தான் உட்பட சகல சிருஷ்டியும்) சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

 


நமது  சகோதரர் சந்தோஷ் அவர்கள் சுட்டியுள்ள இந்த வசனத்தின் அடிப்படையில் பார்த்தால். "எந்த ஒரு சிருஷ்ட்டியும்  தனது இஸ்டம் இல்லாமலேயே தேவனால்
மாயைக்கு கீழ்படுத்தப்பட்டு  தங்கள் செயல்களை செய்கின்றன" என்று பொருளாகிறது.
     
இந்த கருத்து  "நன்மை தீமை எல்லாமே தேவனின் செயல்பாடுதான்".  என்ற பொருளை தருகிறது.  இதன் அடிப்படையில் பார்த்தால்  தீமை செய்பவனும் நன்மை செய்பவனும் தனக்கு இஸ்டம் இல்லாமலே தேவனால் ஆட்டுவிக்கப் பட்டு காரியங்களை செய்கின்றனர். என்று ஆகிவிடுகிறது.    
 
அதுபோல் சாத்தானுடைய மனதிலும்  பெருமை என்ற எண்ணத்தை  கொண்டு வந்ததும் தேவன்தான்.  என்பதுதான் இந்த வசனத்தின் சாராம்சம் என்று நான் கருதுகிறேன்.
 
சுருக்கி சொன்னால் "தேவன் தனக்கு  சத்துரு என்று சொல்லும் சாத்தானை ஏதோ சில காரணத்துக்காக தானே வேண்டுமென்றே உருவாக்கினார்"  என்று பொருள் கொள்ளலாம். 
 
இக்கருத்து பரவலாக அநேகரால் நம்பபடுகிறது. 
 
ஆனால் இக்கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது!
 
எனது இந்து முதலாளி ஒருவர் எல்லோரையும் தரம்கெட்டவிதமாக பேசி திட்டுவார். ஒருநாள் அவரிடம் "சார் நீங்கள் இவ்வாறு செய்வது சரியான செயல்
அல்ல"  என்று சொன்னபோது அவர் 
சுலபமாக "கடவுள்  என்னை இதுபோல் திட்டும்படி கட்டளையிட்டுள்ளார் அதனால்தான்  அவ்வாறு செய்கிறேன். அவர் என்னை ஆட்டுவிக்கிறார் நான் ஆடுகிறேன் அவ்வளவுதான்" என்று பதில் சொல்லிவிட்டார்.   இப்பதில் சரியா?
 
அதேபோல் இன்னொரு நண்பனிடம் "நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று சொன்னபோது "சார் அந்த கடவுள் என்னை இந்த மதத்தில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று படைத்து வைத்துவிட்டார், நான் இப்படிததான் இருப்பேன். அவரின் விருப்பம் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது, அவர் என்னை மாற்றினால் நான் மாறிவிடுவேன். நீங்கள் எதற்கு உங்கள் உழைப்பையும் பணத்தயும்  செலவழித்து இப்படி நோட்டிஸ்  அடித்து கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?" என்பதுபோல் தெளிவாக சொல்லி விட்டார்.        
        
ஆக "எல்லாம் தேவனே" என்று தீர்மானித்தால் தீமை செய்பவர்கள் "தேவன் என்னை செய்ய வைத்தார் நான் செய்கிறேன்" என்றும் இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் "தேவன் என்னை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வைத்திருக்கிறார் எனவே என்னை மாற்ற யாராலும்முடியாது" என்றும் சொல்லி சுலபமாக தப்பித்துகொண்டுவிட முடியும். 
 
நீதிபரராகிய தேவன் தீமையை தானே விதைத்துவிட்டு பின்னர் தீமை செய்யாதே என்று சொல்வது எனக்கு சரியானதுபோல் தெரியவில்லை.
 
அத்தோடு, 

உலகில் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு நாச மோசம் கொடூரம் சித்திரவதை 
எல்லாவற்றிக்கும் அடிப்படை காரணம் தேவனே என்ற நிலை ஏற்படுகிறது.         
 
தேவன் மகா நீதிபரர் மற்றும் மஹா பரிசுத்தர்  என்றும் அவர் தீமையை  பார்க்க மாட்டாத சுத்தகண்ணர் என்றும் வேதம் சொல்கிறது
 
II கொரிந்தியர் 6:14 ; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
  
என்றும் வேதம் சொல்வதால், தேவன் சாத்தானை தானே வேண்டுமென்று உருவாக்கினார் என்ற கருத்தை என்னால் ஏற்க்க முடியவில்லை.
 
இந்த கருத்தை பொறுத்தவரை நிர்வாகி ஒரு  கருத்துகணிப்பு நடத்தி பார்க்கலாம். அதற்க்கிடையில் சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம்.
 
  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

பெருமை சாத்தனுக்கு எப்படி வந்தது என்று விவாதித்து கொண்டு இருக்கிறோம்

ஆனால் இதுவரை அதற்கு சரியான விளக்கத்தை நாம் தெரிந்து கொண்டமாதிரி தெரியவில்லை.
 
எனக்கு தெரிந்தவரை அடிப்படையிலே நம்முடைய சாதாரண கண்களுக்கு மறைக்கப்பட்டதும் எல்லாவற்றிற்கும் தொடக்கமுமான காரியம் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது.
 
நாம் எல்லாரும் அதை தெரிந்து கொள்ளும்படி தேவனிடம் கேட்டால் நிச்சயமாக யாருக்காவது தேவன் வெளிபடுத்துவார் என்றே நினைக்கிறன்.
 
அறியபடாத  ரகசியம் , வெளியரங்கமாகத மறைபொருளும் இல்லை என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறாரே...
 
மோசே பிறப்பதற்கு முன்பாக நடந்த காரியங்களை  மோசேக்கு தேவனால் எப்படி வெளிபடுத்த பட்டு எப்படி ஆதியாகமம் எழுதபட்டதோ அதுபோல நிச்சயம் ஆரம்பத்தில் நடந்த காரியங்கள் என்னவென்பதை தேவன் தம்மால் தெரிந்து கொள்ளபட்டவர்களுக்கு வெளிபடுத்துவார் என்றே நான் நினைக்கிறேன்.    


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரரே,

பெருமை ஒரு சிருஷ்டி அல்ல. அது ஒரு சுபாவம். பெருமையை தேவன் உண்டாக்கவில்லை..

அணைத்து பாவங்களுக்கும் பிதா யார் என்ற கேள்வி தான் பெருமை எங்கிருந்து வந்தது என்பதற்கு பதிலாக இருக்க முடியும்.

பாவங்கள் அனைத்தும் சத்ருவின் சுயமான சுபாவத்தில் இருந்தே வெளிப்பட்டன. ஆதாரம் இதோ..

யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

பிசாசு சொந்தத்தில் இருந்து எடுத்து பேச அறிவை உடையவன் எனவும்,மிகுந்த ஞானம் உடையவன் என வேதம் காடுகிறதை அறிந்திருக்கிரோமே.. நமக்கு நன்மை தீமை அறிகிற அறிவை அறிமுகபடுதியவன் சத்ரு. அவைகளை பற்றிய அறிவில்லாதவனாக இருந்தால் தேவனுடைய சத்ருவாக  இருக்கலாகாது..

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard